search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெற்றது. இதில் மரகதலிங்கத்துக்கு பால், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் உலா வந்தது. திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் பொதுமக்கள் தீபாராதனை காட்டி சாமிதரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி திருவையாறில் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் தேரோட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    21-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) சப்தஸ்தான பெருவிழா நடக்கிறது. அன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. 22-ம் தேதி(திங்கட்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக் குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    சைவமும், வைணவமும் இணையும் வகையில் கொண்டாடப்படும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது என 15 நாட்கள் ஆண்டுதோறும் மதுரையில் இந்த விழாகளைகட்டி காணப்படும்.

    சித்திரை திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் திரள்வது உண்டு.

    இந்த ஆண்டு மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி- அம்மன் வீதிஉலா கோலாகலமாக நடைபெற்றது. இரவில் நடைபெறும் சுவாமி ஊர்வலத்தின்போது சிறுவர், சிறுமியர் மீனாட்சி, சொக்கநாதர் மற்றும் கடவுள்கள் வேடங்களில் வந்து ஆடிபாடி செல்வதை காண மாசிவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

    முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் போன்றவை விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு புதுதாலி மாற்றி கொண்டனர். கோவில் சார்பில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முதலில் விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் இழுக்கப்பட்டன. காலை 4.30 மணிக்கு பிரியாவிடையுடன் சொக்கநாதர் பெரிய தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் சிறிய தேருக்கு எழுந்தருளினார்.

    காலை 5.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன், கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய... என்ற பக்தி கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி- அம்மன் தேர்கள் வலம் வந்ததை காண ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

    தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை மற்றும் காளை வலம் வந்தன. இதனை கண்டு சிறுவர்-சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் ஆர்வத்துடன் வடங்களை பிடித்து தேர் இழுத்தனர். இந்த சித்திரை திருவிழாவால் மதுரை இன்று களைகட்டி காணப்பட்டது.

    பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள நிலையை அடைந்ததும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமி-அம்மன் தேர்களுக்கு பின்னால் சண்டிகேஷ்வரர், பஞ்சமூர்த்திகள் சப்பரங்களில் வீதிஉலா வந்தனர்.

    மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவை தொடர்ந்து நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடை பெற உள்ளது. இதற்காக அழகர்மலையில் இருந்து கள்ளழகர் நேற்று மதுரை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக பல்வேறு மண் டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.

    இன்று மாலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. நாளை அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், காலை மற்றும் மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதிஉலாவும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட் டம் நடந்தது. வரகுண பாண்டீஸ்வரரும், நித்திய கல்யாணி அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

    தேரோட்டத்துக்கு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. வரகுண பாண்டீஸ்வரர் தேரை ஆண்களும், நித்திய கல்யாணி அம்பாள் தேரை பெண்களும் இழுத்துச் சென்றனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் சென்று, மதியம் 2 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தில் ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழா நடந்தது. சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், காலை மற்றும் மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதிஉலாவும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது. வரகுண பாண்டீஸ்வரரும், நித்திய கல்யாணி அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

    தேரோட்டத்துக்கு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. வரகுண பாண்டீஸ்வரர் தேரை ஆண்களும், நித்திய கல்யாணி அம்பாள் தேரை பெண்களும் இழுத்துச் சென்றனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் சென்று, மதியம் 2 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தில் ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழா நடந்தது. சுவாமி- அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் சிவசிவ கோஷங்கள் முழங்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்மிக்க அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஈஸ்வரனும், கருணாம்பிகையும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற 7 திருத்தலங்களில் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் முதலாவதாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதை தொடர்ந்து 11-ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், 12-ந் தேதி பூத வாகனம், அன்ன வாகனம் அதிகாரநந்தி கிளி வாகன காட்சிகளும், 13-ந் தேதி புஷ்ப பல்லக்கு கைலாச வாகன காட்சி ஆகியவை நடந்தன. 14 -ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.

    பின்னர் 15-ந் தேதி கற்பக விருட்சம் திருக்கல்யாண உற்சவம் மற்றும் யானை வாகன காட்சி நடந்தது. உற்சவ மூர்த்திக்கும், கருணாம்பிகை அம்மனுக்கும் ஊஞ்சல் விழா நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் திருமாங்கல்ய பூஜை செய்து கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார். அப்போது பெங்களூரு வேத ஆகம பாடசாலை மாணவர்கள மந்திரம் மற்றும் திருமுறைகள் பாடினர். இதைத்தொடர்ந்து யானை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 16-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் விநாயகர், அவினாசியப்பர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    பின்னர் காலை 6 மணிக்கு நாதஸ்வர இன்னிசை முழங்க உற்சவமூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய தேருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிர்வேட்டுகள் முழங்க நாதஸ்வர இசை, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, சுவாமிகள் ரதத்தின் மீது அமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து பெரிய தேரில் சோமாஸ்கந்தர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறிய கருணாம்பிகை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பெரிய தேர் மற்றும் சிறிய தேரில் எழுந்தருளிய சாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பின்னர் நேற்று காலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தேரின் இரண்டு சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஜன்னை மிராசுகள் ஜன்னைபோட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர். ஆன்மிக சான்றோர், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் “சிவ சிவ” கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேருக்கு முன்பாக பெண் பக்தர்கள் நடனமாடி சென்றனர்.

    இதையடுத்து பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து சென்றது. தேருக்கு பின்னால் நின்றிருந்த இரண்டு பொக்லைன் எந்திரங்கள் தேரை தள்ளியது. “அழகுன்னா அழகு அவினாசி தேர் அழகு” என்பதற்கு ஏற்றவாறு தேர் அசைந்தாடி நகர்ந்தது. பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். கோவை-அவினாசி மெயின் ரோடு, மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் வலம் வந்து பிற்பகல் 2.30 மணிக்கு நிலையை அடைந்தது.

    தேர்த்திருவிழாவை காண அவினாசி மற்றும் அவினாசியை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.

    இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் அவினாசி திணறியது. பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர், மோர் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு அனைத்து தேர் செல்லும் அனைத்து ரதவீதிகளும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. வாழைகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. தேர் சென்ற வீதிகளிலும் எல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடக்கிறது. பின்னர் மாலை வண்டி தாரை பரிவேட்டையும், நாளை (வெள்ளிக்கிழமை) தெப்பத்தேர் நிகழ்ச்சியும், 20-ந் தேதி நடராஜர் தரிசனம், 21-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் சபா மண்டபத்தில் தினசரி மாலை 6 மணி முதல் பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    தேர்த் திருவிழாவை முன்னிட்டு அவினாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில் இருபத்தி மூன்றாம் ஆண்டாக பூவசாமிகவுண்டர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் திருவிழா காண வந்த பல ஆயிரக்கணக்கானோருக்கு அவினாசி மாருதி சூப்பர் ஸ்டோர் சார்பாக பழரசம் வழங்கப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் வைஷ்ணவ தலங்களில் சிறப்பு பெற்றதாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்துநாள் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

    அதில் ஏழாவது நாள் தேர்திருவிழா வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்தஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிவீதி உலாநடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    அதனை முன்னிட்டு இன்று அதிகாலை பூவராகபெருமாள் மற்றும் அம்புஜவல்லி தாயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடந்து உற்சவர் சாமிகளான எக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவி தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் தேரில் வீற்றியருளச்செய்தனர்.

    இதையடுத்து வாண வேடிக்கை மேளக்கச் சேரியுடன் தேரோட்டம் தொடங்கியது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்திபரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்,

    விழாவையெட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்கலால் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

    19-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதனை சக்தி அம்மா தொடங்கி வைத்தார்.
    குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கியது. தினமும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி தேருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தயார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர்-சிவகாமசுந்தரி அம்பாள், சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து தேரோட்டத்தை திருமலைக்கோடி ஸ்ரீபுரம் சக்தி அம்மா தொடங்கி வைத்தார். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. தேர்மீது பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தேரோட்டத்தில் தாசில்தார் டி.எஸ்.சாந்தி, செங்குந்தர் சங்க மாநில தலைவர் கே.பி.கே.செல்வராஜ், கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு வக்கீல் கே.எம்.பூபதி, ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் எம்.வெங்கடசுப்பு, கம்பன் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, பெட்ரோல் வணிக சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம், வேலூர் நாடாளுமன்ற அ.தி.மு.க. தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மூர்த்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளைமறுதினம் (வெள்ளிக்கிழமை) புஷ்பபல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
    சித்திரை திருவிழாவையொட்டி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று(புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை அம்மன் உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கொங்கு நாட்டில் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அது போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த 14-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் கற்பக விருட்சம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கிடையே தேரோட்டத்தையொட்டி கோவில் திருத்தேர்கள் அலங்கரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களான நடைபெற்றன. திருத்தேர் தற்போது தேரோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் அவினாசியப்பர், சோமாஸ்கந்தர், உமா மகேஸ்வரியுடனும், சிறிய தேரில் கருணாம்பிகையும் எழுந்தருளினார்கள்.

    இதையடுத்து தேர் மீது எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18-ந்தேதி மாலை 4 மணி அளவில் அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 19-ந்தேதி தெப்ப உற்சவமும், நடராஜர் தரிசனமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
    மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக தேர் வலம் வரும். இதனால் அந்த சாலைகளில் குண்டும், குழியுமாக காணப்படும் பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சாலையோரம் காணப்படும் மண் திட்டுகளும் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தேரோட்டத்திற்கு கூட்டம் அதிகமாக வரும். அப்படி வருபவர்கள் நெரிசலில் சிக்கி சாலையோரம் இருக்கும் சாக்கடைக்குள் விழுந்துவிடாமல் இருக்க கம்புகளால் ஆன தடுப்புகள் மேலவீதி மற்றும் வடக்குவீதியில் உள்ள சாக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

    மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் தேர் செல்லும்போது தட்டும் என்பதால் அந்த மின்விளக்குகளை எல்லாம் மாநகராட்சி பணியாளர்கள் திருப்பி வைத்துள்ளனர். மேலும் சாலையோரத்தில் வெள்ளை நிற வர்ணம் அடிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரோட்டத்தை பார்க்க வரும் மக்களின் தாகத்தை போக்க மேலவீதியில் ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    சித்திரை திருவிழாவையொட்டி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி அளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

    காலை 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் வீதியை சுற்றி வந்த தேர் பகல் 11.50 மணி அளவில் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை காண திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தப்படி நிலையை வந்தடைந்தது.

    கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த போது சாலையில் வெயிலின் தாக்கம் இருக்காத வகையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. முன்னதாக தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் பலர் பால் குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பய, பக்தியுடன் அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி அம்மன் நேற்று இரவு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து உறையூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சித்திரை திருவிழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை இரவு 8 மணிக்கு காப்பு கலைதல், விடையாற்றி விழா நடைபெற உள்ளது. 
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்கிறது.
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    நாளை காலை 9 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேர் கோவில் வீதியை சுற்றி நிலையை வந்தடையும். நாளை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்பதால் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்லத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    அய்யா வைகுண்ட சுவாமி சாமிதோப்பு தலைமைப்பதியில் வடக்கு வாசலில் 6 வருடங்கள் தவம் இருந்தார். தவத்தை நிறைவேற்றி விட்டு சீடர்கள் மற்றும் தனது பக்தர்களோடு முட்டப்பதிக்கு சென்று அங்குள்ள பாற்கடலில் புனித நீராடினார். பின்னர் இறைவனாக அவதாரம் எடுத்து, அன்று மாலை தன்னுடைய பக்தர்களோடு மீண்டும் சாமிதோப்பு தலைமை பதிக்கு வந்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.

    இந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் செல்வது வழக்கம். அதன்படி இந்த வருட முத்துக்குடை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர்வலத்தை பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். பையன் நேம்ரிஸ் தலைமை தாங்கினார். முத்துக்குடை பிடித்த பக்தர்கள் முன் செல்ல ஊர்வலம் கரும்பாட்டூர், விஜயநாகரி, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம் வழியாக முட்டப்பதியை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் முட்டப்பதியில் பணிவிடை, தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் முட்டபதியிலிருந்து மீண்டும் ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்பட்டது. இரவு 7 மணிக்கு ஊர்வலம் மீண்டும் சாமிதோப்பை வந்தடைந்தது. இந்த ஊர்லத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ×