search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க அழைப்பு.
    • பிரதமர் மோடியுடன், திமுக எம்.பி.க்கள், டி.ஆர். பாலு, கனிமொழி சந்திப்பு

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பிரதமர் மோடியிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கடந்த 15ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

    அப்போது முதலமைச்சர் சென்னையில் 28.7.2022 அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்க தான் நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.  


    அதனைத் தொடர்ந்து, இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆகியோர் சந்தித்து, 28.7.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான "தம்பி" சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை,பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக நெய்தல் கலை விழா நேற்று மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சி, வருகிற 10-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்க்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய உணவு குறித்த ஸ்டால்கள் திறக்கப்பட்டுஇருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதன் முன்பாக முன்பாக ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் நின்று நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இதன் மூலம் நேற்றைய நிகழ்ச்சியில் செல்பி ஸ்பாட்டாக அப்பகுதி திகழ்ந்தது.நெய்தல் விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.யுடன் அமர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையர் சாருஸ்ரீ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரிடையாக சென்று முதல்-அமைச்சர் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தப்பாத்தியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ. சங்கர நாராயணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ. 43 லட்சத்து 89 ஆயிரத்து 628 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் இருக்கும் மக்களுக்காக நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

     

    முக ஸ்டாலின்

    வீடுகட்டி தருவது, கடன் உதவி வழங்குவது, அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் முகாம்களில் இருப்பவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்று பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 முகாமில் இருப்பவர்களுக்கு ரூ. 56 லட்சம் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிவாரண தொகை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளது, அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் கோரிக்கைகளை முன் வைத்து பேசுவோம்.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரிடையாக சென்று முதல்-அமைச்சர் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... பாஜக செய்த கொடுமையை கண்டு விவசாயிகள் பயப்படவில்லை - மம்தா கருத்து

    நான் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்று தூத்துக்குடி சிவன் கோவில் அருகே நடந்த பிரசாரத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளார். #tamilisai #bjp

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிவன் கோவில் அருகே தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி தூய்மையாக இருக்க வேண்டும், தூத்துக்குடி வளர்ச்சி அடைய வேண்டும், வேலை வாய்ப்பு பெருக வேண்டும், இன்றைய வரைபடத்தில் வளர்ச்சி மிகுந்த நாடாளுமன்றம் என்ற பெயரை தூத்துக்குடிபெற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு நாம் போட்டியிடுகிறோம். நான் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்து இருப்பது நிச்சயமாக தென்பகுதி இன்னும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத் தான்.

    தூத்துக்குடியை பொறுத்த வரை யார் யாரெல்லாம் நம்மை எதிர்த்து நிற்கிறார்கள் என்பது தெரியும். ஊழல் கறை படியாத ஒரு தூத்துக்குடியை உருவாக்க வேண்டும். ஊழல் கறைபடிந்தவர்களை தூத்துக்குடி எந்தவிதத்திலும் ஒப்புக்கொள்ளாது. நேர்மையான வேட்பாளரைத்தான் ஒப்புக்கொள்ளும். இந்த மண்ணின் மகள் நான். எதிர் அணியில் உள்ளவர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்தான். என்னை இறக்குமதி செய்யப்பட்டவர் என்று அவர்கள் சொன்னால் நிச்சயம் அது பொய்யாகத்தான் இருக்கும்.

    இந்த மண்ணின் சொந்தக்காரி நான். உங்களில் ஒருத்தி நான். எவ்வளவோ சமூக வலைதளங்களில் என்னை கேலியும், கிண்டலும் செய்து என் நிறம் கருப்பு என்று குறிப்பிடுகிறார்கள். இந்த செம்மண் காடு, பனங்காட்டின் நிறம் கருப்பு. ஆகையால் இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது.

    மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டு மக்களிடம் பேசும் போது ஒரு தலைவர் இருந்தால் என்னை பாராட்டி இருப்பார். அது குஜராத்தை சேர்ந்த தலைவர் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜர் என்று கூறினார். ஆனால் அந்த காமராஜரை இழிவுபடுத்தியவர்கள் இன்று ஓட்டுக்காக உங்கள் முன்னால் நிற்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

    நான் எதிரணிக்கு சொல்லிக் கொள்கிறேன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற முடியும் என்றால் பா.ஜனதா, அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும். காங்கிரஸ், தி.மு.க.வால் முடியாது. ரத்தக்கறை படிந்த கரங்களோடு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது இதே காங்கிரஸ், தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. இவர்கள் தடுத்து நிறுத்தவில்லை. மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட்டால் நாட்டு மக்களுக்கு நல்லது கிடைக்கும்.

    நான் இன்று கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். எனது அரசியல் வாழ்க்கை கரடு முரடானது. அந்த பாதையில் நடந்து உங்களிடம் வந்து உள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் பலத்தோடு தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #bjp

    மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது. #Kanimozhi
    சென்னை:

    2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனி மொழிக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து லோக் மால்ட் செய்தி நிறுவன தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் தர்தா கூறியதாவது:-

    லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ 2 வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாநிலங்கள் அவையின் 2018-ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    வருகிற டிசம்பர் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு டெல்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்குகிறார்.

    நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த 10 ஆண்டுகளாக மகத்தான வகையில் பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலுசேர்த்ததற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    அவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்ற குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட இந்த குழுவில், டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் சவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இநத்க்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
    தமிழக பாஜக சார்பில் நாளை நடக்க உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவேந்தல் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கனிமொழி எம்.பி, திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். #Vajpayee #BJP
    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கத்தில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. தமிழக பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் கோ.க மணி, விசிக தலைவர் தொல்.திருமாவளனன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமாகா துணைத்தலைவர் ஞானதேசிகன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முஸ்லிம் லிக் கட்சி எம்.எல்.ஏ அபு பக்கர், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சன்முகம், இந்திய கம்யூ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மா. கம்யூ. மத்திய குழு உறுப்பினர் சம்பத், லோக் ஜனசக்தி தலைவர் வித்யாதரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேச உள்ளனர். 
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைடுக்கு எதிராக 100 நாட்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் முதல் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இது போன்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.#SterliteProtest #kanimozhi
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெட்டாற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கமுகக்குடி - அபிவிருத்தீஸ்வரம் இணைப்பு பாலத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மூலம் இந்த பாலம் திறக்கப்படாதது மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தமிழக அரசுடன் நடைபெற்ற 7 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் இந்த பாலம் தற்போது திறக்கப்பட்டது வெற்றி தான்.

    மேலும் தமிழகத்திற்கு பிரதமர் மோடி முதல்வராக கிடைத்திருப்பது பெருமை. மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பிளவு படுத்தப்பட்டு போராட்டங்களுக்கு தூண்டி விடும் அரசாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் தாங்கள் இந்தியர் என்ற உணர்வில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தலித் மக்கள் அதிகமான தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.

    இது மட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியும், தொழில்கள் நசுக்கப்பட்டும் விட்டது. தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வரோ அல்லது அமைச்சர்களோ ஏன் பார்க்க செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு 144 தடை உத்தரவு உள்ளதால் செல்லவில்லை என்று முதல்வர் கூறுகிறார்.



    ஒருவர் எம்.எல்.ஏ. வாகவோ அல்லது எம்.பி.யாகவோ பதவியேற்கும் போது அவர்களின் உரிமைகள் என்ன என்பது குறித்து பயிற்சி அளிப்பார்கள். எனவே அந்த பயிற்சிகளுக்கு முதல்வர் செல்லவில்லை என்பதை தான் காட்டுகிறது. மேலும் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என்றும் கூறுகின்றனர்.நாங்களும் அதை தான் கூறுகின்றோம். தமிழகத்தில் சமூக விரோதிகளாக உள்ளவர்கள் ஆட்சி நடத்துவதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்க கூட தமிழக அரசு முன்வரவில்லை.

    பொதுமக்கள் தொடர்ந்து 100 நாட்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அல்லது முதல் அமைச்சரோ பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இது போன்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.#SterliteProtest #kanimozhi
    ×