search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா நேற்றைய 250 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    ஹேண்ட்ஸ்காம்ப்

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

    5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா

    8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.


    கவாஜாவிற்கு எதிராக அப்பீல் கேட்கும் அஸ்வின், விராட் கோலி

    தற்போது வரை ஆஸ்திரேலியா 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் ஸ்டார்க் துணையுடன் இந்தியாவின் ஸ்கோரை எட்ட முயற்சி செய்வார்.
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். #ICCRankings
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது.

    3-வது மற்றும் கடைசி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளைமறுதினம் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த உடன் இந்தியா ஆஸ்திரேலியா செல்கிறது. வெளிநாட்டு தொடருக்கு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    3-வது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. தினேஷ் கார்த்திக், 5. மணிஷ் பாண்டே, 6. ஷ்ரேயாஸ் அய்யர், 7. ரிஷப் பந்த், 8. குருணால் பாண்டியா, 9. வாஷிங்டன் சுந்தர், 10. சாஹல், 11. புவனேஸ்வர் குமார், 12. கலீல் அஹமது, 13. ஷபாஸ் நதீம், 14. சித்தார்த் கவுல்.
    கடைசி 10 ஓவரில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. பின்னர் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    விராட் கோலி சதம் அடித்தும், இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா 47.4 ஓவரில் 240 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 10 ஓவரில் 72 ரன்கள் குவித்தது. இதுவே தோல்விக்கு காரணமாகிவிட்டது.

    தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘‘முதல் 35 ஓவர்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில்

    ஒத்துழைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் கடைசி 10

    ஓவர்களில் கொஞ்சம் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்.

    8 விக்கெட்டுக்கு 227 ரன்களுடன் இருந்த அவர்களை 250 முதல் 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். இருப்பினும் இது எடுக்கக்கூடிய இலக்குதான். சரியான பார்ட்னர்ஷிப் அமையாதது பின்னடைவை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருக்கும்போது பந்து வீச்சுக்கும் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். கேதர் ஜாதவ் அடுத்த ஆட்டத்திற்கு வரும்போது அணியின் கலவை சரியானதாக அமையும்’ என்றார்.

    புவனேஸ்வர் குமார் 70 ரன்களும், கலீல் அஹமது 65 ரன்களும், சாஹல் 56 ரன்களும், குல்தீப் யாதவ் 52 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். பும்ரா 35 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    புனேயில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது சேர்க்கப்பட்டனர். உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    கியெரன் பொவேல், சந்த்ரபால் ஹெம்ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹெம்ராஜ் 15 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பொவேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த விக்கெட்டையும் பும்ராதான் வீழ்த்தினார்.

    3-வது நபராக களம் இறங்கிய ஷாய் ஹோப் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த சாமுவேல்ஸ் 9 ரன்னில் வெளியேறினார்.

    4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது போட்டியில் விளையாடியது போல் அபாரமாக விளையாடியது. ஹெட்மையர் 21 பந்தில் 3 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்திருக்கும்போது டோனியால் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றப்பட்டார்.



    ஹெட்மையர் அவுட்டால் இந்தியா நிம்மதி அடைந்தது. அடுத்து வந்த ரோவ்மேன் பொவேல் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் ஷாய் ஹோப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அரைசதம் அடித்த ஷாய் ஹோப் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்

    ஹோல்டர் 32 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஷாய் ஹோப் 95 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் நேர்த்தியான யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுத்து சதத்தை தவறவிட்டார்.

    9-வது வீரராக களம் இறங்கிய நர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் 270 ரன்களை தாண்டியது. புவனேஸ்வர் குமார் வீசிய 49-வது ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகள் தூக்கினார். கடைசி ஓவரை பும்ரா வீசினார். 5-வது பந்தில் நர்ஸ் ஆட்டமிழந்தார். நர்ஸ் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் ரன்ஏதும் எடுக்கவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது.



    இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக நாக்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    3-வது ஆட்டம் புனேயில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 1 மணிக்கு சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் சுண்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். #INDvWI #Bhuvi
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது.

    முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.



    முதல் இரண்டு போட்டியில் இடம்பெறாத புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    3-வது ஒருநாள் போட்டி புனேயில் 27-ந்தேதியும், 4-வது போட்டி மும்பையில் 29-ந்தேதியும், 5-வது போட்டி நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்திலும் நடக்கிறது.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கவுகாத்தியில் 21-ந்தேதி தொடங்குகிறது.

    ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    ஆசிய கோப்பைக்கான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

    முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. ஷிகர் தவான், 4. அம்பதி ராயுடு, 5. மணிஷ் பாண்டே, 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. சாஹல், 10. குல்தீப் யாதவ், 11. முகமது ஷமி, 12. கலீல் அகமது, 13. ஷர்துல் தாகூர், 14. கேஎல் ராகுல்.
    ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார்கள். #ICC #ViratKohli
    ஐசிசி வாரந்தோறும் அணி மற்றும் வீரர்கள் தரவரிசையை வெளியிடும். இந்த வாரம் முதல் நாளான இன்று தரவரிசையை வெளியிட்டது.

    ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டனும், தலைசிறந்த வீரரும் ஆன விராட் கோலி தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். ஹிட்மேன் ரோகித் சர்மா 2-வது இடத்தில் நீடிக்கிறார். இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் 5-வது இடத்தில் உள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் 3-வது இடத்தில் உள்ளார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்திலும், சாஹல் 11-வது இடத்திலும் உள்ளனர்.

    அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 317 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCRankings #RohitSharma
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இந்தியா இரண்டு லீக், மூன்று ‘சூப்பர் 4’ மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடினார்.

    ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். 342 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் ஒருநாள் தரவரிசையில் இவரது சிறந்த தரவரிசையாகும்.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களில் 2-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வலைப் பயிற்சியைப் பார்த்து அசந்து விட்டேன் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் பிரிவிலும், சூப்பர் 4 சுற்றிலும் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு எந்த அளவிலும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். குறிப்பாக ‘டெத்’ ஓவரில் அசத்தினார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் ஐசிசி அகாடமியில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பும்ராவின் பந்து வீச்சை பார்த்து சிலிர்த்து போய்விட்டார். பும்ராவின் பந்து வீச்சு வீடியோவை காண்பித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பேன் என்றார்.



    இதுகுறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பயிற்சியின் போது நாங்கள் 20 நிமிடம் அமர்ந்து, பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்தோம். யார்க்கர், யார்க்கர் என அடுத்தடுத்து யார்க்கராக வீசி அசத்தினார். அவரது பந்து வீச்சு என்னை மிகவும் ஈர்த்தது. அதை எங்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.

    நாங்கள் பும்ராவின் பந்து வீச்சை வீடியோவை காண்பித்து, ‘டெத்’ ஓவரில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்களது வீரர்களுக்கு கற்றுக் கொடுப்போம்’’ என்றார்.

    நாளை நடைபெறும் வங்காள தேசம் - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், வெள்ளிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
    சோயிப் மாலிக், சர்பிராஸ் அகமது சிறப்பான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் பகர் சமான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஆனால் 31 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    மறுமுனையில் விளையாடிய பாபர் ஆசம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 58 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் கான் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய சர்பிராஸ் அகமது 44 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சோயிப் மாலிக் ஆட்டமிழந்தார்.



    6-வது வீரராக களம் இறங்கிய ஆசிப் அலி 21 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் ரன்வேகத்தில் தடை ஏற்பட்டது. 50 ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ×