search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி"

    திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க முத்து இன்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #MKMuththu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7.8.2018 அன்று உயிரிழந்தார். அவரது மறைவை ஏற்க முடியாத தமிழக மக்களும் தொண்டர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இதையடுத்து, மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது மறைவு அன்று நேரில் அவரை சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகம் மு.க முத்து இன்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #MKMuththu
    இந்தியாவையே உலுக்கிய ஆருஷி கொலை நடைபெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில், அந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அஞ்சலி, ராய் லட்சுமி இணைந்து நடிக்கின்றனர். #Anjali #RaaiLaxmi
    நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரின் மகளான ஆருஷி கடந்த 2008-ம் ஆண்டு அவருடையை படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

    ஆருஷி கொலை வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மறுநாள் அவர்களது வீட்டு மாடியில் ஹேம்ராஜ் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்தக் கொலை வழக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது.

    நொய்டா போலீசார் விசாரணை நடத்தியதில் ஆருஷியின் பெற்றோரே அவரை ஆணவ கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். வீட்டு வேலைக்காரர்கள், ராஜேஷ் தல்வாரின் நண்பர்கள் என்று மேலும் பலர் கைதானார்கள். பின்னர் இந்த வழக்கை  சி.பி.ஐ-க்கு மாற்றினர். இந்தியாவையே உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கின் இறுதியில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 



    இந்நிலையில் இந்தச் சம்பவம் சினிமா படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் அஞ்சலி மற்றும் ராய் லட்சுமி இருவரும் நடிக்கின்றனர். #Anjali #RaaiLaxmi

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவை வெள்ளியங்கிரி மலையை சேர்ந்த உதயகிரி சுவாமிகள் இன்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi
    சென்னை:

    கருணாநிதி நினைவிடத்தில் கோவை வெள்ளியங்கிரி மலையை சேர்ந்த உதயகிரி சுவாமிகள் இன்று அஞ்சலி செலுத்தினார். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் கோரக்கு சித்தர் தவம் செய்த பகுதியில் வசித்து வருவதாக கூறும் இவர் பொதுமக்களோடு பொது மக்களாக நின்று அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்தார்.

    அப்போது அவர் சமாதி அருகே சென்று பார்க்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார். இதையடுத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை உள்ளே அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.

    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தியது பற்றி அவர் கூறியதாவது:-

    கலைஞர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக இருந்தாலும் அன்பு, அரவணைப்பு, சாந்தம் ஆகியவற்றைத்தான் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பல நன்மைகளை அவர் செய்துள்ளார். சொல்லப் போனால் அவரும் சித்தர் தான்.

    அபூர்வமான மனிதர்களில் அவரும் ஒருவர். 7 வயதில் இருந்தே வெள்ளியங்கிரி மலையில் நான் சேவை செய்து வருகிறேன். 17 வயதுக்கு பின்னர் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து மனைவி, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீண்டும் கடவுளுக்கு பணி செய்ய சென்றுவிட்டேன். எனது குருநாதர் நாராயண குரு. ஜம்முவில் உள்ள அவரிடம் தான் நான் தீட்சை பெற்றேன். என்னை கடவுள் தான் இங்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi
    கருணாநிதி மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
    பெரம்பலூர்:

    தி.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. மேலும் அவர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கருணாநிதி மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதோடு மட்டுமின்றி தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டன. தி.மு.க. கட்சி கொடிகளும் கருணாநிதி மறைவையொட்டி அரை கம்பத்தில் பறந்தன. கருணாநிதி உயிரிழந்ததை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அங்கிருந்த தொண்டர்கள், மகளிரணியை சேர்ந்த தொண்டர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. தி.மு.க.வின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

    பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஒரு சிறுமி கருணாநிதியின் உருவப்படத்திற்கு பாசத்துடன் முத்தம் கொடுத்து மரியாதை செலுத்தியதை காண முடிந்தது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கட்சி பாகுபாடின்றி பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அனைத்து நடிகர் ரசிகர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரசிகர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தன. அங்கு நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ரசிகர்கள், தி.மு.க. தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.

    இதேபோல் தி.மு.க.வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இதில் கட்சியின் மாநில செயலாளர் செங்கோலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாவில் உள்ள கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
    மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiDeath #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் நேற்று அடக்கம் செய்யப்படது. சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சமாதிக்கு மேலே தற்காலிகமாக கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அவர்கள் அஞ்சலி செலுத்தும் நேரத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்து சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னிமலை அருகே கருணாநிதியின் இறுதி சடங்கை பார்த்த திமுக தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.#RIPKarunanidhi #Karunanidhi #DMK
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள ஓட்டப்பாறை, திரு நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). பனியன் கம்பெனி தொழிலாளி.

    கரூர் அருகே உள்ள வெங்கமேடு இவரது சொந்த ஊர் ஆகும். அங்கிருந்து இங்கு வந்து பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்தது முதல் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து வந்தார். நேற்று மாலையில் கருணாநிதி இறுதி ஊர்வலம், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.

    மாலை 6 மணி அளவில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். சிறிது நேரத்தில் அவர் வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவருக்கு பானுமதி என்ற மனைவியும், சவுமியா (17) என்ற மகளும், பிரகாஷ் (14) என்ற மகனும் உள்ளனர். சவுமியா 12-ம் வகுப்பும், பிரகாஷ் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கோவை கவுண்டம் பாளையம் அருகே கருணாநிதியின் இறுதி சடங்கை டிவியில் பார்த்த திமுக பிரமுகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.#RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம் பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (64). இவர் கோவை மாநகராட்சி 5-வது வட்ட தி.மு.க. துணை செயலாளராக இருந்து வந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டதில் இருந்து சிவலிங்கம் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மேலும் வருத்தம் அடைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு மெரினா பீச்சில் நடைபெற்றதை தி.மு.க. பிரமுகர் சிவலிங்கம் டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார்.

    திடீரென அவர் வீட்டில் மயங்கி விழுந்தார்.

    அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிவலிங்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவலிங்கத்துக்கு கவுசல்யா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கொடைக்கானல் அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது தொண்டர் உயிரிழந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    பெரும்பாறை:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கைகாட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 62). இவரது மனைவி இறந்து விட்டார். 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முதல் மகள் வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளை செய்து வந்தார்.

    தி.மு.க. அபிமானியான இவர் நேற்று கருணாநிதி இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியடைந்து அங்கு கருணாநிதியின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அதே இடத்தில் மொட்டை போட்டு விட்டு அருகில் இருந்த ஏரியில் குளிக்க சென்றார். அப்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே சோகத்தில் இருந்த அப்பகுதியினர் ஜெயசீலன் மறைவால் மேலும் சோகமடைந்தனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் புதிரானதாக இருக்கும் என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். #Peranbu #Mammootty
    ‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    ‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

    “இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



    படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

    தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.” 

    சமீபத்தில் வெளியாகிய படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Peranbu #Mammootty #Anjali

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். #KarunanidhiDeath #MKStalin #DMK
    சென்னை:

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும், நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம்.



    தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.



    ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தம தலைவராகவும் திகழ்ந்த கருணாநிதி திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர்.

    அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், தலைவர் கலைஞர் அவர்களின் உயிர்காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும், பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்த பொதுமக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை ஊடகத்துறையினர் என அனைவருக்கும் தி.மு.க.வின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



    வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கருணாநிதி தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார்.

    அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அ.தி.மு.க அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.



    அண்ணாவுக்கு கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் அண்ணாவுடன் இணையும் “இறுதிப் பரிசை” நீதிபதிகளே வழங்கி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய தி.மு.க. சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர்நீதிமன்ற அமர்வில் அழுத்தந்திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்க செய்த தி.மு.க. சட்டதிட்ட திருத்த குழு செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோபலட்சம் தி.மு.க. தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கருணாநிதிக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

    காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த கருணாநிதியை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது “கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை” சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. கருணாநிதியின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

    வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளை செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக சோதனையான காலகட்டத்தில் கருணாநிதியின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.

    ஈடு செய்ய முடியாத பேரிழப்பான கருணாநிதியின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #KarunanidhiDeath #MKStalin #DMK 
    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சென்னை:

    உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் பொதுமக்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முக்கிய பிரமுகர்களுக்கு என்று தனி வழியும், பொதுமக்களுக்கு என தனி வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி பொதுமக்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வழியில் போலீசார் அனுப்பி வந்தனர். ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. கருணாநிதியை கடைசியாக பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் சென்றனர். மேலும் சில இடங்களில் போலீசார் வைத்திருந்த தடுப்புக்களை தகர்த்துவிட்டு பொதுமக்கள் முன்னேறி சென்றனர். அதோடு போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே ‘தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.

    இதில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி பெண் போலீஸ் அனிதா (வயது 42) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த செண்பகம் (60) என்ற பெண்ணும், ஒரு ஆணும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 24 பேரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த துரை(45) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு (62), அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (71), சென்னையை சேர்ந்த தங்கராஜ் (60), சத்யா (50), கென்னடி (55), வேலூரை சேர்ந்த ஜெயராமன் (54) மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு (39) ஆகிய 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட் டனர். 
    திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    நாகப்பட்டினம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளை ஆகும். இந்த ஊரில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தார்.

    நேற்று மாலை கருணாநிதி மரணம் அடைந்த தகவல் வெளியானதும் அவரசு சொந்த ஊரான திருக்குவளை சோகத்தில் மூழ்கியது.

    திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பிறந்த வீடு தற்போது நூலகமாக மாற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை ஏராளமான பெண்கள் நூலகம் முன்பு திரண்டு கும்மியடித்து ஒப்பாரி வைத்து பாடினர்.

    மேலும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்திருந்து கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ×