search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு
    • நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரகாஷ். இவரது மகன் ஜிம் ரெஜினால்ட் (வயது 21).

    இவர், சென்னையில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.வெட்டூர்ணிமடம் பர மேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் இவரது மகன் கிரேசன் டேனியல் (23) என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இருவரும் ஞாலம் பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றனர். கால்வாயில் குளித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். ஆலம்பாறை பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜிம் ரெஜினால்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கிரேசன் டேனியலை மீட்டு சிகிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இருந் தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    பிணமாக கிடந்த ஜிம் ரெஜினால்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கிரேசன்டேனியல் உடலும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் 2 பேரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அங்கு திரண்டனர்.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வாலிபர்கள் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பலியான ஜிம் ரெஜினால்டு,கிரேசன் டேனியல் இருவரும் மோட் டார் சைக்கிளில் சென்று கால்வாயில் குளித்து விட்டு அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அந்த சாலையில் உள்ள சிறிய வளைவில் வரும்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதி இருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக லாரி டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த திலீப்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுமுறை யில் ஜிம் ரெஜினால்ட் ஊருக்கு வந்த நேரத்தில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டம், தென்னிலை நாச்சிப் பாளை யம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பூங்கொடி (வயது 45). இவர் தனது உறவினர் தேவராஜ் என்பவருடன், டி.வி.எஸ்., மொபட்டில் தென்னிலை அருகே, கருநெல்லிவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட்டி லிருந்து தவறி விழுந்த பூங்கொடி, படுகாய மடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில்சி கிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்உசை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்து தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி தில்லை நகரில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலியானார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் சரவணன் ( வயது 42). இவர் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் மெத்தை கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கம்பெனியில் இருந்த சரவணன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார்
    • இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    கரூர் அருகே, உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் ரவி (வயது 54). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர், அரவக்குறிச்சி அருகே கரூர் - திண்டுக்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், ரவி பலத்த காயமடைந்தார். பின், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


    அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    அரவக்குறிச்சி ஆர்.எல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் மோகன்ராஜ். இவர் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் மோகன்ராஜ் ஹோண்டா ஷைன் டூவீலரில் அரவக்குறிச்சி அருகே தலையாரிப்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த புகாரின் படி அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கபிலர்மலை கோவிலுக்கு செல்ல மலை அடிவாரம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம், ஆறுமுகத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 2-ந் தேதி கபிலர்மலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள கபிலர்மலை கோவிலுக்கு செல்ல மலை அடிவாரம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஆறுமுகத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.
    • உயிரிழந்த மாணவிகள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்தவர்கள்.

    கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.

    உயிரிழந்த மாணவிகள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    • இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விவசாயி பலியானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராம்ஜி நகர்:

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யா தோப்பு கிராமம் புலியூரான் காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் தெய்வமணி (வயது 30) விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மீனா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் தெய்வமணி தனது இருசக்கர வாகனத்தில் வியாழன் மேடு சென்று பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். போசம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தெய்வமணி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தெய்வமணி இறந்து விட்டதாக கூறினர். இந்ந விபத்து குறித்து சோமரசம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர் ரகுராம் ஆகியோர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • என்.சி.சி.மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தாக்குதல் நடந்தது

    நாகர்கோவில்:

    ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் லெத்போராவில் கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 40 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி இந்தியாவின் கருப்பு தின மாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் பிப்ரவரி 14-ந்தேதி யான இன்று நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதேபோல் குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    அந்த வகையில் கன்னியாகுமரி, மாதவபுரம், குளச்சல், திங்கள்சந்தை, திக்கணங்கோடு, தக்கலை மற்றும் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 150 ராணுவ வீரர்கள் பங்கேற்று பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.இதில் என்.சி.சி.மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் இருந்து புத்தேரி வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை ராணுவ வீரர்கள் நட்டு வைத்தனர்.

    வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது உமர் பாரூக் (வயது 23). இவர் சம்வத்தன்று இரவு கரூர்-கோவை சாலை தென்னிலை பகுதியில் சென்று கொண்டி ருந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்ற ஈச்சர் வேன் இவர் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே முகமது உமர் பாரூக் உயிரிழந்தார். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளாங்குறிச்சி பகுதியில் தங்கி அந்த பகுதியில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களிடம் மதுவை வாங்கி குடித்தார்.

    சரவணம்பட்டி,

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்ட் ராம் (வயது 27). கட்டிடத் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் விளாங்குறிச்சி பகுதியில் தங்கி அந்த பகுதியில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 11 மணியளவில் பில்ட் ராம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். டாஸ்மாக் கடை மூடி இருந்ததால் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களிடம் மதுவை வாங்கி குடித்தார்.

    பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பலுக்கும், பில்ட்ராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பில்ட்ராமை கீழே தள்ளினர். இதில் நிலைகுலைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு கிடந்த கல்லில் அவரது தலை பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கீழே தள்ளி விட்டதில் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொட்டியம் அருகே விஷப்பூச்சி கடித்து 4 வயது சிறுமி பலியானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–ன்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட் டியம் அருகே உள்ள அரசலூர் கைகாட்டி பகுதி–யைச் சேர்ந்தவர் பாலகிருஷ் ணன். இவரது மனைவி அம்பிகா (வயது 36). இந்த தம்ப–தியரின் மகள் அனுஸ்ரீ (4). இந்த சிறுமி சக குழந் தைகளுடன் அந்தப் பகுதி–யில் உள்ள விவசாய தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விஷப்பூச்சி அனுஸ்ரீயை கடித்துள்ளது. இதில் சிறுமிக்கு கடுமையான வலி ஏற்பட்டது. பின்னர் வீடு திரும்பிய அவர் அழுது–கொண்டே பெற்றோ–ரிடம் கூறியுள்ளார்.அதற்குள் சிறுமியின் உடலில் விஷ தன்மை ஏறியுள்ளது. உடனடியாக பெற்றோர் மகளை மீட்டு தொட்டியம் அரசு மருத்து–வமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் சேலம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சேலம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது தொடர்பாக அவரது தாய் அம்பிகா தொட்டியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–ன் றனர்.

    ×