search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    திருவள்ளூரில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மனைவி சிவகாமி.

    கணவரை இழந்த சிவகாமி கூலி வேலை செய்து வந்தார். இவர் தனது 16 வயது மகளுடன் கட்டிட வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சிவகாமியின் மகள் மாயமானார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் அவர் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை சிவகாமியுடன் கட்டிட வேலை செய்த ரூபன் (21) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. கட்டிட வேலை செய்ய வந்த இவர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கேளம்பாக்கத்துக்கு கடத்தி சென்றுள்ளார்.

    அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரூபனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான வாலிபர் ரூபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவள்ளூர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் விசாரணை நடைபெறுகிறது.
    பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், கத்தார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றுள்ளார். #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    துபாய்:

    பக்ரைன் நாட்டில் முடியரசராக இருப்பவர் மன்னர் ஹமது. இவரது ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெஃபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    மன்னரின் முடியாட்சியை கடுமையாக எதிர்த்தும், ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.  இதனால், அல் வெஃபாக் இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்களை மன்னர் ஹமது தடை செய்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போராடிய பலரையும் கைது செய்துள்ளார்.



    இந்த நிலையில், பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக கத்தார் நாட்டுடன் இணைந்து சதி செய்வதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    கத்தார் நாடு, ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனும், ஈரானுடனும் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு பக்ரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான உறவை முற்றிலுமாக முறித்து கொள்ள முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க தான். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

    அதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தயாராக இருக்கிறார்கள். பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளராக நான் இருப்பதால் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.


    திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

    ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தனர். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் தி.மு.க. வினரை முதலில் கட்டுக்கோப்போடு நடத்துங்கள். உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பால்பீர் கொலை வழக்கில் ஹசன் முகமது, யாசின் யூசுப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #IndianOrigin #MurderCase
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனையொட்டிய சவுதாலில் வசித்து வந்தவர் பால்பீர் ஜோஹல் (வயது 48). இந்திய வம்சாவளி. இவர் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள மார்ல்பாரோ ரோட்டில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றிய ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், கொலை செய்யப்பட்ட பால்பீர் ஜோஹலுக்கும், சொகுசு காரில் வந்த 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்த காட்சிகளை கண்டுபிடித்தனர்.

    அதைத் தொடர்ந்து காரை வைத்து, ஹசன் முகமது (24), யாசின் யூசுப் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது லண்டன் பழைய பெய்லி கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான கொலை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஹசன் முகமதுவுக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனையும், யாசின் யூசுப்புக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் தூக்கத்தில் இருந்த 100 வயது மூதாட்டியை மூர்க்கத்தனமாக கற்பழித்த 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Youthrapes #100yearoldraped
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம், நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கங்கா பிரசாத்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 100 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி கடந்த திங்கட்கிழமை பின்னிரவு வேளையில் தனது அறைக்குள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த அறைக்குள் நுழைந்த அபிஜித் பிஸ்வாஸ்(20) என்பவன் அவரை மூர்க்கத்தனமாக கற்பழித்தான். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த அபிஜித் பிஸ்வாஸை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவன்மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த சக்டா காவல் நிலைய போலீசார், இன்று கல்யானி கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். #Youthrapes #100yearoldraped 
    சென்னையில் ஒரே நாளில் 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை நகரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    பல்லாவரத்தில் வீட்டு உரிமையாளர்களை கட்டிப் போட்டு 135 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையை வீட்டு வேலைக்காரி மகாராணி மதுரையில் இருந்து ஆட்களை வரவழைத்து நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மகாராணி, சுரேஷ், அருண்குமார், செல்வம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த படித்துறை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆயிரம்விளக்கைச் சேர்ந்த சதீஷ், புளியந்தோப்பைச் சேர்ந்த ஆனந்தன், வியாசர்பாடியைச் சேர்ந்த எல்லப்பன், பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன், யானை கவுனியைச் சேர்ந்த அஜித், பாலவாக்கத்தைச் சேர்ந்த கோபி உள்ளிட்ட 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது காடுஉத்தனப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திம்மப்பாவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மப்பாவிற்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறையும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.  #tamilnews
    எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen #SriLankanCourt
    ராமேசுவரம்:

    இலங்கை கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இலங்கை அரசு இயற்றிய சட்டத்தில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.50 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகள் திரும்ப அளிக்கப்படாது போன்ற கடுமையான சரத்துகள் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிலையில் முதன்முறையாக எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம்- சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ந் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

    8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

    விசாரணையின் முடிவில் 8 மீனவர்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மற்றும் வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை சிறைத்தண்டனை விதித்து கல்பெட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    பட்டா மாற்றம் செய்ய ரூ.600 லஞ்சம் வாங்கிய ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது மகன் முகமது சலீம். இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலப்பட்டாவை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த 2008–ம் ஆண்டு பாடாலூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மணியை அணுகினார். இதற்காக தனக்கு ரூ.600 லஞ்சம் தருமாறு, முகமது சலீமிடம் மணி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அவர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 30.4.2008 அன்று கிராம நிர்வாக அதிகாரி மணியிடம், ரசாயன தடவிய ரூ.600–ஐ முகமது சலீம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் மணி மீது பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் மணி பணி ஓய்வு பெற்றார். இதனிடையே இந்த வழக்கை தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி முரளிதரன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
    எடப்பாடி அருகே வீட்டில் சிறை வைக்கப்பட்ட காதலியை நண்பர்களுடன் கடத்த முயன்ற காதலன் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (25).

    இவர் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் சிறை வைத்தனர்.

    இது குறித்து அந்த மாணவி தமிழரசனுக்கு செல்போனில் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன் அந்த மாணவியை வீடு புகுந்து கடத்தி சென்று திருமணம் செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி தமிழரசன் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேருடன் நேற்று அந்த மாணவியின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தார். பின்னர் அங்கிருந்த மாணவியை அந்த கும்பல் கடத்தி செல்ல முயன்றது. அதனை தடுத்த மாணவியின் தந்தையை தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.

    மாணவியின் தந்தை எழுப்பிய கூக்குரலை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் மீது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையம் காரக்குட்டை செல்லும் வழியில் 27 வயது மதிக்கதக்க இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு இளம் பெண்ணிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். அப்பெண் தண்ணீர் எடுத்துவர சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் திடீரென கதவை சாத்தினார்.

    பின்னர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போட்டார். உடனே ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண் தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். மேலும் சரமாரியாக தாக்கினார்.

    இளம்பெண் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் வாலிபர் வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் பட்டணம் பகுதியை சேர்ந்த விமல் ஆனந்த் (19) என்பதும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    டெக்சாஸ் நாட்டில் சிறைக்கைதிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட வாழைப்பழ பெட்டிகளுக்குள் இருந்து 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Cocaine #Texas
    ஆஸ்டின்:

    டெக்சாஸில் உள்ள ஹோஸ்டான் நகரில் உள்ள சிறைச்சாலைக்கு வாழைப்பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 50--க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் வாங்கி பெட்டிக்குள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.

    அப்போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை கண்ட அதிகாரிகள், சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தியபோது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Cocaine #Texas
    ×