என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96359"
- விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்திருந்தனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி வரத் தொடங்கினார்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதற்காக அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தடுப்பு வேலிகளை அடைத்து மூடினார்கள்.
மேலும் டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளரும், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் தியாகத் நேற்று ஜந்தர் மந்தர் சென்றபோது அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர் போராட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்றார். இந்தநிலையில் திட்டமிட்டபடி டெல்லியில் இன்று காலை முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது.
டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், 'விவசாய விலை பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும். விவசாயி கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார சட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என்றனர்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லி புறநகர் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி எல்லைகளான சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லி தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
- சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார்.
- புதுப்பட்டினம், பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி, ஜூலை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர புதுப்பட்டினம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இறால் நோய் எதிர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார். டாக்டர் பொன்னுசாமி, டாக்டர் உதயகுமார் கலந்துகொண்டு மழைக்காலங்களில் இறால் குட்டைகளில் நோய் வராமல் இருப்பதற்கு தடுக்கும் வழிமுறைகள்,நோய் எதிர்ப்பு மேலாண்மை, தீவனம் இடுதல் குறித்த தொழில்நுட்பம்,நோய் கட்டுப்படுத்துதல், உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான ஆலோசனை உள்ளிட்ட கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. புதுப்பட்டினம், தாண்டவன்குளம், தற்காஸ்,பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
குஜராத்தில் உள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அம்மாநில அரசு ரூ.1,500 வரை நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது ரூ.1,500 இவற்றில் எது குறைவோ அந்த தொகை நிதியுதவியாக வழங்கப்படும். இதற்கான பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பலனடையலாம். ஆனால், கூட்டாக விவசாயம் செய்பவர்களில், தலா ஒருவருக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். ஸ்மார்ட்போனை தவிர, இயர்போன், பவர் பேங்க், சார்ஜர் போன்ற சாதனங்கள் வாங்க இத்திட்டம் பொருந்தாது.
விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வானிலை தகவல்கள், பூச்சி மருந்து விவரங்கள், நவீன பண்ணை தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவது நல்லது என்று மாநில வேளாண்துறை தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல.
கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.
வேளாண் சட்டங்களுக்கு எழுந்த எதிர்ப்பை போலவே, இந்த அவசர சட்டத்துக்கும் அப்போது எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு உள்பட பெரும்பாலான விவசாய சங்கங்கள், இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலி தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. காந்தியவாதி அன்னா ஹசாரே, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.
வழக்கம்போல், பிரதமர் மோடி அந்த அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் எதிர்ப்புகள் அடங்கவில்லை.
அதே சமயத்தில், இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக, 2015-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் அம்மசோதா நிறைவேறி விட்டது. ஆனால், பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 47), விவசாயி.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (65) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரண்டு குடும்பத்திற்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பரமசிவன், அவரது மனைவி சீலக்காரி, மகன் வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, கருப்பசாமியை சரமாரி அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.
பலத்த காயமடைந்த கருப்பசாமிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கருப்பசாமி தேவர்குளம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே வளத்தா மங்கலம் கீழத்தெருவில் வசித்து வந்தவர் பெரியசாமி (வயது 70) விவசாயி.சம்பவத்தன்று இவர் டீ குடிப்பதற்காக வளத்தாமங்கலம் மெயின் ரோடு ஓரமாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் பெரியசாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்ட பெரியசாமி சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருந்த பெரியசாமி அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய மகன் கேசவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேங்கூர் அருகே உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் திடீரென திருச்சி வழி மயிலாடுதுறை சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருச்சி ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி ரெயில் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினார்கள்.
விசாரணையில் பாலமுருகனுக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததும் அதை குணப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தததும் அதனால் தான் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. ரெயில் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை, மே. 25-
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த வருடம் கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்பட்டன.
இப்பகுதியில் அதிகா ரிகள் பார்வையிட்டு சேத மடைந்த தென்னையை ஓரளவுக்கு கணக்கிட்டு சென்றனர். ஆனால் பல விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எதிர்பார்த்த பருவ மழையும் பெய்யாததால் தென்னை மரங்கள் பட்டுப் போய் கருகத் தொடங்கியது.
இதனால் காய்ந்த மரங்களை விவசாயிகள் வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகின்றனர். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சூளை உரிமையாளர்கள் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி விறகுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ரூ. 50 முதல் ரூ.100 வரை விலை கொடுத்து இவை வாங்கிச் செல்லப்படுகிறது. நீண்ட நாள் பலன் தரக்கூடியது என்று நம்பி தென்னையை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடித்து வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், காவிரி பாசன விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கருக்கங்குடி, கருணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர் வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழப்பெத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் ராயநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன், ராயநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கருணாநிதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் ராயநல்லூரை சேர்ந்த மணிமாறன் தலைமையில் 65 பேர் கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் உள்ள 32 ஊராட்சிகளிலும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும், வருகிற ஜூன் 1-ந் தேதி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (41) என்பவருக்கும், அவரது சகோதரர் ஏழுமலைக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2-ம்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது, ஏழுமலையின் மருமகன் வடுகசாத்தை சேர்ந்த வெங்கடேசன்(32) என்பவர் ரமேஷை ஆபாசமாக திட்டி தாக்குதல் நடத்தியதாக நேற்று சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள சிறுமங்கலம் உடையார் தெருவை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 55) விவசாயி.
இவர் இன்று காலை தனது சைக்கிளில் அருகே உள்ள மேலவாசலுக்கு சென்றார். அங்கு மார்க்கெட்டில் மீன் வாங்கி விட்டு வீட்டுக்கு சைக்கிளில் புறப்பட்டார். சிறுமங்கலம் அருகே தஞ்சை-மன்னார்குடி சாலையில் வந்தபோது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான வேனை அடித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த வடுவூர் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வல்லம் அடுத்துள்ள குருங்குளத்தை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 68), இவரது பேரன் ஆகாஷ் (16). சம்பவத்தன் ஆகாஷ் தனது பாட்டி மலர்கொடியுடன் குருங்குளம் அருகே உள்ள கரும்பு கொல்லையில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குருங்குளம் சாலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (39) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளார். அப்போது எதிரே ஒரு லாரி வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய சிறுவன் ஆகாஷ் சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் ஆகாசை துரத்தி சென்று பிடித்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மலர் கொடியையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஆகாசும், மலர்கொடி இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்