search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி இந்திரா நகரில் அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த மூன்று நாட்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நேற்று யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவில் மூலஸ்தான விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



    • மேலூர் அருகே சூரக்குண்டு பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமம், தெற்கு வளவாருக்கு பாத்தியப்பட்ட 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோவிலின் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது.

    மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி குருக்கள் கணபதி ஹோமம் செய்து பூஜையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து யாகசலை பூஜைகள் நடந்தன. நேற்று சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதனை . கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.
    • 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்ட ளை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

    ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு 108 சங்குகள் மற்றும் 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.

    மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைக்கு பிறகு சங்குகள் மற்றும் கலசங்கள் அடங்கிய புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுப்பிரமணியசாமி மற்றும் வள்ளி தேவசேனாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தேவிபட்டினம் இலங்கம்மன் காளி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காந்திநகர் கிராமத்தில் இலங்கம்மன் காளி கோவில் உள்ளது. இந்த கோவில் ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் இன்று தொடங்கியது.

    வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்திற்கு பூஜை நடைபெற்று கடம் புறப்பாடாகி கோவிலை 3 முறை வலம் வந்து கும்பத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனைக்கு பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவிபட்டினம் காந்திநகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேக விழா இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.
    • நாளை சிறப்பு ஹோமம் நடக்கிறது.

    திருப்பதி கபிலதீர்த்தத்தில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஆச்சார்யாவரணம், புண்யாஹவச்சனம், மிருத்யுங்கிரஹணம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை புண்யாஹவச்சனம், பஞ்சகவ்யப்ராசனம், வாஸ்து ஹோமம், அகல்மாஷ பிராயச்சித்த ஹோமம், ரக்ஷாபந்தனம், மாலை அக்னி பிரதிஷ்டை, கும்ப ஸ்தாபனம், கும்பராதனை, சிறப்பு ஹோமம் நடக்கிறது.

    நாைள மறுநாள் (சனிக்கிழமை) காலை யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள், பஞ்சகதீவாசம், ஷீராதிவாசம், ஜலாதிவாசம், ரத்னந்யாசம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், மாலை பிம்பவஸ்து, நவ கலச சதுர்தச கலச ஸ்நாபனம், மகாசாந்தி, திருமஞ்சனம், பூர்ணாஹுதி, சயனாதிவாசம் நடக்கிறது.

    14-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடக்கிறது. அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    • 19-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
    • 20-ந் தேதி நாராயணபுரம் லோகம்மாள் பஜனை நடக்கிறது.

    வேலூர் மாவட்டம் பென்னாத்தூரை அடுத்த பாப்பாந்தோப்பு கிராமத்தில் முண்டக கண்ணி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் முதல் நாளான 18-ந் தேதி (வியாழக்கிழமை) பந்தக்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பால்குடம், பன்னீர் குடம், மஞ்சள் குடம், சந்தன குடம் மற்றும் அம்மனுக்கு சீர்வரிசை ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலத்துடன் நடைபெறுகிறது.

    20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நாராயணபுரம் லோகம்மாள் பஜனை நடக்கிறது. 21 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு ராஜ வாத்தியங்களுடன் சிலம்பாட்டம் நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து 6 மணிக்கு புனித கலச நீர் எடுத்து வருதல், மங்கள இசை, கணபதி ஹோமம், கோ பூஜை, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம், முதல்கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறும். 22 -ந் தேதி (திங்கட்கிழமை) யாகசாலை பூஜை, ஹோமம், தம்பதி பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி யாத்ராலயம், கடம் புறப்பாடு, மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை பிரம்ம ரிஷி நாகச்சூரியன் சாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. முன்னதாக 19-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    • ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • வைஷ்ணா தேவி கோவிலுக்கு செல்லும் ஜம்மு - கட்ரா வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    ஜம்முவில் உள்ள மசீன் கிராமத்தில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொலைதூரத்தில் இருந்து திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. உபகோவில்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.

    இக்கோவிலில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை விக்கிரக பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறும். 8-ந்தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கான இலவச தரிசனம் தொடங்கும்.

    வைஷ்ணா தேவி கோவிலுக்கு செல்லும் ஜம்மு - கட்ரா வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது. நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதாகவும், இங்கு 24 மணி நேரம் நிரந்தரப் பாதுகாப்பு வழங்குமாறு ஜம்மு அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தர்மபிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து முக்கிய பகுதிகளிலும் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், அமராவதி மற்றும் பிற பகுதிகளில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மும்பையில் விரைவில் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்படும். அதேபோன்று அகமதாபாத் மற்றும் ராய்ப்பூரில் கோவில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 500 ஆண்டுகள் பழமையானது
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கு தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அதிமுக மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்கராஜா, நிர்வாகிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலூர்

    மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2-ந்தேதி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதல் கால யாக பூைஜ, 2-ம் கால யாக சாலை பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். யாக சாலையை சுற்றி வந்து திருப்புவனம் ராஜ.சொக்கலிங்கம் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தத்தை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது வாகனத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிள்ளையாருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை ஜோதிநகர் மற்றும்கும்பாபிஷேக திருப்பணிக்குழு நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஜோதி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிர சித்தி பெற்ற மிகவும் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் தர்மகர்த்தா பூவை எம். ஞானம் தலைமையில் கும்பாபிஷேக விழா குழு அமைக்கப்பட்டு கோவில் முழுமையாக புதுப் பிக்கப் பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் விழா தொடங்கியது.

    2-ம் நாள் யாகசாலை பூஜையில் திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி , எந்திர பூஜைகள் நடைபெற்றன. 3-ம் நாள் பூஜையில் லட்சுமி சஹஸ்ரநாமம் பாராயணம், மந்திர வேள்வி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜை கள் நடைபெற்றன.

    நான்காம் நாள் நேற்று சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கணபதி பூஜை, நான்கு கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊத்துக்கோட்டு எல்லையம்மன் கோயில் கோபுர கலசத்தின் மீது ஊற்றி சிவாச்சாரியார் களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபி ஷேகத்தை கண்டுகளித்து தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம் மற்றும் குடும்பத் தினர் செய்திருந்தனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


    ×