search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • மேலூர் அருகே பட்ட சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் உள்ள பிரான்மலை திருமலைசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பிரான்மலை ராமசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் யாகசாலையில் இருந்து காப்புகட்டிய பக்தர்கள் புனித தீர்த்ததை எடுத்து சென்றனர். பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோவில் முன்பு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கூத்தப்பன்பட்டி பெரியஅம்பலம், சின்னஅம்பலம் வகையாறவினர் செய்திருந்தனர்.

    • உப்பிலியபுரம் அருகே மாராடி வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    உப்பிலியபுரம்,

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மாராடியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பூமி நீளாதேவி, ஸ்ரீபெருந்தேவித்தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதிதாக ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சயனாதி வாசம், பள்ளி கொண்ட ரெங்கநாதர், ஆஞ்சநேயர் கருடன் , விமானம், நூதன உற்சவ மூர்த்திகள் ஆலய விமானம் நிறுவப்பட்டது.

    இதையடுத்து புதிய பிம்ப பிரதிஷ்டையை அடுத்து ஸ்ரீசுதர்ஸன ஹோமம், லஷ்மி ஹோமம், சங்கல்பம், வாஷ்து ஹோமம், யாகசாலை, பூர்ணாகுதி, திருக்குடங்களுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் சந்தியாகு, பாலமுருகன், இளங்கோவன் மற்று்ம் 20 போலீசார் பாதுகாப்பு பணியினில் ஈடுபட்டனர்.

    உடையார் பாளையம் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவில் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 4 நாட்கள் 6 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மஹாபூர்னாகுதி, மகா தீபாரதனை நடைபெற்று புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது.வேத விற்பன்ன ர்கள்மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கை அதிர,கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.விழா ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் க.வெங்ட்ராமன், தர்மகர்த்தா சூரியநாராயண், நாட்டார்கள் இளங்கோவன், தர்மன், மற்றும் விழா திருப்பணி குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.



    • காடூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காடூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், பூர்ணபுஷ்பகலாம்பிகா, சமேத படைகாத்த அய்யனார், செம்மலையப்பா, பூமலையப்பா, முத்தையா , ராகு. கேது, 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசி லிங்கங்கள், 9 கிரக லிங்கங்கள், அஷ்ட லிங்கங்கள், கருப்புசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று அதிகாலை மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் காடூர் பரம்பரை அறங்காவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ காணியானர்கள், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



    • சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
    • பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருஞானசம்பந்தர், இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞானப்பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான 'தோருடைய செவியன்' என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு.

    இக்கோவிலில் திருஞான சம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் குடமுழுக்கு விழா 32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் நடந்தது.

    குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. அன்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்கள் அமைக்கப்பட்ட யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடந்தது.

    கடந்த 20-ந் தேதி(சனிக்கிழமை) முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 21-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி (திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகளுக்கு மகா குடமுழுக்கும் நடந்தது. செவ்வாய்க்கிழமை 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலை குண்டத்தில் இருந்து கடம் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவில் உட்பகுதியில் வலம் வந்தது. பின்னர் சட்டை நாதர், பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி உள்ளிட்ட கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.

    அப்போது கீழ கோபுரம் மேற்பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் வலம் வந்து தெற்கு மேலகோபுரம், வடக்கு கோபுரம் வழியாக சுற்றி வந்து பின்னர் மலைக்கோவில் மீது மலர் தூவியது. அதனைத்தொடர்ந்து ராஜகோபுரம், தெற்கு கோபுரம், மேற்கு கோபுரம், வடக்கு கோபுரங்கள் மீது மலர்களை தூவியது. அதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் தரு்மபுரம் ஆதீனம் நேரில் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.

    குடமுழுக்கு விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சட்டைநாதர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்தார். குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தரு்மபுரம் ஆதீனம் நினைவு பரிசு வழங்கினார்.

    தொடர்ந்து யாகசாலை குண்டம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் இசை கலைஞர்கள், ஓதுவார்கள், திருப்பணி உபயதாரர்களுக்கு தருமபுரம் ஆதீனம் நினைவு பரிசு வழங்கினார்.

    குடமுழுக்கு விழாவில் கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், தமிழ் சங்க தலைவர் மார்கோனி, நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், நகர வர்த்தக சங்க தலைவர் எஸ்.கே.ஆர்.சிவசுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், பழனியப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.குடமுழுக்கு விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • நேற்று காலை 8 மணி முதல் 10 மணி மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோவில் ஐயர் விவேக் செய்து வைத்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வனப்பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் இன்று காலை 4.30 மணிக்கு முதல் 6 மணி வரை கோவிலில் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு கோவிலை சுற்றி புனித நீர் எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ரத்தின விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோவில் ஐயர் விவேக் செய்து வைத்தார். கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அலங்காநல்லூர் அருகே சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 4 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் 4 கால சிறப்பு ஹோமங்கள் நடந்தன. மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடானது. புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ஜெயசீலன் மற்றும் கோவில் பங்காளிகள், கிராம மக்கள் செய்தனர்.

    • பாலமேடு அருகே உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு கிழக்கு தெருவில் அமைந்துள்ள மார்நாடு கருப்புசாமி, ராக்காயி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த பூஜையில் மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.

    • நாளை பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி தேவி திருவீதி உலா நடக்கிறது.
    • நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா நடக்கிறது.

    சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் புகழ்மிக்க ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் கோபுரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்த்து வர்ணம் பூசி திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு திங்கட்கிழமை காலை முதல் கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.இன்று காலை மகா பூர்ணாகுதி முடிவுற்று புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலின் அர்ச்சகர்கள் சுப்ரமணிய குருக்கள், நடராஜ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று ராஜகோபுரம், விமானங்களுக்கும், பரிவார மூர்த்தி கள்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாசர்ல ஹேமபூசனம் தலைமையில் புவனகிரி வெங்கடேஸ்வரலு, கொள்ளி லீலாராம்,மாசர்ல சீனிவாசலு, பி.முனி சந்திரய்யா மற்றும் விழா குழுவினர்களும்,கிராம பொது மக்களும், பக்தர்களும் செய்திருந்தனர். நாளை மாலை பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி தேவி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா நடக்கிறது.

    • கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.
    • காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அழகு நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இதையடுத்து அந்த கோவிலை தற்போது இருகூர் பேரூராட்சி தலைவராக உள்ள சந்திரன் முயிற்சியால் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நேற்று மாலை விநாயகர் பூஜை, முதலாம்கால வேள்வியும், இன்று (புதன்கிழமை) 2-ம் கால வேள்வி, சிவகணநாதர் வேள்வி விஷேச வழிபாடு, சூரிய சந்திர வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, மலர் அர்ச்சனை வழிபாடு, காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெறும். நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு 3-ம் கால வேள்வி, திரவிய வேள்வி ஆகியவை நடக்கிறது.

    அன்று காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரன் தலைமையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்குதல், குருமகா சந்நிதானம் அருளுரை, மகா அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு செயலாளர் உச்சான் வீடு சின்னதம்பி, தலைவர் ஆண்டாள் கருப்பண்ணன், ஆண்டாள் காந்தி சர்க்கரை செல்வராஜ் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    • இன்று காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருச்சிற்றம்பலம்- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அலிவலம் கிராமத்தில், பழமையான பூர்ண புஷ்கலா மண்ணுமுடைய அய்யனார் கோவில் உள்ளது. அதே பகுதியில் பக்தநேய ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இவ்விரு கோவில்களிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்றன. திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. மாலை கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    இன்று(புதன்கிழமை) காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    நாளை( வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு குறிச்சி செந்தில் ஆண்டவர் மந்திராலய நிறுவனர் தன. ராமலிங்க சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு மண்ணுமுடைய அய்யனார், பக்தநேய ஆஞ்சநேயர் மற்றும் அதன் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அலிவலம் ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், திருப்பணி குழுவினர் மற்றும் அலிவலம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.

    • பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கரூர்:

    நெய்தலூர் கிராமம், கட்டாணி மேட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கருப்பசாமி, வீரமாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் புதிதாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊர் மக்கள் பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து யாகசாலையில் வைத்தனர். பின்னர் முதல் கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜைகள் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பகவதி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×