search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்மிண்டன்"

    • கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை 24-22, 23-21 என வீழ்த்தினார்.
    • சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ 21-12, 19-21, 21-11 என வீழ்த்தினார்.

    தைபே ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் மற்றும் சங்கர் சுப்ரமணியன் ஆகியோர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர். அதவேளையில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வீராங்கனைகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை எதிர்கொண்டார். இதில் கருணாகரண் 24-22, 23-21 என வெற்றி பெற்றார்.

    சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் கேம்-ஐ சுப்ரமணியன் 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது கேம்-ஐ 19-21 என இழந்தார். இருந்தபோதிலும் வெற்றிக்கான 3-வது கேமில் சிறப்பாக விளையாடி 21-11 எனக் கைப்பற்றினார்.

    மற்றொரு வீரரான கிரண் ஜார்ஜ் இந்தோனேசியாவின் யோகனஸ் சாயுட்டிடம் 21-15, 8-21, 16-21 என தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப் 19-21, 18-21 என தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

    தனியா ஹேமந்த் 11-21, 10-21 என எளிதில் தோல்வியடைந்ததார். சீன தைபே வீராங்கனை தை டிசு யிங் 27 நிமிடத்தில் வீழ்த்தினார்.

    அனுபமா உபத்யாயாவை அமெரிக்க வீராங்கனை 17-21, 21-19, 21-11 என வீழ்த்தினார். முதல் கேம்-ஐ அனுபமா கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு கேம்களையும் இழந்தார்.

    • விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
    • அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவை நம்பமுடியாத இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பான பதிவுகளில், "பாரா ஒலிம்பிக்ஸ் 2024 இல் பெண்களுக்கான பேட்மிண்டன் எஸ்யு 5 போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமையான தருணம். அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவளுக்கு வாழ்த்துக்கள்," என்றார்.



    "பாரா ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் SU5 போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்ல மனிஷா ராமதாஸின் சிறப்பான முயற்சி, அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவை நம்பமுடியாத இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது. அவளுக்கு வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.
    • துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் கியு ஹ்யா யங்-ஐ எதிர்கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதனால் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார்.

    இதே பிரிவில் (பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவு) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தினார்.

    இதனால் தமிழகத்தை சேர்ந்த மனிஷாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த இரு பதக்கங்களை சேர்த்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது.

    • பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது.
    • பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றார்

    பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • பேட்மிண்டனில் இந்தியாவின் நிதேஷ குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நிதேஷ் குமார் ஜப்பான் வீரரை 21-16, 21-12 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • பேட்மிண்டனில் இந்தியாவின் மணீஷா அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார். நேற்று ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.

    இதையடுத்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இதற்கிடையே, பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மணீஷா ராம்தாஸ், ஜப்பானின் டொயோடா மோமிகாவை 21-13, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் சக வீராங்கனை துளசிமதி முருகேசனை மணீஷா ராமதாஸ் சந்திக்க உள்ளார்.

    • பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்தியா சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் SL3 பெண்கள் பிரிவில் இந்தியாவின் மந்தீப் கவுர், நைஜீரியாவின் மரியன் எனியோலா போலாஜியுடன் மோதினார்.

    சுமார் 29 நிமிடங்களில் முடிந்த இந்தப் போட்டியில் மந்தீப் கவுர் 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மந்தீப் கவுர் அடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை செலின் வினோட்டுடன் மோத உள்ளார்.

    • இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது.
    • அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மின்டன் ஆட்டத்தில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமே.

    இதில் லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி வரை வந்து தோற்றார். சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் வெளியேறியது. இதே போல பி.வி.சிந்துவும் கால் இறுதியில் தோற்றார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 3 ஆட்டத்திலும் தோற்று தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது. பிரணாய்க்கு ரூ.1.8 கோடி வழங்கப்பட்டதாகவும், அஸ்வினி பொன்பப்பா-தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    இதை அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உண்மையை சரியாக பெறாமல் எப்படி அந்த தகவலை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு கூறலாம். தலா ரூ.1.5 கோடியா? யாரிடமிருந்து? எதற்காக? எனக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை.

    நிதியுதவிக்காக எந்த அமைப்பிலோ அல்லது ஒலிம்பிக் பதக்க இலக்க திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நான் இருக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் வரை நான் கலந்து கொண்ட போட்டிகளுக்கு எனக்கு நானே நிதியுதவி செய்தேன். அணியில் இணைவதற்கான தகுதியை அடைந்த பிறகுதான் இந்திய அணியுடன் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டேன்.

    பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பிறகுதான் நான் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன், அவ்வளவுதான். எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது".

    இவ்வாறு அஸ்வினி பொன்னப்பா கூறியுள்ளார்.

    • முதல் செட்டை லக்ஷயா சென் கைப்பற்றினார்.
    • இரண்டாவது செட்டை மலேசிய வீரர் கைப்பற்றினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லீ சி ஜியா உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக மலேசியா வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 21-11 என்ற கணக்கில் மலேசிய வீரர் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை தங்கம் வென்றார்.
    • சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் உடன் மோதினார். இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கம் வென்றார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் பெற்றதும், தன் கையில் ஸ்பெயின் நாட்டை நினைவு கூரும் வகையில் சிறிய பின் வைத்திருந்தார்.

    அவரது இந்த செயல் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுக்கு இந்தப் பதக்கத்தை சமர்ப்பிப்பது போல இருந்தது. சீனா வீராங்கனையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    அரையிறுதியில் கரோலினா மரின் முன்னிலை பெற்றிருந்தபோது காயத்தால் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இன்று மோதுகிறார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென் கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் உடன் மோதினார்.

    இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • லக்‌ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர் என்றார் அக்சல்சென்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இன்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் கூறுகையில், லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் லக்ஷயா சென் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    ×