search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    ஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் காதலித்த ருசிகர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், ‘உன்னை காதலிக்கும் ஸ்ரீராம் ஆண் அல்ல; அவர் ஒரு பெண்’ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. ஸ்ரீராம் என்ற பெயரில் காதலனாக வலம் வந்தவரையும், அவரை காதலித்த இளம்பெண்ணையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து அவர் போலீசில் கூறுகையில், ‘எனக்கு கடன் அதிகமாக இருப்பதால் அதனை அடைக்க வழி தெரியவில்லை. ஆண் போன்று நடித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தால், அந்த பெண் வரதட்சணையாக கொண்டு வரும் நகையை ஏமாற்றி வாங்கி விற்று கடனை அடைக்க முடிவு செய்தேன். அதற்காக ஸ்ரீராம் என்ற பெயருடன் 7 ஆண்டாக அந்த பெண்ணை காதலிப்பது போல் நடித்து வந்தேன். நான் எதிர்பார்த்தது போன்று திருமணமும் எங்கள் இருவருக்குள் ஏற்பாடாகியது. ஆனால், எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து திருமணத்துக்கு முன்னதாகவே உண்மையை மணப்பெண்ணிடம் தெரியப்படுத்திவிட்டேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் போலீசாரிடம் அளிக்கப்படவில்லை. எனினும் நீண்ட நாட்களாக ஒரு பெண் ஆணாக நடித்து தனியார் நிறுவனத்தில் பணி செய்தது எப்படி? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து மோசடிக்கு முயன்ற இந்த ருசிகர சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண் 5 கி.மீ. தூரம் வரை தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே எடவானி என்னும் மலை கிராமம் உள்ளது. இங்கு ஆதிவாசி, பழங்குடி இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த ஆதிவாசி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து அட்டப்பாடியில் உள்ள கோட்டத்துறைக்கு தான் செல்ல வேண்டும்.

    மேலும் இவர்கள் இந்த பாதையில் 5 இடங்களில் வரகை ஆற்றை கடந்து செல்லும் சிரமமான நிலையும் உள்ளது.

    இந்த நிலையில் எடவானியில் வசித்து வரும் பழனி என்பவரது மனைவி மணி (28) 4-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

    முதலில் அவருக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க முயன்றனர். அதில் சிக்கல் ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

    சாலை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணியை மூங்கில் கம்பில் சேலையால் தொட்டில் கட்டி உறவினர்கள் சுமந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி மணியை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு அவர்கள் ஓட்டமும், நடையுமாக அரளிகோணம் வரை சென்றனர். அங்குள்ள சுகாதார நிலையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் இயங்காத நிலையில் இருந்தது.

    இதனால் பெண்கள் அமைப்பான குடும்ப ஸ்ரீ என்ற தொண்டு நிறுவன ஆம்புலன்ஸ் மூலம் மணியை அட்டபாடியில் கோட்டதுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    குழந்தையுடன் மணி.

    அந்த மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். மணிக்கு சுகபிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மணி இது பற்றி கூறும் போது, எங்களது குலதெய்வம் நல்லீஸ்வரன் ஆகும். எனக்கு குலதெய்வம் அருளால் தான் தற்போது நல்லமுறையில் குழந்தை பிறந்து உள்ளது என்றார்.

    சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் பலரையும் தொட்டில் கட்டி தான்இந்த பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

    இந்த நிலை மாற பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மகளிர் ஆணையம் தலைவர் ஜோசபைன் இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். #TribalWomen #AttapadiVillage
    கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வாலிபருக்கு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.

    இந்த நோய்க்கு நர்சு உள்பட 18 பேர் பலியானார்கள். இன்னும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் வவ்வால் மூலம் பரவுவதாக கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரக்குழு மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தனர். இதனால் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.

    நிபா வைரஸ் பீதி மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் கொல்லம் மாவட்டம் மலைக்கிராம பகுதியில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியானது. இப்பகுதியைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர் வயிற்று வலி மற்றும் கல்லீரல் வீக்கம் காரணமாக அப்பகுதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார்.

    அவரை பரிசோதித்த போது அவருக்கு கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் டாக்டர்களுக்கு ஏற்பட்டது. எனவே அவர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கருப்பு காய்ச்சல் மண் பூச்சிகள் மூலம் பரவும் என்று கூறப்படுகிறது. இது நிபா வைரஸ் போல வேகமாக பரவும் தன்மை கொண்டது இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாதிப்பை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.

    இக்காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு வயிற்று வலியும், உடல் சோர்வும் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் வீக்கமும் உருவாகும். ரத்த பரிசோதனை மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

    கேரளாவில் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு 2005-ம் ஆண்டிலும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இது போன்ற நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே உடல் சோர்வு, வயிற்று வலி இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுபற்றி கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. ஷைலாஜா கூறியதாவது:-

    கேரளாவில் புதியதாக பரவும் நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விழுமுலா கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    வீடு வீடாகச் சென்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்ற ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா மற்றும் கேரளா உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #Cauveryissue GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சனை நீடித்து வந்தது. இப்பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்தால் ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர்வளத்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

    இதுவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தங்கள் மாநிலத்துக்கான உறுப்பினர்களை நியமித்திருக்கிறது. மற்ற இரண்டு மாநிலங்களும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தேவைப்படுவதால் நியாயமாக கிடைக்கக்கூடிய காவிரி நதியின் தண்ணீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழக விவசாயிகளும், பொது மக்களும் காத்துக் கிடக்கிறார்கள்.

    இச்சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரும், 4 மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் காலம் தாழ்த்தாமல் நியமிக்கப்பட்டால் தான் ஆணையத்தின் செயல்பாடு விரைவாக இருக்கும். குறிப்பாக விரைவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு விவசாயம் சார்ந்த, நேர்மையான, ஒரு வல்லுநரை முழு நேர தலைவராக நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    மிக முக்கியமாக குறுவை சாகுபடியை ஆரம்பிக்க தயார் நிலையில் இருக்கின்ற தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைத்தால் தான் சாகுபடி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Cauveryissue GKVasan
    கேரள மாநிலம் கொல்லம் அருகே காற்றில் பறந்த வந்த 500 ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம், ஜூன். 6-

    கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப் பள்ளி என்ற இடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த வழியாக ஏராளமான பொது மக்கள் இருசக்கர வாகனங் கள் மற்றும் பஸ்கள் மூலம் பயணம் செய்து கொண்டிருந் தனர்.

    அப்போது திடீரென்று அந்த பகுதியில் காற்றில் பேப்பர் துண்டுகள் பறந்து வந்தன. இவை சாலைகளில் விழுந்தன. அந்த வழியாக நடந்து சென்ற சிலர் அதை எடுத்து பார்த்தபோது, அவர் களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த பேப்பர் துண்டுகள் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாகும். அதுவும் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.

    இதைப்பார்த்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்கத் தொடங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங் களை ஆங்காங்கே நடுவழி யில் நிறுத்தி விட்டு ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. காற்றில் ரூபாய் நோட்டுக்கள் பறந்து வந்தது பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொது மக்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் முயற்சியில் ஈடுபட் டனர்.

    மேலும் ரூபாய் நோட்டுக் களை சேகரித்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி போலீசார் அவை கள்ள நோட்டுக்களாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவை நல்ல நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுக்களை எடுத் தவர்கள் அங்கிருந்து நைசாக நழுவிச்சென்று விட்டனர்.

    வாகனத்தில் யாராவது ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்றபோது கவனக்குறைவு காரணமாக அவை காற்றில் பறந்திருக்க லாம் என்று கருதப்படுகிறது. சாலையில் ரூபாய் நோட் டுக்கள் பறந்தது எப்படி? யார் ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார். #Nipahvirus #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.

    நிபா வைரஸ் நோய் பாதித்து நர்சு, ஆட்டோ டிரைவர் உள்பட 18 பேர் பலியானார்கள். இதனால் கேரளா முழுவதும் பெரும்பீதி ஏற்பட்டது.

    நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்வதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் தெருக்களில் முக கவசம் அணிந்து நடமாடினர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. மேலும் மத்திய சுகாதார துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழுவும் கேரளா வந்து ஆய்வு நடத்தியது. நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 2400 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

    இதில் 2377 பேருக்கு நோய் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இதனை கேரள சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவது பற்றி சட்டசபையிலும் பிரச்சினை எழுப்பப்பட்டது. முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா முகத்திலும், கையிலும் கவசம் அணிந்து சட்டசபைக்கு வந்தார்.

    இதற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், முதல் மந்திரி பினராய் விஜயனும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக பினராய்விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பேசியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நோய் பாதித்த நாடுகளில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை விட நவீன தடுப்பு நடவடிக்கைகள் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோய் மேலும் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.



    இதற்காக கேரள சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

    நிபா வைரஸ் குறித்து சமூக ஊடகங்கள் பொதுமக்களிடம் பீதி கிளப்புவதை கைவிட வேண்டும். நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதாரத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ்சென்னிதலா பேசும் போது, நிபா வைரசை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கூட்டணி முழு ஒத்துழைப்பு அளிக்கும், என்றார்.#Nipahvirus #PinarayiVijayan
    கேரளாவில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மிக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும்.

    இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை தொடர்ந்து வந்த நாட்களில் கனமழையாக மாறியது.

    ஜூன் முதல் வாரம் தொடங்கியுள்ள நிலையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இது குறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று 9.4 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழை கோழிக்கோட்டில் 58.6 மில்லி மீட்டராகவும், கொல்லத்தில் 12.3 மில்லி மீட்டராகவும் பெய்துள்ளது.

    அடுத்து வரும் 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மிக பலத்த மழை பெய்யும். இன்றும் நாளையும் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும். 7,8,9-ந்தேதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு மாவட்ட மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.


    குமரி மாவட்ட அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

    தற்போது வங்க கடலின் மத்திய பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வெப்ப சலனத்தாலும் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்திலும், தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Tamilnews
    கேரளாவில் நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் சார்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கையில், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் ரொட்டி மற்றும் திராட்சை ரசம் ஆகியவை கொண்ட நற்கருணையானது நாக்கில் கொடுப்பதற்கு பதிலாக அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அதோடு ஞானஸ்நானங்கள், கிரகபிரவேசங்கள், திருமணங்கள் மற்றும் ஜெப கூட்டங்கள் ஆகியவற்றையும் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள், பொது கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இறை நம்பிக்கையாளர்கள் நிபா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கவும், மாநில அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார். #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese
    கேரளாவில் நிபா காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 12ம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. #NipahVirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. 

    இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மற்றும் கூடுதல் சுகாதாரத்துறை செயளாளர் ராஜீவ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் திறப்பதை ஜூன் 12-ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அம்மாநில பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய பணியாளர் தேர்வுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிபா காய்ச்சல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் தேதியை ஒத்திவைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.#NipahVirus
    கேரளாவில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரியாஸ்.

    முகம்மது ரியாசுக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் வீடு அருகே 18 வயது வாலிபர் ஒருவரும் வசித்து வந்தார். அந்த வாலிபருடன் முகம்மது ரியாசின் மகளுக்கு காதல் மலர்ந்தது.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முகம்மது ரியாசின் மகள் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை முகம்மது ரியாஸ் தேடியபோது அவர் 18 வயது வாலிபருடன் சேர்ந்து வாழ்வது தெரிய வந்தது.

    18 வயது வாலிபரை மகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த முகம்மது ரியாஸ் இதுபற்றி கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

    அதில், 18 வயது வாலிபருடன் வசிக்கும் மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறி இருந்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றாக வாழ்பவர்களை கோர்ட்டால் பிரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை.

    திருமண வயது வரவில்லை என்பதற்காக அவர்களை பிரிக்க முடியாது. எனவே 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று தீர்ப்பளித்தனர்.

    இந்தியாவில் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இதுபோல ஆணுக்கு 21 வயது நிறைவடைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    நிபா காய்ச்சால் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. #NipahVirus #Kerala

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரசின் (25) என்பவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை முடிவுகள் வந்தது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் அவர் நிபா வைராசால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

    இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NipahVirus #Kerala
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #PinarayiVijayan #PetrolDiesel
    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 16 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே நேற்று குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடந்தது. இதில், மாநில அரசு தனது விற்பனை வரியை குறைத்து கொள்வதென முடிவானது. 

    இதுதொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தின் விற்பனை வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறையும். இது மக்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    தற்போது, கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 74.05 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. முதல் மந்திரியின் உத்தரவை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. 
    #PinarayiVijayan #PetrolDiesel
    ×