search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97284"

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
    • இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

    துபாய்:

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா, ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுப்பட்ட வீடியோவை ஐசிசி வெளியிட்டது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ரெட் ரிடெம்ப்ஷன் என்ற ஆக்ஷன் படத்தின் போஸ்டரில் ரோகித் சர்மா இடம் பெற்றிருக்கிறார். போஸ்டருக்கு 2021 உலக டெஸ்ட் இறுதிப் போட்டியை விட இந்தியா சிறப்பாகச் செயல்படுமா? என்றும் ரெட் பால் ரிடெம்ப்ஷன் என்ற வார்த்தையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ-யின் எமொஜியை தலைப்பாக வைத்திருக்கிறது.

    தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அயர்லாந்து கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார்.
    • பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் 23 வயதான அயர்லாந்து பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இணைந்துள்ளார். அதோடு இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிகாக்கை அவர் முந்தியுள்ளார். தற்போது 722 ரேட்டிங் உடன் 7-வது இடத்தில் அவர் உள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெக்டர் அபாரமாக விளையாடி இருந்தார். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 140 ரன்களை சேர்த்து அசத்தினார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    முக்கியமாக அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார். அதோடு ரோகித், ஸ்மித், டிகாக், பட்லர், கோலி ஆகியோரை அவர் முந்தியுள்ளார்.

    இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ராசி வான் டெர் டுசென் (தென் ஆப்பிரிக்கா), ஃபகார் ஜமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), சுப்மன் கில் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸி.) ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர். கோலி 8-வது இடத்தில் உள்ளார். டிகாக் மற்றும் ரோகித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    • ஐசிசி 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
    • கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.

    துபாய்:

    ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    அதன்படி ஐசிசி 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மாற்றப்பட்ட ஐசிசி விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விதி 1: கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.

    விதி 2: வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர், பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

    விதி 3: ப்ரீ ஹிட் பந்தில் பந்து ஸ்டம்பில் பட்டாலும் இனி பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம். அந்த ரன்கள் பேட்ஸ்மேன் கணக்கில் சேரும். இந்த 3 விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி அமலுக்கு வரும் எனவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்த விதிகள் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • டி20 தரவரிசையை பொறுத்தவரை இந்தியா முதலிடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் 3-வது இடத்தில் தான் இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்ததை தொடர்ந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்தியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா தனது புள்ளிப்பட்டியலில் 113-ல் இருந்து 118 ஆக உயர்த்தியது. பாகிஸ்தான் (116 ரேட்டிங்) மற்றும் இந்தியா (115 ரேட்டிங்) ஆகியவற்றில் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.

    பாகிஸ்தான் 3-வது இடத்தில் தான் இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்ததை தொடர்ந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்தை பாகிஸ்தான் ஒயிட் வாஷ் செய்திருந்தால் அந்த அணி முதலிடத்தை பிடித்திருக்கும்.

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி நியூசிலாந்து 5 டி20, 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றது. ஓர் ஆட்டத்தில் முடிவில்லை. இதனால், டி20 தொடர் சமன் ஆனது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடரை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வீழ்த்தியது. நியூசிலாந்து 104 ரேட்டிங்குடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 101 ரேங்கிங்குடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

    டி20 தரவரிசையை பொறுத்தவரை இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • இங்கிலாந்தைவிட இந்தியாவுக்கு 6 மடங்கு வருவாய் கிடைக்கிறது.
    • வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் கிரிக்கெட்டுக்கு அதிகமான மவுசு இருக்கிறது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அதிக வருவாயை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஈட்டி தருகிறது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாயை ஈட்டி கொடுக்கின்றன. இந்த 3 நாடுகளுக்கு ஐ.சி.சி. சமமான அளவில் வருவாயை பகிர்ந்து அளித்து வந்தது.

    இந்த நிலையில் 2024 முதல் 2027 வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இதன்படி இந்தியாவுக்கு பெரும் அளவில் வருவாய் கிடைக்கிறது. ஐ.சி.சி. வருமானத்தில் இந்தியாதான் மிகப்பெரிய பங்கு வகிப்பதால் அதிக வருவாய் கிடைக்கிறது.

    ஆண்டுக்கு ரூ.1,894 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 38.5 சதவீதம் கிடைக்கும். ஐ.சி.சி.யின் ஆண்டு வருமானம் ரூ.4919 கோடியாக இருக் கும் என்று கருதப்படுகிறது.

    இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.338 கோடி வருவாய் கிடைக்கும். அதாவது ஐ.சி.சி. வருவாயில் 6.89 சத வீதம் கிடைக்கும்.

    இங்கிலாந்தைவிட இந்தியாவுக்கு 6 மடங்கு வருவாய் கிடைக்கிறது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் கிரிக்கெட்டுக்கு அதிகமான மவுசு இருக்கிறது. இதனால் ஸ்பான்சர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரங்களை கொடுக்கிறார்கள். இதனால் பி.சி.சி.ஐ. மூலம் ஐ.சி.சி.க்கு வருமானம் மிகவும் அதிக மாக வருகிறது.

    ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டுக்கு ரூ.307 கோடி வருவாய் கிடைக்கும். அதாவது 6.25 சதவீதம் வருமானம் கிடைக்கும்.

    அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.282 கோடி (5.73 சதவீதம்) கிடைக்கும். நியூசிலாந்து (4.73 சதவீதம்), வெஸ்ட்இண்டீஸ்,(4.58), இலங்கை, (4.52), வங்காளதேசம் (4.46 ), தென் ஆப்பிரிக்கா (4.37), அயர்லாந்து (3.01), ஜிம்பாம்பே (2.94), ஆப்கானிஸ்தான் (2.94 ) ஆகிய நாடுகளுக்கு முறையே வருமானம் கிடைக்கும். மீதியுள்ள 11.19 சதவீத அசோசியேட் உறுப்பு நாடுகளுக்கு கிடைக்கும்.

    • ஐசிசியின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
    • இந்த விருது பாகிஸ்தான் வீரர் பகர் ஜமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

    இதில் நியூசிலாந்தின் மார்க் சாம்ப்மென், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் பாகிஸ்தானின் பகர் ஜமான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பாகிஸ்தானை சேர்ந்த பக்கார் ஜமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய், ஜிம்பாப்வேயின் கெலிஸ் நத்லோவ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கவிஷா எகோடகே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.
    • நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 299 ரன்கள் எடுத்ததது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்களும், உசாமா மிர் மற்றும் ஷதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    300 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

    கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் முறையாக பாகிஸ்தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஆனால் அந்த இடம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

    இருப்பினும், இந்தத் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தானின் தரவரிசையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன், பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    ஐசிசி ஆண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.

    • மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஷகிப் அல் ஹசன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • கேன் வில்லியம்சன், ஆசிப் கான் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

    நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன், வங்காள தேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் யுஏஇ-யை சேர்ந்த ஆசிப் கான் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும்.

    இதேபோல், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு சிபோனா ஜிம்மி (பப்புவா நியூ கினியா), ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா), ரவினா ஓ (பப்புவா நியூ கினியா) ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டெர் டுசன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3-ம் இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சில் இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்ததை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது.
    • மோசமான பிட்ச் என்ற மதிப்பீட்டை திருத்தி சராசரிக்கு கீழான பிட்ச் என்று மதிப்பீடு வழங்கியுள்ளது.

    இந்தூர் பிட்ச்சை படுமோசம் என்ற ஐசிசி-யின் மதிப்பீட்டை எதிர்த்து பிசிசிஐ செய்த அப்பீலை அடுத்து, அதை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல் இந்தூர் பிட்ச் சராசரிக்கும் கீழான பிட்ச் என்று கூறியுள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. வெறும் 2 நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் அந்த போட்டி முடிவடைந்தது. இதையடுத்து அந்த ஆடுகளத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆடுகளத்தை மதிப்பீடு செய்த ஐசிசி, இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று மதிப்பீடு செய்ததுடன், 3 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கியது.

    இந்நிலையில், இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்ததை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இந்தூர் ஆடுகளத்தை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல், ஏற்கனவே வழங்கப்பட்ட மோசமான பிட்ச் என்ற மதிப்பீட்டை திருத்தி சராசரிக்கு கீழான பிட்ச் என்று மதிப்பீடு வழங்கியுள்ளது. அதனால் டீமெரிட் புள்ளிகள் 3-லிருந்து 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.
    • இதன்மூலம் ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்தது.

    புதுடெல்லி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் போட்டியை வென்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

    இதற்கிடையே, 3-வது ஒருநாள் போட்டி தொடங்கும் முன், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113.286 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 112.638 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததுடன், நம்பர் ஒன் இடத்தையும் இந்திய அணி இழந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து நீடிக்கிறது.

    • இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
    • ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்த விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் ரோகித் சர்மா 10-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    மேலும் இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

    ×