என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97556"
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.36 ஆயிரத்து 112-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 216-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 527 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.69 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்கிறது.
தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
பால் உற்பத்தியாளர்களி டம் இருந்து இவைகள் பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தரம் பிரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன.
ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. ஹட்சன் (ஆரோக்கியா), ஹெரிட்டாஷ், டோட்லா, ஜெசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாக விற்கப்படுகிறது. அதனால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.
ஆவின் பால் புல்கிரீம் லிட்டர் ரூ.45, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.37க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஆரோக்கியா புல்கிரீம் லிட்டர் பால் ரூ.54-ல் இருந்து ரு.56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52-ல் இருந்து ரு.54 ஆகவும் உயருகிறது.
இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:-
தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வருடத்தில் விலை உயர்வு இரண்டாவது முறையாகும். இதனை அரசு தடுக்க வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது மாட்டு தீவனம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருத்துவ செலவு மற்றும் பராமரிப்பு செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
எனவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.16 அதிகமாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. கடந்த முறை 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டது. விற்பனை விலை ரூ.10அதிகமானது.
5 வருடங்களாக பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை. பால் மாடு வளர்ப்பவர்கள் அதிக செலவு காரணமாக அதிக சுமையை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை குறைந்தது லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இந்த தக்காளி சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மார்க்கெட்களுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையை கேட்டு அதிர்ச்சி அடையும் பொது மக்கள் தக்காளியை குறைந்த அளவே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக வாய்ப்புள்ளது என்றார்.
சென்னையில் கடந்த 5-ந் தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 96 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 416 ஆக இருந்தது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.16 உயர்ந்து 24 ஆயிரத்து 432-க்கு விற்றது.
இன்றும் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 722 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.37 ஆதிகரித்து ரூ.3,091-க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.40 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை கடந்த 3-ந் தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 936 ஆக இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ.24 ஆயிரத்து 304 ஆக இருந்தது.
இன்று மீண்டும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 416 ஆக உள்ளது. ஒரு கிராம் ரு.3,052-க்கு விற்கிறது.
வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.10 ஆகவும் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கு புதிய உபகரணங்களை வாங்குதல் போன்ற காரணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டண உயர்வுக்கு பிறகும் கூட தற்போதுள்ள கட்டணம் மற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை விடவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருப்பதைவிடவும் குறைவாகத்தான் உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய கட்டணத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுய உதவி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் ரூ.14 ஆயிரத்து 665-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கான கட்டணம் ரூ. 9 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.21 ஆயிரம் ஆகவும் மற்ற பல்வேறு படிப்புகளுக்கான கட்டணம் ரூ.8 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-
பல்கலைக்கழகத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்துக்கான செலவுகள் அதிகரித்துவிட்டன. இதே போல பாதுகாப்பு மற்றும் ஆய்வகத்தில் பல்வேறு வசதிகளை செய்தல் போன்றவற்றாலும் செலவுகள் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மாநில அரசு பல்கலைக் கழகத்துக்கு வழங்கிய நிதியை 2012-2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்திவிட்டது.
தற்போது உயர்க்கல்வித்துறை உதவியுடன் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி நெல்லை, கோவை, மதுரை மண்டலங்களில் புதிய படிப்புகளை தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #AnnaUniversity
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்துசேரும். மழைக் காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் தற்போது ஏரி வறண்டுவரும் நிலை ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணை வந்தது. அங்கிருந்து கடந்த 7-ந் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரதொடங்கியது.
இதை தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர தொடங்கியது. இந்த நிலையில் கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு இன்று காலை 2,400 கன அடி நீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.03 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்து உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு 62 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
ஏரிக்கு இதே அளவு தண்ணீர் கீழணையில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் இன்னும் 4 நாட்களில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும். அதன் பிறகு இங்கிருந்து சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #VeeranamLake
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளிலும் தரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
சுங்க சாவடி கட்டண உயர்வு குறித்து மதுரையைச் சேர்ந்த வணிகர் எஸ்.அருண் கூறியதாவது:-
மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு முறை செல்ல வாகன சுங்க கட்டணம் ரூ.800 செலுத்தி வருகிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.
ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. பெருங்களத்தூர்- செங்கல்பட்டு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தினமும் 1 லட்சம் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.
டீசல் கட்டணம் உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களை நஷ்டத்தில் இயக்கி வருகிறோம். சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #TollGate
தங்கம் விலை பவுன் ரூ.26 ஆயிரத்தை நெருங்கும் வகையில் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் விலை குறைந்தது. பிப்ரவரி 28-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 464 ஆக இருந்தது. அதன்பிறகு விலை படிப்படியாக சரிந்தது.
நேற்று முன்தினம் பவுன் ரூ.24 ஆயிரத்து 472-ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரு.104 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 576-க்கு விற்றது. இன்றும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 736ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3092-க்கு விற்கிறது. தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 600 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.60 ஆகவும் உள்ளது. #Gold
சென்னை, பிப்.20-
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 200 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப் பட்டது.
16-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கு விற்றது. அதன்பிறகு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
நேற்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 688 ஆக இருந்தது. இன்று அதிரடியாக மேலும் பவு னுக்கு ரூ.152 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 840 ஆக உள்ளது.
இதன்மூலம் ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கிராமுக்கு ரூ.19 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,230-க்கு விற்கிறது.
தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெ ரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக் கின்றனர்.
வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.44-க்கு விற்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 520 ஆக இருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 568 ஆனது. இதுவே தங்கம் வரலாற்றில் உச்சக்கட்ட விலையாக கருதப்பட்டது.
ஆனால் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,200-க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.50 ஆகவும் உள்ளது. #Gold
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்