search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • மே 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியும், மே 6-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
    • 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தன்னைத்தானே பூஜித்தல் வருகிற மே 2-ந்தேதியும், தொடர்ந்து, மே 6-ந்தேதி தேரோட்டமும், 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதியுலா மற்றும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறும்.
    • 30-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை மாத தெப்ப திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    அதன்படி 7-ம் திருவிழா வான நேற்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 5 மணிக்கு மூங்கில் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திரு வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று 8-ம் திருவிழா ஆகும். அதன்படி இன்று காலை 5 மணிக்கு சிதம்ப ரேஷ்வரர் வீதியுலா வருதல் நடைபெற்றது. 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜ பெருமாள், சிவாகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் வீதியூலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ம் திருவிழாவான நாளை (29-ந்தேதி) காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகபடிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் திருவீதி யுலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா 30-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருளச்செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெற உள்ளது.

    தெப்ப திருவிழாவையொட்டி தெப்ப குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின் விளக்குகளின் ஒளி பிம்பம் தெப்பக்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    • 30-ந்தேதி தெப்பத்திருவிழா
    • தெப்ப குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை மாத தெப்ப திருவிழா கடந்த 21-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    அதன்படி 7-ம் திருவிழா வான நேற்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 5 மணிக்கு மூங்கில் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று 8-ம் திருவிழா ஆகும். அதன்படி இன்று காலை 5 மணிக்கு சிதம்ப ரேஷ்வரர் வீதியுலா வருதல் நடைபெற்றது. 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜ பெருமாள், சிவாகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் வீதியூலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான நாளை (29-ந்தேதி) காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் அமைச் சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகபடிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் திருவீதி யுலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடைபெ றும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா 30-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப் பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருளச்செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெற உள்ளது.

    தெப்ப திருவிழாவை யொட்டி தெப்ப குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின் விளக்குகளின் ஒளி பிம்பம் தெப்பக்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சி கண்க ளுக்கு விருந்தளிக்கிறது.

    • 3-ம்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 5-ந் தேதி திருவிழா நிறைவு பெறுகின்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சன்னதியில் அமைந்துள்ள மரகத நடராஜர் வருடத்தில் திருவாதிரை நாள் மட்டுமே சன்னதி திறக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக மரகத நடராஜரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மங்களநாயகி அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பன்னீர், திரவியம், தேன், மா பொடி, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன.

    தொடர்ந்து அம்மன் சன்னதி மண்டபத்தில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த மங்களநாயகி மற்றும் விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 8-வது நாள் நிகழ்ச்சியாக மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக வருகிற மே 4-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக பத்தாவது நாளான வருகின்ற மே மாதம் 5-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தீர்த்த உற்சவத்துடன் நிகழ்ச்சி நடைபெற்று சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

    திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் தலைமையில் சமஸ்தான தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    அதுபோல் திருஉத்தரகோசமங்கை கோவிலில் சித்திரை திருவிழாவிற்காக கடந்த ஆண்டு தான் புதிதாக தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    புதிதாக செய்யப்பட்ட தேரில் 2-வது ஆண்டாக இந்த ஆண்டு சுவாமி அம்பாள் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார்

    புதுக்கோட்டை

    ஆதனக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 16-ந் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினமும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் பழைய ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், ஆதனக்கோட்டை கிராமமக்களும் செய்திருந்தனர்.

    • 27-ந்தேதி கருடசேவை நடைபெறுகிறது.
    • தினமும் உற்சவர் பொலிந்து நின்றபிரான் வீதி உலா நடக்கிறது.

    நவதிருப்பதி கோவில்களில் 9- திருப்பதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று காலையில் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் நடந்தது. அதிகாலை 4.45 மணிக்கு திருமஞ்சனம், காலை 5.15 மணிக்கு தீபாராதனை, 5.45 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது.

    காலை 6.15 மணிக்கு அம்பாள்களுடன் பொலிந்து நின்றபிரான் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதிகளில் சுற்றி வந்து காலை 7.15 மணிக்கு சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவில் எம்பெருமானார் ஜீயர், செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவலமணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உற்சவர் பொலிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி கருடசேவை நடைபெறுகிறது.

    வருகிற மே. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 1-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • தற்போதுள்ள தேர் 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் 4 ராஜவீதிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளதை சரி செய்யவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தேர் திருவிழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேரோட்டத்துக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அனைத்து அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு ஏற்கெனவே ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி அந்ததந்த துறைகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும், தேர் வடம் பிடிக்கப்பட்டு பிற்பகல் தேர் நிலைக்கு மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும். இத்தேர் திருவிழா நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் நடைபெறும்.

    தற்போதுள்ள தேர் 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தேரோட்டம் கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் நடைபெறவில்லை. தேரின் சாதாரண உயரம் 19 அடி, தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக இருக்கும். இந்த தேரின் அகலம் 18 அடியாகும். சக்கரத்தின் உயரம் 6 அடி, தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையில் இருக்கும்.

    ஆய்வின் போது தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, தாசில்தார் சக்திவேல், உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா, அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • நாளை உற்சவ சாந்தி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மிகப் பழமையான ரெங்கநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 140-வது பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சிம்மம், ஹனுமாந்தம், கருடன், சேஷ, யானை, புஷ்பக விமானம், குதிரை, கன்றுக் குட்டி ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் ரெங்கநாதப் பெருமாளை தரிசனம் செய்தனர். இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பி வடம்பிடித்து இழுத்தனர். வழியில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இன்று புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் சேவையும், நாளை உற்சவ சாந்தி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    • சிம்ம வாகனத்தில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பல்வேறு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை ஒவ்வொரு சமுதாய சங்கங்கள் சார்பில் சுவாமி வீதி உலா நடந்தது.

    இதில் ஆதிபராசக்தி, துர்க்கை, காமாட்சியம்மன், கருமாரியம்மன், பவானி அம்மன், ராஜகாளி, ஹெத்தையம்மன், அங்காளம்மன் போன்ற அலங்காரங்களில் அம்மன் உலா வந்தார். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேர் கலசம் பொருத்தப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 9 மணிக்கு விநாயகர், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, சிறப்பு கனகாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதியம் 1.55 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், எம்.எஸ்.லைன் வழியாக காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, லோயர் பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்து லாந்தர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டவாறு கல் உப்புகளை தூவி வழிபட்டனர். தேருக்கு முன்பு சென்ற சிறு தேர்களில் விநாயகர், ஆதிபராசக்தி உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளினர்.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி ஊட்டியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    இன்று (புதன்கிழமை) வெள்ளைக் குதிரையில் நீலாம்பிகை பவனி வரும் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) அம்மனின் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 21-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

    • பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.
    • நாளை இரவு சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப் பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார்.

    காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.

    கீழச்சித்திரை வீதியில் இருந்த புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின்னர் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள் ளது.

    நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது
    • நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சி விகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.

    அதன் பின் ஆழ்வார் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.8-ம் நாளான இன்று (18-ந்தேதி) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டியில் உள்ளது முத்து மாரியம்மன் கோவில். இங்கு சித்திரை திருவிழாவை யொட்டி கடந்த 9-ந்தேதி உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தார். பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் நடந்தது. 5-ம் நாளன்று பால்குட விழாவும் தொடர்ந்து 6-ம் நாளில் அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்தார்.

    7-ம் நாளில் அம்மன் பூப் பல்லக்கிலும், 8-ம் நாளன்று குதிரை வாகனத்திலும் அருள்பாலித்தார். 9-ம் நாளான நேற்று அதிகாலை முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவி யங்களால் அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பின்னர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தரு ளினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்து மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் வடம் பிடிக்கத் தேரோட்டம் சிறப்பபாக நடைபெற்றது.

    பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளை யாத்தங்குடி, திருப்பத்தூர், சேவிணிப்பட்டி, கீழச் செவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், முதலையான்பட்டி, சேத்தம்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×