search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98745"

    • கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
    • கடந்த 10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. பக்தர்கள் பலர் குண்டம் இறங்கும் போது தீக்காயம் அடைந்தனர்.10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது. இதைக்கண்டித்து இந்து முன்னணி அமைப்பு சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் ஆர்.எஸ்.எஸ்.கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார், கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் காளிமுத்து, கோவில் மிராசுதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே வருகிற 20-ந் தேதி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டியில், சிப்காட் எதிர்ப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
    • இதில் கொ.ம.தே.க உறுப்பினர்கள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டியில், சிப்காட் எதிர்ப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செ யலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

    கொ.ம.தே.க. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழக அரசு, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளை யப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். மேலும், இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமையும்போது, இங்குள்ள நீர்நிலைகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், கால்ந டைகள் மற்றும் இயற்கை சார்ந்த விவசாயங்கள் பாதிக்கப்படுவதுடன், நீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

    வளையப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் எடுப்பது சம்மந்தமாக, மாவட்ட நிர்வாகத்தால் அப்ப குதியில் உள்ள மக்களோடு இதுவரை சிறிய ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தவில்லை. உடனடியாக கூட்டம் நடத்தி, சிப்காட் குறித்த மக்களின் நிலைப்பாட்டை அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், நாமக்கல் மாவட்டத்தில், படித்த இளைஞர்கள், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இது சம்மந்தமாக, அமைச்சர்க ளோ, மாநில தொழில் துறை செயலாளரோ, சிப்காட் தலைவரோ, கலெக்டரோ என யாரும் இதுவரை எதுவும் உறுதிமொழி கூறவில்லை. அதனால், அப்பகுதி விவசா யிகள், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?, அமைக்கப் படாதா? என்பது குறித்து, சிப்காட் தலைவர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடத் தவறும் பட்சத்தில், சென்னை யில் உள்ள தமிழக கவர்னர் மாளிகை முன், திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி, கவர்னரிடம் இது குறித்து மனு கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் கொ.ம.தே.க உறுப்பினர்கள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
    • டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை போட வந்தவர்களையும், பொக்லைன் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, பூமி பூஜை போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    • கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
    • கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு ,ராகல் பாவி, கணக்கம்பாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில் குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.

    இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறைதகவல் தெரிவித்தும் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம் பாளையத்தை சேர்ந்த 3பேர் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டும், நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் பல்லடம்போலீஸ் நிலையத்தில்புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்நேற்று பாதிக்கப்பட்டவர்கள் பல்லடம்உடுமலை சாலையில்மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் அவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் தங்களது வேதனைகளை தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
    • பட்டா வழங்ககோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட போரக்ஸ் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை.

    இதனால் அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பட்டா வழங்ககோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் அவர்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பட்டா வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ராஜபாளையம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • இதில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போராட்ட குழுவினரிடம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ராஷியாம். ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும். சொத்து வரி குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.

    குடிநீர் இணைப்பு கட்டணம், கூடுதல் வரி அடுத்த ஆண்டில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    • தேவகோட்டை அருகே தண்ணீர் விற்பனை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாழையூர் முத்து பெரியநாயகி நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு அரசு சார்பில் குடிநீர் தேக்க தொட்டி அமைத்து வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    சமீப காலமாக இந்த பைப்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் பெரியநாயகி நகரில் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதே பகுதியில் ஆரோக்கியம் என்பவர் தனது வீட்டில் அதிக திறன் கொண்ட போர்வெல் அமைத்து டேங்கர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.

    இதனால் இவரது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நீர் தேக்க தொட்டி ஆழ்துளை கிணறுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் மின்மோ ட்டார் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

    இதுகுறித்து ஆரோக்கி யத்திடம் பலமுறை அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இனிமேல் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும், மீண்டும் தண்ணீர் விற்ப னை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியநாயகி நகர் பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்த டேங்கர் வாகனத்தை வழிமறித்து அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த ஆறாவயல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மருது, மைக்கேல் ஆகியோர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆரோக்கியம் நீண்ட நாட்களாக வியாபார நோக்கத்தில் தண்ணீர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இனிமேல் தண்ணீர் விற்பனை செய்யக்கூடாது என்று அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேலப்பாளை யம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் புதியதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில்வே பாதையில் மின் அமைப்புகள் குறித்த ஆய்வு இன்று நடந்தது.

    தென்னக ரயில்வே மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சித்தார்த்தா மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ரெயில்வே மேலாளர் சச்சிந்தர் மோகன்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாங்குநேரி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு வாகனத்தில் தொடங்கிய ஆய்வு பணி மேலப்பாளையம் வரை நடந்தது.

    இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே தண்டவாளம் மின் பாதை மற்றும் கருவிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பல பங்கேற்றனர்.

    அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்த பொதுமக்கள் சிலர், கொரோனாவுக்கு முன்பு நாங்குநேரி வழியாக 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்ற நிலையில் தற்போது 5 ரெயில்கள் மட்டுமே நாங்குநேரியில் நின்று செல்கிறது. பெரும்பாலான ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கவும் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கேரள எல்லையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனைத்து ரெயில்களும் என்று செல்லும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரியில் ரெயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதி அளித்தார்.

    • நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.
    • கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார்

    கடலூர்

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.  இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள் ஆறுகள் ஓரமாகவும் மற்றும் மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது வைடிப்பாக்கம், மோரை எவரட்புரம் பகுதியில் அகற்றப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை சரிப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் இன்று காலை சரவணபுரம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதனை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவது குறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்காக நெல்லிக்குப்பம் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 25, 26, 27 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று கமிஷனர் மகேஸ்வரி வாகனத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர பின்னர் எந்தவித அனுமதியும் இல்லாமல் குப்பைகள் கொட்டி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் குப்பைகளை எரித்து வருவதால் மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதால் நாங்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக நீங்கள் நேரில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் இதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது 

    • அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)குழந்தை எதுவும் இல்லை .
    • 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் காலணிடேங்க்தெருவைசேர்ந்தவர்அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை எதுவும் இல்லை . 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார். அவரது உடலை பனப்பாக்கத்திற்கு அழகுவேல் கொண்டு வந்தார்.

    இதற்கிடையில் இறந்து போன தமிழ் செல்வி உறவினர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .அவர்களிடம் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம்போலீசார் ெதாடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
    • அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யனார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த அய்யனார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் அய்யனார் மற்றும் ஓட்டல் ஊழியர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தஷ்ணா தலைமையில் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அய்யனாரை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். மேலும் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×