search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98443"

    • குருசாமியிடம் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போத்திராஜ், ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவர் கடந்த 4 ஆண்களுக்கு முன்பு நாட்டாமையாக இருந்ததாகவும், அதற்கு முன்பு சுப்பையா என்பவர் நாட்டாமையாக இருந்த தாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாத கூட்டம் நடக்கும்போது குருசாமி, சுப்பையாவிடம் பொதுக்க ணக்கில் பற்றாக்குறையாக இருந்த பணத்தை கட்ட வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ்(37), முத்துராஜ்(32), குமார்(44), சுப்பையா, செந்தில்குமார்(47) ஆகியோர் குருசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தலையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல் குமார், ஊர் பொது வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றார். மாதக் கூட்டத்தில் வாடகை கட்ட வந்தபோது அங்கிருந்த குமாரின் தம்பி அந்தோணி ராஜ் என்பவரிடம் குருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க வந்த போத்திராஜ்(31), ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருசாமி மற்றும் குமார் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் அந்தோணி ராஜ், போத்திராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குருசாமி, முத்துராஜ், குமார், சுப்பையா, செந்தில்குமார், ராஜ் ஆகியோரை வலைவீசி தேடுகின்றனர்.

    • பெண்ணிடம் மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சபரிஅம்மாள் (வயது 40). நேற்று காலை இவரது வீட்டின் முன்பு 2 வடமாநில வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் சபரி அம்மாள் விசாரித்தபோது,   பாலீஷ் செய்து தருவதாக கூறி உள்ளனர்.

    அதனை நம்பிய சபரி அம்மாள் தனது 4 பவுன் தாலி செயினை எடுத்து பாலீஷ் செய்வதற்காக அவர்களிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து நகையை பாலீஷ் போட்டு சபரி அம்மாளிடம் அந்த வாலிபர்கள் கொடுத்தனர்.

    அப்போது நகையின் எடை குறைந்திருப்பதாக சபரி அம்மாள் உணர்ந்தார். அதுகுறித்து அந்த வாலிபர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சபரிஅம்மாள் அவர்களிடம் மீண்டும் கேட்டுள்ளார்.

    உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்தனர். அதில் ஒரு வாலிபரின் கையை சபரிஅம்மாள் இறுக்கி பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அந்த வாலிபர் சபரி அம்மாளின் கையை உதறி விட்டு ஓடி உள்ளார்.

    சபரிஅம்மாளின் சத்தத்தை கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மிதுன்குமார், சர்வன்குமார் என்பது தெரியவந்தது. நகையை எடைபோட்டு பார்த்தபோது 26 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து சபரி அம்மாள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 20). அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று அந்த பகுதியில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அங்கு முளைப்பாரி எடுத்து செல்வதை மனோஜ் பார்த்து கொண்டிருந்தார். அவர் காலில் செருப்பு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் செருப்பு அணிந்து பந்தலுக்குள் நிற்கக்கூடாது என கூறி வெளியே செல்லும்படி கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, மனோஜை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மனோஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அவர் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
    • கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இதில் டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். மேலும் ஷாருக் ஷைபியை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண் டது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை அதே ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த புஷன்ஜித் சித்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கண்ணூரில் நேற்று நடந்த சம்பவத்திற்கும், ஏற்கனவே 3 பயணிகள் தீவைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த 2 சம்பவத்தையும் இணைத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்காக கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் இதுதொடர்பான தகவல்களையும் சேகரிக்க உள்ளனர். சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட மாநிலங்களில் சந்தேகப்படும் நபர்கள் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    இதற்காக 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான ஷாருக் ஷைபியின் காவல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர்.
    • நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக 30 கிலோ மீட்டர்தூரத்தில் இலங்கை நாட்டின் தலைமன்னாரை சென்றடைய முடியும்.

    இதன் காரணமாக 2 நாடுகளுக்கும் இடையே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இங்கிருந்து கடல் அட்டை, மஞ்சள் கிழங்கு, வலி நிவாரண மாத்திரைகள், பீடி இலைகள் மற்றும் அந்த நாட்டில் தட்டுப்பாடுடைய பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் இலங்கையில் இருந்து கஞ்சா, தங்க கட்டிகள் உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. தற்போது மதுரை, திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களில் சுங்கத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை அதிக அளவில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.

    கடத்தல்காரர் ஒருவரின் செல்போன் நம்பரை கண்டறிந்து அதனை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த போன் மூலம் நடந்த உரையாடல்களும் சேகரிக்கப்பட்டது. அப்போது கடந்த 31-ந்தேதி பிளாஸ்டிக் படகு மூலம் 3 பேர் தங்க கட்டிகளை கடல் வழியாக கடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினர். இதைத்தொடர்ந்து இரு துறையினரும் கூட்டாக செயல்பட்டு மண்டபம் அருகே உள்ள கடல் வழித்தடத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது மணாலி தீவு அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த 3 பேர் ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர். இதை கண்ட அதிகாரிகள் மற்றும் கடலோர போலீசார் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததும், அதிகாரிகளை கண்டதும் அந்த பார்சல்களை கடலில் வீசியதும் தெரியவந்தது.

    மேலும் 3 பேர் கொடுத்த தகவலின்பேரில் அதே நாள் இரவு மற்றொரு படகில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 21.26 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    இதற்கிடையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். கடந்த 2 நாட்களாக மணாலி தீவு அருகே இரவும், பகலுமாக கடற்படை வீரர்கள், நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் ஆகியோர் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டி பார்சல்களை தேடினர்.

    கடலுக்கு அடியில் சென்று தேடும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் நவீன எந்திரங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட முயற்சிக்கு பிறகு நேற்று மதியம் கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சல் கண்டெடுக்கப்பட்டது. மண்டபம் கடற்கரை முகாமுக்கு கொண்டு வரப்பட்ட பார்சல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    அப்போது அதில் 11.60 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.இந்த கடத்தல் சம்பவத்தில் மட்டும் மொத்தம் 32.80 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ20.20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தன.

    இதற்கிடையில் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை 2 படகுகளில் கடத்தி வந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த முகமது நாசர் (வயது 35), சாதிக் அலி (32), முகமது அசார் (30), அப்துல் அமீது (33), தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ரவிக்குமார் (46) என தெரியவந்தது.

    அவர்களை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மதுரையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு இன்று அழைத்து வந்தனர். அங்கு தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்பாக 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? யாருக்காக தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    வளைகுடா நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பண பரிமாற்றங்கள் அதிகளவில் நடந்து வந்தன. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடு பிடியால் ஹவாலா பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் கடத்தல்காரர்கள் அரபுநாடுகளில் இருந்து ஹவாலா பணம் மூலம் தங்க கட்டிகளை வாங்கி இலங்கைக்கு கொண்டு வருகின்றனர். அந்த நாட்டில் கெடுபிடிகள் குறைவு காரணமாக கடத்தல்காரர்களுக்கு தங்க கட்டிகளை கொண்டு வருவது எளிதாக உள்ளது.

    அங்கிருந்து படகுகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி கொண்டு வந்து இங்குள்ள சிலரிடம் கொடுத்து பணமாக மாற்றி வருவதாக தெரிகிறது. அது தொடர்பாக கைதான வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடைத்தன.
    • இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக கஞ்சம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணபதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசில் கணபதி புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு நிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்த அந்த நிலத்தின் உரிமையாளர் இ.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலாவுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கிராம உதவியாளர் மாரீஸ்வரியுடன் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலா விசாரித்தார். அதில் இறந்தவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் காளீஸ்வரி(வயது33). இவர் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் 3 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணம், நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் காளீஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின்களை நிறுத்தும் லூப்லைன் பகுதியில் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக வந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 400 ஸ்லிப்பர் கிளிப்புகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் ஸ்லிப்பர் கிளிப்புகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பா ளையம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது.

    இந்த நிலையில் சந்தோஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சந்தோஷ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கிடையே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்த போது வெண்ணிலா கழுத்தின் துணிகள் சுற்றிய நிலையில் பிணமாக இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குடிபோதையில் இருந்த சந்தோஷ் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும். தான்தான் மின்விசிறியில் இருந்து உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினார். போலீசார் வெண்ணிலாவின் உடலை சோதனை செய்து பார்த்தபோது தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

    எனவே சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் 15 வேலம்பாளையம் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாக்கியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    கன்னியாகுமாரி:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள கோட்டவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை.

    இவரது மனைவி பாக்கியம் (வயது 52). இவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பாக்கியம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாக்கியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான பாக்கியத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையை அடுத்துள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் முத்துப்பாண்டி கண்டித்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர். அதன்பின் ராஜேஸ்வரி தனது தவறை உணர்ந்து இனிமேல் பரமசிவத்துடன் பழக மாட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து கணவன், மனைவி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் ராஜேஸ்வரியிடம் பேச பரமசிவம் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு, இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த பரமசிவம் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார்.

    வீட்டு திண்ணையில் தூங்கி இருந்த ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு பரமசிவம் அங்கிருந்து தப்பினார்.

    இது தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடி தலைமறைவாகிய பரமசிவத்தை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    அவர் வெளியூருக்கு எங்காவது தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே பரமசிவத்தை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பரமசிவத்தை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டிரைவர்-பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை கஞ்சிநாயக்கன்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் கிருஷ்ணா(43). டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. சகோதரர் வீட்டில் தங்கியிருந்த இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சி இந்திராநகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி தனலட்சுமி. இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதில் விரக்தியடைந்த தனலட்சுமி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மனு விசாரணை முகாமில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • மீதமுள்ள 22 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் -21, பாடாலூர் -3, மருவத்தூர்- 6, அரும்பாவூர்- 12, அனைத்து மகளிர் காவல்நிலையம் -10, குன்னம் 8, மங்களமேடு-18, வி.களத்தூர் 5, கை.களத்தூர் -4 என மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டு அதில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 22 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×