search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96364"

    பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று வாக்கெடுப்பு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சித்தராமையா சில ஆலோசனைகளை வழங்கினார்.
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். மேலும் சபாநாயகர் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர்கள் சென்றார்கள்.

    பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சபாநாயகர் தேர்தல் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சித்தராமையா மற்றும் மூத்த தலைவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையாவிடம் கேட்டு கொண்டதாக தெரிகிறது. அப்போது மந்திரி பதவியை யார்? யாருக்கு வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள், மந்திரி பதவி கிடைக்காதவர்கள் ஆதங்கப்பட வேண்டாம், அவர்களுக்கு கட்சி உரிய பதவியை தகுந்த நேரத்தில் வழங்கும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சித்தராமையா சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சபாநாயகர் தேர்தல் முடிந்ததும் ஓட்டல்களில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். 
    சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். “எங்கள் மீது நம்பிக்கை இல்லையா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
    பெங்களூரு :

    நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இன்று(புதன்கிழமை) பொறுப்பு ஏற்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அதைத்தொடர்ந்து நாளை(வியாழக்கிழமை) கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    இதையடுத்து குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேற்று வந்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    அவர்கள் பேசும்போது, “நீங்கள் மட்டும் தினமும் வீட்டுக்கு சென்று விடுகிறீர்கள். எங்களை இங்கேயே தங்க வைத்துள்ளர்கள். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?. நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக எங்களுக்கு டிக்கெட் கொடுத்தீர்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரை பார்க்க வேண்டாமா?“ என்று கூறி கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவிலேயே தங்கி இருப்பார்கள் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்தியாவில், ஹிட்லரின் வடிவங்களாக நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இருக்கிறார்கள் என முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறிஉள்ளார். #KarnataElection2018 #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பாரதிய ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.  

    பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ், ஜே.டி.எஸ். தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்கிறது என இருகட்சிகள் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்.

    இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். கர்நாடகத்தில், பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்பு சாசன விதி மீறப்பட்டு உள்ளதன் மூலம் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. இதனால், கவர்னர் எப்போதும் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

    புதிய அரசு அமைப்பது தொடர்பாக கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை எடுத்து கூறி ஆட்சி அமைக்க அனுமதி அளிக்கும்படி கவர்னரிடம் கேட்டு கொண்டோம். எங்களின் கோரிக்கைகளை கவர்னர் காற்றில் பறக்க விட்டுவிட்டார்.


    கவர்னர், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார். அவர் உண்மை நிலையை மறந்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கிறார். நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இந்தியாவில் ஹிட்லரின் வடிவங்களாக உள்ளனர். இவர்கள் 2 பேர் கூறும் அறிவுரைகளை கவர்னர் பின்பற்றுகிறார். அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி இருந்தால் கவர்னர் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்க மாட்டார்.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதிய ஜனதாவுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியதன் மூலம் குதிரை பேரத்துக்கு கவர்னர் வழிவகுத்து கொடுத்துள்ளார். தற்போது எங்களிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை பாரதிய ஜனதா மிரட்டி வைத்துள்ளது. அவரும் விரைவில் வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என கூறியுள்ளார். #KarnataElection2018 #Siddaramaiah #Modi #AmitShah
    கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #KarnatakaCMRace #congress
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியான பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  அதேசமயம், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்து தங்களுக்கு போதிய மெஜாரிட்டி இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமை கோரியது.

    ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



    எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #KarnatakaCMRace #congress

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்காக பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது. அதேசமயம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.  காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கின்றன. ஆனால் யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்பதைப்பொருத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.

    இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் வர தாமதம் ஆனது. இது பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களுடன் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்த பின்னர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதை காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், யாருக்கும் அதிருப்தி இல்லை என்றார்.



    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் போனில் அழைப்பு விடுத்திருப்பதாக மாநில முன்னாள் அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தருவதாகவும், ரூ.100 கோடி வரை ரொக்கமாக தருவதாகவும் ஆசை காட்டி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக குமாரசாமியும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
    கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கவர்னர் வஜுபாய் வாலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.#KarnatakaElection2018 #Siddaramaiahresigns
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 104  தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 தொகுதிகளிலும் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர்.

    இதனால், தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது. எனினும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்துள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா இன்று மாலை சுமார் 4 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்றார். கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்தார். #KarnatakaElection2018 #Siddaramaiahresigns
    கர்நாடக தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல் மந்திரி சித்தராமையா படாமி தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாமுண்டீஸ்வரியில் படுதோல்வி அடைந்துள்ளார். #Karnatakaverdict
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி, படாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடா என்பவரிடம் 36 ஆயிரத்து 42 வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையா படுதோல்வியை சந்தித்தார்.

    அதேவேளையில், படாமி தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பிம்மப்பா-வை விட 1696  வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #Karnatakaelections2018 #Karnatakaverdict
    கர்நாடக தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில் முதல் மந்திரி சித்தராமையா இன்று மாலை கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். #KarnatakaElection2018 #Congress #Siddaramaiah #VajubhaiVala
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 53 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 26 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பா.ஜ.க. வேட்பாளர்கள் 53 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 49 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 33 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    இதை வைத்து பார்க்கும்போது, தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது. எனினும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    குமாரசாமியை முதல் மந்திரியாக்கினால் ஆதரவு அளிக்க தயார் என தேவேகவுடா தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்த இயலாத தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா இன்று மாலை சுமார் 4 மணியளவில் கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். #KarnatakaElection2018 #Congress #Siddaramaiah #VajubhaiVala
    கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
     பெங்களூரு:

    கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவை சந்தித்தார். காலை 10.30 மணி நிலவரப்படி, அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஜி.டி.தேவ் கவுடாவை விட சுமார் 12 ஆயிரம் வாக்குகள் பிந்தங்கியிருந்தார்.

    சித்தராமையா  போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பாதாமி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த நிலைமை சிறிது நேரத்தில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறியுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    பெங்களூரு:

    கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், பா.ஜ.க கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

    இந்நிலையில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலக்கத்துறை மந்திரி சதானந்த கவுடா தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார்.

    கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை, ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் போதுமானதாகும். ஆனால், 112 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். 
    #KarnatakaVerdict #KarnatakaElectionResults     
    கர்நாடக தேர்தலுக்கு பிறகு வெளியாகும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் 2 நாள் கேளிக்கை. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என சித்தராமையா தெரிவித்துள்ளார். #Karnatakaelections2018 #exitpolls #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    ஹெப்பல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரண்டாம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு பின்னர் கிடைக்கும் ஒப்புகை சீட்டில் வாக்களித்த வேட்பாளருக்கு பதில் வேறு பெயர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என இன்றைய வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது.

    கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தியாவின் பிரபல ஊடகங்கள் நடத்திய  வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.

    அதன்படி, ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றி மீண்டும் அரசு அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையலாம் என குறிப்பிடுகின்றன.

    இதேபோல், சில ஊடகங்கள் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையலாம் என யூகித்துள்ளன.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை இழக்கும் வேளையில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க இந்த கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சிக்கும் முயற்சிக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த கருத்து கணிப்புகள் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ள கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, கர்நாடக தேர்தலுக்கு பிறகு வெளியாகும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் 2 நாள் கேளிக்கை. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

    தேர்தலுக்கு பின்னால் வெளியாகும் தகவல்கள் அனைத்துமே ஆறடி உயரம் கொண்ட ஒருவர் நான்கடி ஆழம் கொண்ட ஆற்றில் நடந்து அக்கரைக்கு போக முடியாமல் திண்டாடுவதைப் போன்றதாகும்.

    எனவே, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவரும் இந்த கருத்து கணிப்புகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உற்சாகமாக உங்கள் வார இறுதி விடுமுறையை நன்றாக அனுபவியுங்கள். நாம் நிச்சயமாக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என குறிப்பிட்டுள்ளார். #Karnatakaelections2018 #exitpolls #Siddaramaiah
    கர்நாடக சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 6 மணி நிலவரப்படி சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவானது. #KarnatakaElection2018 #70pcvoterturnout
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடியும், குறைபாடும் காணப்பட்டதாக அரசியில் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    ஹெப்பல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரண்டாம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு பின்னர் கிடைக்கும் ஒப்புகை சீட்டில் வாக்களித்த வேட்பாளருக்கு பதில் வேறு பெயர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இதேபோல், மாநிலம் முழுவதிலும் 164 வாக்கு இயந்திரங்களிலும், 157 மத்திய கட்டுப்பாட்டு கணினிகளிலும் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

    மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கர்நாடக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.4 சதவீதம் வாக்குகள் பதிவானது நினைவிருக்கலாம்.

    இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaElection2018 #70pcvoterturnout 
    ×