search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும்.
    • கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிறப்பு வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும். எதிர்பாராத தீ விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பட்டாசு விபத்தில் தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 83 பேர். 2020-ல் மட்டும் ஒருவர் இறந்தார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் ஆகிய 95 ஆஸ்பத்திரிகளில் தீபாவளிக்காக சிறப்பு தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மாநகரில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
    • அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) ஆகியோர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    பின்னர் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மாநகரில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

    அதே போன்று பலத்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே பொதுமக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை வெடித்து பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

    அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறும்போது, "தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

    • மாவட்ட தீயணைப்பு அலுவலர் வழங்கினார்
    • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது

    நாகர்கோவில், நவ.8-

    வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படும் தீபாவ ளியை விபத்தில்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தீயணை ப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தீய ணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோட்டார் ஏழகரம் அரசு தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்ய குமார் பேசியதாவது:-

    இந்த தீபாவளி விபத்தில்லா தீபாவளியாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு கடைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

    பட்டாசு கடைகள் விதிமுறைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக உரிமம் வழங்கப் பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் .

    பட்டாசு அடுக்கி வைக்கும் ரேக் உராய்வி னால் தீப்பொறி ஏற்படக் கூடியதாக இருக்கக் கூடாது. தயாரிப்பா ளர்களின் லேபில்களுடன் கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் .உரிமம் இல்லாமல் தயாரிக்கப்படும் பட்டாசு களை விற்பது சட்டப்படி குற்றமாகும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு சேமித்து வைப்பது குற்றமாகும்.

    இதே போல பொதுமக்க ளும் விபத்தில்லா தீபாவளி யாக அமைய ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது இறுக்க மான ஆடைகளை அணிய வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறு வர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளி யில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.

    வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்க கூடாது. குடிசைகள் நிறைந்த பகுதி யில் பட்டாசு வெடிக்க வேண்டாம். மருத்துவ மனை, திரையரங்குகள், பொது மக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்காதீர்கள். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சி க்க கூடாது.

    பட்டாசுகளை சிறு வர்கள் கையில் எடுத்து விளை யாட அனுமதிக்க வேண்டாம் . உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது என்பன போன்ற விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தது.

    இதை அடுத்து கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தென்னிந்தியாவுக்கு 36 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
    • முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருவோர்கள் நேராக பஸ்களில் பயணிக்கலாம்.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து தொழில் செய்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட விரும்புகிறார்கள்.

    கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட செல்வதால் தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.

    கூட்ட நெரிசல் இல்லாமல் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்து உள்ளது. சென்னை கோயம்பேட்டில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக மேலும் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நாளை (9-ந்தேதி) முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

    சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 13-ந்தேதியும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க பஸ், ரெயில்கள், கார்களில் ஏராளமானோர் நாளை முதல் பயணத்தை தொடர்கின்றனர். சிறப்பு பஸ்களிலும் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் நாளை பயணம் ஆகிறார்கள்.

    சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் நாளை இயக்கப்படுகின்றன.

    முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து கோயம்பேட்டிற்கு இணைப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு பஸ்களின் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிக்க பலரும் முன் வருகிறார்கள். இதுவரையில் 1500க்கும் மேற்பட்ட அரசு பஸ்களுக்கான முன்பதிவு நடந்து உள்ளது.

    முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருவோர்கள் நேராக பஸ்களில் பயணிக்கலாம். இந்த ஆண்டு வெளியூர் சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    அரசு பஸ்கள் தவிர ஆம்னி பஸ்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடருகிறார்கள். 10-ந்தேதி பயணம் செய்யவே மக்கள் ஆர்வமாக உள்ளனர். அன்றைய தினம் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் கிழக்கு ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
    • ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று நகரத்தின் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.

    இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம்.

    கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் கிழக்கு ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும்.

    ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

    பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடுகளின் ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
    • சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் உளுந்தூர்பேட்டை மட்டும் தான் சுற்றுவட்டார பகுதிகளான கிளாப்பாளையம், ஆதனூர், ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    இதனை திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை மாநிலம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். வெள்ளாடு, செம்மறி ஆடுகள் இங்கு விற்பனை செய்யப்படும். மேலும், மலைக்கிராமங்களில் வளர்க்கப்படும் கொடி ஆடு இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் இங்கு ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. புரட்டாசி மாதம் முடிந்தவுடன் சந்தையில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் ஆட்டுக்கறி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் நேற்று நள்ளிரவு முதலே சந்தைக்கு வந்தனர்.

    அதே சமயம் இன்று அதிகாலை 3 மணி முதல் ஆடுகளின் வரத்து தொடங்கியது. உடனடியாக ஆடுகளின் விற்பனை களைக்கட்டியது. சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    ஆடுகளின் ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும், ஆட்டுக் கறியை விரும்பி சாப்பிடுபவர்கள் தங்களின் நண்பர்களுடன் உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொடி ஆட்டினை வாங்கி சென்றனர்.

    இவர்கள் வாங்கிய கொடி ஆட்டை, தங்களின் ஊருக்கு கொண்டு சென்று தீபாவளிக்கு முன்தினம் பங்கு போட்டு தீபாவளி நாளில் சமைத்து படையலிட்டு உண்பார்கள். இதற்காக பலரும் காரில் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

    சந்தை தொடங்கி 3 மணி நேரத்திலேயே, அதாவது காலை 7 மணிக்குள் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஆடுகள் வர, வர வாங்கிச் சென்றனர். மொத்தத்தில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வார சந்தை ஒப்பந்ததாரர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சுயசார்பு பாரதம் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம்.
    • வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அதில், 'இந்த பண்டிகையின்போது மக்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சுயசார்பு பாரதம் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம்.

    வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையையும் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும், உள்ளூர் தயாரிப்புகள் அல்லது கைவினைஞர்களுடன், இந்தியாவில் தயாரித்த ஸ்மார்ட்போனில் எடுத்த 'செல்பி'யை 'நமோ ஆப்'பில் மக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

    அந்த படங்களில் சிலவற்றை நான் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வேன். அது, 'வோக்கல் பார் லோக்கல்' என்ற உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும். இந்த இயக்கம் தற்போது நாடு முழுவதும் நல்ல வேகம் பெற்றுவருகிறது.'

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேஜஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது.
    • வழக்கமான கட்டணமே சிறப்பு ரெயிலுக்கு நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்க வேண்டுமென பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வந்தது. அந்தவகையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை (9-ந்தேதி) காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு மதியம் 3 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) இரவு 11.15 மணிக்கு எழும்பூர் ரெயில்நிலையம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேஜஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது. எனவே, அந்த வழித்தடத்தில் கூடுதலாக எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும், வழக்கமான கட்டணமே சிறப்பு ரெயிலுக்கும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் (வண்டி எண். 06070) நாளை (9-ந்தேதி), 16 மற்றும் 23-ந்தேதிகளில் மாலை 6.45 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு எழும்பூர் சென்றடையும்.

    இதேபோல மறுமார்க்கமாக, சிறப்பு ரெயில் (06069) 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    சுமார் 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 261 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், பொதுமேலாளர்(ஆவின்) சுஜாதா, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குமாரராஜா, துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேஷ், மேலாளர் (விற்பனைப்பிரிவு) சரண்யா, உதவி பொது மேலாளர் மற்றும் ஒன்றிய அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×