search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • ஒரு தோட்டத்தில் உள்ள எல்லா பழமும் எங்களுக்கு தான் என்று சொல்வது சனாதனம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாதனைகள் தொடரும். நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-ம் தெருவில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தினம்தோறும் மக்களுக்கான திட்டங்களை எப்படி எல்லாம் செயல்படுத்தலாம் என்று சிந்தித்து செயல்படும் தி.மு.க. ஆட்சியை பார்த்து திராவிடம் காலாவதியாகி விட்டது என்று சனாதனம் பற்றி ஆளுநர் பேசுகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 2,200 கோவில் சொத்துக்களை மீட்டு பாதுகாத்துள்ளார். இதை சனாதனம் செய்யவில்லை. திராவிடம் தான் செய்தது.

    திராவிட மாடல் ஆட்சியில் படித்தவர்கள் தான் பலர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார்கள். இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்து விட்டது. ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் ரூ. 77 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்துதல், தூர்வாருதல் பணிகள் நடைபெறுகின்றன.

    கோரம்பள்ளம் குளம் ரூ. 12 கோடியில் தூர்வாருதல், உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் மழை காலங்களில் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டுமின்றி அதற்கு தனிநல வாரியமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 8,400 பேர் பயனடைவார்கள்.

    திராவிடம் எல்லோருக்கும் ஒன்று தான். ஒரு தோட்டத்தில் உள்ள எல்லா பழமும் எங்களுக்கு தான் என்று சொல்வது சனாதனம். இது எல்லோருக்கும் என்று சொல்வது திராவிடம். யாரையும் தூக்கி பிடிக்க வேண்டாம். நீயும், நானும் ஒன்று என்று நினைக்க வேண்டும். எல்லா தப்பையும் நீங்கள் செய்துவிட்டு எங்களை காலாவதியாகி விட்டது என்று கூறுகிறீர்கள்.

    மக்கள் உங்களை விரட்டும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. அம்பேத்கார் சட்டத்தை இயற்றும் போது என்னையும் அமைச்சரையும் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்ததை போல் ஆளுநரையும் அப்படி தேர்வு செய்யலாமா என்று கேட்டபோது அந்த பதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இது ஒரு அலங்கார பதவிதான் என்று கூறினார்கள்.

    அந்த அலங்காரம் தேவையில்லை என்றால் அதை எடுத்துவிடலாம். எங்கள் பதவி காலாவதியாகவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த உங்கள் பதவிதான் காலாவதியாக போகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாதனைகள் தொடரும். நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் வந்தது. மாநில உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மோடிக்கு ஜால்ரா போடுபவர்கள் நமக்கு தேவையில்லை.

    36 நல வாரியங்கள் மூலம் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. அது மீண்டும் தொடர கனிமொழி எம்.பி மீண்டும் தேவை என்று பேசினார். தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

    • நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம், ஜாதி, மத பிரச்சனைகள் என்று ஒரு நிலையில்லாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    • இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்கு என்று தனி நலவாரியம் அமைத்தது கருணாநிதிதான்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கோவண்டாகுறிச்சியில் நடைபெறும் ஒரு நிழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. வந்தார். அப்போது அவர் பேசும்போது,

    நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம், ஜாதி, மத பிரச்சனைகள் என்று ஒரு நிலையில்லாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எப்போது? யாருக்கு மனநிலை பாதிக்கப்படும் என்பது தெரியாத நிலையில் உள்ளோம். எனவே மனநலம் சார்ந்த ஒரு கொள்கையை தமிழக அரசு வகுத்துக் கொண்டிருக்கிறது.

    கொரோனா உள்ளிட்ட எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், குணமடைந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பி விடுகிறார்கள். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வீடு திரும்புவது தான் சிக்கலாக இருக்கிறது.

    மூன்றாம் பாலினத்தவர், திருநங்கைகள் என்று இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து, அவர்களாலும் இந்த சமூகத்துக்கு உரிய பங்களிப்பு வழங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

    இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்கு என்று தனி நலவாரியம் அமைத்தது கருணாநிதிதான். அவரது வழியில் தற்போதைய தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது,

    மனநல இல்லங்களை திறப்பதற்காக மனநலம் சார்ந்த கொள்கைகளை அரசு வகுத்து வருகிறது என்றார், திராவிட மாடல் ஆட்சி காலாவதியாகிவிட்டதாக கவர்னர் கூறியது தொடர்பாக கேட்டதற்கு, "காலாவதியான பதவியில் இருப்பவர்கள் பேசுவதை எல்லாம், நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றுகனிமொழி பதிலடி கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், எஸ்.பி., சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாமலை அவதூறு சட்டத்தை மீறவில்லை.
    • அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் உள்ளதால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    சென்னை :

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் சொத்து பட்டியலை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் சார்பில் அண்ணாமலைக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு அண்ணாமலை தனித்தனியாக பதில் அனுப்பி வருகிறார்.

    இதற்கிடையே கனிமொழி எம்.பி. அனுப்பிய நோட்டீசுக்கு வக்கீல் பால்கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. நிர்வாகிகளின் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. அண்ணாமலை அவதூறு சட்டத்தை மீறவில்லை.

    நீங்கள் (கனிமொழி) அனுப்பிய நோட்டீஸ் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான பலவீனமான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் சேர்த்துள்ள சொத்துகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆவணங்கள் உரிய அமைப்பிடம் உரிய நேரத்தில் அளிக்கப்படும்.

    அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் உள்ளதால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இழப்பீடு எதுவும் தர முடியாது. எந்த நடவடிக்கை என்றாலும் அதனை சட்டப்படி சந்திக்க அண்ணாமலை தயாராக உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க எம்.பி. கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது வேட்பு மனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 24-ம் தேதி விசாரித்தது. அப்போது, கனிமொழியின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் வேட்பு மனுவில் கணவரது வருமானத்தை தெரிவிக்கும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

    இந்நிலையில், கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    • கலைஞர் டி.வி.யில் கனிமொழி பங்குதாரர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
    • வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.

    சென்னை:

    சென்னை நடுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மன நிலையை வாக்குகளாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வும் உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு.

    தி.மு.க.வினர் மீது நான் சொத்துப் பட்டியல் வெளியிட்டதற்காக கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் தான் பங்குதாரர் இல்லை என்று குறிப்பிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததாகவும், அதன்பிறகு பங்குகளை விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதாவது அவர் பங்குதாரராக இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பங்குகளை விற்றிருந்தால் அந்த பணம் எங்கே போனது? ஒவ்வொருவரின் சொத்து மதிப்புதான் எனது குற்றச்சாட்டு.

    நிதிஅமைச்சர் பழனி வேல் தியாகராஜனின் ஆடியோ என்பது அவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். இந்த விஷயத்தில் அவர் குற்றவாளி இல்லை. என்ன நடக்கிறது என்பதைத்தான் தெரிவித்து இருக்கிறார். வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, எனக்கான பாதையை அமித்ஷா, நட்டா ஆகியோர் ஏற்கனவே வகுத்து தந்துவிட்டார்கள். இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்பது தான் எனது வேலை.

    மெட்ரோ ரெயில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. யிடம் நான் புகார் கொடுத்து உள்ளேன். ஜி ஸ்கொயர் சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நிறுவனம் பற்றி நான் புகார் அளிக்கவும் இல்லை. 6 நாட்கள் சோதனை நடந்ததில் இருந்து ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2010 கோடி சொத்து மதிப்பு என்று நான் தெரிவித்ததை அவர் இல்லை என்று மறுத்து உள்ளார். ஒருவேளை நமது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாச்சே. ரூ.2000 கோடி என்று குறைத்து சொல்லிவிட்டாரே என்று வருத்தப்படுகிறாரோ என்னவோ? வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.

    நான் சொத்து மதிப்புகளை வங்கி ஸ்டேட்மெண்டுடன் வெளியிட்டுவிட்டேன். தி.மு.க.வினர் குறைந்தபட்சம் ஒருமாத ஸ்டேட்மெண்டை வெளியிட்டுவிட்டு பேசட்டும் பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடியோ வெளியிட்ட அண்ணாமலை எனது கட்சிக்காரருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும்.
    • 48 மணி நேரத்தில் எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கடந்த 14-ந் தேதி, தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தெரிவித்ததாக கூறி அண்ணாமலைக்கு கனிமொழி சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    கனிமொழி சார்பாக வக்கீல் மனுராஜ் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவரான நீங்கள் ஏப்ரல் 14-ந் தேதி உங்கள் கட்சி தலைமையகத்தில் 'டி.எம்.கே. பைல்ஸ்' என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள். அதில் எனது கட்சிக்காரர் கனிமொழி எம்.பி. பெயரை குறிப்பிட்டு, 'அபிடவிட்'படியான சொத்து மதிப்பு ரூ.30.33 கோடி மற்றும் கலைஞர் டி.வி. ரூ.800 கோடி, மொத்த மதிப்பு ரூ.830.33 கோடி' என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது.

    இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல, அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது. கடந்த 10.2.2023 முதல் எனது கட்சிக்காரர் கலைஞர் டி.வி.யில் எந்த பங்கும் பெற்றிருக்காத நிலையில், எந்தவித அடிப்படை தகவல்களையும் சரிபார்க்காமல் எனது கட்சிக்காரரின் நற்பெயரை குலைப்பதை உள்நோக்கமாக கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்நிலையில் நாடு முழுவதும் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பிடும் வகையிலும், தி.மு.க.வின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது.

    இந்த வீடியோவால் எனது கட்சிக்காரரின் மதிப்புக்கு தனிப்பட்ட முறையிலும், பொதுவாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனை சட்டம் 499, 500 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றத்தை செய்தவர் ஆகிறீர்கள். இதனால் எனது கட்சிக்காரர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ வெளியிட்ட அண்ணாமலை எனது கட்சிக்காரருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும்.

    இந்த நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் அவதூறு வீடியோவை திரும்ப பெற்றுக்கொண்டு, அனைத்து சமூக தளங்களிலும் அதை அகற்றி, எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான எல்லா விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், தி.மு.க.வினரின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்.
    • அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க. மேடை இல்லை சகோதரி.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமொக்கா பகுதியில் தேர்தல் பிரசார மாநாடு நடந்தது.

    இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். மாநாடு தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.

    உடனே ஈசுவரப்பா அந்த பாடலை நிறுத்த சொல்லி முதலில் கன்னட தாய் பாடலை போடும்படி தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி.கனிமொழி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டார். அதில் 'தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களை தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களை பற்றி எப்படி கவலைப்படுவார்' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நமது தேசிய கொடியை ஏற்றியபின் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்பது தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

    'கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்' என்ற வரியையே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது.

    மேலும் அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க. மேடை இல்லை சகோதரி. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியைத்தான் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈசுவரப்பா சுட்டிக்காட்டினார்.

    தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், தி.மு.க.வினரின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    அத்துடன் அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி விட்டு மரியாதை செலுத்தாமல் சென்ற வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளார்.

    • பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் மாற்றியது.
    • நீலம், கிரே மற்றும் தங்க நிறத்தில் அடையாள குறிகளை டுவிட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது.

    திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் டுவிட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.

    பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் மாற்றியது. இதன்படி, நீலம், கிரே மற்றும் தங்க நிறத்தில் அடையாள குறி வழங்கி வருகிறது. கிரே நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில், கனிமொழி எம்.பி.யின் டுவிட்டர் கணக்கிற்கு, கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது. இதன்மூலம் கிரே டிக் பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகியுள்ளார்.

    • 4-ம் புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
    • வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழக மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் வகையிலும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை வாய்ப்பிற்காக பயிலும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா நடத்த உத்தரவிட்டு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இதன்மூலம் மாணவர்கள், இளைஞர்கள் ஒரே இடத்தில் அனைத்து வகையான புத்தகங்களையும் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதன்படி, தூத்துக்குடி-எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தின் 4-ம் புத்தகத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    அதனை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில் மேயர் ஜெகன்பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள், 10 அரசுதுறை அரங்குகள், பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் தனியாக 40 அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமையை, தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூர் ஆகியவற்றில் கிடைத்த முதுமக்கள் தாழி, மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது? என்பது குறித்து மாதிரி செயல்வடிவம் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

    புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மேயர் ஜெகன்பெரியசாமி கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராட்சத பலூன்களை பறக்கவிடும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பலூன்களை பறக்கவிட்டார்.
    • கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் வினித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 4-வது புத்தக கண்காட்சி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கில் நாளை நடக்கிறது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்க உள்ளார்.

    இதனையொட்டி இன்று ராட்சத பலூன்கள் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பலூன்களை பறக்கவிட்டார். இதில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் வினித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி தெளித்துக்கொண்டு இருக்கிறார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

    • அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவரிடம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கனிமொழி எம்.பி. கூறும்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக தி.மு.க.வினர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் என்றார்.

    • கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.
    • அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கேட்டு வருகிறார்.

    சென்னை:

    தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

    அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் அதாவது ஒரு வார காலத்துக்குள் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கேட்டு வருகிறார்.

    ×