search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் செய்யப்பட்டது.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில், ஆவணி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கார்த்திகை உற்சவ விழாவையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதி வீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 82 பக்தர்கள், தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தேரை இழுத்தனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கார்த்திகை பூஜைகள் நேற்று நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடந்தது.

    விழாவில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.
    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனி 3-ம் படைவீடாகும்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலுக்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை, கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

    அதன்படி ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அங்குள்ள மக்கள் பண்டிகை முடிந்தவுடன் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய படையெடுத்து வருகின்றனர்.

    இதேபோல் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அதிகாலை முதலே அடிவாரம், பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் என அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

    சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.

    இதற்கிடையே பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல பக்தர்கள் பயன்படுத்தி வரும் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின்இழுவை ரெயிலை பயன்படுத்தி செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது.

    ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல முதியோர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பழனி மின்இழுவை ரெயில்நிலையத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3-வது மின்இழுவை ரெயில் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி பழுதடைந்தது. அதையடுத்து அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தற்போது 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சென்றனர். எனவே 3-வது மின்இழுவை ரெயிலில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதேபோல் வார விடுமுறை நாட்களில் ரோப்காரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
    • பழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று ஆவணி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரத்திலும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்திலும் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாலையிலே கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.

    தொடர்ந்து 7 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து நடந்த தங்கரத புறப்பாட்டில் 173 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தேரை இழுத்து வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    பழனி முருகன் கோவிலில் மூலவரை படம் பிடிப்பதை தடுக்கும் வகையில் செல்போன் பயன்படுத்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் படம் பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    இதேபோல் தங்கரத புறப்பாட்டின் போது சாமி தரிசனம் செய்வதை காட்டிலும், தங்கரதத்தை படம் பிடிப்பதிலேயே பக்தர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி, மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை பக்தர்களிடம் காட்டுகின்றனர். எனவே பழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சண்முகநதி கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
    • கங்கை அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பழனி சண்முகநதியில் ஆடிப்பெருக்கைெயாட்டி ஆரத்தி திருவிழா நேற்று நடந்தது. இதற்கு மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், ஆர்.வி.எஸ். மகால் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் 7 மணி அளவில் சண்முகநதி கரையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கங்கை அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, மாங்கல்ய பூஜை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க சண்முகநதிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... என்று சரணகோஷம் எழுப்பினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாநில செயலாளர் ஜெகன், மாரியம்மன் கோவில் காணியாளர் பண்ணாடி ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவையொட்டி நேற்று சண்முகநதி கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பழம், வெல்லம் கலந்த அரிசி, பொங்கல் ஆகியவற்றை படைத்து முன்னோர்களை வழிபட்டனர். மேலும் பெண்கள் பலர் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு, தங்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டி பூஜை செய்தனர். பெரியநாயகி அம்மன் கோவில்

    இதேபோல் பழனி பெரியாவுடையார் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று கன்னிமார் பூஜை நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் காலசந்தி பூஜைக்குப்பின் விநாயகர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர், சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மையார் தனி சப்பரங்களில் எழுந்தருளி பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கு நடராஜர் மண்டபத்தில் விநாயகர்பூஜை, புண்ணியாகவாஜனம், கலசபூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் பெரியாவுடையாருக்கும், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் 16 வகை அபிஷேகம், சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் சண்முகநதி ஆற்றங்கரையில், மண்ணால் 7 கன்னிமார் உருவம் பிடித்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்மாலை அணிவித்து, மாவிளக்கு வைத்து உலகநலன் வேண்டி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மையார், விநாயகர், சண்டிகேஸ்வரர் அஸ்திரதேவருடன் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    திண்டுக்கல் கோட்டை குளத்திற்கு மாலை 5 மணியளவில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் அங்கு, வாழை இலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதனுடன் தேங்காய், பழம், பூ, காப்பரிசி, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு வைத்து, எலுமிச்சம்பழத்தில் விளக்கு ஏற்றி காவிரி தாயை நினைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். அதன்பிறகு பெண்கள் மஞ்சள் கயிற்றை கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து வாழை இலையில் எலுமிச்சம்பழத்தால் செய்யப்பட்ட விளக்கை வைத்தனர். பின்னர் அவற்றை கோட்டை குளத்தில் உள்ள தண்ணீரில் மிதக்க விட்டனர்.

    • ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஆடி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடந்தது.

    தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார்.

    பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் தங்கரத புறப்பாடு நடந்தது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலையிலேயே அடிவாரம், கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் அலைமோதியது.

    ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்இழுவை ரெயில் மூலம் செல்ல ரெயில்நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, மலர் காவடி உள்ளிட்ட காவடி எடுத்து பழனி கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படிப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர்.
    • பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
    • முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த 11-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்றும் அன்னாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடந்தது. அதையடுத்து சாயரட்சை பூஜையில் சிவன், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மூலவருக்கு 16 வகை அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மழைவளம் பெருகவும், உலகநலன் வேண்டியும், மக்கள் பசி, பிணி இன்றி வாழவும் பூஜைகள் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி சித்தனாதன் சன்ஸ் சார்பில் பழனி முருகன் கோவில் மண்டபத்தில் நடந்தது.

    முன்னதாக தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர், 108 வலம்புரி சங்குகளில் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வலம்புரி சங்குகளுக்கு முன்பு கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று, கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திக், குமரகுரு, தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள், மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் சிலர் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் முருகனை வழிபட்டனர்.
    • முடிக்காணிக்கை செலுத்த பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    வாரவிடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்ததால் மலைக்கோவில், அடிவாரம் மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதைகள், தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் மின்இழுவை ரெயில் நிலையத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர். இதில் பக்தர்கள் சிலர் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் முருகனை வழிபட்டனர். திருஆவினன்குடி கோவில் பகுதியில் உள்ள நிலையத்தில் முடிக்காணிக்கை செலுத்த பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி, பாதவிநாயகர் கோவில் ஆகிய கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.

    • முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
    • கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டும் வருகிறது.

    திண்டுக்கல் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், பாதுகாப்பு என அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகம் இருந்த போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    பரவல் குறைந்ததை அடுத்து அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்தநிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பொது இடங்களில் முககவசம் அணிவது நேற்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

    மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து தான் வரவேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டும் வருகிறது. அதை கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    • பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    • சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தின் சிறந்த ஆன்மிக தலமாகவும், முருகப்பெருமானின் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அந்த வகையில் வார விடுமுறையான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது.
    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணமும், 7-ம் நாள் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்தது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் ராக்கால பூஜைக்கு பின் பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.

    இந்தநிலையில் 15-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி இன்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜைக்கு பின் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து, பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகம், சன்னதிகள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×