search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவையில் மகள், மகனுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வெரைட்டி ஹால் தாமஸ் வீதி காந்தி சந்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி நாகராணி (வயது 25). இவர்களுக்கு அர்ச்சிஷா (5) என்ற மகளும், அபிலாஷ் (4) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று நாகராணி மகன், மகளை ஆர்.ஜி. வீதியில் டியூசனுக்கு அழைத்துச்செல்வதாக கணவரிடம் கூறிச்சென்றார். வெகுநேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், தோழி வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து செந்தில்குமார் வெரைட்டிஹால் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன், மகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவையில் கணவருடன் வந்த மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 70). இவரது மனைவி சாந்தகுமாரி (65). சம்பவத்தன்று இருவரும் கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டனர்.

    காரை மண்டபம் எதிரே நிறுத்தி விட்டு தம்பதி மண்டபத்தை நோக்கி நடந்து வந்தனர்.

    அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் இருந்தவர் சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் கொண்ட 2 தங்க சங்கிலியை பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த தம்பதி சத்தம்போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் என தெரிவித்தார். #EdappadiPalanisamy #ADMK #TTVDhinakaran
    கோவை:

    கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது; 

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளில் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன்தான்.

    சமீபத்தில் ஸ்டாலின் சந்திரபாபுவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் நாட்டின் நலன் கருதி பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக கேட்டாரா? தமிழகத்திற்கு ஆந்திரா தரவேண்டிய தண்ணீர் குறித்து ஸ்டாலின் கேட்டாரா? நாங்கள் கொள்கை உணர்வுடன் தான் யாருடனும் கூட்டணி வைப்போம். ஆனால், திமுக சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்ளும். 



    வயதான கமலுக்கு திரைஉலகில் ஓய்வு வழங்கப்பட்டு விட்டது. தற்போது அவர் அரசியலில் நடிக்க துவங்கியுள்ளார். அரசியலில் கமலின் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனது படத்திற்கு பிரச்சினை வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமல், எப்படி மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார்?

    விலையில்லா திட்டத்தை சமீபத்திய திரைப்படம் ஒன்றில் அவமதிக்கிறார்கள். இதனை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா திட்டத்தால் பயன் பெற்றிருப்பார்கள். ஊடகங்களும் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. காய்ச்சல் வந்ததும் அரசு மருத்துவமனையை அணுகினால், நிச்சயம் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார். #EdappadiPalanisamy #ADMK #TTVDhinakaran
    கோவை அருகே 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார்(25). வெல்டிங் தொழிலாளி.

    இவர் இன்று காலை 8 மணி அளவில் பதிகவுண்டர் தோட்டம் 3-வது வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் பிரவீன் குமாரை வழிமறித்து கத்தியால் குத்தினர். இதில் அவரது தலை, கழுத்தில் கத்திக் குத்து விழுந்தது. இவர் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே இறந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    தகவலறிந்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரவீன் குமார் நேற்று மாலை தனது நண்பர்களை பார்த்து வருவதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். நேற்று இரவு அவர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியாக கூறப்படுகிறது.

    அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விரோதத்தில் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிரவீன்குமாருடன் சேர்ந்து மது அருந்தியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சச்சின்(வயது 27). இவர் கோவை சரவணம்பட்டியை அடுத்த சின்ன வேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தில் அவருடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 பேர், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி நிறுவனத்தில் நேற்று முன்தினம் போனஸ் வழங்கப்பட்டது. உடனே நெல்லையை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். நிறுவனத்தில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் மட்டும் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை நிறுவனத்தின் அருகே உள்ள அத்திப்பாளையம் ரோட்டில் சச்சின் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சச்சினின் தலை, முகத்தில் காயங்கள் இருந்தன. அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. நேற்று இரவு அறையில் அவருடன் தங்கி இருந்த நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நேற்று இரவு சச்சின் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக 5 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் பன்றி,டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 2 வாரத்தில் 18-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதனையடுத்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் திடீரென கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனர். பின்னர் அமைச்சர்கள் டெங்கு, பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர்.

    அமைச்சர்கள் ஆய்வின் போது வார்டுகள் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. எனவே வார்டு மேற்பார்வையாளர்கள் உள்பட 4 பேரை அமைச்சர் விஜயபாஸ்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த பன்னீர் செல்வம். இவரது மனைவி கவிதா (வயது 24).

    இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து கடந்த 2-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் கவிதா சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் அவரது ரத்தத்தை பரிசோதனை செய்த போது கவிதாக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அவரை சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கவிதா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் புஷ்பா நகரை சேர்ந்தவர் வளர்மதி (45). இவர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். இங்கு வளர்மதிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வளர்மதி பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலக்கு ஒருவரும், வைரஸ் காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 77 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue

    கோவை மத்திய சிறையில் வேலை பார்த்த ஆயுதப்படை ஏட்டு திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 46).

    மத்திய ஆயுதப்படை தலைமை காவலரான (சி.ஆர்.பி.எப்.) இவர் கடந்த 2 வருடங்களாக கோவை மத்திய சிறையில் வேலை பார்த்து வருகிறார்.

    சிறை வளாகத்தில் உள்ள பட்டாலியன் முகாமில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்ததும் குளிப்பதற்காக சென்ற அண்ணாதுரை அதன் பிறகு முகாமுக்கு திரும்ப வில்லை.

    வெகுநேரமாகியும் அண்ணாதுரையை காணாததால் சந்தேகமடைந்த சகஊழியர்கள் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.

    கோவையில் பூட்டிய வீடுகளில் 38 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் மதுரை சென்றார். நேற்று வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 25 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் சந்தேகத்திற் கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை வெள்ளலூர் ரோடு, கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து வீடு திரும்பிய போது முன்கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கூட்டநெரிசல் இன்றி சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசலை சமாளிக்க சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பயணிகளுடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல 5-ந் தேதி(திங்கட்கிழமை)யும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்கள், நெல்லையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதேபோல சென்னை -கோவை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 5-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.

    நெல்லை மற்றும் கோவைக்கு தாம்பரத்தில் இருந்து தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் 2 ரெயில்களிலும் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் குடும்பத்தினரோடு சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்தனர். 
    கோவை, திருப்பூரில் பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையாக சிகிச்சையை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல், சளி, மூச்சு திணறல் பாதிப்புடன் ஏராளமானோர் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் டாக்டர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்து பாதிப்பு இருந்தால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்கை அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருப்பூர் தாசப்ப நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா (வயது 63) என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அங்கு டாக்டர்கள் வசந்தாவின் ரத்தமாதிரியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 31-ந் தேதி அனுப்பி வைத்தனர். வசந்தாவை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் ஆப்ரேட்டர். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் கணேசனின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் (5) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதனின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அமுதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமுதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுமித்ரா (35). இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue

    கோவை அருகே கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தீபாவளியையொட்டி கோவை நகர கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து தலைமையில் போலீசார் கார்த்தி, உமா ஆகியோர் அடங்கிய குழுவினர் காந்திபுரத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சதீஷ்குமார்(28) என்ற வாலிபரிடம் இருந்து செல்போனை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை கள்ளபாளையத்தை சேர்ந்த கணேஷ்(60), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(42) என்பது தெரிய வந்தது. இதில் கணேஷ் மீது 50-க்கும் மேற்பட்ட பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவை அருகே தடுப்பணை சேற்றில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ரோயாகவுண்டனூரில் உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென சேறு நிறைந்த பகுதிக்கு சென்றார். சேற்றில் கால் சிக்கிக் கொண்டதால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடடினயாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேற்றில் சிக்கி இறந்த தங்கராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதையடுத்து கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர். #NortheastMonsoon #Rain
    கோவை:

    வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. கோவை மாநகரில் அதிகாலை மழை பெய்தது. பின்னர் தூறிக்கொண்டே இருந்தது.

    இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.

    மேட்டுப்பாளையத்தில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வால்பாறை அருகே உள்ள ஆழியாறு, அட்டகட்டி பகுதியில் லேசான தூறல் அடித்தது. வால்பாறையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் இந்த மழை நீடித்தது. இன்று காலை தூறிக்கொண்டு இருந்தது. மழை காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. #NortheastMonsoon #Rain

    ×