search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    • தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின் படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சி யர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடுவாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப் பட் டு உள்ளார்கள். சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில்கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்ட வற்றைக் கடைப் பிடிக்கு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது:-

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வா கம், உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதி களில் உள்ள நலச்சங்க ங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டா டுங்கள்.

    இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்கவேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    • பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அதிகாரிகள் விழிப்புணர்வு நடந்தது.
    • இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, படுகாயம் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    பெரியார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் போலீசார், பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது? தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு சிகிச்சை அளிப்பது? குடிசை பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது, பட்டாசு வெடி விபத்தில் இருந்து சிறுவர்கள் மற்றும் முதியோரை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
    • பட்டாசு கடைகள் 17-ந்தேதிக்குள் திறக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    சென்னை :

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இதையொட்டி தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தற்போதைய சூழலில் தீவுத்திடலில் 40 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரையறுத்த விதிமுறைகளின்படி 10 அடி இடைவெளியில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜார்ஜ்டவுன் அனைத்து வணிகர் நல சங்க தலைவர் பி.அனீஸ்ராஜா கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீவுத்திடலில் எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி 40 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பணிகள் முழுவதும் நிறைவடைந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதிக்குள்ளாக பட்டாசு கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தீவுத்திடல் பட்டாசு கடைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவரிடம் அனுமதியும் கேட்டிருக்கிறோம். அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்பட பலரும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். அதாவது பட்டாசு கடைகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து 21-ந்தேதி வரை பட்டாசுகளை 25 சதவீத தள்ளுபடி விலையில் பொதுமக்கள் வாங்கிடலாம். 21-ந்தேதிக்கு பிறகு இந்த சலுகை இருக்காது. தேவைப்படும் பட்சத்தில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

    அதேபோல இந்த ஆண்டு பசுமை பட்டாசுகள் அதிகளவில், அதிக ரகங்களில் தயாராகி விற்பனைக்கு வரவிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, விபத்துகளை ஏற்படுத்தாத வகையிலும் வெடிகள் தயாராகி இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கொரோனா தாக்கம் ஓய்ந்த நிலையில் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முறை பட்டாசு தொழிலை முன்னெடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு சிறிய தீப்பொறி கூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்.
    • ரூ.1,000 அபராதமாக விதிக்கப்படும்.

    சென்னை :

    பண்டிகை காலம் வரத்தொடங்கி உள்ளதால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் தீபாவளி பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என சென்னை கோட்ட ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான விளைவுகளுடன் ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்.

    குறிப்பாக ரெயில் பயணத்தின்போது பயணிகள் அவர்களது உடமைகளுடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, சிகரெட்டுகள், தீபாவளி பட்டாசுகள் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது. இதையும் மீறி தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரும் பயணிகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதமாக விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வெ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முற்றிலுமாக தீப்பற்றி எரிந்தது.
    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம்.

    இவர் தனது வீட்டிற்கு பின்புறம் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    இந்த பட்டாசு கடையில் இவரது உறவினர் ரவி (வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் பட்டாசு கடை தீப்பற்றி எரிந்தது. இதில், ரவி படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்த தகவலின்பேரில் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக பட்டாசு கடை நடத்திய உரிமையாளர் பிரபாகரன் கைது செய்து செய்யப்பட்டார்.

    படுகாயம் அடைந்த ரவி திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28-ந்தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    அதன் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து அரசு சார்பில் அறிவிக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை.
    • இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும்.

    டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை தடை விதித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார்.

    அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும்.

    தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்.

    டெல்லியில் கடந்த ஆண்டை போல் மாசு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், இந்த முறையும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்.
    • பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    சீர்காழி:

    அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அ.தி.மு.க. சார்பில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

    மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க பொறுப்பாளர்கள் கருணாகரன், பாஸ்கரன், சொக்கலிங்கம், பூவராகன் பங்கேற்றனர்.

    • பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • 6-க்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவரது சரக்கு வாகனத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அந்த சரக்கு வாகனம் சாத்தூர் அருகே சந்தையூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலைக்கு சென் றது. அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பாரைப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார், சரக்கு வாகனத்தை முந்த முயன்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த முருகன் (28), டிரைவர் மணிகண்டன் (24), ஆகாஷ் (20), முத்துமாரியப்பன் (45), ஜெயப்பிரபு (42), முத்துமாரி (30), பாண்டி கணேஷ் (18), முத்துக்குமார் (20) ஆகியோர் காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக காரில் வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எடிசன் (34), நிஷான் (29) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் அருேக அழகாபுரி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரிப்பதாக சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பண்டல் பண்டலாக பட்டாசுகள் தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த சாயல்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 59), இரவார்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ×