search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • கூவத்தூர் அருகே உள்ள காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்தது.
    • விபத்தில் காரில் இருந்த புருஷோத்தமன், முருகானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 30). திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகானந்தம், புருஷோத்தமனை பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தார்.

    இந்த நிலையில் புருஷோத்தமன், முருகானந்தம் மற்றும் அவர்களது நண்பர்கள் நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திக்க சென்னையில் இருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டு சென்றனர்.

    கூவத்தூர் அருகே உள்ள காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த மேம்பால தடுப்புச் சுவரில் மோதியது. இதில் கார் கவிழ்ந்து விழுந்து உருண்டோடி நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த புருஷோத்தமன், முருகானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

    தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதே வேகத்தில் சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
    • புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இரணியல்:

    களியக்காவிளையை அடுத்த பனச்சமூடு அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் அருண்சாம் (வயது 35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி அக்ஸா (28). இவர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் ஈஸ்டர் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட திட்டமிட்டனர். இதற்காக அருண்சாம், மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து வர தாம்பரம் சென்றார்.

    நேற்று காலை அவர் குடும்பத்தினருடன் தாம்பரத்தில் இருந்து ஊருக்கு காரில் புறப்பட்டார். காரை அருண் சாம் ஓட்டினார். அவரது மனைவி அக்ஸா மற்றும் அருண் சாமின் தந்தை ரசலையன் (56), தாயார் சரோஜா மற்றும் உறவினர் அகில் (25), அட்ரியன் (2) ஆகிய 6 பேர் இருந்தனர்.

    நள்ளிரவு 11.30 மணிக்கு கார் குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் அருண்சாமின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என்று கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அப்போது முன் இருக்கையில் இருந்த அருண்சாம், ரசலையன் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தனர்.

    அவர்களை பொதுமக்கள் பலத்த சிரமத்திற்கிடையே வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும் அருண்சாம், அவரது தந்தை ரசலையன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது தெரியவந்தது.

    விபத்தில் படுகாயம் அடைந்த அக்ஸா, சரோஜா, அகில் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் தந்தை, மகன் பலியானது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பலியான அருண் சாம், ரசலையன் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. விபத்து குறித்து பால்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் சிக்கி தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக வேன் மோதி உயிரிழந்தார்.
    • முகமது அஷிப் என்பவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.

    கோவை,

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஜெகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் இவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரது நண்பர் ஜெகநாதனுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    மேல் சிகிச்சைக்காக ஜெகநாதனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோமங்களம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முருகன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது அஷிப் (22). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அன்னூரில் இருந்து அவினாசி சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    • சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார்.

    திருவாடானை

    ராமநாதபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(வயது45). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் ராமநாத புரத்தில் இருந்து திருவாடா னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சி.கே.மங்கலத்திலிருந்து ஆர்.எஸ். மங்கலம் சவேரியார் பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவா டானை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி என்ப வரை கைது செய்தனர்.

    • மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவினர்கள் ஆகியோரும் சென்றனர்.
    • சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் சிமெண்ட் தொட்டி, சிமெண்ட் குழாய், சிமெண்ட் தூண்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்று வந்தார்.

    குலதெய்வம் கோவில்

    இன்று காலையில், சரவணன் மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவி லுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவி னரான முத்து (39), இவரது மகன் சாய்பாலமித்திரன் (4) ஆகியோரும் சென்றனர்.

    சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது.

    2 பேர் பலி

    இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பலத்த காயம் அடைந்த முத்து மற்றும் அவரது குழந்தை இருவரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், சாய்பால மித்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணை

    உயிரிழந்த சரவணனின் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், சாய் பாலமித்திரனின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது, விபத்துக்குள்ளாகி குழந்தை உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுடைய மகள் சிவ நந்தினி (17), மகன் அனிருத் (15). இதில் சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது தான் பொதுத்தேர்வு எழுதி முடித்து உள்ளார். அனிருத் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் அந்தி யூரில் உள்ள குலதெய்வ கோவிலான பத்ரகாளி யம்மன் கோவிலுக்கு கந்தசாமி, நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் மோட்டார்சைக்கிளில் நேற்று சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார்சைக்கி ளில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பவானியை அடுத்த காடையாம்பட்டி அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    தந்தை- மகள் சாவு

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நிர்மலாவும், சிவ நந்தினியும் கொண்டு செல்லப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே சிவ நந்தினி பரிதாபமாக இறந்தார்.

    நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்த கந்தசாமி, சிவ நந்தினி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுஉள்ளன. கோவிலில் காவடி ஊர்வலத்தில் பங்கேற்றதால் கந்தசாமி களைப்புடன் காணப்பட்டதாக தெரிகிறது. அந்தியூரில் இருந்து திரும்பும் போது தனக்கு தூக்கம் வருவதாக மனைவியிடம் தெரி வித்துள்ளார். இதனால் வழி யில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி 3 பேரும் டீ குடித்துவிட்டு பின்னர் மீண்டும் புறப்பட்டனர்.

    எனினும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தசாமி இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே தூங்கியதால் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசா ரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
    • அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 43), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் கபிலர்மலையில் இருந்து உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.

    இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வயலுக்கு சென்ற போது தவறி மின்வேலியில் விழுந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த  கோவிந்தன்(வயது 70)  வயலுக்கு குளிக்க சென்றார். அப்போது வரப்பில் நடந்து சென்றபோது, சோளக்காட்டின் வரப்பு ஓரத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியின் மீது அவர் தவறி விழுந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அப்போது அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாயும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி செத்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுராந்தகம்:

    கோவூர், லட்சுமி நகரில் உள்ள பாபு கார்டன் பகுதியில் வசித்தவர் பிரபின் (வயது.31). இவர் சென்னை வியாசர்பாடியில் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் அச்சரப்பாக்கம் அருகே வசிக்கும் நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். பின்னர் அவர் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு படூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது மக்கள் சாலை மறியல்
    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

    அரியலூர்,

    அரியலூர் அருகேயுள்ள அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது65). கூலித்தொழிலாளியான இவர், காலை வீட்டின் அருகேயுள்ள அரியலூர் - செந்துறை சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு தனியார் சிமென்ட் ஆலைக்குச் சென்ற மினி லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் உயிரிழந்தார்.தகவலறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மினிலாரி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தை அறிந்த அரியலூர் காவல் துறையினர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ராமலிங்கம் (வயது 62). இவரும் சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின் காரணமாக சென்றனர்,
    • பணிகளை முடித்துதிரும்பும்போது,அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது,..

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் நைனார்பாளையத்திலிருந்து கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சொந்த வேலையின் காரணமாக சென்றனர். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் நயினார் பாளையம் வரும் போது கிருஷ்ணாபுரம் கிராம எல்லை சேலம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் எதிரே சென்றபோது அதே திசையில் அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த ராமலிங்கம், சந்திரசேகர் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிடத்தின் படிகட்டில் இருந்து எதிர்பாராதமாக விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 49 ). கட்டிட தொழிலாளியான இவர், பொன்மலை பிள்ளையார் கோவில் மேற்கு தெரு பகுதியில் நடைபெற்று புதிய கட்டிடம் கட்டும் வேலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். பணியின் போது கட்டிடத்தின் படிக்கட்டில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக தொழிலாளிகள் சரவணனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேர்மராஜ் தனது மோட்டார் சைக்கிளில் முத்துக்கிருஷ்ணபேரிக்கு சென்றார்.
    • காயமடைந்த சேர்மராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து மேலதெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகன் சேர்மராஜ் (வயது29). கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூத்தில் இருந்து முத்துக்கிருஷ்ணபேரிக்கு சென்றார்.

    அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பாலமுருகன் (37) என்பவர் வந்தார். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சேர்மராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேர்மராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வி.கே.புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×