search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபம்
    • வனத்துறையினர் விசாரணை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் கிராமம் விளாங்குடி-தா.பழூர் சாலையில், உடல் நசுங்கிய நிலையில் மான் ஒன்று செத்து கிடப்பதாக, அவ்வழியாக கடந்து சென்ற பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் செத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வனத்துறை காப்பாளர் முத்துராஜ் மானின் உடலை கைப்பற்றி, உடல் பரிசோதனைக்காக எடுத்து சென்றார். விளாங்குடி கால்நடை மருத்துவர் மகாலட்சுமி மானின் உடலை மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் வனப்பகுதியில் செத்த மான் புதைக்கப்பட்டது.

    • திருச்செங்கோடு தாலுகா மோர்பாளையத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 25-ந்தேதி டெம்போ மற்றும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.
    • காரை ஓட்டி வந்த டிரைவர் ரவிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூரில் கன்னிமாரம்மன் கோவில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மோர்பாளையத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 25-ந்தேதி டெம்போ மற்றும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.

    திருவிழா முடிந்ததும் அவர்கள் கார் மற்றும் வாகனங்களில் ஊருக்கு புறப்பட்டனர். இதில் ரவி தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தார். காரில் அவரது மனைவி கவிதா மற்றும் உறவினர்களான மகாலட்சுமி என்கின்ற சுதா, மணி என்கின்ற கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, ரவியின் மைத்துனர் குழந்தை லக்ஷனா(4) ஆகிய 7 பேர் அமர்ந்திருந்தனர்.

    கார் இன்று அதிகாலை சுமார் 2.40 மணி அளவில் கரூர்-நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் படமுடிபாளையம் பகுதியில் உள்ள பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே காரில் வந்து கொண்டிருந்தது.

    அப்பொழுது எதிர்பாராதவிதமாக ரவி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் ரவியின் மனைவி கவிதா, மகாலட்சுமி என்கின்ற சுதா, மணி என்கின்ற கந்தாயி, குஞ்சம்மாள் ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் காரில் அமர்ந்திருந்த சாந்திக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சாந்தி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் ரவிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. ரவியின் மைத்துனரின் 4 வயது குழந்தை லக்ஷனாவுக்கு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த ரவி மற்றும் குழந்தை லக்ஷனாவை மீட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான பெண்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    கவிதா, மகாலட்சுமி, கந்தாயி, குஞ்சம்மாள் ஆகியோரது உடல்கள் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், சாந்தி உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுகுறித்து பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    டிரைவர் ரவி இரவில் சரியாக தூங்காமல் விழித்திருந்து காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அந்தவழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்தில் 5 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தில் சரக்கு வேனில் இருந்த 40 பேர் காயமடைந்தனர்.
    • படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே லாரி மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த 40 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர்-கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களுக்கு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இறந்தவருக்கு திதி கொடுத்து விட்டு திரும்பியபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • விபத்து நடந்த பகுதியை காங்கயம் டி.எஸ்.பி. பார்த்திபன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    • இறந்தவருக்கு திதி கொடுத்து விட்டு திரும்பியபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாப்பினி பச்சாப்பாளையத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து திதி கொடுப்பதற்காக அவரது உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றுக்கு சரக்கு வேனில் சென்றனர்.

    அங்கு திதி கொடுத்து விட்டு பச்சாப்பாளையத்திற்கு சரக்கு வேனில் புறப்பட்டனர். அதனை நத்தகாட்டுவலசு கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த அருண்குமார் (32) ஓட்டினார்.

    இன்று காலை 11 மணியளவில் காங்கயம்-முத்தூர் இடையே வாலிபனங்காடு பகுதியில் வரும்போது அந்த வழியாக பிளைவுட்ஸ் ஏற்றி வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வாகனங்களும் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த 40 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர்-கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி காங்கயம் பாப்பினி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் தமிழரசி (வயது 17), நாச்சிமுத்து என்பவரின் மனைவி சரோஜா (61), கிட்டுச்சாமி (45), பூங்கொடி (62) உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக 15 பேர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து நடந்த பகுதியை காங்கயம் டி.எஸ்.பி. பார்த்திபன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்தவருக்கு திதி கொடுத்து விட்டு திரும்பியபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்
    • இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 65). இந்நிலையில் தனது உறவினர் நாகராஜ் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நூத்தப்பூரில் இருந்து பில்லங்குளத்திற்கு சென்றுள்ளார். பில்லங்குளம் பகுதியில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கரூரில் கார், டூவீலர் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்
    • விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

    கரூர்:

    அரவக்குறிச்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜூ(வயது 50). இவர் மனைவி தனக்கொடி (45). மகன் முரளி(35). இவர்கள் 2 டூவீலர்களில் புதுவாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் சென்ற டூவீலர்கள் மேட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே ஜெபமாலைராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மோதிக் கொண்டன. இதில் ராஜூ, தனக்கொடி ஆகியோர் சாலை ஓர பள்ளத்தில் விழுந்து பலி யானார்கள். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்




    • மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை:

    திருச்சி மாவட்டம் திருவையூர் கொப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சக்திவேலு (வயது 27). இவர் அறந்தாங்கியில் இருந்து கே.புதுப்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார் கோவில் பகுதியில் சாலையில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில், பலத்த காயம் அடைந்த சக்திவேலுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேலு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்திற்கு காரணமான கட்டுமான மேற்பார்வையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.
    • நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சதாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் நகரை சேர்ந்தவர் சதாம் (வயது 22). இவர் தனது நண்பர்கள் ஓசூர் லேக் தெருவை சேர்ந்த கிருஷ்ணா (19), அர்ஜுன் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.

    வழியில் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சதாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காயமடைந்த கிருஷ்ண, அர்ஜுன் ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து சதாமின் மனைவி நிதா கவுகர் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், துளசிகொடும்பு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27) தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது டூவீலரில் வெள்ளியணை அருகே, தாளியாப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். தனியார் சிமென்ட் ஆலையின் ரயில்வே இருப்பு பாதை பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மதுப்பிரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

    • ஆலங்குடி அருகே லாரி மோதி முதியவர் பலியானார்
    • சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் அழகப்பா நகரை சேர்ந்த முத்து (வயது 65 ). இவர் கடை வீதியி ல் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் மோதி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறா ர். 

    • மொபட் மீது கார் மோதி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 28). இவர் டி.வி.எஸ். மொபட்டில் வேலாயுதம்பாளையம் அருகே, நாணப்பரப்பு பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (42) என்பவர் ஒட்டி சென்ற மாருதி கார் மொபட் மீது மோதியது. அதில் கீழே விழுந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, சின்னப்பனின் மகன் ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் செல்வராஜ் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • எளாவூர் பஜார் பகுதியில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது ஷேர் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.
    • விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தேவராஜ் என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்- 2 பேர் பலி

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி இன்று அதிகாலை ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. ஆட்டோவை ஆந்திர மாநிலம் ராமாபுரத்தை சேர்ந்த டிரைவர் ரத்தினம் என்பவர் ஓட்டினார்.

    இதில் பெத்திக்குப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (வயது 55), சின்ன ஓபுளாபுரத்தை சேர்ந்த திவாகர் வாசு (45), உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்தனர்.

    எளாவூர் பஜார் பகுதியில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பா லத்தின் மீது ஷேர் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.

    அப்போது பின்னால் மரப்பலகைகள் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஷேர் ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்கவாட்டுச் சுவரின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தேவராஜ் என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதேபோல் திவாகர் வாசு என்பவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தபோது லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் ஆட்டோ டிரைவர் ரத்தினம் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலத்த காயம் அடைந்த ரத்தினம், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் பூமி என்பவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கும்மிடிப்பூண்டி அருகே கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மீது போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருப்பதாகவும், இதனால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    ×