search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    • திருப்பூர் மாநகர் பகுதியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை
    • அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அரசு அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டது.

    அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தத்துடன் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தாலோ போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதன்படி திருப்பூர் மாநகர் பகுதியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உட்பட்ட புறநகர பகுதியில் தீபாவளியன்று அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.
    • வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டெல்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    நேற்று மதியம் மத்திய அரசின் ஷபார் செயலியின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ) 445 ஆக இருந்தது, சில இடங்களில் 520-க்கு மேல் பதிவாகியது.

    101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட நிலைகள் மிதமானதாகக் கருதப்படுகின்றன.

    அதே சமயம் 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டவை மோசமானவை. 301 மற்றும் 400 க்கு இடையில் மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 400 ஐ விட அதிகமான எண்ணிக்கை கடுமையானது என்று கருதப்படுகிறது.

    ஆனால் சில பகுதிகளில் டெல்லியின் காற்றின்தரம் (ஏ.கியூ.ஐ) பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது.

    டெல்லியின் நச்சுக் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    அதிக அளவு மாசுபாடுகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

    இது தோல் மற்றும் கண் எரிச்சலைத் தூண்டும் மற்றும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் திறன் இழப்பு, எம்பிஸிமா, புற்றுநோய் மற்றும் கடுமையான நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும்.

    டெல்லி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.

    வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டுமே நகருக்குள் அனுமதித்தார். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினார். இதனை கடுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தீபாவளிக்கு முன்பு காற்று மாசு குறைவாக இருந்தது. பட்டாசு அதிகளவில் வெடித்ததால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 445 என்ற அளவில் உள்ளதாகவும் அது உலகளவில் காற்று மாசு பட்டியலில் டெல்லி முதலிடத்தைபிடித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

    இந்த பட்டியலில் 6-வது இடத்தில் மும்பையும், 7-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது.
    • குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.

    அப்போது எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது. இதை கண்ட அவர் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயினர். மேலும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.

    ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால், மிரண்டு போன சிறுத்தை பயத்தில் அங்கேயே பதுங்கியது. உடனே தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர், பங்களா வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்ட முயன்றனர். அவர்கள் மேல் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. தீயணைப்பு வீரர்கள் முரளி(வயது 56), குட்டி கிருஷ்ணன்(59), கண்ணன்(54), விஜயகுமார்(32), வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார்(32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை சக தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    சிறுத்தை புகுந்த பங்களா வீட்டை காணலாம்.

    சிறுத்தை புகுந்த பங்களா வீட்டை காணலாம்.

    இதை அறிந்ததும், முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், இணை இயக்குனர் அருண், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வனத்துறையினர் கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தி விடிய விடிய சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 26 மணி நேரத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 6 மணிக்கு அந்த வீட்டில் இருந்து சிறுத்தை வெளியேறியது. இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

    வனப்பகுதியில் இருந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருந்து வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் போக்கு காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே காலை 6 மணி முதல் 7 மணி வ ரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.

    தொடர்ந்து சேலம் புறநகர் பகுதிகளில் அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 19 பேர் மீதும், மாநகரில் 2 பேர் மீதும் என மொத்தம் 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    • நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • காவல்துறை எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். முன்னதாக தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதிருந்தது.

    மதுரை மாநகர் பகுதியில் அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 141 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்ட காவல்துறை எல்கைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மொத்தத்தில் மதுரை மாவட்டம் முழுவதும் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும், மாநகரில் விளக்குத்தூண், ஜெய் ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி, திடீர்நகர், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதி முறைகள் ஆகியவற்றை பின்பற்றி நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினர் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நெல்லை புறநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 27 வழக்குகளும், மாநகரப்பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தென்காசி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 200 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன்.

    • பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்-26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீக்காயங்களால் மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 24 பேர் தனியார் மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். நேற்று நடந்த 50-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது, பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.

    • பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.
    • வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25). தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.

    நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.

    பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.

    அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.

    இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் நவிஷ்கா அலறி துடித்தாள்.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.

    ஆஸ்பத்திரியில் குழந்தையின் தாய் அஸ்வினி கதறி அழுதகாட்சி காண்பவர்களின் நெஞ்சை கரையச் செய்தது.

    சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல்
    • பெரியார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையி லும் அதை கண்டுகொள் ளாமல் பொதுமக்கள் பட் டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் மதுரை பைபாஸ் நேரு நகர் பகுதி யில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப் போது ராக்கெட் பட்டாசு ஒன்று அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பட்டதில் மளமளவென தீ பரவியது. இது குறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    அதன்பேரில் நிலைய அதிகாரிகள் எஸ்.எஸ்.ஓ. பாலமுருகன், ஏ.டி.ஓ. சுரேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இத னால் உயிர்சேதம் ஏற்படு வது தவிர்க்கப்பட்டது.

    அதேபோன்று டி.வி.எஸ். நகர் பகுதியில் வெடித்த பட்டாசுகளால் அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் தீப்பிடித்தது. பெரி யார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆதறவற்றோர், முதியோர்களுக்கு

    தீபாவளியையொட்டி அன்பு உறவுகள் குழு சார்பில் திருநகரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லம், பைக்கா ராவில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் காளவாசல், பெரியார் உள்ளிட்ட பல்வேறு சாலையோ ரத்தில் வசிப்பவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு களை நவீன் கண்ணன், தீபன் சக்ரவர்த்தி, சரவணன் உள்ளிட்ட அன்பு உறவுகள் குழு உறுப்பினர்கள் வழங்கினர்.

    • டெவில் ரைடர்ஸ்' என்ற இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்தார்.
    • கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் தெரியவந்துள்ளது.

    ஒரு வாலிபர் பைக்கை வீலிங் செய்து கொண்டே அதனுடன் பட்டாசு வெடித்து கொண்டே சென்றார்.

    இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து தனது 'டெவில் ரைடர்ஸ்' என்ற இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்தார்.

    இந்த வீடியோ வைரலானது. இதை கண்ட காவல்துறையினர் அந்த வாலிபரின் அடையாளங்களை இன்ஸ்டா கணக்கின் வழியாக கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    காவல்துறை விசாரணையின் போது இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் பெயர் மணிகண்டன் என்பதும், வீடியோ எடுத்தவர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் தெரியவந்துள்ளது.

    • அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
    • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஆங்காங்கேய பொதுமக்கள் ஒன்று திரண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் சரவெடிகள் உள்ளிட்ட வைகளை வெடிக்க கூடாது.

    அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

    கட்டுப்பாடுகளை மீறுவது மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என அரசு கட்டுப்பாடுகள் விதித்தி ருந்தது இந்த கட்டுப்பாடுகளை மீறியும் அரசு வகுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீதும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அரசு விதிமுறையை மீறி பட்டாசுகள் வடித்த 17 பேரும் இது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மதுரவாடா பகுதியில் வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.

    அப்போது அந்தப் பகுதி முழுவதும் பட்டாசு புகை சூழ்ந்தது. பட்டாசு புகையை சுவாசித்த 2000-க்கும் மேற்பட்டோர் சுவாச கோளாறு ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

    ஒரு சிலருக்கு கடுமையான கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று ஐதராபாத்தில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் வெடிக்கப்பட்டது. சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×