search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96933"

    சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #SUZUKIBurgman



    சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் சுசுகி பர்க்மேன் ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பர்க்மேன் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பாடி-மவுண்ட் விண்ட்ஸ்கிரீன், மல்டி-ஃபன்க்ஷன் கீ ஸ்லாட் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சுசுகி அக்செஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 124.3 சிசி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.5 பி.ஹெச்.பி பவர் மற்றும் 10.2 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. 

    சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரில் அதிக இட வசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், டியூப்லெஸ் டையர் மற்றும் எல்.இ.டி. டெயில்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 



    சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலின் முன்பக்கம் நிசின் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டான்டர்டு வேரின்ட் காம்பி பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது. இத்துடன் முன்புறம் மற்றும் பின்பக்கம் முறையே 12 இன்ச் மற்றும் 10 இனஅச் 5-ஸ்போக் அலாய் வீல்கள் கொண்டுள்ளன.

    சஸ்பென்ஷன் யூனிட்-ஐ பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் ஹைட்ராலிக் சிங்கிள் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடல்: மெட்டாலிக் மேட் ஃபேப்ரியான், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் பியல் மிரேக் வைட் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்படும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் விலை ரூ.68,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #SuzukiIndia #SUZUKIBurgman
    யமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA

     

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் ஒருவழியாக வெளியிடப்பட்டது.

    ஏற்கனவே ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்திருந்தது. அதன்படி புதிய ஸ்கூட்டரில் புதிய ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் தங்க நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    யமஹா வெளியிட்டிருக்கும் புதிய டீசர் வீடியோவில் ஸ்கூட்டர் பார்க்க ரே ZR போன்றே காட்சியளிக்கிறது, எனினும் கூடுதலாக வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்ட்ரீட் ரேலி எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய டீக்கல்கள், கருப்பு நிற அலாய் வீல்கள் கொண்டிருக்கின்றன.



    யமஹா சிக்னஸ் ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் மாடல் யமஹாவின் இரண்டு சர்வதேச மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் இறக்கை போன்ற ஃபேரிங் வடிவமைப்பு யமஹா MT-09 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே வின்ட்ஸ்கிரீன் போன்றும் இயங்குகிறது.

    யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலில் 113சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.1 பி.ஹெச்.பி. பவர், 8.1 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 170 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், சீட் கீழ் 21 லிட்டர் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலின் விலை ரூ.57,898 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ரேலி ரெட் மற்றும் ரேசிங் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி விற்பனை இம்மாத இறுதி வாரத்தில் இந்தியாவின் அனைத்து யமஹா விற்பனையகங்களிலும் துவங்குகிறது. #YAMAHA #Cygnus
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா ஆக்டிவா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது.

    இந்தியாவில் 2013-ம் ஆண்டு அறிமுகமான டி.வி.எஸ். ஜூப்பிட்டர் 25 லட்சம் யூனிட் விற்பனையை கடந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் இந்க மைல்கல் எட்டியிருக்கும் ஜூப்பிட்டர் விற்பனையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

    அந்த வகையில் கடந்த 30 மாதங்களில் அதிவேகமாக பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையான மாடலாக ஜூப்பிட்டர் இருக்கிறது என டி.வி.எஸ். மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றது.



    இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்கூட்டர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்து இருக்கின்றது. நகர வாசிகள் பலரும் கியர் இல்லாத இருசக்கர வாகனங்களை தங்களது போக்குவரத்துக்கு தேர்வு செய்கின்றனர். இந்த தேவை நகரங்கள் மட்டுமின்றி ஊரக பகுதிகள் மற்றும் சிறிய நகரங்களிலும் அதிகரித்து வருகின்றது.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகவேக விற்பனையாகி வரும் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் விற்பனையில் இன்னமும் ஹோன்டா ஆக்டிவா மாடலுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறது. 2017-18 நிதியாண்டில் மட்டும் முப்பது லட்சம் ஹோன்டா ஆக்டிவா யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது இந்திய ஸ்கூட்டர் சந்தையில் 47 சதவிகிதம் ஆகும். 

    இந்திய ஸ்கூட்டர் சந்தையில் மொத்தம் 67.19 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 100 முதல் 110 சிசி பிரிவு வாகனங்கள் அதிகளவு விற்பனையாகி இருக்கும் நிலையில், 125சிசி பிரிவு வாகன விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது.
    சத்தியமங்கலம் அருகே சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்ட தம்பதி, ‘குஞ்சுகள் பறந்துசெல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் காத்திருப்போம்’ என்றனர்.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35), லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சவீதா (32). ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவிட்டு தற்போது வீட்டை கவனித்து வருகிறார். இவர்களுக்கு ஓம்ஸ்ரீமன் (7) என்ற ஒரு மகன் உள்ளான். சவீதா ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி ஸ்கூட்டரை வீட்டுக்குள் நிறுத்திவிட்டு மகேந்திரன் குடும்பத்துடன் காரில் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    உறவினர் வீட்டில் இருந்து 29-ந் தேதி வீட்டுக்கு திரும்பினார்கள். காரில் இருந்து இறங்கியதும் சவீதா ஸ்கூட்டரை எடுக்க சென்றார். அப்போது வண்டியின் முன்பகுதியில் பொருட்கள் வைக்கும் பொந்துபோன்ற இடத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. உடனே தன்னுடைய கணவரையும், மகனையும் அழைத்து அதை காண்பித்தார். மகிழ்ச்சி அடைந்த 3 பேரும் கூட்டை கலைக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ஸ்கூட்டரை அசைக்காமல் அதே இடத்தில் விட்டுவிட்டார்கள்.

    இதற்கிடையே 2 நாட்கள் கழித்து சவீதா கூட்டை பார்த்தபோது, குருவி எங்கோ இரைதேட சென்றிருந்தது. ஆனால் கூட்டுக்குள் 3 முட்டைகள் இருந்தன. இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த சவீதா ஸ்கூட்டரை சிறிது கூட அசைக்காமல் பார்த்துக்கொண்டார். நாள்தோறும் குருவி வருவதும், கூட்டில் முட்டையை அடை காப்பதுமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகான 3 குஞ்சுகளை தாய் குருவி பொரித்தது.

    தாய் குருவியையும், குஞ்சு களையும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்த சவீதா குடும்பத்தார். ‘குஞ்சுகள் பெரியதாகி தாய் குருவி அவைகளை அழைத்துக்கொண்டு பறந்து செல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவோம்’ என்றார்கள்.

    இதற்கிடையே தாய் குருவி இரையுடன் வந்து, தன்னுடைய அலகில் இருந்து குஞ்சுகளின் வாயில் ஊட்டுகிறது. அப்போது மற்றொரு குருவியும் உடன் வருகிறது. அது தந்தை குருவியாக இருக்கலாம். இந்த காட்சிகளை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து செல்கிறார்கள். 
    யமஹா ரே ZR ஸ்போர்ட் ஸ்கூட்டர் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்கூட்டர் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி என அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #YAMAHA



    யமஹா ரே ZR ஸ்போர்ட் 110சிசி ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய ஸ்கூட்டரின் டீசரை யமஹா வெளியிட்டிருக்கிறது. இதில் புதிய வேரியன்ட் யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி என அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்திருந்தது. அதன்படி புதிய ஸ்கூட்டரில் புதிய ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் தங்க நிற அலாய் வீல்கள் கொண்டிருக்கின்றன. 

    யமஹா வெளியிட்டிருக்கும் புதிய டீசர் வீடியோவில் ஸ்கூட்டர் பார்க்க ரே ZR போன்றே காட்சியளிக்கிறது, எனினும் கூடுதலாக வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஸ்ட்ரீட் ரேலி எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய டீக்கல்கள், கருப்பு நிற அலாய் வீல்கள் கொண்டிருக்கின்றன.



    ஒட்டுமொத்தமாக யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேல்லி பார்க்க ஸ்டான்டர்டு ரே ZR மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது.

    யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலில் 113சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த இன்ஜின் 7.1 பி.ஹெச்.பி. பவர், 8.1 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் கொணடிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் புதிய யமஹா ஸ்கூட்டரின் முன்புறம் 170மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் சிங்கிள் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. #YAMAHA #scooter

    யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி டீசர் வீடியோவை கீழே காணலாம்..,

    சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அதன் விலை வெளியாகியுள்ளது.



    சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவில் ஜூலை 19-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் வெளியீட்டுக்கு முன் சுசுகி பர்க்மேன் விலை வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுசுகி பர்க்மேன் ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பர்க்மேன் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பாடி-மவுண்ட் விண்ட்ஸ்கிரீன், மல்டி-ஃபன்க்ஷன் கீ ஸ்லாட் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சுசுகி அக்செஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 சிசி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.6 பி.ஹெச்.பி பவர் @6500 ஆர்.பி.எம். மற்றும் 10.2 என்.எம். டார்கியூ @5000 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. 



    சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரில் அதிக இட வசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், டியூப்லெஸ் டையர் மற்றும் எல்.இ.டி. டெயில்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு நிறங்களில் அசத்தலாக வெளியாக இருக்கும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடல் இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா 125, டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோன்டா கிரேசியா மற்றும் புத்தம் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் விலை ரூ.69,671 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருக்கிறது. முன்னதாக பர்க்மேன் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் ஜூன் மாதத்தில் துவங்கப்பட்டது.
    இத்தாலி நாட்டு இருசக்கர வாகன நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் எஸ்.ஆர். 125 மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.65,310 (எக்ஸ்-ஷோரூம், பூனே) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 இந்தியாவில் இந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்கூட்டர் ஜனவரி 2019 வாக்கில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அப்ரிலியா நிறுவனம் சிபிஎஸ் (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) வேரியன்ட்-ஐ மட்டுமே வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக இந்தியாவில் சிபிஎஸ் இல்லாத வேரியன்ட்-ஐ அறிமுகம் செய்து அதன்பின் ஏப்ரல் 2019 வாக்கில் சிபிஎஸ் மாடலை அறிமுகம் செய்ய அப்ரிலியா திட்டமிட்டு இருந்தது. ஏப்ரல் 2019-க்கு பின் வெளியாகும் 125சிசி வாகனங்களில் சிபிஎஸ் வழங்கப்பட வேண்டும்.



    அப்ரிலியா புதிய விதிமுறை அமலாவதற்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலை வெளியிட இருக்கிறது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் புதிய இருசக்கர வாகனத்தின் விலை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டமொத்தமாக ஸ்டாம் 125 வடிவமைப்பு பார்க்க எஸ்.ஆர். 125 போன்றே காட்சியளிக்கிறது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் 124சிசி, 3-வால்வ், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 9.46 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்போர்ட் ஸ்கூட்டரில் 6.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஆர். 125 மாடலில் 7-லிட்டர் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலின் முன்பக்கம் 30 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் போர்க்கள், பின்புறம் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் பல்வேறு கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா 125 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    2018 ஹோன்டா ஆக்டிவா 125 இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் ஆக்டிவா மாடலில் இம்முறை எல்இடி ஹெட்லைட் மற்றும் மேலும் சில புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் ஆக்டிவா 125 மாடலின் எல்இடி ஹெட்லைட் பார்க்க ஆக்டிவா 5ஜி மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று காட்சியளிக்கிறது. மற்றபடி டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இகோ மோட் மற்றும் சர்வீஸ் டியூ இன்டிகேட்டர், சீட்-ஐ திறக்கும் ஸ்விட்ச் உள்பட நான்கு வசதிகள் கொண்ட லாக் வழங்கப்பட்டு இறுக்கிறது.

    காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை ஆக்டிவா 125 டாப்-என்ட் மாடலில் க்ரோம் மஃப்ளர் கவர், கிரே அலாய் வீல்கள் மிட் மற்றும் டாப் என்ட் மாடல்களில் வழங்கப்படுகிறது. மேட் கிரஸ்ட் மெட்டாலிக் மற்றும் மேட் செலின் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் புதிய ஆக்டிவா 125 மாடலில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் விரும்புவோர் தேர்வு செய்யும் அம்சமாக வழங்கப்படுகிறது.



    புதிய ஹோன்டா ஆக்டிவா 125 மாடலில் 124.9சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.52 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.54 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மாற்றியமைக்கக்கூடிய 3-ஸ்டெப் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் பாடி பேனல்களை கொண்டிருக்கும் ஆக்டிவா 125 மாடலின் பேஸ் வேரியன்ட் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் இரண்டு சக்கரங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் முன்பக்கம் 190 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மூன்று வேரியன்ட்களிலும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் பொதுவான அம்சமாக வழங்கப்படுகிறது.

    2018 ஹோன்டா ஆக்டிவா 125 மாடலின் டிரம் பிரேக் வேரியன்ட் விலை ரூ.59,621, ஆக்டிவா 125 டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல் மாடல் விலை ரூ.61,558 என்றும் ஆக்டிவா 125 டிஸ்க் பிரேக் விலை ரூ.64,007 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ, விரைவில் அதிவேக இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஹீரோ வெளியிட இருக்கும் புதிய ஸ்கூட்டர் அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட ஃபியூயல் வாகனங்களை பலரும் தேர்வு செய்ய அதன் செயல்திறன் முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது பலரும் இவற்றை வாங்க வேண்டாம் என்ற முடிவையே எடுக்கின்றனர். புதிய ஹீரோ எலெக்ட்ரிஸ் ஸ்கூட்டர் AXHLE-20 என்ற குறியீட்டு பெயர் கொண்டு தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிவேக சீரிஸ் (High Speed series) ரக பிரிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் அதிவேக பிரிவில் நிக்ஸ், ஃபோட்டான் மற்றும் ஃபோட்டான் 72v என மூன்று மாடல்கள் உள்ளன. அந்த வகையில் AXHLE-20 மாடல் விலை உயர்ந்த ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய AXHLE-20 ஸ்கூட்டரில் 4kW மோட்டார் (8 பிஹெச்பி) வழங்கப்படும் என்றும் இது மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய AXHLE-20 ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. 

    ஹீரோ இ-ஸ்கூட்டர் மாடலில் ப்ளூடூத் மொபைல் கனெக்டிவிட்டி வசதியும், இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் ஸ்மார்ட்போன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    யமஹா நிறுவனத்தின் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இதே மாடல் யமஹா விற்பனையகம் ஒன்றில் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




    இந்தியாவில் யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் சோதனை செய்யப்படுகிறது. இம்முறை இந்த ஸ்கூட்டர் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்கூட்டர் ஜனவரி மாதத்தில் விற்பனையகம் ஒன்றில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    யமஹா ஏராக்ஸ் 155 இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியாகியிருக்கும் தகவல்கள் ஸ்கூட்டரின் வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்துகிறது. ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக இருக்கிறது. 

    5.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ட்வின் எல்இடி லேம்ப்கள், மொபைல் சார்ஜர், கீலெஸ் இக்னிஷன் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் ஏராக்ஸ் ஸ்கூட்டருக்கு பிரீமியம் அந்தஸ்தை சேர்க்கின்றன. யமஹா R15 வெர்ஷன் 3 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் புதிய ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்கூட்டரின் செயல்திறன் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரின் இன்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 13.8 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் விற்பனையாகும் அப்ரிலியா எஸ்ஆர் 150 மற்றும் வெஸ்பா 150 ஸ்கூட்டர்கள் இத்தகைய செயல்திறன் வழங்குவதில்லை என்பது யமஹா ஏராக்ஸ் ஸ்கூட்டருக்கு சாதகனமான அம்சமாக இருக்கிறது..

    இந்தியாவில் 150சிசி ஸ்கூட்டர்களின் விற்பனை குறைவாக இருக்கும் நிலையில், யமஹா ஏராக்ஸ் 155 வெளியீட்டு பின் இந்த நிலையை மாற்ற யமஹா திட்டமிட்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கும் கியர்-இல்லா ஸ்கூட்டர்களின் விற்பனை இந்தியாவில் அமோகமாக நடைபெறுகிறது. 

    ஏராக்ஸ் 155 கொண்டிருக்கும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இதன் இந்திய விலை குறைந்தபட்தம் ஒரு லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். எனினும் இதன் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சுசுகி மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 முன்பதிவு செய்ய ரூ.5000 கட்டணமாக செலுத்த வேண்டும். முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட பர்க்மேன் 125 ஜூலை மாத வாக்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பாடி-மவுண்ட் விண்ட்ஸ்கிரீன், மல்டி-ஃபன்க்ஷன் கீ ஸ்லாட் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சுசுகி அக்செஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 சிசி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.6 பி.ஹெச்.பி பவர் @6500 ஆர்.பி.எம். மற்றும் 10.2 என்.எம். டார்கியூ @5000 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. 



    சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரில் அதிக இட வசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், டியூப்லெஸ் டையர் மற்றும் எல்.இ.டி. டெயில்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு நிறங்களில் அசத்தலாக வெளியாக இருக்கும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடல் இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா 125, டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோன்டா கிரேசியா மற்றும் புத்தம் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா தனது அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் 125 சிசி அக்சஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (Combined Braking System -CBS) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டாலிக் சோனிக் சில்வர் எனும் புதிய நிறத்தில் சுசுகி 125 அக்சஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறத்துக்கு ஏற்ப லெதர் சீட்களும் புதிய நிறம் பெற்றிருக்கிறது.

    புதிய நிறம் மட்டுமின்றி ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் சில அப்டேட்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் கருப்பு நிற அலாய் வீல், கிராப் ரெயில்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் மிரர் மற்றும் ஸ்பெஷல் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    இதன் சிபிஎஸ் யூனிட் மற்ற போட்டி வாகனங்களில் உள்ளதை போன்றே இயங்குகிறது. இரண்டு பிரேக்களிலும் சிறப்பாக வாகனத்தை நிறுத்த சிபிஎஸ் யூனிட் வேலை செய்கிறது. இத்துடன் வாகனம் கட்டுப்பாடு இழக்கச் செய்யாமல் இருக்க கன்ட்ரோல்டு பிரேக்கிங் சிஸ்டம் உதவும்.



    சுசுகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் 124சிசி, சிங்கிள் சிலின்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.5 பிஹெச்பி மற்றும் 10.2 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டிருக்கும் புதிய ஸ்கூட்டரில் பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் செமி-டிஜிட்டல் கன்சோல், சென்ட்ரல் லாக் சிஸ்டம், அலாய் வீல்கள், ஆப்ஷனல் டிசி சாக்கெட், முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிக்கிறது.

    இந்தியாவில் சுசுகி அக்சஸ் 125 சிபிஎஸ் வேரியன்ட் விலை ரூ.59,980 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்றும் ஸ்பெஷல் எடிஷன் அக்சஸ் 125 விலை ரூ.60,580 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×