search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
    • உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர்.

    சேலம்:

    புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர். அதோடு, இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என முன்னோர்கள் ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

    புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இன்று புரட்டாசி பிறந்ததால் சிக்கன், மட்டன், மீன் வாங்க கடைகளுக்கு செல்வதில்லை.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் சூரமங்கலம் மீன் மார்க்கெட், செல்வாய்பேட்டை, அம்மாபேட்டை அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிக்கன்,மட்டன் கூட்டம் இல்லாம் வெறிச்சோடி கணப்பட்டது. புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று சிக்கன், மட்டன் விற்பனை கூட்டம் இல்லாமல் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. தற்போது சிக்கன், மட்டன் விலை குறைந்தாலும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    • நினைத்த காரியத்தை நடத்தித் தந்தருள்வார் கந்தபெருமான்.
    • வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    இன்று கார்த்திகை விரத நாள். இன்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய கார்த்திகை விரத நாள். எனவே, இந்தநாளில், முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

    முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்வதும் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயம் சென்று வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

    செவ்வரளி மாலை சார்த்தி முருகனை வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகியுங்கள். நினைத்த காரியத்தை நடத்தித் தந்தருள்வார் கந்தபெருமான்.

    முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

    வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

    • ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

    ஆவணி மாதத்தில் பல தெய்வங்களுக்குரிய பண்டிகை தினங்கள் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் தெய்வங்களுக்குரிய வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமான வெற்றியை பெறும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.

    ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

    • ஆவணி மாதம் மிகவும் சுபத்தன்மை நிறைந்த மாதம்.
    • தங்களின் சௌகரியத்துக்கு ஏற்றவாறு, விரதத்தை மேற்கொள்ளலாம்.

    ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும். அல்லது, ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமி நாளும், திருவோண நட்சத்திரமும் ஒன்றிணைந்து வரும். அதனாலேயே, இது ஆவணி / ஷ்ரவண மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. சிவன் கோவில்களில், ஆவணி மாதத்தின் ஒவ்வொரு திங்கைகிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    சிவலிங்கத்திற்கு இரவும், பகலும் தொடர்ந்து நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். அது மட்டுமின்றி ஆவணி முழுவதும், ஒவ்வொரு திங்களன்றும் வில்வ இலைகள், சிவபக்தர்கள் புனித நீர், பால் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கின்றனர். பக்தர்களும் காலை முதல் இரவு வரை விரதமிருந்து, இரவு முழுவதும் எரியும் வகையில் ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவார்.

    ஆவணி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் திருமணமான பெண்கள், தீய சக்தி மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் கடைபிடிக்கிறார்கள். ஆவணி மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில், திருமணமான பெண்கள் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். அதே போல, ஆண்களும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான சடங்குகளை செய்கிறார்கள்.

    விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் அறிவியல் ரீதியான விளக்கம் :

    பொதுவாக விரதம் இருப்பது உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்வு அளிக்கும். ஆவணி மாதத்தில் விரதம் இருப்பது ஒருவரின் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு பகுதியாக ஆவணி மாதத்தில் சூரிய ஒளி குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே, இது ஜீரண சக்தியைக் குறைக்கும். அதன் விளைவாக, சுலபமாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதனால் தான், பெரும்பாலானவர்கள் இந்த மாதத்தில் சைவ உணவுப் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அது மட்டுமின்றி, விரதம் இருப்பதும் பரவலாக கடைக்பிடிக்கப்பட்டு வருகின்றது. விரதம் இருப்பது உணவு செரிமானாக் குழாயை சுத்திகரித்து, நுண்கிறுமிகள் தாக்குதலில் இருந்து இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.

    ஆவணி மாதத்தில் விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

    விரதம் இருக்க வேண்டுமென்றால், ஒருவர் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். எப்போதுமே, சிவபெருமானை வழிபடும் முன், விநாயகரை வழிபடுவது வழக்கம். ஈசனுக்கான பிரசாதங்களில் வில்வ இலைகள், நீர், தேன், பால் மற்றும் வெள்ளை பூக்கள் ஆகியவை அடங்கும். பிரார்த்தனைகளுக்கான மந்திரங்களை கூறிய பிறகு, நீங்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம். மாலையில், சூரியன் மறையும் வரை விரதத்தைத் தொடரலாம். சில நபர்கள் நாள் முழுவதும் விரதங்களை மேற்கொள்ளாமல், குறிப்பிட்ட மணிநேரங்கள் வரை விரதம் இருக்கிறார்கள். அல்லது விரதமாக சமைத்த உணவுகளை உண்ணாமல், நாள் முழுவதும் பழங்களை மட்டும் உண்ணுகிறார்கள். சிலர், தண்ணீர் மட்டும் அருந்துவார்கள். தங்களின் சௌகரியத்துக்கு ஏற்றவாறு, விரதத்தை மேற்கொள்ளலாம்.

    மாலை நேரத்தில் விரதத்தை முடிக்க, ஒரு சிலர் சிவன் கோயில்களுக்கு சென்று, ஈசனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்கின்றனர். சிலர், வீட்டிலேயே வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

    ஆவணி நோன்பை கடைபிடிக்கும் ஒரு சில பக்தர்கள், 24 மணி நேரம் கடுமையான விரதம் மேற்கொள்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இவர்கள் விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். பெண்கள் சோமவார விரதத்தை மேற்கொண்டால், தாங்கள் விரும்பும் வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    கூடுதலாக, அனைத்து ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. இந்தியா முழுவதும் இதைப் போன்று விரதங்களும், சடங்குகளும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆச்சரியமூட்டும் விதமாக, ஒரு சிலர், சோமவார விரதத்தை ஆண்டு முழுவதும் கடைபிடிக்கின்றனர். இதைப் போன்ற ஆழமான பக்தியும், அற்புதங்களும் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.

    ருத்ராபிஷேக பூஜையை, நேர்த்தியான முறையில் செய்வது, சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை :

    சிவபெருமானைப் பூஜிக்க, கிழக்கு நோக்கி உட்கார வேண்டும். அதைத் தொடர்ந்து, வலது கையில் ஒரு சில துளிகள் புனித நீரை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்க வேண்டும். அதைத் தொடர்ந்து, நீங்கள் தியானம் செய்யும் போது, ஈசனையும் நினைத்துக் கொள்ளவும். கையில் உள்ள நீரை, சிவலிங்கத்தின் மீது ஊற்றவும். 'ஓம் நம சிவாய' என்று கூறிய படி, பஞ்சாமிர்தத்தை சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யவும். மீண்டும் தண்ணீர் ஊற்றி, அட்சதைத் தூவவும். பிறகு, ஆர்த்தி எடுக்க வில்வ இல்லை மற்றும் ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.

    ஆவணி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

    * பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்

    * உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்படும்

    * பிரபஞ்சத்தை உருவாக்கியதும், அழிப்பதும் ஈசனே! எனவே, இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது, நல்ல * * * ஞாபக சக்தியையும், மன உறுதியையும் கொடுக்கும்.

    * சிவபெருமான் நல்ல வாழ்க்கைத்துணையை வழங்குவார்

    * கூடுதலாக, விரதமிருப்பது, நம் பாதையில் இருக்கும் நச்சுகள் மற்றும் இடையூறுகளை நீக்குகிறது

    * விளக்கு ஏற்றி வழிபட்டால், நம்முடைய அறிவு மேம்படும்

    * கங்கை நீரால் அபிஷேகம் செய்வது, முக்திக்கு வழிவகுக்கும்

    * சிவபெருமானுக்கு விருப்பமான பிரசாதங்களை வழங்குவது, நமக்கு எல்லா விதத்திலும் வெற்றியைப் பெற உதவும். நம்முடைய ஆசைகளும் நிறைவேறும்.

    ஜோதிட ரீதியாக ஆவணி மாதத்தின் சிறப்புகள் :

    வேத ஜோதிடத்தின் கூற்று படி, சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகும் நாள், ஆவணி மாதம் தொடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதனால் தான், பஞ்சாங்கம் இதனை மிகவும் விசேஷமான மாதமாகக் கருதுகிறது.

    முடிவு:

    ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாகும். இது, வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும், முக்தி அடையவும் உதவி செய்கிறது. சிவ ஆலயங்களிலும், ஆவணி மாதம் வரும் அனைத்து திங்கட் கிழமைகளிலும், நாள் முழுவதும் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.

    • ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது.
    • செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை சிறப்பானது.

    சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுபகாரியங்களைத் தவிர்க்க சொன்னார்கள்.

    அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

    ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1 மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.

    மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோ‌ஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோ‌ஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.

    செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத்தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டி னால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

    • இன்று பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.
    • ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.

    இன்று (புதன்கிழமை) மகாவிஷ்ணுவுக்கு மிகச் சிறந்த உகந்த தினமாகும். ஏனெனில் வாமன அவதாரம் நிகழ்ந்த தினமாகும். எனவே இன்று பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெற முடியும். இன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சந்நிதி இருக்கக் கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.

    வாமன அவதாரத்தை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாகும். வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவில்லை. அவனுடைய அகந்தையை மட்டும் அழித்து அருள்புரிந்தார். தன்னுடைய பக்தனாக மகாபலி சக்கரவர்த்தியை மாற்றி, பாதாள உலகத்தை ஆளும்படி முடிசூட்டினார். எனவே முழுமையான அனுக்கிரகம் தரும் அவதாரமாக வாமன அவதாரம் போற்றப்படுகிறது.

    • இன்று மாலை லட்சுமி, மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
    • பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகா விஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். இன்று மாலை லட்சுமியுடன் மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார். எனவே இன்று அவசியம் எல்லோரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது. விஷ்ணுவின் அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த பரிவர்த்தன ஏகாதசி விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம்.

    இதற்கு பத்ம ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு. இன்று மாலை 4.46 மணி வரை பூராட நட்சத்திரத்தில் வருவதால் ஸ்ரீமகாலட்சுமி தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். இன்று பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் (புதன்கிழமை) துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்கு படைத்து விட்டுச் சாப்பிட வேண்டும்.

    இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    • கேதார கவுரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • இந்த விரதம் புரட்டாசி அமாவாசை அன்று நிறைவு பெறுகிறது.

    கொங்கு 7 சிவ ஸ்தலங்களில் மலை மீது அமைந்துள்ள ஒரே ஸ்தலமாகிய திருச்செங்கோட்டில் ஆண் பாதி பெண் பாதியாக அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானின் இடப்பாகத்தை பெறுவதற்காக பார்வதி புரட்டாசி மகாளய அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக தவம் இருந்ததாக புராணங்கள் சொல்கிறது.

    அதன் அடிப்படையில் நேற்று திருச்செங்கோடு மலைக்கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதி பிரகாரத்தில் கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், பிரகாரத்தில் கேதார கவுரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 21 நாட்கள் நடைபெறும் கேதார கவுரி விரதம் புரட்டாசி அமாவாசை அன்று நிறைவு பெறுகிறது.

    • இன்று அமுக்தாபரண சப்தமி தினமாகும்.
    • பூஜிக்கப்பட்ட ரக்சை கயிற்றை பெண் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஆவணி மாதம் வளர்பிறை சப்தமி திதிக்கு அமுக்தாபரண சப்தமி என்று பெயர். இந்த தினத்தில் பெண்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு அதிக சக்தி உண்டு. இன்று அமுக்தாபரண சப்தமி தினமாகும்.

    இன்று திருமணமான சுமங்கலிப்பெண்கள் காலை சுமார் 10 மணிக்கு மேல் குளித்து புதிய துணியில் ஐந்து வித வர்ணங்களால் வரையப்பட்ட-எழுதப்பட்ட- அச்சிடப்பட்ட பார்வதியுடன் சேர்ந்த பரமேஸ்வரன் படத்தில், ஆவாஹனம் செய்து முறையாக பூஜை செய்ய வேண்டும்.

    பூஜை முடிவில் ஏழு முடிச்சுகள் போடப்பட்ட கயிற்றை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட ரக்சை கயிற்றை பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இதனால் பல காலமாக சந்ததி இல்லாமல் இருக்கும் பெண்ணிற்கு சிவன் அருளால் குழந்தைச் செல்வம் ஏற்படும். மேலும் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் மாங்கல்யம், தோடு, வளையல், மெட்டி, ஒட்டியானம், மூக்குத்தி போன்ற மங்களமான ஆபரணங்களை விட்டு என்றும் பிரிய நேராது. இந்த பூஜையால் பெண்கள் சுமங்கலியாகவே வாழும் பாக்கியம் கிட்டும் என்கிறது பவிஷ்ய புராணம்.

    • இன்று மாலை கோவில் சென்று சுப்பிரமணியரை தரிசனம் செய்யலாம்.
    • சூரியனை நோக்கியவாறு அமர்ந்து கொண்டு வழிபட வேண்டும்.

    இன்று (வெள்ளிக்கிழமை) சஷ்டி தினமாகும். இன்று மதியம் 12.03 மணி வரை சஷ்டி திதி உள்ளது. இந்த ஆவணி மாத சஷ்டியை சூரிய சஷ்டி என்று அழைக்கிறார்கள். இது மிகவும் சிறப்பான தினமாகும். எனவே சஷ்டி திதியான இன்று காலை சூரிய உதயத்துக்கு முன் குளித்து விட்டு விரதம் இருந்து சூரியனை நோக்கியவாறு அமர்ந்து கொண்டு வழிபட வேண்டும்.

    அப்போது ஆதித்ய இருதயம் கோளாறு பதிப்பகம் போன்று சூரிய மந்திரங்களைச் சொல்லி 12 முறை சூரியனை நோக்கி வணங்கி பிரார்த்தித்து கொள்ள வேண்டும். முடிந்தால் பஞ்சகவ்யம் கலக்கி சாப்பிடலாம். இந்த வழிபாடு மன அமைதியை தரும்.

    ஆவணி மாதம் வளர்பிறை சஷ்டி திதியான இன்று குமார தரிசனம் எனப்படும் நாள். ஆகவே இன்று விரதம் இருந்து மாலை குடும்பத்துடன் ஸ்ரீ முருகன் கோவில் சென்று சுப்பிரமணியரை தரிசனம் செய்து வரலாம். இவ்வாறு செய்வதால் அசுவமேத யாகம் செய்த பலனைக் காட்டிலும் அதிகமான பலன் கிடைக்கும். அனைத்து நோய்களும் விலகி ஆரோக்கியமும் ஏற்படும் என்கிறார் திவோதாச மகரிஷி.

    • 8 தம்பதிகளிடம் வணங்கி ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.
    • இந்த விரதம் அனுஷ்டித்தால் பெண்கள் விரும்பும் நபருடன் திருமணம் நடக்கும்.

    ஆவணி மாதம் வளர்பிறை திருதியை அன்று தேவியை வணங்கி செய்ய வேண்டிய விரதம் இது. திருமணம் நடைபெற வேண்டிய கன்னிப் பெண்கள், செவ்வாய்க்கிழமை மாலையில் தனது வீட்டில் விருஷபத்தின் மீது பார்வதியுடன் அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து பூஜை செய்து சிவஅஷ்டோத்தரத்தால் அர்ச்சனை செய்து 16 தட்டுகளில் வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள், தேங்காய் வைத்து நிவேதனம் செய்து தெரிந்த மந்திரங்கள் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.

    பிறகு அந்த 16 தட்டுகளையும் 8 தம்பதிகளுக்கு தந்து வணங்கி ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் பெண்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக சந்தோஷமாக வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.

    • நாளை காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
    • இந்த விரதம் அனுஷ்டிக்க காரணமும், தீரும் பிரச்சனைகளையும் பார்க்கலாம்.

    ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று சப்தரிஷிகளை பூஜித்து விரதம் அனுஷ்டிப்பதால் இந்த நாளுக்கு ரிஷி பஞ்சமி என்று பெயர். கணவன்-மனைவி இருவரும் தம்பதிகளாகவோ அல்லது பெண் தனியாகவோ இதைச் செய்யலாம். இன்று மதியம் நதி, குளம் கிணறு ஆகியவற்றில் குளித்து விட்டு நாயுருவி குச்சியைக் கொண்டு பல் துலக்கி, நெல்லிப்பொடியை தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும்.

    பிறகு வீட்டில் முறையாக கலசங்களில் 1. கஷ்யபர், 2. அத்ரி, 3. பரத்வாஜர், 4. விசுவாமித்ரர், 5. கவுதமர், 6. ஜமதக்னி, 7. வசிஷ்டர் ஆகிய 7 மகரிஷிகளுடன் அருந்ததியையும் சேர்த்து ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

    பிறகு 7 பேரை 7 மகரிஷிகளாக பாவித்து சப்தரிஷிகளுக்கு நிவேதனம் செய்ததை அவர்களுக்கு தானமாகத் தர வேண்டும். அன்று இரவு ரிஷிகளின் சரித்திரத்தை சிரவணம் செய்து, மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு விலக்கான அந்த நாட்களில் ஆலய வழிபாடு, தெய்வ வழிபாடு போன்ற எந்த ஒரு செயல்களிலும் பெண்கள் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும் என்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறுகிறது வேதம். அப்படி இல்லாமல் தெரிந்தோ தெரியாமலோ அந்த காலங்களில் பெண்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்தால், அதனால் அந்தப் பெண்மணியின் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அந்த நாட்களில் நியமங்களை கடைபிடிக்காமல் இருந்த தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காகவே ரிஷி பஞ்சமி விரதம் ஏற்பட்டுள்ளது.

    ×