search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96528"

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இந்த வாரம் சென்னை திரும்புகிறார். விஜயகாந்த் உடல் நலம் தேறி புதிய உத்வேகத்துடன் அரசியலில் மீண்டும் வலம் வருவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். #vijayakanth #dmdk

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் அவர் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு ஒன்றை அமைத்துள்ளார்.

    எல்.கே. சுதீஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் டாக்டர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, திருப்பூர் அக்பர் ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்த் வருகைக்காக காத்து இருக்கிறார்கள்.

    கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில்தான் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கப்படும் என்று திட்டவட்டமாக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இந்த வாரம் சென்னை திரும்புகிறார். விஜயகாந்த் உடல் நலம் தேறி புதிய உத்வேகத்துடன் அரசியலில் மீண்டும் வலம் வருவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான சக்தியாக இருந்துள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கணிசமான இடங்களில் போட்டியிடவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

    2 இலக்க அளவில்தான் தேர்தலில் நிற்போம், கேப்டன் விஜயகாந்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    தே.மு.தி.க.வில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்ய விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதால் அவரை மீண்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க. முயற்சி செய்கிறது. இந்த கூட்டணி உறுதியானால் இதுவும் தி.மு.க.வுக்கு நிகரான மெகா கூட்டணியாக அமையும்.  #vijayakanth #dmdk

    திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் குறித்து தே.மு.தி.க. சார்பில் அனைத்து அணி மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #dmdk #parliamentelection
    திருச்சி:

    திருச்சியில் தே.மு.தி.க. சார்பில் அனைத்து அணி மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தே.மு.தி.க. தலைவர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார்.  அவை தலைவர் அலங்கராஜ் முன்னிலை வகித்தார்.தே.மு.தி.க. மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வக்கீல் அணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு மாநில அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. தேர்தல் களத்தில் எவ்வாறு செயல்படுவது? ஒவ்வொரு  அணியும் தே.மு.தி.க. வெற்றிக்காக எப்படி பங்காற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

    இதில் திருச்சி மாவட்ட துணை செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப் பினர்கள் ராமு, ராஜ்குமார், பெருமாள், இளைஞர் அணி செயலாளர் சாதிக், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மணிகண்டன்,பகுதி செயலாளர்கள் மோகன், வெல்டிங்சிவா, லோகராஜ், அய்யாசாமி, நூர்முகமது, கருணாகரன்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmdk #parliamentelection
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். #seeman #Rajinikanth #pmmodi

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கொடநாடு பிரச்சினையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள காவல்துறையால் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முதன் முதலாக போராட்டம் நடத்தியது நாங்கள்தான்.

    காங்கிரஸ் கட்சி குடும்ப சொத்து, இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பதில் தவறு ஏதுமில்லை என கருதுகிறேன். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று பொய் பேசி வருகின்றனர். கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு ஓட்டுபோடுவோம் என்று யாரும் கூறவில்லை. கருத்துகளை உருவாக்குகிறார்கள்.

    மாநில கட்சிகள்தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமர் யார் என்று தீர்மானிப்பார்கள். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், கூட்டாட்சி தத்துவம் சிறப்படையும். ஜனநாயகம், அதிகாரம் பரவலாக்கப்படும். மாநில கட்சிகள் அதிகாரம் பெற்று இந்தியாவை கூடி பேசி கூட்டாட்சி செய்தால்தான் சரியானதாக இருக்கும்.

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆட்சி முடிவடையும் போது நலத்திட்டங்களை அறிவித்து, அடிக்கல் நாட்டுகின்றனர். தேர்தல் முடிந்த உடன் ஒருமித்த கருத்துடன் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.


    கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே விஜயகாந்த் கட்சி தொடங்கி வெற்றி பெற்றார். ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் யாரும் இல்லாத திடலில் கம்பெடுத்து சுழற்றுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் நடிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், வர வேற்கிறோம். ஆனால் அவர் முதல்வராகவும், தலைவராகவும் இருந்து ஆட்சி செய்வது ஆபத்தானது, அதை நாங்கள் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். #seeman #Rajinikanth #pmmodi

    வருகிற பாராளுமன்ற , சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் என்று எல்கே சுதிஷ் பேசினார். #lksudhish #dmdk #vijayakanth #parliamentelection

    வடவள்ளி:

    கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சாய்பாபா காலனி பகுதி தே.மு.தி.க. சார்பில் பொங்கல் பொருள் பரிசளிப்பு விழா தடாகம் ரோடு வேலாண்டி பாளையம் ஆனந்த ஹவுசிங் காலனி 13-வது வார்டில் நடைப்பெற்றது. விழாவில் பொதுமக்கள் 4100 பேருக்கு 15 லட்சம் செலவில் பொங்கல் பொருள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது:-

    வெளிநாட்டிற்கு சிகிச்சை பெற விஜயகாந்த் சென்றாலும் தமிழ் மக்களின் நலனை எந்நேரமும் விசாரித்தபடி உள்ளார். விஜயகாந்தை விமர்சித்து மீம்ஸ் போட்டவர்கள் எல்லாம் தற்போது அவரை சிறந்த தலைவர் என ஒத்துக்கொண்டு உள்ளனர்.

    ஊழல் இல்லாத தலைவன் விஜயகாந்த் மட்டுமே. வரும் மார்ச் மாதம் திருப்பூரில் நடக்கும் மாநாட்டில் அவர் வந்து பேசுவார்.


    வருகிற பாராளுமன்ற , சட்ட மன்ற தேர்தலாக இருந்தாலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் .

    வேலூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைப்பெறுகிறது. இதனால் 13 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் . கஜா புயலால் 6 மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. மாநிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது.

    விவசாயிகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அடுத்து நாம் ஆட்சிக்கு வரமுடியாது என்பது தெரிந்து விட்டது.


    அ.தி.மு.க.- தி.மு.க. கட்சிகள் மக்களால் தூக்கி எறியப்படும். வருகின்ற தேர்தலில் தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிடும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவுக்கு சாய்பாபா காலனி பகுதி செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர்கள் பார்த்தசாரதி , அக்பர் , கோவை மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில், தினகரன் , தியாகராஜன், மாநில கலை இலக்கிய அணி துணைச்செயலாளர் சிங்கை சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் வார்டு செயலாளர் தவசிமுருகன், பகுதி இளைஞரணி சதிஷ் குமார் , வார்டு இளைஞரணி சக்தி , 14 - வது வட்ட செயலாளர் ராஜா , பகுதி துணைச்செயலாளர் திருநாவுக்கரசு , பகுதி பிரதிநிதி கருப்பையா , சிவபாலன் , கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #vijayakanth #parliamentelection

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று கம்பீர குரலுடன் மீண்டும் வருவார் என்று விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று சந்தித்தார். அப்போது அவர் உடலை வருத்தி போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆசிரியர்களுடன் அமர்ந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர்களின் இந்த நிலைக்கு தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள்தான் காரணம். ஆசிரியர்கள் போராட்டம் பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் கவலைப்படாமல் உள்ளார்.


    எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வி‌ஷயத்தில் தலையிட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. ஆனால் கல்வி தரம் 3-வது இடத்தில் உள்ளது.

    எனவே அவர்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெறுவார். கம்பீர குரலுடன் அவர் மீண்டும் வருவார். பாராளுமன்ற தேர்தலுக்குள் அவரது உடல்நிலை சரியாகி விடும் என்று நம்புகிறேன்.

    தேர்தல் தொடர்பான முடிவுகளையும் அப்போது அவர் எடுப்பார்.

    இவ்வாறு விஜய பிரபாகரன் கூறினார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran #TeachersProtest
    தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினார். #DMDK #Vijayakanth #Vijayprabhakaran
    ராயபுரம்:

    தே.மு.தி.க. வடசென்னை மாவட்டம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

    இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அப்போது விஜயகாந்த் உடல்நலம் பெற பிரார்த்தனை நடந்தது. விழாவில் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணிகளை வழங்கினார்.

    ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்துக்கு நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்தும், வியூகம் குறித்தும் அறிவிக்கப்படும். தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட எந்த பயமும் எனக்கு இல்லை. எங்கள் கட்சிக்குள் குழப்பம் இல்லை. எனது வளர்ச்சிக்கு சுதீப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கும் அவருக்கும் பிரச்சனை இருப்பதாக கூறுவது வதந்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ, நல்ல தம்பி, பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMDK #Vijayakanth #Vijayprabhakaran
    சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நியமித்தார். வடக்கு தொகுதி பொறுப்பாளராக அவைத்தலைவர் செல்வகுமார், தெற்கு தொகுதி பொறுப்பாளராக பொருளாளர் தனசேகர், மேற்கு தொகுதி பொறுப்பாளராக துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

    இதன் அறிமுக கூட்டம் சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம், கிச்சிப்பாளையம் விஜி, நடராஜன், சேகர், செந்தில், ஜெயக்குமார், ராஜி, சேலம் ஒன்றிய கோவிந்தராஜ், கேப்டன் மன்றம் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dmdk

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2ம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 மாத சிகிச்சைக்கு பிறகு பிப்ரவரி மாதம் சென்னை திரும்புவார் என்று நிர்வாகிகள் கூறினார்கள். #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று திரும்பினார். 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்தார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    2017 நவம்பர் இறுதியிலும் சிங்கப்பூர் சென்று இருந்தார். பின்னர் குரல் மோசமானதை அடுத்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

    சில நாட்களுக்கு முன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபகாரன் விஜயகாந்துக்கு மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்த மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறினார்.


    அதன்படி நேற்று மாலை விஜயகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவரது மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதாவும் உடன் சென்றார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் இருவரும் திரும்புவார்கள் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூறினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு வருவதையொட்டி விஜயகாந்த் மீண்டும் உடல் நலத்துடன் வந்து புத்துணர்வுடன் தமிழ்நாடு முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் அவர் உடல்நலம் தேறி வந்த பிறகு பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.

    விஜயகாந்தும் பிரேமலதாவும் திரும்பும் வரையில் அவர்களது மகன் விஜய பிரபாகரன் கட்சி பணிகளை கவனிப்பார். #DMDK #Vijayakanth
    டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய அவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். விழாவில் பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்த பின்னர் விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- கட்சியில் பொறுப்புக்கு வருவீர்களா?

    பதில்:- கட்சியில் பொறுப்பு தேடி வரவில்லை. விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதில் என்னுடைய பங்கை நான் செய்கிறேன். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் அமெரிக்கா செல்கிறோம்.


    அதன்பிறகு அவர் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுவார். சிங்கத்துக்கு நிகரான தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்பார்.

    கே: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்வீர்களா?

    ப:- இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது. ஏனெனில் முதலில் அரசியலுக்கு வந்தது விஜயகாந்த் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக பணியாற்றி உள்ளோம். எனவே தே.மு.தி.க.வை லேசாக எடை போட வேண்டாம்.

    கமலாவது கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர்களுடைய வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது கூற முடியுமா? எதுவுமே இல்லாதபோது கூட்டணி என்றால் ஒரு நாள் செய்தியுடன் முடிந்துவிடும்.

    எனவே அவர்கள் களத்திற்கு வரட்டும். நாங்கள் தேர்தல் களத்தில் எங்களை நிரூபித்துள்ளோம். ஆனால் இருவரும் தங்களை இன்னும் நிரூபிக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க பொறுப்பாளர்கள் நியமக்கப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்திரவின் பேரில் மாவட்ட பொருளாளர் கவியரசன் அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட துணை செயலாளர் தெய்வசிகாமணி ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமக்கப்பட்டுள்ளனர். 

    இத் தகவலை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தெரிவித்துள்ளார். #dmdk
    தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் சென்னை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #dmdk

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென் சென்னை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வி.சி.ஆனந்தன் சிபாரிசின் பேரில், மைலாப்பூர் சட்ட மன்ற தொகுதி மாவட்ட துணை செயலாளராக எஸ். இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை தொகுதி மாவட்ட துணை செயலாளராக ஆர்.சுப்பு என்கிற சுப்பிரமணி, தியாகராயநகர் தொகுதி துணை செயலாளராக ஏ.பாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இவர்களுக்கு தென் சென்னை மாவட்ட வடக்கு பகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dmdk

    தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Vijayakanth #GajaCyclone #TNGovt
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. இரவும், பகலும் பாராமல் கண் விழித்து விரைவாக செயல்பட்ட அனைத்துதுறை அமைச்சர்களும், அதிகாரிகளும் உடனுக்குடன் ஆணை பிறப்பித்து சிறப்பாக பணிகளை ஆற்றியதற்கு தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறோம்.

    மிக முக்கிய புயல் பாதிப்புக்கான இடமாக வேதாரண்யம் மற்றும் நாகை உள்ளது. அங்கு அதிக வீடுகள் இழப்பு, மீனவர்கள் படகுகள் சேதம், 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.

    உடனடியாக மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு தந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு படகுகள் சரிசெய்வதற்கும், வீடுகள் சேதம் அடைந்ததை சரிசெய்வதற்கும், சாலைகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பதற்கும், மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்வதற்கும் உதவிட வேண்டும்.

    தமிழக அரசு கஜா புயல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கஜா புயல் பாதிப்பை உடனடி கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென தே.மு.தி.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMDK #Vijayakanth #GajaCyclone #TamilnaduGovt
    ×