search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • ஜேஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனையை படைத்தார்.
    • இதற்கு முந்தைய தேசிய சாதனையை காட்டிலும் 0.6 மீட்டர் இது அதிகம்.

    பெல்லாரி:

    2-வது இந்தியன் ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில் நீளம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் ஜேஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனையை படைத்தார். இதற்கு முந்தைய தேசிய சாதனையை காட்டிலும் 0.6 மீட்டர் இது அதிகம்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது மூன்றாவது முயற்சியில் அவர் இந்தச் சாதனையை படைத்திருந்தார். இதன்மூலம் எம்.ஸ்ரீசங்கர் வசம் இருந்த தேசிய சாதனையை அவர் தகர்த்தார்.

    இந்நிலையில் தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்தவரான ஜேஸ்வின் ஆல்ட்ரினுக்கு திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி டுவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    டுவிட்டரில் இது குறித்து கூறியதாவது:-

    தூத்துக்குடியைச் சேர்ந்த தடகள வீரர் @AldrinJeswin கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதல் பிரிவில் 8.42 மீ நீளம் தாண்டி, புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

    வீரர் ஜேஸ்வின் ஆல்ட்ரின் மேலும் பல சாதனைகளைப் படைத்து நாட்டிற்குப் பல பதக்கங்களை வென்று வர வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி.
    • வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 40 நாட்கள் 70 நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது. அயனாவரத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி. மு.க. மகளிர் அணி சார்பில் சுதா தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சர் பி. கே. சேகர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. இந்த வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    ஜாதி, மதம், இனம் அனைத்தும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற நம் இந்தியா, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயகம் பறிக்கப்பட்டு மக்களின் வெறுப்பு அரசியலாக ஒன்றிய அரசு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை மீட்டெடுக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான், வழக்கறிஞர் மதிவதனி, ஏ. வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காமதேனு மண்டபம், திருநகர் காலனி, முத்துமாரியம்மன் கோவில், பச்சியப்பன் வீடு, அருள்நெறி பள்ளி ஆகிய வழியாக வந்து கமலா நகர் பகுதியில் கனிமொழி பேசுகிறார்.
    • விநாயகர் கோவில் வீதி, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பேசுகிறார். பின்னர் காந்தி சிலை, அரசமர விநாயகர் கோவில் வழியாக சென்று அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பேசுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கனிமொழி எம்.பி., இன்று மாலை பிரசாரம் செய்கிறார். 7 இடங்களில் பேசுகிறார்.

    மாலை 4.10 மணிஅளவில் சம்பத் நகரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து பெரியவலசு, முனியப்பன் கோவில், 16 ரோடு ஆகிய பகுதி வழியாக வந்து நெறிக்கல் மேடு பகுதியில் பேசுகிறார். பின்னர் காமதேனு மண்டபம், திருநகர் காலனி, முத்துமாரியம்மன் கோவில், பச்சியப்பன் வீடு, அருள்நெறி பள்ளி ஆகிய வழியாக வந்து கமலா நகர் பகுதியில் பேசுகிறார்.

    விநாயகர் கோவில் வீதி, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பேசுகிறார். பின்னர் காந்தி சிலை, அரசமர விநாயகர் கோவில் வழியாக சென்று அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பேசுகிறார்.

    பின்னர் கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் பேசுகிறார். பின்னர் மண்டப வீதி, மரப்பாலம் வழியாக சென்று மாணிக்கம் தியேட்டர் வீதியில் பேசுகிறார்.

    பின்னர் பெரியார் நகர் வழியாக சென்று சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடருவது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
    • எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரிய இயற்கை கடல் பாசி எடுக்கும் மீனவ பெண்களுக்கு தனித்துவ அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க, கூட்டணி வேட்பாளரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

    மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கக்கூடிய ஊடகங்களை அச்சுறுத்தும் விதமாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி, அவர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடருவது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
    • எவரும், எங்கும், எந்த நேரத்திலும் பயன்படுத்துவதை இந்த செயலி உறுதிபடுத்துகிறது.

    புதுடெல்லி :

    தி.மு.க. எம்.பி. கனிமொழி மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியிடம், 'மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு அரசிடம் ஏதேனும் கொள்கை முடிவு உள்ளதா?, மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் சோதிக்கப்பட்ட அரசு செயலிகள் மற்றும் இணையதளங்களின் விவரங்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளை எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தார்.

    இந்த கேள்விகளுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி பதில் அளித்துள்ளார். அவருடைய பதிலில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு 19.4.2017 அன்று முதல் நடைமுறைக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை (2016) இயற்றியுள்ளது. இந்த சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதில் பார்வை மற்றும் பிற குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைப்புகளில் தடையில்லாத சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி பொது கட்டிடங்கள், பஸ் போக்குவரத்து, இணைய தளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நிலையில் பராமரிக்க வேண்டும். இந்த விதிகளின்படி அனைத்து அரசு இணைய தளங்களும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இயங்க வேண்டும் என்பதை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை கவனித்துகொள்கிறது.

    மேலும் இந்திய தரநிலைகள் பணியகம் தகவல், தொடர்பு தொழில் நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் மாற்றுத்திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக முறையே 24.12.2021 மற்றும் 4.5.2022 என இருமுறை அறிவிக்கைகளை வெளியிட்டு உள்ளது.

    மேலும், 2017-18-ம் ஆண்டில், உள்ளடக்க மேலாண்மை கட்டமைப்பின் கீழ், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் 95 இணையதளங்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அமைக்கப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 632 இணையதளங்களையும் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதாக மாற்றி உள்ளது. மேலும், 'சுகம்யா பாரத் ஆப்' என்ற 'க்ரவுட் சோர்சிங் மொபைல்' செயலியை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த செயலி பொது மைய கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் அணுகல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. எவரும், எங்கும், எந்த நேரத்திலும் பயன்படுத்துவதை இந்த செயலி உறுதிபடுத்துகிறது.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.

    • பிரதமர் மோடி தமிழ் மொழியின் உன்னதத்தைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார்.
    • பாராளுமன்றம் கூடும் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

    புதுடெல்லி

    ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது பாராளுமன்ற மக்களவையில் நேற்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் முன் மாதிரியாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அதில் தோற்றிருக்கிறீர்கள்.

    கடந்த 1967-ம் ஆண்டு எங்களது மூத்த முன்னோடி தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் மாநிலங்களவையில் பேசும்போது, 'கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிரான கருவிகளாக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறார்கள்' என்று பேசினார்.

    இப்போதும் கூட தமிழ்நாடு கவர்னர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுமார் 20 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் முக்கியமான சட்ட மசோதாவும் அதில் ஒன்று.

    தமிழ்நாடு மட்டும் இப்படி போராடிக்கொண்டிருக்கிறது என்றில்லை. மேற்கு வங்காளம், கேரளா, தெலுங்கானா, நாகாலாந்து என எங்கெல்லாம் பா.ஜ.க. அரசு இல்லையோ அங்கெல்லாம் மாநில கவர்னர்களோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கவர்னர்களிடம் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

    இந்த முறை பட்ஜெட்டில்கூட நீங்கள் திருவள்ளுவரை மறந்துவிட்டீர்கள், ஏனென்றால் இப்போது தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் எதுவும் இல்லை.

    பாராளுமன்றம் கூடும் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. பாராளுமன்றம் செயல்படுவது என்பது ஏதோ அடையாளபூர்வமாக மாறிக்கொண்டிருக்கிறது. (அப்போது அருகே இருந்த தயாநிதி மாறன் குறுக்கிட்டு அந்த நாட்களிலும் பிரதமர் அவைக்கு வருவதில்லை என்றார்.)

    பிரதமர் மோடி தமிழ் மொழியின் உன்னதத்தைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார். ஆனால், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு 198.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மையத்துக்கு 11.86 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்படுகிறது. இந்த பணம் நிர்வாக செலவுகளுக்கே போதாது.

    அப்புறம் எங்கே ஆய்வு நடத்துவது? நிகழ்ச்சிகள் நடத்துவது? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாநில மொழிகளின் நிலை என்ன?.

    தமிழ்நாட்டில் கீழடியில் நடந்துள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி கி.மு. 600-க்கும் முற்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றை வெளியிடுவதில் கூட இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. நிதி மந்திரி எங்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளத்திலேயே அருங்காட்சியகம் 3 ஆண்டுகளில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்னும் அது நடக்கவில்லை.

    நீங்கள் மருத்துவ கல்லூரிகள் தொடங்கி இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 4 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் எந்த வேலையும் நடக்கவில்லை.

    இப்படி நீங்கள் தொடர்ந்து எங்களை அவமதித்தால், இந்த நாட்டு மக்கள் உங்களோடு இணைந்து நடக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
    • பிரச்சாரத்திற்காக மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளதால் அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருமகன் ஈவெரா பொதுமக்களிடம், தொகுதி மக்களிடமும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அவர் பொதுமக்களிடம் பழகும் விதம். அணுகும் விதம் அமைதியாக இருக்கும்.

    குறுகிய காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் மேற்கொண்டார். நாங்கள் கடந்த 12 நாட்களாக வாக்கு சேகரிக்கும் போது பெண்கள் மிகவும் துயரத்துடன் திருமகன் மறைவை கூறி வேதனைப்பட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று கூறி வருகின்றனர்.

    திருமகன் ஈவெரா நடவடிக்கையை முதலமைச்சர் சட்ட சபையில் நன்கு கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் உடனடியாக அன்று இரவு ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மறுநாள் எனக்கு போன் செய்து திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    அப்போது திருமகன் ஈவெரா வசித்த கச்சேரி வீதியை திருமகன் ஈவெரா வீதி என்று பெயர் மாற்றினார். நாங்கள் நிச்சயமாக இடைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    நாளை தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர்கள் கே.என். நேரு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பொங்கல் விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு. பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
    • மகளிருக்கு புத்தாடைகளை கனிமொழி வழங்குகிறார்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 119 வட்டம் தி.மு.க. சார்பாக பொங்கல் விழா ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நாளை (26-ந் தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.என்.துரை தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் சிற்றரசு, திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு. பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். மகளிருக்கு புத்தாடைகளை கனிமொழி வழங்குகிறார்.

    தயாநிதிமாறன் எம்.பி., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மகளிர் தொண்டரணி தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் விக்டர், வி.எஸ்.கலை, சங்கீதா, அகஸ்டின் பாபு, ஐ.கென்னடி, பகுதி செயலாளர்கள் ராமலிங்கம், எஸ்.மதன் மோகன். மா.பா.அன்பு துரை, பரமசிவம், வினோத் வேலாயுதம் பொன்னரசு, டாக்டர் சுபேர்கான், வி.என்.ராஜன், கமலா செழியன், கலைச்செல்வன், ரவிராஜ்குமார், வக்கீல் பா.பிரகாஷ் விஜயராஜ், இளம்பரிதி, ஆனந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் வட்ட செயலாளர்கள் கே.பிரபு, மோகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வசந்த குமார் ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.

    • 2011-ம் ஆண்டு வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • சென்னை சங்கமம் நிகழ்ச்சி முக்கியமான இடங்களில் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இந்த விழாவின்போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    2011-ம் ஆண்டு வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் போது ஒருங்கிணைப்பாளரும், நிறுவனருமான கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி முக்கியமான இடங்களில் நடத்தப்படுகிறது. அண்ணாநகர் டவர் பூங்கா, செம்மொழி பூங்கா, நடேசன் பூங்கா, பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 16 இடங்களில் நடக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை நான் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்காக பணியாற்றி வருகிறார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மயிலாட்டம், பறை, சிலம்பாட்டம், குயிலாட்டம், தெருக்கூத்து, கானா உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் புதிய நாட்டுப்புற கலை வடிவங்களையும், குழுக்களையும் அடையாளம் கண்டுள்ளோம். பன்முகத் தன்மையை வெளிக் கொண்டு வரவும், பாரம்பரிய கலை, நாட்டுப்புற கலை, கானா மற்றும் இசைக்குழுக்கள் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில் இதன் கருத்துரு உள்ளது.

    கடந்த முறை அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சியை போல் அல்லாமல் இந்த முறை அரசே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

    ஒவ்வொரு முறையும் நிகழ்வுகள் நடைபெறும் போது நாங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டோம். மேலும் பல்வேறு உணவுகள் மற்றும் கலாச்சார உணவு வகைகளுடன் கூடிய உணவுத் திருவிழாவை சேர்த்துள்ளோம். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாவட்டங்களில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை நகரத்தில் வெளி கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டின் கலாச்சார தனித்துவம் மற்றும் மொழியின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு உலகளாவிய அளவில் இருக்கும்.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு கூடுதல் இடங்களில் நடத்தப்படும். சங்கமம் போன்ற நிகழ்வுகளை மற்ற மாநிலங்களும் நடத்த விரும்பினால் அவர்களுடன் ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னரை தூண்டி விட்டு செயல்படுபவர்கள் இது ஜனநாயக நாடு என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • கவர்னரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல்.

    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சமத்துவ பொங்கல்விழா தி.மு.க.மகளிர் அணி சார்பில் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்ட மன்றத்தில் இருந்தோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் இங்கு கவர்னர் வெளிநடப்பு செய்திருக்கிறார்.

    அவர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்பதையே அவரின் வெளிநடப்பு உணர்த்துகிறது. கவர்னரை தூண்டி விட்டு செயல்படுபவர்கள் இது ஜனநாயக நாடு என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். கவர்னரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல். மத்திய அரசு எழுதி கொடுக்கும் உரையை தான் குடியரசு தலைவர் படிக்கிறார்.

    குடியரசுதலைவர் அதை படிக்காமல் தான் நினைத்ததை படிப்பேன் என்றால் மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா? பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவது ஜனநாயக விரோத செயல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தா.இளைய அருணா, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இலக்கிய திருவிழாவில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்தனர்.
    • இலக்கிய திருவிழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி காலையில் தமிழ் சமூகத்தில் பெண்ணியம் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகிறார்.

    சென்னை:

    அறிவு சுரங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சென்னை இலக்கிய திருவிழாவால் அங்கு பிரபல எழுத்தாளர்கள் சங்கமித்துள்ளனர்.

    இதனால் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ் மணம் கமழ்கிறது. பல்வேறு தலைப்புகளில் பிரபலங்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த இந்த இலக்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களை வெளியிட்டு பேசியபோது இன்றைய இளம் தலைமுறையினரிடம் தமிழ் உணர்வை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இலக்கியம்தான் மனிதனை மேம்படுத்தும் என்றும், சிறு வயதிலேயே மாணவர்களிடம் தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க இத்தகைய நிகழ்ச்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதற்கேற்ப இலக்கிய திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்று பேசி வருகிறார்கள். முதல் நாளான நேற்று திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் என்ற தலைப்பில் ஜெயரஞ்சனும், திராவிடமும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் ராஜனும், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை தொடர்பாக காமராசனும் பேசினார்கள்.

    மக்களுக்கான சினிமா ஒரு புரிதல் என்ற தலைப்பில் டைரக்டர் வெற்றி மாறனும், திரைக்கு பின்னால் இலக்கியம் என்கிற தலைப்பில் டைரக்டர் மிஸ்கினும் பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறினார்கள். காலநிலை மாற்றமும், தமிழ்நாடும் பற்றி சுந்தர்ராஜன் பேசினார்.

    இரண்டாம் நாளான இன்று பாலின சமத்துவம் பற்றி நர்த்தகி நடராஜ், 'நவீன கோடுகள்' தலைப்பில் விஸ்வம், "வரலாறு ஏன் படிக்க வேண்டும்" என வெண்ணிலா, "வட சென்னை மண்ணும், மனிதர்களும்" பற்றி பாக்கியம் சங்கர், இலக்கியமும், சினிமாவும் பற்றி கவிஞர்கள் யுகபாரதி, கபிலன் ஆகியோரும் பல்வேறு கருத்துக்களை அள்ளி தெளித்தனர்.

    திரைப்படமும்... இசையும் பற்றி ஷாஜி, தமிழ் திரையும் தமிழக வரலாறும் பற்றி கடற்கரய், பாரதி காலத்து சென்னை என்கிற தலைப்பில் மணிகண்டன், கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் என்ற தலைப்பில் ராஜேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர். இலக்கிய திருவிழாவின் நிறைவு நாளான நாளை (8-ந்தேதி) காலையில் தமிழ் சமூகத்தில் பெண்ணியம் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகிறார். அவருடன் கவிதா முரளிதரன் கலந்துரையாடுகிறார்.

    சமூகம் பழகு என்ற தலைப்பில் டைரக்டர் கரு.பழனியப்பன் உரையாற்றுகிறார். நாளை மாணவர்கள் கலை திருவிழாவும் நடைபெறுகிறது. கதை சொல்லி சதீஷ், "கோமாளியின் ஆஹா கதைகள்" பற்றி கதை சொல்கிறார்.

    ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு கலைகள் தொடர்பாக தொடக்க நாளான நேற்று தண்டரை உமா-ராஜேஸ்வரி சகோதரிகளின் மக்களிசை பாடல்களை பாடி மகிழ்வித்தனர். இன்று மாலையில் ராப் இசை மரப்பாச்சி குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் சென்னை கலைகுழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மாலையில் கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, வசந்தி, உடுமலை துரையரசன் ஆகியோரின் மக்கள் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.

    கலை இலக்கிய திருவிழா அண்ணா நூலக வளாகத்தில் 3 அரங்குகளில் நடைபெறுகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்தனர்.

    நிகழ்ச்சியில் சங்க கவுரவ தலைவர் ஆர்.டி.பிரபு, மாநில அமைப்பாளர் சி.சிவகுமார், சங்க ஆலோசகர்கள் ஆர்.மகாதேவன், எல்.சுப்பிரமணி, துணை தலைவர் எம்.செந்தாமரை, பொருளாளர் ஆர்.ஜனனிரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.வெள்ளிக் கண்ணன். செயலாளர் எம்.அன்பழகன், எஸ்.ரேணுகாதேவி, பொருளாளர், செயலாளர். பி.பாஸ்கர், அலுவலக செயலாளர் எம்.ரூபன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
    • துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது "தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள்" நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

    அதன்படி தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி-விவசாயி அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மருத்துவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.

    துணை பொதுச்செயலாளர் பொன்முடி-பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக செயல்படுவார்.

    துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.

    துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.

    துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி-சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×