search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • பரிதாபாத்-குருகிராம் சாலையில் மாங்கர் போலீஸ் நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் குரு கிராம் அருகேயுள்ள பல்வால் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் ஒரு காரில் பரிதாபாத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பரிதாபாத்-குருகிராம் சாலையில் மாங்கர் போலீஸ் நிலையம் அருகே நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் பெயர் புதின், ஜதின், ஆகாஷ், சந்தீப், பல்ஜித், விஷால் என்று தெரிய வந்தது. இவர்கள் அனைவருமே 18 வயது முதல் 25 வயதுக்கு உள்ளிட்டவர்கள் ஆவர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

    • மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
    • அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.

    அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயதான டியாகோ பாரியா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாரியா, காணாமல் போன அன்று அர்ஜென்டினாவின் தெற்கு சுபுட் மாகாணத்தின் கடற்கரை அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், பாரியாவின் வாகனம் மட்டுமே கிடைத்தது.

    இந்நிலையில், பாரியா காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அருகில் மூன்று சுறாக்கள் கிடப்பதாகவும், அவை பிரித்தெடுக்கம்போது, மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாக துண்டுகளை சேகரித்தனர். பின்னர், சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், கேகரிக்கப்பட்ட உடல் பாகங்களில் இருந்த கையில் தனித்துவமான டேட்டூ இருப்பதை கண்டு, அது பாரியாதான் என்று அடையாளம் கண்டனர்.

    இருப்பினும், அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.

    மேலும், பாரிய எப்படி தண்ணீரில் மூழ்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    • மது போதையில் அவர் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார்.

    தஞ்சாவூர்:தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார். 

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை தோப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 34) தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று மது அருந்தினார்.

    பின்னர் தள்ளாடியபடியே வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்து ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கோபிநாத் இறந்தார்.

    இதற்கிடையே கோபிநாத்தை காணாதது கண்டு குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது பள்ளத்தில் கோபிநாத் பிணமாக கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளியமரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக சிலம்பரசன் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள பச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது31), கூலி தொழிலாளி. இவர் புளியமரத்தில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக சிலம்பரசன் உயிரிழந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன்சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பகண்டை கூட்ரோட்டிற்கு சென்றார். அப்போது திருக்கோவிலூர்- சங்கராபுரம் நெடுஞ்சாலையை வனபுற்று மாரியம்மன் கோவில் அருகே கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டருகே காட்டு யானை தாக்கி மகேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைகட்டி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

    இந்த யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. யானை நடமாட்டம் காரணமாக மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாங்கரை பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது. அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் மகேஷ்குமார் (வயது38) என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தார்.

    அப்போது அந்த பகுதியில் யானை சுற்றி திரிவதை பார்த்ததும் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தாக்கியது.

    மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டருகே காட்டு யானை தாக்கி மகேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். மேலும் யானை அங்கிருந்து நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.

    சிறிது நேரத்திற்கு பிறகு யானை அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்றது. இதன் பின்னர், அவரது மனைவியும், தந்தையும் அருகே சென்று பார்த்தனர். அப்போது மகேஷ்குமார் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

    அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி இறந்த மகேஷ்குமார் கோவையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சம்பவம்...

    கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதி துவைபதி மலைகிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம்.

    இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் வந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவருக்கு நேர்ந்த பரிதாபம்
    • வோலாயுதம் பாளையம் போலீசார விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் செல்வநகரை சேர்ந்தவர் ரஜினி (வயது 31). இவர் நண்பர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணி ஆகியோருடன் குருநாதன் கோயிலுக்கு சென்று விட்டு பசுபதி பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பண்டுதகாரன்புதுார் பிரிவு அருகே வந்த போது பின்னால் வந்த வாகனம் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ரஜினியை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரஜினி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளை யம் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள குட்டிபாளையம் சாயுபுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுடைய இளைய மகன் சந்திரமோகன் (46). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சந்திரமோகன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்க சென்று விட்டார். அவரது தாய் சரஸ்வதி அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார்.

    நள்ளிரவில் சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர்.

    இதில் அவர் வீட்டில் இருந்து வெளியே எழுந்து வர முயன்ற போது புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.

    இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே பார்த்தபோது சந்திரமோகன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் அங்கு சென்று சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

    இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். இவரும் காட்டுசெல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் இருந்த சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மரிய பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்
    • சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சித்தன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(45). இவருக்கு நித்தியபிரியா (30) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

    இவரும் ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலத்தை சேர்ந்த அஜித்கு மார்(26) என்பவரும் உறவினர்கள். இருவரும் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து சி வகுமாரை சித்தன்கு ட்டையில் விடுவதற்காக அஜித்குமார் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்.

    அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அஜித்குமார் லேசான காயம் அடைந்தார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    • மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
    • மகாதேவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் மகாதேவசாமி (வயது 26). இவர் தனது சொந்த வேலையாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

    வழியில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த மகேஷ் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் கார் ஷோரூம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகாதேவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வண்டியை ஓட்டி வந்த மகேஷ் படுகாயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து ஹட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெங்களூரு நோக்கி வேகமாக வந்த கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது பயங்கரமாக மோதியது.
    • வாணியம்பாடியில் கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்த கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணவர்கள் சூர்யா, விஜய், சபீக் ஆகியோர் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

    இந்நிலையில் வாணியம்பாடியில் கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ×