search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • விருதுநகர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    • எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி வேல்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் சுபபிரியன் (வயது14).

    இவன் சூரப்ப நாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பொதுத்தேர்வு எழுதியிருந்த சுபபிரியன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.

    இந்தநிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த சுபபிரியன், நேற்று அங்குள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. அங்கு தண்ணீரில் இறங்கிய அவர் ஆழமான பகுதியில் சிக்கினான்.

    அங்கிருந்து வெளியேற முடியாமல் சுபபிரியன் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து தகவலறிந்த எம்.ரெட்டியபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்மாயில் மாணவனை தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.

    மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கண்மாயில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழப்பு
    • மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் தனியார் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரி ஆசிரியர் உயிரிழந்தார்.மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் வசித்து வந்தவர் ஆரோக்கியம் மகன் சேசுசகாயராஜ் (வயது 54). இவர். நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மரவனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் சேசுசகாயராஜ் படுகாயம் அடைந்தார்.பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சிலர், கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதுபோல காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    ஆரல்வாய்மொழி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சிலர், கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக வெளியூர்களுக்கும் சென்று நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துச்செல்ல ஏஜண்டுகளும் உள்ளனர்.

    அதன்படி 3 பெண்கள் உள்பட 12 பேர் கொண்ட நடன குழுவினர் ஒரு காரில் நேற்று திருச்செந்தூர் பகுதியில் நடந்த கோவில் விழாவுக்கு ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக சென்றனர். அங்கு நள்ளிரவுக்கும் மேலாக அவர்கள் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். பின்னர் இன்று அதிகாலை அவர்கள் காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் கண்ணன் ஓட்டினார்.

    ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளமடம் பகுதியில் வளைவான சாலையில் கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காருக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்பே கார் எதிர்திசை நோக்கி பாய்ந்துள்ளது. அப்போது அங்கு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ரோஸ்மியாபுரம் செல்லும் அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது, கட்டுப்பாட்டை இழந்து சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதுபோல காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மோதிய வேகத்தில் காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அவர்களது உடமைகளும் சாலையில் சிதறி விழுந்தன. விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். டிரைவர் கண்ணன் காரின் இருக்கையில் படுகாயத்துடன் கிடந்ததால் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் ½ மணி நேரம் போராடி டிரைவர் கண்ணனை மீட்டனர். தொடர்ந்து காரில் படுகாயத்துடன் இருந்த 8 பேர் மீட்கப்பட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு செல்லும் வழியில் டிரைவர் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. மற்ற 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரை போலீசார் கயிறு கட்டி இழுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகே போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியானவர்கள் யார்? என்பது குறித்து காயம் அடைந்தவர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், ஏஜண்டு மூலம் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லப்பட்டதால், ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக ராணித்தோட்டம் அரசு பஸ் டிரைவர் இமானுவேலிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் ஆகியோரும் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அவர்கள் விபத்து குறித்த விவரம் கேட்டறிந்தனர்.

    • பிரசாந்த்(வயது 16) பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.
    • போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு காலணி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் பிரசாந்த் (வயது 16). இவர் வேகாக்கொல்லையில் உள்ள முந்திரி தூசி கம்பெனியில் தூசி அல்லும்வேலை செய்து வந்தார்.    வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அரசடிகுப்பத்தில் உள்ள பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர். வெகுநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பிரசாந்தின் உடலை மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டி கையில் இருந்து தவறி கிணற்றில் விழுந்த 6 மாத குழந்தை பலியானது
    • சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊத்துக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38). இவரது மனைவி ஜெயமணி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ஜெயமணியின் மாமியார் பரமேஸ்வரி சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர்.இந்நிலையில், மாமியார் பரமேஸ்வரி, ஆறு மாத பெண் குழந்தை ஆத்யாவை, துாக்கி கொண்டு வீட்டுக்கு அருகே உள்ள, கிணற்று பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஆத்யா, பரமேஸ்வரியின் கையில் இருந்து தவறி, கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.அருகில், இருந்தவர்கள் குழந்தையின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
    • சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை அடுத்துள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது68). விவசாயியான இவர் சம்பவத்தன்று வயலுக்கு சென்றார். அப்போது கீழே அறுந்து கிடந்த மின் வயரை பெரியசாமி மிதித்ததாக தெரிகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது33). இவர் சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது நடந்த விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய பாலமுருகன் மது பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்று அவர் வீட்டின் வாசலில் மயங்கி விழுந்து படுகாயமடைந்தார். குடும்பத்தினர் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்தார். சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காத்தவராயன் (வயது 55). விவசாயி. இவர் புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் காட்ராம்பாக்கம் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த லாரி இவர் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட விவசாயி காத்தவராயன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானர்


    விழுப்புரம்:

    வானூரை அடுத்த காட்ராம்பாக்கத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 55). விவசாயி. இவர் புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் காட்ராம்பாக்கம் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த லாரி இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட விவசாயி காத்தவராயன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானர். இத்தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் காத்தவராயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • படுகாயம் அடைந்த சுடலைமணி பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சுடலைமணி (வயது 29). இவருக்கு கடந்த 2 வருடங்க ளுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

    இவர் இன்று அதிகாலை மானூர் அருகே உள்ள குத்தாலப்பேரி விலக்கு நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுடலைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலைமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர். 

    • சேற்றில் சிக்கி விவசாயி சாவு உயிரிழந்தார்.
    • மீன் பிடிக்க ஏரிக்கு சென்றவர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 40). விவசாயி. இவர் நேற்று தழுதாழையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஏரியில் இறங்கி மீனுக்காக வலை விரித்தபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக்கொண்டார். பின்னர் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிவேமாக சென்ற மோட்டார் சைக்கிள் நின்றிருந்த லாரி மீது மோதி முதியவர் பலியானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மோகன் (58). இவர் சம்பவத்தன்று வெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில்அதி வேகமாக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்துதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின்கம்பியை மிதித்த கறவை மாடு பலியானது
    • இழப்பீடு வழங்கக்கோரி கோரி மனு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவர் மேய்ச்சலுக்காக தனது பசு மாடு மற்றும் கன்றை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் நேற்று காற்றுடன் பெய்த மழையின் காரணமாக விவசாய மின் இணைப்பிற்கு செல்லக்கூடிய மின் கம்பி அறுந்து கீழே கிடந்தது. அந்த வழியாக சென்ற பசுமாடு அந்த மின் கம்பியை மிதித்த நிலையில், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தது. பசு மாட்டினை ஓட்டிச்சென்ற உரிமையாளர் சுதாரித்துக் கொண்டு அதிர்ஷ்டவசமாக கன்றுக்குட்டியுடன் உயிர் தப்பினார்.இது குறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பசுமாட்டிற்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இறந்த மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் கலைமணி மனு அளித்துள்ளார்.

    • மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு இன்று காலை 8.40 மணிக்கு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    கார்கோன் மாவட்டம் டோங்கர்கான் என்ற கிராமத்தில் உள்ள ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் மணற்பரப்பில் பஸ் விழுந்தது.

    இதனால் பஸ்சில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். விழுந்த வேகத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் அங்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆற்றில் தண்ணீர் இருந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும். விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்து உள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

    ×