search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97927"

    • தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
    • தஞ்சாவூரில் போலி மதுபானங்களால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் நடந்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே காவல்துறையை கையில் எடுத்துக் கொண்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி உள்ளது. கள்ளச்சாராயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலர் இறந்துள்ளனர். தஞ்சாவூரில் போலி மதுபானங்களால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ., படுகொலை செய்யப்பட்டுள்ளார். கரூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். சி.பி.ஐ., ரெய்டு குறித்து போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவில்லை என கூறுகிறார்.

    இதற்கெல்லாம் பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

    ஏற்கனவே மின்கட்டணம், சொத்து வரி, பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. தற்போது தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் இது போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தற்போது ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கி பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறுகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனில் அக்கறை காட்டுவது இல்லை. சுற்றுலாபயணிகள் அதிகமாக வரும் நீலகிரியில் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் கடும் அவதிப்படுகின்றனர்.

    நீலகிரியில் போதைப் பொருட்கள் பழக்கம் அதிக அளவில் உள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்றார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுணன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்சீலன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    இதில் பாசறை மாவட்ட செயலாளரும், மாவட்ட துணை செயலாளர் கோபாகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு மற்றும் நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் தலைமையில் டவுன் தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் டவுன் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-க்கு விண்ணப்பித்து காலதாமதத்தை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில், புஷ்பா, சுப்பையா, சண்முகத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சத்துணவு திட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கண்டித்து புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியா்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அன்பு தலைமை தாங்கினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தி.மு.க ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலா ளரும், எம்.எல்.ஏ. வுமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நேர்மையாக செயல்படும் அரசு ஊழி யர்கள் அரசு அலுவல கத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர்.

    தி.மு.க ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர். மக்களின் ஆதரவோடு, ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தோடு, எடப்பாடியாரின் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றார்.

    ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வ மணி, ஸ்டிபன் அருள்சாமி, சேவிவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, சோனை ரவி, கோபி, ஜெக தீஸ்வரன், பாரதிராஜன், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகளிரணி வெண்ணிலா சசிகுமார், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலா ளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஸ்நிலையம் அருகே தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெய பெருமாள், முனியாண்டி, முத்துராமலிங்கம், சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன், பனைக்குடி கூட்டுறவு சங்கதலைவர் ராஜா, பட்டமங்களம் கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன், வரிசையூர் வீர மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் பேசுகை யில், நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டிடப்பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவா ரணம் வழங்க வேண்டும்.

    நரிக்குடி அருகே உள்ள உண்டுறுமி கிடாக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக்கழிவுகள் எரியூட்டும் நிலையத்தை நிரந்தரமாக தடை செய்து மூட வேண்டும் என்றார்.

    • தமிழக அரசை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • மாவட்ட பொறுப்பாளர் வரகூர் அருணாசலம் தலைமை நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் காந்தி சிலை முன்பு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான வரகூர் அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.இதில் மாவட்ட அவைத்தலைவர் குணசீலன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், செல்வமணி, ரவிச்சந்திரன், சசிக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் ராஜாராம், ராணி, ராஜேஸ்வரி, முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன், கருணாநிதி, டாக்டர் நவாப்ஜான், குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், துறைமங்கலம் சந்திரமோகன், வக்கீல் ராமசாமி, கீழப்புலியூர் நடராஜன், மருவத்தூர் வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

    • அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
    • ஒரே மையத்தில் இரண்டு திட்டங்களை தனிநபா்களை வைத்து சமைப்பது சாத்தியமில்லை.

    திருப்பூர் :

    திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள் கூறியதாவது :- அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாா்வசம் (சுயஉதவிக் குழு பெண்கள்) ஒப்படைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஒரே மையத்தில் இரண்டு திட்டங்களை தனிநபா்களை வைத்து சமைப்பது சாத்தியமில்லை. ஆகவே, சத்துணவு மையங்களில் உள்ள உணவுப் பொருள்கள், பாத்திரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தனியாரிடம் மையத்தின் சாவியைக் கொடுப்பதில்லை என்று சங்கம் முடிவெடுத்துள்ளது.மேலும் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்றனா்.

    இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளா் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • அரியலூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட காரணமான தி.மு.க.வை கண்டித்தும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும்க ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், முன்னாள் அரசுவக்கில் குலோத்துங்கன், சண்முகம், சாந்தி, மாணவரணி சங்கர்,மகளிரணி ஜீவா, இளைஞரணி சிவசங்கர், வக்கில்அணி வெங்கடாஜலபதி, சிறுபான்மைபிரிவு அக்பர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் சிவபெருமாள், ஒன்றியசெயலாளர்கள் பாலு, செல்வராஜ், நகர செயலாளர் செந்தில், நகர பொருளாளர் கண்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, செங்கமலை, ஜெயங்கொண்டம் தங்கபிச்சமுத்து, செல்வராஜ், வக்கீல் கோபாலகிருஷ்ணன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    • தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.

    இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி, இன்று டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக அமைப்புச் செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன் வரவேற்றார்.

    மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் திருப்பனந்தாள் தெற்கு பாரதிமோகன், துணைச் செயலாளர்கள் தவமணி, இணை செயலாளர் இளமதி சுப்பிரமணியன், பொருளாளர் கண்ணபிரான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய செயலாளர்கள் திருவிடைமருதூர் வடக்கு அசோக்குமார், திருவிடைமருதூர் தெற்கு முத்துகிருஷ்ணன், திருப்பனந்தாள் வடக்கு கருணாநிதி, பாபநாசம் மேற்கு கோபிநாதன், பொற்றாமரை குளம் பகுதி செயலாளர் பத்ம. குமரேசன், மகாமககுளம் பகுதி செயலாளர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    மயிலாடுதுறை : இதைபோல் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

    நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் அபிராமி திடலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், வேதராண்யம் எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நாகை அ.தி.மு.க. நகர கழக செயலாளர் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    திருவாரூர்: இதைப்போல் திருவாரூர் ரெயில் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் கட்சி அமைப்பு செயலாளர் கோபால், சிவா, ராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் போலீசார் செய்திருந்தனர்

    • தொடக்க கல்வித்துறையில் விதிகளுக்கு புறம்பாக நிர்வாக மாறுதல்
    • ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான கோர்ட்டு வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்க கூடாது

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு தொடக்கப்பள்ளி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற பொது மாறுதல் நடைபெறும் என்று அறிவித்து விட்டு தொடக்க கல்வித்துறையில் விதிகளுக்கு புறம்பாக நிர்வாக மாறுதல் வழங்கப்படுவதை கண்டித்தும், தொடக்கக்கல்வி துறையில் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளை ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான கோர்ட்டு வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெசி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் எட்வின் பிரகாஷ், மாநில துணை தலைவர் சேவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மக்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும்.

    மதுரை

    தேவேந்திரர் மக்கள் நல சங்கம் சார்பில் தேவேந்திரன் தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் இட பங்கீடு வழங்கிட வேண்டும். வன்னியர்களுக்கான 10.5சதவீத இட ஒதுக்கீடு ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, முன்னாள் கவுன்சிலர் வீரகுமார், பூமிநாதன் யாதவ், .பா.ஜ.க. சிவாஜி, கிங்சுந்தரம், வழக்கறிஞர் சரவணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×