search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • இடி, மின்னலுடன் பலத்த மழை
    • ஆடு மேய்ந்தபோது பரிதாபம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரை அடுத்த குன்னம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு(வயது 37). இவர் அப்பகுதியில் உள்ள வயல்காட்டில் நேற்று மாலை தனக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையில் நனையாமல் இருப்பதற்காக அலமேலு, அருகில் உள்ள புளியமரத்துக்கு அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அலமேலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அலமேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை வீராணத்திலிருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குப்பனூர் அடுத்த பூவனூர் பஸ் நிறுத்தும் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மனோஜ் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் பீர்பாஷா மகன் ஜாகிர் (வயது 23) என்பவருடன் இன்று அதிகாலை வீராணத்திலிருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    குப்பனூர் அடுத்த பூவனூர் பஸ் நிறுத்தும் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மனோஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனோஜ் மற்றும் ஜாகீர் ஆகியோர் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நண்பர் ஒருவர், இன்று அதிகாலை சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் சென்று வீராணம் அருகே உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு, சேலத்திற்கு திரும்பும் போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • வாகனம் மோதி விவசாயி பலியானார்

    கரூர்,

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 52) விவசாயி. இவர், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆண்டாங்கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், திருப்பதி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பதியின் சகோதரர் பாண்டியன், கொடுத்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆலத்தூர் அருகே சென்ற போது விபத்து
    • மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கானாடு பகுதியை சேர்ந்தவர் சுப்பன் மகன் பாலசுப்ரமணியன் (வயது 26). இவர், மீமிசல் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆலத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது பாலசுப்ரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்ரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைகள் முடித்து கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
    • மண்ணிவாக்கம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    வண்டலூர்:

    படப்பை அடுத்த அம்பனாம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது48). தாம்பரம் கிஷ்கிந்தா அருகில் இஸ்திரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா. நேற்று இரவு வேலைகள் முடித்து கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    மண்ணிவாக்கம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியில் சிக்கிய வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். உஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தனது கண்முன் கணவர் வெங்கடேசன் பலியானதை கண்டு உஷா கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துவரங்குறிச்சி அருகே இன்று காலை பரிதாபம்
    • நடுரோட்டில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்

    மணப்பாறை, 

    திருச்சி மாவட்டம், துவ–ரங்குறிச்சியை அடுத்த தெத் தூர் மலையாண்டி கோவில் பட்டியை சேர்ந்தவர் சிவ–ஞானம் (வயது 46). விவ–சாயியான இவர் இன்று காலை புதுக்கோட்டை நீதி–மன்றத்தில் வழக்கு ஒன்றிற்கு சாட்சி சொல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது ஊரில் இருந்து புதுக் கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.தெத்தூர் மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்று கொண்டிருந்த போது, 7 காட்டெருமைகள் சாலை–யில் கூட்டமாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிவஞானம் தன் னடைய மோட்டார் சைக் கிளை நிறுத்த முயற்சித்தார்.இதற்கிடையே கூட்டத்தில் இருந்த ஒரு காட்டெருமை திடீரென்று பாய்ந்து வந்த சிவஞானத்தின் மார்பு பகுதியில் குத்தி சாய்த்தது. இதில் நிலைகுலைந்த அவர் அருகே உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிளுடன் ேமாதி–னார். இதில் நெஞ்சு சிதைந்து சிவஞானம் ரத்த வெள் ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந் தார்.அந்த வழியாக வந்தவர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியா ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த–வர்கள் அவரை மீட்டு துவ–ரங்குறிச்சி அரசு மருத்து–வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத் துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் உயிரி–ழந்தது தெரியவந்தது.

    • நண்பர் கீழே விழுந்து படுகாயம்
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திங்கள்நகர் அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அபீஸ் (வயது 18). இவரது நண்பர் பெத்தேல்புரம் ஜோயல் (19). இவர்கள் 2 பேரும் கறிக்கோழி கடை யில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று மதியம் 2 பேரும் செம்பொன் விளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மேற்கு நெய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜோயல் ஓட்டினார். பின்னால் அபீஸ் உட்கார்ந்திருந்தார்.

    வர்த்தான்விளை அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராமல் தாறு மாறாக ஓடியது. மேலும் அதேவேகத்தில் சாலையோரம் உள்ள ஓடையில் பாய்ந்தது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

    விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. அப்பகுதியினர் விரைந்து வந்து அபீஸ் மற்றும் ஜோயலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அபீஸ் பரிதாபமாக இறந்தார்.

    ஜோயல் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைவீதிக்கு நடந்து சென்றார்.
    • வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம்(வயது 41). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மீன்சுருட்டி கடைவீதிக்கு நடந்து சென்றார்.கும்பகோணம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம், வைத்திலிங்கம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார்.இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்.

    • மது போதையில் நடந்து வந்தார்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    கரூர்:

    குளித்தலையை அருகே, நங்கவரம் மேல் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர், கடந்த 18ம் தேதி குளித்தலை, பெரியபாலம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, குடிபோதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் மோகன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி நேரு காலனி துப்புரவு பணியாளர் குடியிருப்பை சேர்ந்தவர் லதா (வயது 44). இவரது மகன் ராம்குமார் (19). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரோட்டின் குறுக்கே நாய் புகுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

    அப்போது பின்னால் அமர்ந்திருந்த லதா தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லதாவின் மற்றொரு மகன் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மணப்பாறை செவலுாரை சேர்ந்த அழகு சுசீந்திரன்(வயது 29) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
    • ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை

    மணப்பாறை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் கடந்த ஜன- 17 தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி மணப்பாறை பகுதியிலிருந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளுடன் 7 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு முடிந்து அவர்கள் லோடு வேனில் காளைகளுடன் திரும்பி கொண்டிருந்தனர். வம்பன் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ், சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் பூலாங்குளத்தை சேர்ந்த டிரைவர் விக்கி (வயது 30), காளைகளை அழைத்து வந்த செவலூரை சேர்ந்த மதியழகன் (வயது 25), மணப்பாறையை சேர்ந்த தர்ம அழகு (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 3 ஜல்லிக்கட்டு காளைகளும் செத்தன. காயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற வந்த திருச்சி மணப்பாறை செவலுாரை சேர்ந்த அழகு சுசீந்திரன்(வயது 29) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு
    • போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், வெங்கமேடு, சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52) கட்டட தொழிலாளி. இவர், நேற்று காலை, வெங்கமேடு, ஜாமியா நகரில், புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டிப்பர் லாரியில் கொண்டுவரப்பட்ட எம்.சான்ட் மணலை சரிபார்க்க, நாகராஜ் லாரியில் ஏறினார். இந்நிலையில், டிப்பர் லாரியின் மேல் பகுதியில் சென்ற மின் கம்பி இவர் மீது உரசியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×