search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    முன்னதாக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணியபூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது. அப்போது மணமேடையில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மணமேடைக்கு முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் குமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி, கண்பத் கிராண்ட் ஹரிகரமுத்து, அரிமா சுந்தரம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    திருவிழாவின் 7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 9 மணிக்கு மேல் திருத்தேரேற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை பெரியநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • 15-ந்தேதி கொடி இறக்குதலுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தந்தப்பல்லக்கில் புறப்பாடும், இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி இன்னிசை, சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு திருத்தேரோட்டமும், மாலை 4.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 15-ந்தேதி கொடி இறக்குதலுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 11-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 12-ம்தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது

    அறுபடைவீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழா பிரசித்திபெற்றதாகும். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா இன்று காலை பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதற்காக வேல், மயில் மற்றும் சேவல் உருவம் பொறித்த மஞ்சள்நிறக்கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்பு கொடி படம் மேளதாளங்கள் முழங்க கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தது. அப்போது கோவில் மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடத்தப்பட்டது. அதன்பின்பு வேதமந்திரங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். அதனைதொடர்ந்து துவாரபாலகர்கள், பரிவார தெய்வங்கள், சுவாமி மற்றும் வாகனங்களுக்கும் காப்பு கட்டப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 11-ந்தேதி திருக்கல்யாணமும், 12-ம் தேதி வைகாசி விசாக தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணைஆைணயர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இன்னும் ஒரிரு நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் சிறந்த ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து பழனிக்கு வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்தும் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள், முடிக்காணிக்கை செலுத்தி முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

    வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகளில் பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளத்துடன் ஏராளமான பக்தர்கள் கிரிவீதிகளில் வலம் வந்தனர். இன்னும் ஒரிரு நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
    தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதுமட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதப்பிறப்பு, கிருத்திகை, வார விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பழனியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    வார விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் பொது, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் விதவிதமான காணிக்கைகள், நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.
    பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மெகா சைஸ் காலணியை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் விதவிதமான காணிக்கைகள், நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம். திருவிழா காலங்களில் விதவிதமான காவடிகள் எடுத்து வந்தும், அலகு குத்தியும் முருகப்பெருமனை வழிபட்டுச் செல்வார்கள்.

    அதன் வரிசையில் கரூரைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் மெகாசைஸ் காலணியை முருகனுக்கு காணிக்கையாக வழங்க கொண்டு வந்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், முருகப் பெருமான் தங்கள் கனவில் வந்து எதைக் கேட்டாலும் அதனை தயாரித்து காணிக்கையாக வழங்கி வருகிறோம்.

    தெய்வானையின் உறவு முறை என்பதால் முருகனுக்கு இது போல பல்வேறு சீர்வரிசைகள் வழங்கியுள்ளோம். அதன்படி தற்போது மெகாசைஸ் காலணியை தயாரித்து அதனை தலையில் சுமந்தவாறு பெண்கள் கும்மியடித்து மேளதாளங்கள் முழங்க கிரி வீதியை சுற்றி வந்து மடத்தில் பூஜைகளை முடித்தபிறகு காணிக்கையாக வழங்க உள்ளோம் என்றனர்.

    அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டுச் சென்றனர்.
    பழனியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயில் தாக்கம் இன்றி பக்தர்கள் ஆனந்தமுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் வந்தவர்கள் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை மற்றும் முகூர்த்தநாள் என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.

    அதிகாலை முதலே அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.

    இதேபோல் படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட தரிசன வழிகளிலும், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பழனியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயில் தாக்கம் இன்றி பக்தர்கள் ஆனந்தமுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் வந்தவர்கள் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்றழைக்கப்படும் இத்திருவிழா உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 6-ம்நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை வைகாசி விசாக தேரோட்டத்தையொட்டி காலை 11 மணிக்கு திருத்தேர் ஏற்றம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தேரோட்டம் தொடங்கியது. பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், செயற்பொறியாளர் சக்திவேல், கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிகரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், திருப்பூர் லாட்ஜ் உரிமையாளர் மகேஷ் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    கோவில் யானை கஸ்தூரி தேரை முட்டி நகர்த்திய காட்சி.

    தேரானது கிழக்கு ரதவீதியில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகளில் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது. இதற்கிடையே ரதவீதிகளில் உள்ள மேடான பகுதிகளில் தேர் வந்தபோது, கோவில் யானை கஸ்தூரி தனது தும்பிக்கையால் முட்டி தேரை நகர்த்தியது.

    தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை (திங்கட்கிழமை) இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் செய்திருந்தது. 
    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில், நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் வைகாசி விசாக திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    முன்னதாக திருமணமேடையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மணமேடைக்கு முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகாதீபாராதனை நடந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 10.45 மணிக்கு திருத்தேரேற்றம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.

    முன்னதாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பகல் 12.15 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார்.

    மாலை 4.30 மணிக்கு விநாயகர், அஸ்திரதேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்று சிறிய தேர்களை பக்தர்கள் இழுத்து சென்றனர். தொடர்ந்து தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பட்டத்து குருக்கள்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேர் முன்பு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.

    இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அப்போது பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’, ‘வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேர் நகர முடியாமல் நின்றபோது பழனி கோவில் யானை கஸ்தூரி அதனை முட்டித் தள்ளியது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரி வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக் கல்யாணம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    பங்குனி உத்திரத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை 4.30 மணிக்கு தீர்த்த வாரிக்கு எழுந்தருளலும், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல், பகல் 11.45 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினர்.

    இதனையடுத்து மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு தீர்த்தம் எடுத்தும், காவடி சுமந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா வையொட்டி இன்று (புதன்கிழமை) மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் இன்று (புதன்கிழமை) மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி மாப்பிள்ளை கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வெள்ளி யானையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருக்கல்யாணத்தையொட்டி, இன்று காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் சுவாமி புறப்பாடும், மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் சவுமியநாராயண கவர நாயக்கர் மண்டபம் வந்தடைதலுக்கு பின் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்களும், கலச அபிஷேகமும் நடைபெற்று, மாலை 6.30 மணிக்கு கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளுகிறார்.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல், பகல் 12.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 9 மணிக்கு தந்தப்பல்லக் கில் திருஉலா காட்சியும், அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருஉலா காட்சியும் நடைபெறுகிறது.

    23-ந்தேதி காலை 7.30 மணிக்கு வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் திருஉலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிக்கு பின் இரவு 10 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் திருஉலா காட்சியும், 24-ந் தேதி காலை 7.20 மணிக்கு அபிஷேக, ஆராதனைக்குப் பின் புதுச்சேரி சப்பரத்தில் கிரிவீதி உலாவும், காலை 10.25 மணிக்கு சாந்து மண்டகப்படியும், இரவு 7 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் திருஉலாவும், இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    ×