search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    ஆண்டிமடம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 36). இவர் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வேல்விழி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜெயபிரகாஷ் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் வழக்கம் போல் வேல்விழி எழுந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே உள்ள மற்றொரு அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ.1,000-த்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல் அதே தெருவில் ஜெயபிரகாஷ் பக்கத்து வீட்டில் உள்ள பத்மநாபன், சகுந்தலா ஆகியோரின் வீடுகளிலும் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை திறந்து நகைகளை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வீட்டில் நகைகள் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஜெயபிரகாஷ் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 
    திருவொற்றியூரில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் சத்திய மூர்த்திநகர் மெயின் வீதியில் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார்.

    இன்று காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் கதவுகள் திறந்து கிடந்தன. உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

    கோவில் உண்டியலில் பக்தர்கள் போட்ட காணிக்கை பணம் ரூ.20 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி கிராம தலைவர் ராஜு சாத்தாங்காடு போலீ சில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கோவிலில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருந்தது. கொள்ளையர்கள் உண்டியலை உடைப்பதற்கு முன்னதாக கேமிராவை வேறுபக்கம் திருப்பி வைத்து விட்டனர். மேலும் அதன் கேபிள் வயர்களையும் அறுத்து செயல் இழக்க செய்துள்ளனர்.

    விநாயகர் கிரீடம், பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள கிரீடத்தை எடுப்பதற்காக பீரோவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

    ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த அந்த பகுதியில் உண்டியல் கொள்ளை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் அடகு கடைக்காரரிடம் 20 பவுன் நகை மற்றும் ரூ.1¾ லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் களப்பாளில் அடகு கடை நடத்தி வருகிறார்.

    ராஜேந்திரன் தன்னுடைய அடகு கடையில் அடகு பிடிக்கப்படும் நகைகளை திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் வைத்துவிட்டு பணம் எடுத்து செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று ராஜேந்திரன் வங்கியில் இருந்து 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஆகியவற்றை எடுத்து வந்து தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு டி.மு. கோர்ட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    இதை கவனித்து வந்த மர்ம நபர்கள் பெட்டியின் பூட்டை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தையும், 20 பவுன் நகையையும் திருடி சென்று விட்டனர். சாப்பிட்டுவிட்டு வந்த ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே பார்த்தபோது பணம், நகை திருட்டு போய்இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பிரம்மதேசம் அருகே நள்ளிரவில் அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர்கள் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
    மரக்காணம்:

    பிரம்மதேசம் அருகே உள்ளது வேப்பேரி கிராமம். இங்குள்ள மரக்காணம்-திண்டிவனம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் வேப்பேரி, பிரம்மதேசம், மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 700 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்த பின்னர் காவலாளி பள்ளியின் அனைத்து அறைக்கதவுகளையும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் பள்ளி வளாகத்துக்கு வந்தனர்.

    கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்தால் மாட்டி கொள்வோம் என்று எண்ணிய மர்ம மனிதர்கள் முதலில் வெளியே மாட்டியிருந்த எலக்ட்ரிக் பெல் மற்றும் பள்ளி மணி ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கம்ப்யூட்டர் அறை ஜன்னலின் கதவை வளைத்து லாவகமாக உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பென்டிரைவை கொள்ளையடித்தனர். இதையடுத்து கொள்ளையடித்த பொருட்களோடு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளின் வெளியே மாட்டியிருந்த பெல் மற்றும் அறையில் இருந்த பென்டிரைவை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம மனிதர்கள் இவை அனைத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரம்மதேசம் போலீசில் தலைமை ஆசிரியர் ராதா புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காலாப்பட்டு அருகே ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே கனக செட்டிகுளம் மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். (வயது 70). இவர் தமிழக காவல்துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பக்க கிரில் கேட் கதவை மட்டும் பூட்டி விட்டு மனைவி மீனாட்சியுடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். சாவியை அருகில் வசிக்கும் தனது மகள் சுதாவிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    மறுநாள் சுதா பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ரங்கநாதன் வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை மற்றும் ரூ.8500 ரொக்க பணத்தை காணாமல் திடுக்கிட்டார்.

    யாரோ மர்ம நபர்கள் ஊருக்கு செல்வதை நோட்டமிட்டு துணிக்கு அடியில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சமாகும்.

    இதுகுறித்து ரங்கநாதன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ரங்கநாதனின் உறவினர்களோ அல்லது ரங்கநாதன் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களோ ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மருங்கூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஞ்சுகிராமம்:

    மருங்கூர் அருகே உள்ள இரவிபுதூரைச் சேர்ந்தவர் ரமேஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமிர்த ஆரோக்கிய மதுமதி (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 5-ந் தேதி மதுமதி தர்மபுரியில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு குழந்தைகளுடன் சென்றார். நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன.

    பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 கிராம் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், கேமரா, ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மதுமதி வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி மதுமதி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லைசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் ரொக்கம், வைரம் மற்றும் நகைகள் கொள்ளையடித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு நுங்கம்பாக்கம் பைகிராப்ஸ் கார்டன் பகுதியில் உள்ளது. இங்கு சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

    இந்த வீட்டில் ரூ.1½ லட்சம் பணம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்களான வெண்ணிலா, விஜி இருவர் தான் நகை-பணத்தை திருடி இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம்- நகையை இருவரும் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வீட்டினுள் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்தபடி 2 பேர் செல்வது தெரிய வந்துள்ளது. இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    திருமானூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 40). இந்த தம்பதியினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நெசவுத்தொழிலாளியான பாலு தற்போது நெசவுத்தொழில் நலிவடைந்ததால் தனது மகளுடன் சென்னையில் தங்கி அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலு சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பாலு வீட்டை பூட்டிவிட்டு மனைவி கிருஷ்ணவேணியுடன் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று பாலுவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து பாலுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டுக்கு பாலு தனது மனைவியுடன் வந்தார். பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலு குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ஈரோடு அருகே மளிகைக்கடையில் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் கம்யூட்டர்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல், ஈஸ்வரமூர்த்தி. இவர்கள் 2 பேரும் கூட்டாக பூந்துறை ரோட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.

    அவர்கள் கடையில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்க பணம், 3 கம்ப்யூட்டர்கள், அவற்றின் சி.பி.யூ., மானிட்டர்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை கடை திறக்கப்பட்டது. அப்போது கடையில் பணம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடையின் பின்புறம் தகர ஷீட்டினால் ஆன மேற்கூரை உள்ளது. இதனை பொருத்தி இருந்த போல்ட்களை கழற்றியுள்ள கொள்ளையர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஆதம்பாக்கம் பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஆதம்பாக்கம்:

    ஆதம்பாக்கம் பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5-வது தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகேசன். இவர் காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ. 20ஆயிரம் கொள்ளைபோய் இருப்பது தெரிந்தது. அதேபகுதி கக்கன் நகர் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வருபவர் ஜெய்குமார். நேற்று காலை டீ கடை உடைக்கப்பட்டு சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்கள் திருடு போயிருந்தன.

    இதேப்போல் சாஸ்திரி நகர் 3-வது தெருவில் ஆண்கள் விடுதியில் 8 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் சாஸ்திரி நகர் மாநகராட்சி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த காரிலிருத்து வெண்கலம் கம்பி மற்றும் ஆட்டோவிலிருந்து பேட்டரிகள் திருடப்பட்டிருப்பதாக ஆதம்பாக்கம் போலிசில் புகார் அளித்துள்ளனர்.

    ஆதம்பாக்கத்தில் தொடர்ந்து வீடு மற்றும் கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், புகார் கொடுக்க செல்லும் போது தங்களை அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    சென்னை கோட்டூர்புரத்தில் டெல்லி மாணவரை தாக்கி நகை, பணம் மற்றும் செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையில் வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    2 ஷிப்டுகளாக போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களாக இந்த ஷிப்டு முறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டே இருக்கிறது.

    சென்னையில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து செல்போன், செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் ஆட்டோவில் சென்ற வெளிமாநில மாணவரை சரமாரியாக தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த மாணவர் நித்தீஷ். இவர் சென்னைக்கு சுற்றுலா வந்தார். மத்திய கைலாஷ் பகுதியில் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ள நித்திஷ் நேற்று இரவு அதே பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஆட்டோவை வழிமறித்து நித்திசை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார்.

    அவரிடம் இருந்த நகை, செல்போன், பணம், லேப்டாப் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதனையடுத்து நித்திசை நடுரோட்டில் தூக்கி போட்டு விட்டு வழிப்பறி கும்பல் ஆட்டோவில் தப்பிச் சென்றது. ஆட்டோ டிரைவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

    அங்கு இருந்தவர்கள் நித்திசை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    கடையம் அருகே அரசு ஊழியர் காரை உடைத்து பணம் மற்றும் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடையம்:

    கயத்தாறை சேர்ந்தவர் சண்முகநாதன். அரசு ஊழியரான இவர் குற்றாலத்தில் குளிப்பதற்காக தனது காரில் சென்றார். இவர் கடையத்தில் உள்ள உறவினரை அழைத்துக் கொண்டு மற்றொரு வாகனத்தில் குற்றாலம் சென்றார். சண்முகநாதன் ஓட்டி வந்த காரை கடையத்தில் நிறுத்திவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் குற்றாலத்தில் குளித்துவிட்டு மீண்டும் கடையம் வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம், ஒரு செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    சண்முகநாதன் தனது செல்போனில் ஏ.டி.எம். ரகசிய எண்ணை பதிவு செய்து வைத்திருந்தார். இதைப்பார்த்து கொள்ளையன் திருடி சென்ற ஏ.டி.ஏம். கார்டில் இருந்து ரூ.8 ஆயிரத்தை எடுத்துள்ளான். உடனடியாக இது குறித்து சண்முகநாதன் கடையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பாபு (வயது 21) என்பவர் தான், காரை உடைத்து செல்போன், பணத்தை திருடியதும், ஏ.டி.எம்.கார்டு மூலம் பணத்தை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாபுவை கைது செய்தனர் அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×