search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் டெய்லர் பலியானார்
    • இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே பனங்குளத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 45). டெய்லர். இவர், மோட்டார் சைக்கிளில் காசிம்புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிலத்தூர் மாளிகை புஞ்சை பகுதியை சேர்ந்த ராசு மகன் செந்தில்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக திருமாறன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருமாறன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமாறன் மனைவி ரதி (38) கொடுத்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் மகன் கேசவன் (வயது 22). இவர், விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலை தெப்பக்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கிய போது, அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது.
    • தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 3 பேரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 18). அந்த பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அதே ஊரை சேர்ந்தவர் சச்சின் (17)காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (16). இவர்கள் 3 பேரும் இன்று ஒரே மோட்டார் சைக்கிளில் நெல் நாற்று வாங்குவதற்காக வந்தனர்.

    காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருண்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுபற்றி தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 3 பேரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியில் சச்சின் இறந்தார். ஜீவானந்தத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
    • கரூர்-தாராபுரம் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், கூடலுார் கீழ்பாகம் காந்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது30). கூலி தொழிலாளியான இவர் சின்னதாராபுரத்தில் உள்ள லேத் பட்டறையில் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த கார்த்திகேயன் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் உயிரிழந்த கார்த்திகேயன் குடும்பத்துக்கு லேத் பட்டறை நிர்வாகம் சார்பில் நிதியுதவி வழங்ககோரி சின்ன தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன் கரூர்-தாராபுரம் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


    • வாகன விபத்துகளில் 22 பேர் உயிரிழந்தனர்.
    • பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் தாமரைக்குளம்: 22 பேர் சாவு அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கால கட்டத்தில் அதிவேகம், மது போதை, அஜாக்கிரதை மற்றும் கவன குறைவு காரணமாக இதுவரை 27 இருசக்கர வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 21 விபத்துகளில் அதிவேகம் மற்றும் வாகனம் கட்டுப்பாடின்றி தானாக கீழே விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். மீதமுள்ள 6 விபத்துகளில் சிக்கியவர்கள் காயம் மற்றும் படுகாயம் அடைந்தனர்.

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி போக்குவரத்து போலீசார் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு போக்குவரத்து சீர் நடவடிக்கைகள், வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது ஹெல்மெட் அணிந்து, சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறும், அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை நியூ சித்தாபுதுர் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (வயது70).

    இவர் முன்னாள் அரசு வக்கீல் ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற அவர் நேற்று கோவைக்கு வந்தார்.

    வழக்கம் போல நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

    சிறிது நேரத்தில் அவரது படுக்கை அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. அத்துடன் அவர் மீது தீ பரவியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது அவரது உடல் முழுவதும் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் உடல் கருகிய ரேனுகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.
    • மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார்.

    கடந்த 23-ந் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச்சென்றார்.

    அந்த நேரத்தில் அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவுக்கும் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார். இதில் உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குன்னம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பலியானார்
    • இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவருடைய மகன் திருவேங்கடம் (வயது 16). இவர் வரிசைபட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற திருவேங்கடம் மாலை தனது விளையாட்டு ஆசிரியர் செந்துறை குமிழியனியத்தை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து ெசன்று கொண்டிருந்தார்.

    கொளப்பாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்றது. அதனை பார்த்த திருவேங்கடம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிளை சரி செய்து தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பியபோது எதிரே வந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் திருவேங்கடத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • ரெயிலில் அடிபட்டு பெண் பலியானார்
    • இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலுப்பையூர் ரெயில்வே கேட் நல்ல அறிக்கை சாலையில் உள்ள ரெயில்வே கேட் தெற்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் 2 ரெயில் செல்லக்கூடிய தண்டவாளங்களுக்கு இடையே உள்ள காலி இடத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் ரெயிலில் அடிபட்டு மூளை சிதறி கை, கால்கள் நொறுங்கிய நிலையில் புதர்கள் நிறைந்த பகுதியில் கிடந்தது. இதையடுத்து, ரெயில்வே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சகாயமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்.

    கோவை துடியலூர் முத்துநகர் 5-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. பெயின்டர்.

    இவரது மனைவி சகாயமேரி (52). தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 3 பெண்கள் உள்ளனர். இவர்கள் அைனவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    சம்பவத்தன்று அந்தோணிசாமி தனது மனைவி சகாயமேரியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். இவர்களது மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலை விசுவநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த சகாயமேரி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சகாயமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
    • நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 62). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    ஞானதாஸ் நேற்று மதியம் புன்னைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானதாஸ் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு பொது மக்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஞானதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    ஞானதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    இது தொடர்பாக போக்கு வரத்து பிரிவு போலீசார் அரசு பஸ் டிரைவர் அனீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • லாரி மோதி விவசாயி பலியானார்
    • இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அயினாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 49). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் காரை கிராமத்தில் இருந்து அயனாபுரம் செல்லும்போது இடது புற சாலையில் இருந்து வலது புறம் உள்ள அயனாபுரம் பிரிவில் திடீரென திரும்பினார். அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிளில் எதிர்பாரா விதமாக மோதியது. இதில் தர்மராஜ் தலையில் பலத்த அடிப்பட்டு காயம் ஏற்பட்டது.

    இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தர்மராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    ×