search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது.
    • ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி, மகள் இறந்தனர்.

    தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் இந்த வழக்கில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

    ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக தமிழக அரசு மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்தது.

    ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர். சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டிலும் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர்.

    மேலும் இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நட்ராஜ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் என 300-க்கும் மேற்பட்டோரிடம் தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிறப்பு பிரிவினர் கொடநாடு வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அதனால் அங்கு மாயமான பொருட்கள் என்ன? கொள்ளை சம்பவம் குறித்து ஏதாவது தெரியுமா? என்பது குறித்து கேட்டு விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வகையில் ஆறுக்குட்டியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்து போன கனகராஜ் குறித்த முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

    2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கனகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்து விட்டு, 2 பிரிவாக பிரிந்து சென்று விட்டனர். கனகராஜ் நேராக தனது சொந்த ஊரான சேலம் எடப்பாடிக்கு சென்று விட்டார்.

    கொள்ளை சம்பவம் நடந்த 4 நாட்கள் கழித்து விபத்து நடந்த அன்று காலை கனகராஜ், தனது மனைவியுடன் எடப்பாடியில் உள்ள ஜோதிடர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.

    ஜோதிடரிடம் தனது ஜாதகத்தை கொடுத்து தனக்கு நேரம் எப்படி இருக்கிறது. பிரச்சினைகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதனை ஆராய்ந்த ஜோதிடர், கனகராஜிடம், உனக்கு இன்றைய தினம் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது.

    அதனை மட்டும் கடந்து விட்டால் உன்னை எதுவும் நெருங்காது என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த அன்றைய தினம் இரவே கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    இந்த தகவல்களின் அடிப்படையில் கனகராஜ் சந்தித்த ஜோதிடர் யார் என்பது குறித்து விசாரித்தனர். தற்போது அவர் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவரின் பெயர், விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளனர்.

    அவர் விசாரணைக்கு ஆஜராகும் போது, கனகராஜ் ஜாதகம் மட்டும் பார்த்தாரா? அல்லது வேறு ஏதாவது தகவல்களை உங்களிடம் தெரிவித்தாரா? கனகராஜூக்கு ஆபத்து இருப்பது எப்படி தெரியும் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கனகராஜ் தான். ஆனால் அவரும் இப்போது உயிருடன் இல்லை. இதனால் இந்த கொள்ளைக்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார் என்பதே சி.பி.சிஐ.டி போலீசாரின் தேடுதலாக உள்ளது. தொடர்ந்து அதனை நோக்கி பயணித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 20-ந் தேதி, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த உதவி கமிஷனர் கனகராஜிடமும் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார்.
    • கூட்டத்தில் திருச்சியில் 24-ந்தேதி நடக்கும் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் வருகிற 24-ந்தேதி திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த உள்ளனர்.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சசிகலாவை அழைக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். இதுகுறித்து சசிகலா நேற்று கருத்து தெரிவிக்கும் போது, 'எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதுபற்றி பரிசீலிப்பேன்' என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து இன்று (சனிக்கிழமை) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் திருச்சியில் 24-ந்தேதி நடக்கும் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதற்காக தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் மூலம் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இதனால் அடுத்தவாரம் ஓ.பி.எஸ்.அணியின் செயல்பாடுகள் மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர்.
    • தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.

    சென்னை:

    சசிகலா தி.நகரில் உள்ள இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. உட்கட்சி பூசலை தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேர கூடாது என தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    ஓ.பி.எஸ். தீர்மானம் குறித்து பேசுகிறார். உடனடியாக அ.தி.மு.க.வை சார்ந்த நபர்கள் எப்படி பேச விடலாம் என கேட்கின்றனர். அதற்கு சபாநாயகர் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில்தான் பேச சொன்னேன் என கூறினார். அவர் அ.தி.மு.க. அதனால் பேச சொன்னேன் என கூறவில்லை.

    தி.மு.க. எப்போதும் இரண்டு வண்டியில் மட்டுமே பயணம் செய்வார்கள். ஓ.பி.எஸ். விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகின்றனர். தேர்தல் காலங்களில் எதிர்கட்சி என்பதை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவு கேட்போம்.

    ஆட்சியை மக்கள் கொடுத்த பின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால் தற்போது உள்ள அரசு சட்டபேரவை என்றால் திரையரங்குக்கு வந்து செல்வது போல வந்து செல்கின்றனர்.

    இந்த சண்டையை பெரிதாக்கி பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க நினைக்கின்றனர்.

    மக்களுக்காக வந்த அரசாக இந்த அரசு தெரியவில்லை. 5 ஆண்டு காலம் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என செய்கின்றனர்.

    கொடநாடு வழக்கை தி.மு.க. அரசியலுக்காக பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் கேட்டால். நிச்சயம் சந்திப்பேன். ஓ.பி.எஸ். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால், அதன் பின் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வேன்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் பணி முடியும்.

    நான் ஜாதி அரசியல் செய்யவில்லை. ஜாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்.

    கவர்னர் மோதலை பெரிதாக மாற்றுவதை விட்டு விட்டு எடுத்து கூறி மக்களுக்காக நல்லதை செய்ய வேண்டும். எதிர்கட்சியாக பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர்.

    இவ்வாறு சசிகலா கூறினார்.

    • வணிகர்கள் இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
    • தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும்.

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ரவுடிகளால் நாளுக்கு நாள் தொடர்ந்து அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் பொதுமக்கள் தாங்கிக்க முடியாத துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வணிகர்கள் இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தி.மு.க. தலைமையிலான அரசு தமிழ்நாட்டை அச்சுறுத்திவரும் கலாச்சாரத்தை உடனே தடுத்து நிறுத்திட உறுதியான, நிரந்தரமான நடவடிக்கை வேண்டும். மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக்கட்டமாக சசிகலாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்.
    • ஓ.பி.எஸ்.சை சந்திக்கும்போது தமிழக அரசியல் களத்தில் புதிய சலசலப்பையும், புதிய உத்வேகத்தையும் உருவாக்க வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம்.

    எடப்பாடி பழனிசாமி வசம் 99 சதவீதம் அ.தி.மு.க.வினர் இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக்கட்டமாக சசிகலாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார். இதற்காக பல தடவை அவர் சசிகலாவிடம் தொடர்பு கொண்டார். சசிகலாவும்" சந்திக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அதற்கு இதுவரை நேரம் ஒதுக்கி கொடுக்கவே இல்லை.

    இது ஓ.பன்னீர்செல்வத்தை விரக்தியின் உச்சத்தில் வைத்துள்ளது. சசிகலா எப்போது அழைப்பார்.? என்று காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் சசிகலாவோ ஓ.பி.எஸ்.சை கண்டு கொள்ளவே இல்லை எப்போது கூப்பிட்டாலும் வருவார் தானே என்று சொல்லி காலம் கடத்திக் கொண்டே இருக்கிறார்.

    ஓ.பி.எஸ்.சை சந்திக்கும்போது தமிழக அரசியல் களத்தில் புதிய சலசலப்பையும், புதிய உத்வேகத்தையும் உருவாக்க வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம். அந்த அடிப்படையில் தான் சடுகுடு ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்....

    • அ.தி.மு.க. இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக தலைமை ஏற்பேன்.
    • கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளில் வெற்றியை பெறுவோம்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் இன்று காலை சசிகலா சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேட்ட கேள்விக்கு ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்சனை என்பதால் ஓ.பி.எஸ் பேசியது எந்த தவறும் இல்லை.

    அ.தி.மு.க. இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக தலைமை ஏற்பேன். எதிர்கட்சிகள் எப்படி நினைத்தாலும் அ.தி.மு.க., எம். ஜி.ஆர். போட்ட விதை. அதனை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளில் வெற்றியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம்.
    • மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சசிகலா நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்தார். அப்போது நாகை மாவட்ட ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம். அந்த இடத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த தீர்மானம், எது வந்தாலும் அதை மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது.

    நான் இவ்வாறு கூறுவதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என்று கூறமுடியாது. அதே வேளையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மோதல் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க.விற்கு சாதகமான சூழ்நிலையாக அமையாது. அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். தற்போது அ.தி.மு.க.வின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும்.

    அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    பெரியகுளம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில் அவரது சொந்த ஊரான பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையே வலிமை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.

    ஏற்கனவே அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் என திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சசிகலா, தினகரனுடன் இணைய வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டனர். அப்போது அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கொடியை ஏந்தி தி.மு.க. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    அப்போது பேசிய ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்ட செயலாளரான சையது கான், அ.தி.மு.க.வை வழி நடத்தும் முழு தகுதியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே உள்ளது. இதனை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிந்ததால்தான் அவருக்கு 2 முறை முதல்-அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சியையே அபகரிக்க பார்க்கிறார்.

    இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. வேறு யாரையும் அந்த இடத்துக்கு கட்சியினர் விரும்ப மாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் தனக்கு ஆதரவான சிலரை வைத்துக் கொண்டு பொதுச் செயலாளர் பதவியை அடைய துடிக்கிறார்.

    தொண்டர்களால் மட்டுமே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். விரைவில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார். அதன் பிறகு தொண்டர்கள் பலத்துடன் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். பெரியகுளத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பலத்துடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள்.
    • விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன்.

    சென்னை:

    சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது ஜனநாயக முறையில் நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது. இது மக்களை ஏமாற்றி, எதிர்க்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது.

    அ.தி.மு.க. இன்றைக்கு இருக்கும் நிலைமையை பயன்படுத்தி கொண்டு தி.மு.க. அதில் குளிர் காய்வதால் பெற்ற வெற்றியாகத் தான் பார்க்க முடிகிறது.

    தி.மு.க.வினர் எதிர்க்கட்சியினரை வலுவிழக்க செய்து அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு நம் இயக்கத்தின் பிளவை பயன்படுத்தி கொண்டு ஒன்றிணையாமல் பார்த்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். நம் இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் இதை எல்லாம் கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக, கோடான கோடி தொண்டர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் அ.தி.மு.க. இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். தி.மு.க. கூட்டணி படுமோசமாக தோல்வியை தழுவி இருக்கும்.

    எனவே தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு இணங்க, ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான, ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை அமைத்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை நமது இருபெரும் தலைவர்களுக்கும் சமர்பிப்போம்.

    எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இரைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள்.

    பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை தி.மு.க. அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார் இதை எப்படி நம்புவது.

    நூல் விலை உயர்வால் 40 சதவீத தொழில்கள் முடங்கிப் போய் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பணம் பரிசுப் பொருட்கள் விநியோகப்பதை தடை செய்ய வேண்டும். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேர் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.

    கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

    ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்கமாட்டார்கள். அ.தி.மு.க.விற்கு ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலுக்குள் போய் பேனா நினைவு சின்னம் அமைப்பது நல்லது அல்ல.
    • தனித்தனியாக இருந்தால் அது அ.தி.மு.க.விற்கு நல்லது இல்லை

    சென்னை :

    பேரறிஞர் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வினர் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். இப்போதும் சொல்கிறேன். இப்போது மிகவும் பக்கத்தில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் அது அ.தி.மு.க.விற்கு நல்லது இல்லை தற்போது, அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அ.தி.மு.க. என்பது என்ன? என்பதை நாம் முழுமையாக புரிந்து கொண்டால், நாம் பிற கட்சிகளை நாடும் செயல்பாடுகள் நடக்காது.

    கடலுக்குள் போய் பேனா நினைவு சின்னம் அமைப்பது நல்லது அல்ல. இது மீனவர்களை பாதிக்கும், காவல்துறைக்கும் சவாலாக இருக்கும். அவர்களுக்கு (தி.மு.க.வினருக்கு) ஆசை இருந்தால் கருணாநிதி சமாதி அருகேயே நினைவு சின்னம் அமைக்கலாம். அதற்கு இத்தனை அடிகளில்தான் வைக்க வேண்டும் என்று இல்லை. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு நிதி இல்லை என்று கூறும்போது, பேனா வைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் என் கேள்வி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கிறது.
    • அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் விருப்பமாக உள்ளது.

    மதுரை :

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும், அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட்டாக இருக்கிறது. அந்த பட்ஜெட்டின் சாராம்சத்தை புரிந்து கொண்டு தமிழக அரசு அதை முறையாக பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கிறது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் நிறுவுவது தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரிக்க கேட்டிருக்கிறேன். பேனா சின்னம் நிறுவும் இடம் குறித்தும், சுற்றுப்புற ஆய்வாளர்கள் கருத்து, மீன்வளம் உள்ளிட்டவை குறித்தும் சில தகவல்களை கேட்டிருக்கிறேன். இதுபோல், மீனவர்களின் கருத்தையும், பல்வேறு மீனவ சங்கங்களின் கருத்துக்களையும் நேரடியாக கேட்டு அறிய இருக்கிறேன். அதன்பிறகு, அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிப்பேன்.

    மதுரை எய்ம்ஸ் குறித்து, மத்திய பட்ஜெட்டின் விரிவான அறிக்கையில் பதில் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அ.தி.மு.க. வழக்கில் இடையீட்டு மனுவுக்கான பதில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வழக்கு நாளை (அதாவது இன்று) வருகிறது.

    அ.தி.மு.க. சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2026 வரை பதவிக்காலம் இருக்கிறது.

    அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள், பா.ஜனதாவின் விருப்பமாக உள்ளது. அதுதான் எனது விருப்பமும்கூட. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் எங்களின் வேட்பாளருக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதா? என ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டபோது, "சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். அதற்கு முன்னதாக முறையான அறிவிப்பு உங்களுக்கு தெரிவிக்கப்படும்" என்றார்.

    ×