என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவடி"
- சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டு இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் ரெட்டிபா ளையம் சக்கராம்பேட்டை பகுதியில் சியாமளா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று 36-ம் ஆண்டு பால்குடை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு காவடி எடுத்தும், அலகு குத்தியும் குளக்கரையில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.
பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர். பின்னர் சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.
இன்று இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.
விழாவில் வருகின்ற 30 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பா டுகளை நாட்டாமைகாரர்கள், கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
நேற்று 140- வது ஆண்டாக திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளை எடுத்து சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருபுவனத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கும்பகோணம் வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமிமலை முருகன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து சுவாமிமலை முருகன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவரான முருகன் மற்றும் வள்ளி தெய்வானை உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கொரோனா பரவல் காரணமாக நேற்று நடைபெற்ற பாதையாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சென்றனர்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய மகாமாரியம்மனை வேண்டி கொள்வர். பின்னர் நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கில் பாடையில் இறந்தவரை போல் படுத்து கொள்வர். இறந்தவரை எடுத்து செல்லும் இறுதி சடங்கு போன்று தீச்சட்டியுடன் அனைத்து சடங்குகளை செய்து அந்த பாடையை அவரது உறவினர்கள் 4 பேர் தூக்கி கொண்டு கோவிலை 3 முறை வலம் வருவார்கள். இதுவே பாடைக்காவடி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நோயில் இருந்து குணமடைந்தவர்கள் பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கில் பாடையில் இறந்தவர் போல் படுத்து கொண்டனர். இறந்தவரை எடுத்து செல்லும் இறுதி சடங்கு போன்று தீச்சட்டியுடன் அனைத்து சடங்குகளை செய்து அந்த பாடையை அவருடைய உறவினர்கள் 4 பேர் தூக்கி கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, தொட்டில் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வழங்கிய பால் மற்றும் அபிஷேக பொருட்களால் அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் குணசேகரன் உள்பட பலர் சாமி தரிசனம் செய்தார்.
மாலையில் அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. செம்மறி ஆடு ஊர்வலமாக பிடித்து வரப்பட்டது. பின்னர் கோவிலின் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த செடில் மரத்தில் ஆட்டை ஏற்றி 3 முறை வலம் வந்து செடில் திருவிழா நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவசம் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் ஆண்கள், பெண்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்திட சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலின் உட்புறம், வெளிபுறங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டது. பேரூராட்சி சார்பில் அனைத்து பகுதிகளில் குப்பைகள் அகற்றி தடையில்லா குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் செய்து இருந்தனர். ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேலு தலைமையில், மருத்துவ குழுவினர், தீயணைப்பு நிலைய வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் கோவிலின் முன்புறம் முகாம் அமைத்து தயார் நிலையில் இருந்தனர்.
தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின்படி, திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு துரை ஆலோசனைபடி, நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், திருவாரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோசப், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்சார துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கிளை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, திருவையாறு, கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து வலங்கைமானுக்கு 48 மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 7 மணியளவில் 1 மணி நேரத்திற்கு சிறப்பு வான வேடிக்கைகள் நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
நேற்று யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.
மாலையில் பறக்கும் வேல் காவடிகள், புஷ்ப காவடிகள் திருச்செந்தூருக்கு புறப்பட்டன. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக சென்றது.
வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலிலும் வேல்தரித்தல், காவடி பூஜைகள், அன்னதானம், காவடி அலங்காரம் போன்றவை நடந்தது. நேற்று காவடி ஊர்வலம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.
மாலையில் பறக்கும் காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதுபோல், சேரமங்கலம் ஆழ்வார்கோவிலில் இருந்தும் பறக்கும் வேல்காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு சென்றது.
குளச்சலில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பறக்கும் காவடி, வேல்காவடி எடுத்தும், சிறுவர்கள் முருகன் வேடம் அணிந்தும், குளச்சல் போலீஸ் நிலைய பகுதிக்கு வந்தனர்.
அங்கு காவடிகளை வரவேற்க ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். பின்னர் காவடிகள் திங்கள்சந்தை வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.
இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இரணியல்கோணம், நெய்யூர், தலக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு திங்கங்சந்தையில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அங்கிருந்து பறவை காவடி உள்பட பல்வேறு காவடிகள் ஊர்வலமாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டன. இந்த ஊர்வலம் கண்டன்விளை, தோட்டியோடு, நாகர்கோவில் வழியாக சென்றது. ஊர்வலத்தையொட்டி திங்கள்சந்தை நகரில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவில் இரணியல், திங்கள்நகர், குளச்சல், புதுக்கடை, மணவாளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று கலந்து கொள்வார்கள்.
இதைத்தொடர்ந்து இரணியல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் புஷ்பக்காவடி, தேர் காவடி, எண்ணைக்காவடி, பறவைக்காவடி உள்பட பல்வேறு காவடிகளை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் காவடி எடுத்த படி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக பயணமாவார்கள். பல பக்தர்கள் வாகனங்கள் மூல மும் சென்று திருச்செந்தூர் கோவிலில் வழிபடுவார்கள்.
இதைத்தொடர்ந்து காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் தங்கள் காவடிகளை பூஜையில் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இந்த காவடி பூஜைகள் நடந்து வருகிறது. இன்றும் காவடி பூஜை நடைபெற்றது. இன்று இரவு காவடி அலங்காரமும் நடைபெறும்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு காவடிகளுக்கு தீபாராதனை காட்டப்படும். அதன் பிறகு தெருக்களில் காவடி ஊர் மாறான் பரம்பு, காட்டுவிளை ஆகிய பகுதிகளில் இருந்தும் பறக்கும் காவடி, அக்னிக் காவடி, தேர் காவடியுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு கிரேன் காவடிக்கு போலீசார் தடை விதித்து உள்ளதால் பக்தர்கள் கிரேன் காவடி எடுக்கவில்லை. காவடி ஊர்வலத்தை தொடர்ந்து செக்காலத் தெருவில் காளைகள் மூலம் கல்செக்கில் எள் மூலம் நல் எண்ணெய் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
கொற்றவையின் செல்வன் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகள் சிலவற்றிலும் கந்தன், சுப்ரமணியன், கார்த்திகேயன் என பல்வேறு பெயர்களில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த கடவுளாக உள்ள முருகப்பெருமானை இந்த தை மாதத்தில் விரதமிருந்து, காவடி எடுத்து, காவி உடை மற்றும் ருத்ராட்சை மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை போற்றி கீர்த்தனைகள் பல பாடி பக்தர்கள் வழிபடுவார்கள்.
10 நாட்கள் நடக்கும் இந்த தைப்பூச திருவிழாவின் போது யாத்திரை நிகழ்வு, தீர்த்தம் ஆடல், தர்ம காரியங்கள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடைபெறும். நாட்டுப்புற மக்கள் இந்த திருவிழாவை ‘தேர் நோம்பு’ என குறிப்பிடுகின்றனர். பாதயாத்திரையாக வந்து முருகனின் தாள்பணிந்து வணங்கினால் வாழ்வும் செழிப்படையும், நினைத்த காரியமும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள்.
பக்தர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் முகம், அறியாமையை நீக்கி அறிவை நிலை நிறுத்தும் முகம், அடியவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிக்கொணரும் முகம், யாகங்களை காக்கும் முகம், நல்லவர்களை காத்தும், தீயவர்களை தண்டிக்கும் முகம், பக்தர்களிடம் அன்பு காட்டி அருளும் மற்றொரு முகம் என்று ஆறுமுகங்களை கொண்டு அருளாட்சி செய்பவர் முருகப்பெருமான் ஆவார்.
தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று முருக திருவிழா முருகனின் அறுபடைவீடுகளிலும் நடைபெறுகிறது. இவ்விழா பழனி முருகன் கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் உமா தேவியார் தனது மகன் முருகனுக்கு வேலினை எடுத்துக் கொடுத்து ‘தாரகன்’ எனும் அரக்கனை வென்று வரும்படி அனுப்பிய நிகழ்ச்சியே தைப்பூச விழாவாக கொண்டாடப்படும்.
யோகிகளுக்கு பழனியாண்டியாகவும், கடவுளர்களுக்கு தேவசேனாதிபதியாவும், குழந்தைகளுக்கு குழந்தை வேலனாகவும், பாலசுப்ரமணியனாகவும், ஞானம் வேண்டுவோருக்கு சுவாமி நாதனாகவும், இல்லறத்தாருக்கு வள்ளி-தெய்வானையாகவும், துறவிக்கு பழனியாண்டவனாகவும், அருள்பாலிக்கிறார். இந்நாளில் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! என்ற முழக்கத்தோடு வந்து தண்டாயுதபாணியின் திருவருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.
மயில்தோகை காவடி, தீர்த்த காவடி, அலகுக்காவடி, பறவைக்காவடி, சுரைக்காய் காவடி, தானியக்காவடி, இளநீர்க்காவடி, தொட்டில் காவடி, கரும்பு காவடி, பால் காவடி, பஞ்சாமிர்த காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, பூக்காவடி, முள்ளுமிதி காவடி, சர்க்கரை காவடி, கற்கண்டு காவடி, மலர்காவடி, காகிதபூக் காவடி, அலங்கார காவடி, கூடை காவடி, செருப்பு காவடி, விபூதி காவடி, அன்னக் காவடி,
கற்பூரக் காவடி, வேல் காவடி, வெள்ளி காவடி, தாளக்காவடி, பாட்டுக்காவடி, ஆபரணக் காவடி, தாழம்பூ காவடி, சந்தனக்காவடி, மிட்டாய் காவடி, தயிர் காவடி, தேன் காவடி, சர்ப்ப காவடி, அக்னி காவடி, அபிஷேக காவடி, தேர்க்காவடி, சேவல்காவடி, சாம்பிராணிக் காவடி, மயிற்தோகை அலங்கார காவடி, ரத காவடி ஆகிய காவடிகள் உள்ளன.
சிறப்புமிக்க இந்த காவடியை செலுத்திய எழபெத்த வீடு குடும்பத்தினர் ஆண்டுதோறும் பழனிக்கு காவடி எடுத்து முருகனுக்கு செலுத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரம்பரியமாக இந்த பழக்கம் இருந்தது. தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பழனிக்கு வரும் போது மறக்காமல் அந்த “முதல்காவடி”க்கு பூஜைகள் செய்துவிட்டு செல்கின்றனர்.
எழபெத்தவீடு குடும்பத்தினரைத் தொடர்ந்து பழனியாண்டவருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நாளடைவில் தமிழர்களும், அதிக அளவில் பழனிக்கு காவடி எடுத்தனர். தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பழனிக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் காவடி ஏந்தி செல்கின்றனர். பங்குனி உத்திரம் நாளில் பழனிக்கு வரும் காவடிகளின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தை தாண்டுகிறது.
இந்த பக்தர்கள் தங்களுடைய ஊரில் இருந்து குழுவாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று வருகின்றனர். தங்கள் ஊரில் இருந்தே முருகன் படத்தை சப்பரத்தில் அலங்காரம் செய்து லோடு ஆட்டோவில் வைத்து கொண்டு வருகிறார்கள். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஆடி வந்தனர். பாளையங்கோட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர், நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவிலில் வைத்து 6 அடி நீளத்துக்கு வேல் குத்தி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றார்.
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக செல்கிறார்கள். சில பக்தர்கள் 15 அடி நீளமுள்ள அலகு குத்தி சென்றனர்.
நெல்லை மாநகரத்தில் சாலைகளில் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்களின் கூட்டத்தை பார்க்கவும், பக்தி கோஷத்தை கேட்கவும் முடிகிறது.
நெல்லை சந்திப்பு மேம்பாலத்தை கடந்து செல்லும் பக்தர்கள், சாலைக்குமார சுவாமி கோவில் இருக்கும் பகுதியில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து செல்கிறார்கள்.
நெல்லை வழியாக செல்லும் முருக பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையிலும், மாலையிலும் புனித நீராடினார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றில் முருக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதையடுத்து காலை 11 மணி அளவில் பாதயாத்திரை பக்தர்கள் சின்னவடவாடி குளக்கரையில் இருந்து பால், இளநீர் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால் மற்றும் இளநீரால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தக்கலை போலீஸ் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறையினர் சார்பாக காவடி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று குமாரகோவிலுக்கு காவடி ஊர்வலம் நடந்தது.
தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் யானை மீது பால்குடம் மற்றும் 2 புஷ்ப காவடிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட்டு முத்துராமன், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொதுப்பணித்துறை சார்பில் புஷ்ப காவடி எடுத்து செல்லப்பட்டது. விழாவில் உதவி பொறியாளர் கதிரவன், செயற்பொறியாளர் வேத அருள்சேகர், பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, பாசனத்துறை நிர்வாகி முருகேச பிள்ளை மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரின் காவடிச் சிந்து, இசைச் சுவையும், அலங்காரச் சுவையும் கொண்டது. கழுகுமலை முருகன் மீது பாடப்பட்ட இப் பாடல்களே காவடிச் சிந்து பாடல்களில் முதன்மையானதாகும் கழுகுமலை காவடிச் சிந்து ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியால் பாடப்பெற்ற பெருமையை உடையது.
காவடி எடுப்பது என்று முடிவு செய்து கொண்டவர்கள் கடின விரதங்களை மேற்கொள்வார்கள். விரதம் இருந்து ஆண்டவன் சந்நிதிக்கு போகும் நாள் வந்தவுடன் காவடி எடுப்போர் நாக்கிலும், உதட்டிலும் சிறிய வேல்களைக் குத்திக் கொள்வர். பின் காவடி எடுத்து, 'வேல் வேல்', 'முருகா...வெற்றி வேல் முருகா', 'அரோகரா', 'முருகா முருகா' என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டே கோயிலின் சந்நிதி நோக்கி ஆடியபடி செல்வர்.
முருகனுக்குப் பக்தர்கள் எடுக்கும் காவடிகள் 36 வகை என்று கூறப்படுகிறது. பால், பன்னீர், சர்க்கரை, பூ, சந்தனம், பழம், தீர்த்தம், அக்கினி, நெய், தைலம், விலங்கு, வேல், கற்பூரம், அன்னம், இளநீர், ஆணிச்செருப்பு, தேன், சொர்ணம், பாவை, பச்சிலை, பாண்டம், ஆயுதம், பஞ்சவாசம், மச்சம், சர்ப்பம், சேவல், சோதனை, முத்திரை எனப் பலவாறாக காவடிகள் உள்ளன.
இவற்றில் முத்திரைக் காவடிக்கு 'உபசாரக் காவடி' என்ற வேறு பெயரும் உண்டு. மச்சக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக்காவடி, மூன்றையும் சேர்த்து, 'சோதனைக்காவடி' என்றும் அழைப்பதுண்டு. மேற்சொன்ன முருகனுக்கு எடுக்கப்படும் 36 வகைக் காவடிகள்அல்லாது வேறு சில வகைக் காவடிகளும் உள்ளன. காவடி சுமப்போருக்கு கந்தன் அருள் கட்டாயம் உண்டு.
காய்ந்த ஆல விழுது போன்ற லேசான மரத்தில் தடியன்று தயாரித்து, அதன் இரு பக்கங்களிலும் பால் நிரப்பிய சிறிய செம்புகளை வைத்துக் கட்டுவர். பின் தடியின் மேல் அரைவட்டமாகப் பல குச்சிகளை வளைத்துக் கட்டித் துணிகளாலும், மயில் தோகைகளாலும் அலங்காரம் செய்வர். இதுவே காவடி அமைக்கும் முறையாகும். தனக்கு ஏற்பட்ட இன்ப, துன்பங்களைக் காவடியாகக் கட்டி ஆண்டவன் முன்பு வைத்து வழிபடுவதே காவடி வழிபாட்டின் தாத்பர்யமாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்