search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95934"

    வில்லியனூரில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆனந்தபுரம் பாரதிதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயி. இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களது மகள் கிருத்திகா ( வயது 25) டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த கிருத்திகாவை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் கிருத்திகா இல்லை. இதையடுத்து கிருத்திகாவின் பெற்றோர் தங்களது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாயமான கிருத்திகா இன்று காலை அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் தனது காதலன் சரவணன் (36) என்பவருடன் வில்லியனூர் போலீசில் தஞ்சம் அடைந்தார். அப்போது மைலம் முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கிருத்திகா போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரைண்ட் நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் சந்தாணம். இவரது மனைவி மாலதி (வயது 24). இவர்களுக்கு ஆனந்தகுமார் (3) என்ற மகனும், இந்துமதி(2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தாணம் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மாலதியை காணவில்லை. மேலும் 2 குழந்தைகளும் மாயமாகியிருந்தனர். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தாணம் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி எங்கு சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி ஜார்ச் ரோட்டை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் அபர்ணா (19). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா என விசாரணை நடத்தி அபர்ணாவை தேடி வருகின்றனர். #Tamilnews
    முட்டம் பகுதியில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகி விட்டனர். இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் படகு மூலம் மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள்.
    குளச்சல்:

    குளச்சல் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன் பிடித் தொழில் செய்து வருகிறார்கள்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த மே மாதம் 31-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் கரைப்பகுதிகளில் மீன் பிடித்து வந்தனர். குளச்சல், மண்டைக்காடு, முட்டம் பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. மேலும் கடலிலும் சூறைக்காற்று வீசியது. இதனால் பெரும்பாலான கட்டுமர, வள்ளம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    அவர்களின் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சில கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் மட்டும் அதிகாலையிலேயே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இருந்தனர். அவர்களும் கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக அவசரமாக கரை திரும்பினார்கள்.

    இந்த மீனவர்களின் வலையில் குறைந்தளவே மீன்கள் சிக்கியிருந்தது.

    இந்தநிலையில் முட்டம் பகுதியில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகி விட்டனர். மேலமுட்டம் பொன்னந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசி (39), நடுமுட்டத்தைச் சேர்ந்த சேவியர் (50), மேலமுட்டத்தைச் சேர்ந்த ஜேசு அடிமை (20), மேலமுட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்த ஸ்டெபின் (24) ஆகிய 4 மீனவர்களும் நேற்று மாலை 3 மணி அளவில் முட்டத்தில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் இன்று காலை 8 மணிக்குள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் காலை நீண்ட நேரமாகியும் இந்த 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை. இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீனவர்கள் 4 பேர் மாயமான தகவலை அவர்கள் குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் படகு மூலம் மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள்.
    ஏமன் நாட்டில் உள்ள சொகோட்ரா தீவில் ஏற்பட்ட புயலில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்திய கப்பற்படை இன்று மீட்டுள்ளது. #Cyclone #Omen #Yemen
    சனா :

    அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மெகுனு புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்களை மீட்க இந்திய கப்பற்படைக்கு சொந்தமான சுனைனா என்ற கப்பல் ஏமன் நாட்டுக்கு விரைந்தது. அங்கு புயல் பாதிப்பினால் சிக்கித்தவித்த  38 இந்தியர்களை இன்று இந்திய கப்பற்படையினர் பத்திரமாக மீட்டனர். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை, உணவு மற்றும் உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேச தொலைபேசி ஆகியவை வழங்கப்பட்டது. #Cyclone #Omen #Yemen
    சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தார் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சீலநயாக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மோகன். ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ரங்கநாயகி (56) சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராகவும், கமி‌ஷனருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    ரங்கநாயகி சங்ககிரியில் உள்ள தனது தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு தனது மகன் சசிதரன் (28) மூலம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு மகன் மற்றும் கணவருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    அதில் என்னையும், பெற்றோரையும் எனது மனைவி டார்ச்சர் செய்து வருவதால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்ய உள்ளோம் என்று சசிதரன் கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசெல்வி அன்னதானப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது ரங்கநாயகியின் குலதெய்வ கோவில் மைசூரில் இருப்பதால் அவர் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. மேலும் ஒரு தனிப்படை போலீசார் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியிலும் தேடினர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

    இதற்கிடையே ரங்கநாயகியின் மகன் சசிதரன் உருக்கமான வீடியோவை வெளியிட்டார். அதில், எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எனது நண்பர்கள், உறவினர்கள் என்னடா இப்படி பண்ணிட்டியே என்று நினைப்பவர்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் தான் இப்படி பண்ணினேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். வீட்டு ஓனர்ஸ், பக்கத்தில் இருப்பவர்கள், எல்லோருக்கும் ரெம்ப சிரமம் கொடுத்து விட்டோம்.

    அவர்கள் வீட்டிற்கு முன்பு நின்று கத்தியதால் மானம், மரியாதை போய் விட்டது. அவங்க வீட்டிற்குள் நிறைய பிர்ச்சனை வந்து விட்டது. எங்களால் இனி மேல் இது போல நடக்காது. அதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்.

    ஓசூரில் எங்க வீட்டு ஓனருக்கு மிகவும் சிரமமாக தான் இருக்கும். உங்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். முடிந்த வரை நார்மலாக இருக்க நண்பர்கள் உதவி செய்யுங்கள். எவ்வளவு சந்தோ‌ஷமாக இருக்க ஆசைப்பட்டோமோ அது எல்லாம் முடிஞ்சுடுச்சி.

    இந்த ஒரு பெண்ணால, அந்த ஒரு குடும்பத்தால எங்கள் குடும்பம் முடுஞ்சிடுச்சி. இவ்வளவு அசிங்க, அசிங்கமாக பேசியதற்கு அப்புறம் உயிர் வாழ்வதை விட நாங்கள் போய் விடலாம், அதனால் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க என்று கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார். இதனால் அவர்களது நிலைமை என்ன ஆனது என்பது தெரியாமல் உள்ளதால் உறவினர்கள் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் மாதேஸ்வரன் மலை பகுதியில் சென்ற போது அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் மாதேஸ்வரன் மலை, மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான ஒரு தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான தனிப்படையினர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் தேடி வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இன்று காலை வரை கிடைக்கவில்லை. மேலும் ரங்கநாயகியின் உறவினர்கள் மாயமான 3 பேரும் எங்கு உள்ளனர் என்பதை கண்டறிய ஜோதிடரை நாடியுள்ளனர்.

    இதனால் அவர்கள் எங்கு உள்ளனர் என்பதில் தற்போது வரை மர்மமாக உள்ளது. மேலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தற்கொலை செய்திருப்பார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து தேடி வரும் போலீசார் இன்று மாலைக்குள் இந்த விவகாரத்திற்கு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். #Tamilnews
    மனைவி கொடுமையால் தற்கொலை செய்யப்போகிறோம் என்று குடும்பத்துடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரியின் மகன் வாட்ஸ்அப்பில் உருக்கமாக பேசியுள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் குடும்பத்துடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி ரங்கநாயகியின் மகன் சசிதரன் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் உருக்கமாக பேசியதாவது:-

    இன்னொரு வி‌ஷயம் நான் சொல்ல விரும்புகிறேன். எங்களை இப்படி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து ஆளாக்கின என்னுடைய மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் காவல்துறை ஆணையாளருக்கு கேட்டுக்கொள்கிறேன்.

    என் நண்பர்கள், உறவினர்கள், என்னடா இப்படி பண்ணி விட்டாயே என நினைக்கிறவங்களுக்கு வேறு வழியில்ல. அதனால் தான் நான் இப்படி பண்ணினேன். எங்க 3 பேராலையும் வழக்குப் போட்டு கொண்டு இருக்கவும் முடியாது. அதனால் தான் நாங்க இந்த முடிவு எடுத்தோம். எல்லொருமே எங்களை மன்னிச்சுடுங்க..

    நான் ஓசூரில் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர், பக்கத்தில இருக்கிறவங்க எல்லோருக்குமே நாங்க ரொம்ப சிரமம் கொடுத்துட்டோம். வீட்டின் முன்பு வந்து மனைவி குடும்பத்தினர் கத்துனதுல எல்லோருடைய மானம், மரியாதை போச்சு. அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே நிறைய பிரச்சனை வந்திருச்சு. இனிமேல இந்த மாதிரி நடக்காது எங்களால... இதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்.

    ஒசூரில் எங்க வீட்டின் உரிமையாளருக்கும் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஆகவே அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். முடிந்த அளவுக்கு கொஞ்சம் எல்லாம் நர்மல் ஆவதற்கு நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி பண்ணுங்க. நான் போனதற்கு அப்புறம்.

    மற்றபடி வேறு ஒன்னும் மில்ல. ஐ மிஸ் யூ லார்டு. எவ்வளவு சந்தோசமாக இருக்கனும் ஆசைப்பட்டமோ எல்லாமோ முடிஞ்சு. அந்த ஒரு பெண்ணுனால. அந்த ஒரு குடும்பத்தினால. எங்க குடும்பம் முடிஞ்சு.

    இவ்வளவு அசிங்க, அசிங்கமா அவர்கள் பேசி அதுக்க அப்புறம் வந்து உயிர் வாழ்வதை விட போயிடலாம். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க...

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    அவர் பேசும்போது, கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இதனால் வாட்ஸ்-அப்பில் பேசியபடி பெண் அதிகாரி குடும்பத்தினர் ஏதும் தவறான முடிவு எடுத்தார்களா? அல்லது எங்கிருக்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது.

    இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு குடும்பத்துடன் மாயமான சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்த மோகன். இவர் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரங்கநாயகி(வயது 56). இவர் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராகவும், கமி‌ஷனருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    மோகன்-ரங்கநாயகி தம்பதிக்கு சசிதரன்(28) என்ற மகன் உள்ளார். சசிதரனின் மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு வயதில் மகள் உள்ளார். சசிதரன் தனது குடும்பத்துடன் ஓசூரில் தங்கி, அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிதரன் தனது மனைவி, குழந்தையுடன் சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது பிரேமாவுக்கும், சசிதரன் மற்றும் அவரது தாயார் ரங்கநாயகிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரேமாவின் பெற்றோர் ரங்கநாயகியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த ரங்கநாயகி தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து சங்ககிரியில் உள்ள ரங்கநாயகியின் தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு ‘வாட்ஸ் அப்’பில் ஒரு தகவல் அனுப்பி உள்ளனர். அதில் பேசிய சசிதரன், என்னையும், பெற்றோரையும் எனது மனைவி டார்ச்சர் செய்து வருகிறார். இதனால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்ய உள்ளோம். எங்களை டார்ச்சர் செய்து வரும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    இந்த மெசேஜை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ரங்கநாயகி வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு ரங்கநாயகி உள்பட 3 பேரும் காணவில்லை. மாறாக அவர் எழுதியிருந்த ஒரு கடிதம் இருந்தது. அதில், நான் எனது மகன், கணவருடன் தற்கொலை செய்ய போகிறோம் என எழுதி வைத்திருந்தார்.

    இது குறித்து விஜயசெல்வி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    உதவி கமி‌ஷனர் ரங்கநாயகி மற்றும் அவரது கணவர், மகன் ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மைசூருக்கு விரைந்துள்ளனர்.

    இதற்கிடையே உதவி கமி‌ஷனர் ரங்கநாயகி குடும்பத்துடன் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருப்பதாக மற்றொரு தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ஒகேனக்கல்லுக்கும் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சசிதரனின் மனைவி பிரேமா மற்றும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ஏமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியர் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 40 பேரை காணவில்லை.
    துபாய்:

    ஏமனில் சொகோட்ரா தீவை நேற்று மெகுனு என்ற புயல் தாக்கியது. இந்த தீவு தெற்கு ஏமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் சொகோட்ரா தீவில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுகள் மூழ்கின. சொகோட்ரா தீவு பகுதியில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

    புயல் தாக்குதலுக்கு 5 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் இந்தியர். மேலும் 40 பேரை காணவில்லை. அவர்கள் ஏமன், இந்தியா மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    புயல் தாக்கியுள்ள சொகோட்ரா தீவில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #Tamilnews
    சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு போலீசாரின் ‘வாக்கி-டாக்கி’ மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    அடையாறு:

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ‘ஈ’ மற்றும் ‘சி’ பிரிவு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 11-ந்தேதி ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ‘ஈ’ பிரிவு போலீசார், பணி முடிந்து தாங்கள் பயன்படுத்திய பாதுகாப்புக்கான கருவிகளை ஒப்படைத்து விட்டு சென்றனர். இதையடுத்து ‘சி’ பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியை ஏற்றனர்.

    அப்போது ‘ஈ’ பிரிவு போலீசார் ஒப்படைத்த பாதுகாப்பு கருவிகளில் ஒரு ‘வாக்கி-டாக்கி’ மாயமாகி இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில்வாகனன், இதுபற்றி மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மாயமான ‘வாக்கி-டாக்கி’ டி.ஜி.பி. அலுவலகத்திலேயே தொலைந்து போனதா? அல்லது யாராவது அதை திருடிச்சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ‘வாக்கி-டாக்கி’யை கடைசியாக பயன் படுத்திய போலீசாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வின் குதிரை பேரம் தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோடியின் பிடியில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார். #KarnatakaElection #CongressMLAMissing
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு இருப்பதோ 104 எம்.எல்.ஏ.க்கள். எனவே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  கூட சில எம்.எல்.ஏ.க்கள் வராமல் இருந்ததால் அவர்களை பா.ஜ.க. வளைத்துப்போட முயற்சி நடக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக சித்தராமையா தெரிவித்தார்.



    இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரசார் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷிடம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிலை குறித்து கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த சுரேஷ், ‘ஆனந்த் சிங் தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கே உள்ளனர். ஆனந்த் சிங் மோடியின் பிடியில் உள்ளார்’ என்றார்.

    இதன் மூலம் ஆள் பிடிக்கும் வேலையை பா.ஜ.க. தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக மற்றும் அமைச்சர்கள் பணியாற்றுவதாகவும், எம்எல்ஏக்களை பாதுகாப்பதுதான் தங்கள் திட்டம் என்றும் குமாரசாமி கூறியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection #CongressMLAMissing
    ×