search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97927"

    • பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மல்யுத்த வீராங்கனைகளை கைது ெசய்த போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    தருமபுரி,

    பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்புஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் வாலிபர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்த போலீசாரை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்புஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மல்லிகா மாவட்ட தலைவர் ஜெயா, மாவட்ட துணைத்தலைவர் பூபதி ,மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி , நகரசெயலாளர் நிர்மலா ராணி,ஒன்றிய தலைவர் தமிழ்மணி ஒன்றிய செயலாளர் மீனாட்சி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சிலம்பரசன் மாவட்ட நிர்வாகி குப்பன், மணிகண்டன், ஆகியோர் பேசினர்.

    • புதுக்கோட்டையில் பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    மல்யுத்த வீராங்களைகள் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டையில் மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கணைகள் ஆகியோர் தங்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரன் சிங் மீது கடந்த ஜனவரி 18-ந் தேதி அன்று குற்றம் சாட்டினர். இந்தப் புகாரின் அடிப்படையில் டில்லி போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரங்கணைகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கணைகள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த விராங்கணைகள் மீதான வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்திஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசீலா தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் டி.சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி, எஸ்.சந்தோஷ்குமார், எம்.மகாலெட்சுமி, முத்துமாரி, டேவிட், தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.சோலையப்பன், ஆர்.சுப்பிரமணியன், என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றன.

    • வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    வாடிப்பட்டி

    திருச்சியில் வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் துரைப்பாண்டி, மாவட்ட இணை செயலாளர் இங்கர்சால், வட்டத் தலைவர் சுப்புலட்சுமி, வட்ட மூத்த உறுப்பினர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஒட்டு மொத்தமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்களை அவமா னப்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையே தேவையில்லாத ஒன்று என பேசியதை வன்னையாக கண்டி க்கின்றோம்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவத்தார். இதில் ஜெயராமனை கண்டித்து கோஷ மிட்டனர். ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய பணிமேற்பா ர்வையாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

    • பிரபாகரனை தாக்கியதில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனின் பதவியை பறிக்க வேண்டும்.
    • வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், பாதுகாப்பு வழங்க வேண்டும்

    கிருஷ்ணகிரி

    திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா நரசிங்கபுரம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் மீது கடந்த 27-ந் தேதி நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட தி.மு.க.வைச் சார்ந்த 3 பேர் தாக்குதல் நடத்தினார்கள்.

    இதை கண்டித்து மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பூபதி, மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் அரவிந்த் நன்றி கூறினார்.

    இதே போல், கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் குருநாதன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார். இதில் தாசில்தார் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர் பிரபாகரனை தாக்கியதில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனின் பதவியை பறிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    • மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மானாமதுரை

    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பரமாத்மா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, பொருளாளர் காசிராஜன், முனியராஜ், வெள்ளமுத்து, முத்துராமன், குமரேசன், பெலிக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் வட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • வட்டாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    முதுகுளத்தூர்

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகரன் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மணல் கொள்ளையர்களை கண்டித்தும், குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் முதுகுளத்தூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் வட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர், அய்யாத்துரை, வட்டத் தலைவர் பெரியசாமி, செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சிங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்து கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விற்பனையாளர்கள், உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கோவில்பட்டி:

    தமிழக அரசு எடை அளவு முத்திரை சட்டத்தின்படி எடை அளவுக்கான முத்திரை கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்ததை கண்டித்தும், நகைக் கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகளுக்கான முத்திரைக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்தும் கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துராஜ், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் கண்ணன், பொருளாளர் தினேஷ், மொபைல் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் லாலா ஸ்வீட்ஸ் விற்பனையாளர்கள், கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், செல்போன் விற்பனையாளர்கள், மருந்து வணிகர்கள், பூச்சி மருந்து மற்றும் உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஊராட்சிகளின் மக்கள் கோரிக்கைகள், குடிநீர், சாலைவசதி, சுகாதாரத்தை பேணி காக்க வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கான தினக்கூலியாக ரூ.478 வழங்கிட கோரியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட கோரியும், பூலாங்குளம் ஊராட்சியில் போலியான வீட்டு ரசீதுகள் அச்சிட்டு லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் கீழப்பாவூர் ஒன்றிய கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து.

    பாவூர்சத்திரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மாவட்ட தலைமை குழு உறுப்பினர் வேல் முருகன், சுப்பிர மணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாடசாமி, மாதவன், வேலு, பேச்சிமுத்து மற்றும் பீடி சங்கத்தலைவர் அய்யம்பெருமாள், விவசாய சங்க தலைவர், சமூக ஆர்வலர் திருமுருகன் ஆகியோர் பேசினர். ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் அண்ணாதுரை, சிவராஜன், முத்துலட்சுமி, ராமசாமி, பாலசுப்பிரமணியன், கருப்பையா, அரிச்சந்திரன், நடராஜகுமார், சரவண விநாயகன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சுடலை மாடன், சின்னபாண்டியன், பீடி சங்க தலைவர் ஆறுமுகராஜ், கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ராமர்பாண்டியன், கட்டுமான சங்க தலைவர்கள் குமார், பலவேசம், பூலாங்குளம் சக்திவேல் முருகன், ராமநாடன், செட்டியூர் மாரியப்பன் மற்றும் தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள்,பெண்கள் உள்பட78 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். கீழப்பாவூர் ஒன்றிய பகுதி ஊராட்சிகளின் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.வி.சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    யாராலும் வீழ்த்த முடியாது

    ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பலர் நினைத்தனர். அ.தி.மு.க.வை வழிநடத்தக்கூடிய தகுதியோடு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஆகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க.வையும் வீழ்த்த முடியாது.

    தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள். அதனால் தான் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியாகி இருக்கிறார்கள். சாராய சாவுக்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், மாவட்ட இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.முத்துவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், துரை.செந்தில், துரைமாணிக்கம், தண்டாயுதபாணி, கல்யாணசுந்தரம், கோவி.இளங்கோ, மலை.முருகேசன், முருகானந்தம், அருணாச்சலம், சாமிவேல், கலியமூர்த்தி, முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் பாலைரவி, 51-வது வட்ட செயலாளர் மனோகர், முன்னாள் விளார்ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், கலைவாணி, காந்திமதி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, அண்ணா தொழிற்சங்க கும்பகோணம்அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் திரு நீலகண்டன் , அதிமுக பிரதிநிதிகள் ஏடி சண்முகசுந்தரம், நடராஜன்,மோகன் ,தங்க கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ஹேமா பூபதி, மாணவரணி முருகேசன், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் துறை கோ. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கோவிதனபால், ஆசைத்தம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவ.ராஜேஷ் கண்ணன், விவசாய அணி துணை செயலாளர் சிவராமன், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, பேரூராட்சி துணை தலைவர் மகேந்திரன் , தெலுங்கன் குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சு, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மனோகரன், முன்னாள் நகரச் செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

    • சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் லதா வரவேற்றார்.

    இதில் மாநிலத்தலைவர் கலா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட செயலாளர் ராமதேவன், மாநில செயலாளர் சிவபழனி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளாளர் வேம்பு நன்றி கூறினார்.

    • காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராதா, காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனார். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தொடக்க உரையாற்றினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்டத் தலைவர்கள் ஜெய்சங்கர், சரவணன், மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் சிறப்புரை ஆற்றினர்.

    மாநில துணைத் தலைவர் மஞ்சுளா நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.

    இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல் அமைச்சரின் தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலைச் சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில், 200 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×