search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    கரூர் மாவட்டம் முழுவதும் மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம், கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று நடந்தது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் முழுவதும் மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம், கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை, போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, குடிநீர் விநியோகத்தை தொய்வில்லாமல் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பேசிய போது கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் வழங்குவதற்காக 14 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

    குழாய் உடைப்பினால் நீர் வீணாகி செல்வது உள்ளிட்ட குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஒரு பகுதிக்கு குடிநீர் வழங்கும் போது அந்த கிராமத்தில் எத்தனை நபர்கள் வசிக்கிறார்கள், குடிநீர் தேவையின் அளவு எவ்வளவு? அதற்கு எவ்வளவு குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பொருத்த வேண்டும் என்பதை உரிய தொழில்நுட்பம் கொண்டு ஆலோசனை செய்து பணிகளை செயல்படுத்த வேண்டும். புவியியல் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் கணக்கெடுத்து நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    கடந்த ஆண்டு மட்டும் ரூ.13 கோடி மதிப்பிற்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுக்குடிநீர் திட்டங்களில் 434 அனுமதியற்ற இணைப்புகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 79 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இணைப்புகளும் துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அரவக்குறிச்சி மற்றும் கடவூர் பகுதிகளுக்கு தனித் தனியே கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே குடிநீர் வழங்கும் பணிகளில் உள்ள குறைபாடுகளை நீக்க குழு ஒன்றை அமைத்து, குடிநீர் வழங்கும் பாதைகளை வரை படம் மூலம் கணக்கிட்டு எந்த கிராமங்களில் குடிநீர் பிரச் சினை உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில், கிருஷ்ண ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய பொறியியல் இயக்குநர் (சென்னை) மதியழகன், நிர்வாகப் பொறியாளர்கள் முத்துமாணிக்கம் (கிராம குடிநீர் திட்டம்), சீனிவாசன் (நகர குடிநீர் திட்டம்), பிரபுராம் (திண்டுக்கல்), பரூக் (திருச்சி), உதவி நிர்வாகப் பொறியாளர்கள் அசோக் செல்வராஜ், ரவிச்சந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன், குளித்தலை நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா கமாலுதீன், கரூர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    வீராணம் தண்ணீர் வருவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VeeranamLake

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 11 சதவீதம் ஆகும்.

    சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. பூண்டி ஏரியில் 117.25 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 753 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 467 மில்லியன் கனஅடியும் நீர் உள்ளது.

    ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கடந்த ஆண்டைப் போல இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படலாம் என்ற கவலையில் பொது மக்கள் உள்ளனர்.

    வீராணம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தாலும் வீராணம் ஏரி தண்ணீரை வைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.

    வீராணம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 47 அடி தண்ணீர் உள்ளது (மொத்த நீர்மட்டம் 47.50 அடி) ஏரிக்கு கீழ் அணையில் இருந்து 1,400 கனஅடி தண்ணீர் வருகிறது. 74 கனஅடி தண்ணீர் சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது.

    இது குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ‘கடந்த ஆண்டு 4 ஏரிகளும் சேர்த்து வெறும் 262 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருந்தது. ஆனால் தற்போது ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இதனை வைத்து அக்டோபர் மாதம் இறுதி வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

    நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் நீர் கைகொடுக்கும்.

    மேலும் தேவை அதிகரித்தால் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீரை வினியோகிக்கவும் திட்டம் உள்ளது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பொது மக்கள் கவலைப்பட தேவையில்லை’ என்றனர்.

    திருவாடானை அருகே குடிநீர் வழங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பாரதிநகரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    பாரதிநகரில் 9 வீதிகள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு குழாய் இணைப்புகள் இல்லை.

    ஏற்கனவே இருந்த தெரு குடிநீர் குழாய்களில் ஒவ்வொருவரும் வீட்டிற்கு குடிநீர் இணைப்பை எடுத்து சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினர்.

    பல்வேறு புகார்களை அடுத்து ஒவ்வொரு வீதிக்கு முன்பு 500 லிட்டர் சின்டக்ஸ் தொட்டி அமைத்து அதன் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்பாடு செய்தது.

    எனினும் அதன் மூலம் அந்தப்பகுதியில் உள்ள அனைவருக்கும் குடி நீர் கிடைக்கவில்லை. எனவே தற்போது குடிநீர் வழங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் தண்ணீர் வரும் போது முதலில் வருபவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வரிசையாக பிடித்துவரும் நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே கூடுதலான நேரம் தண்ணீர் வழங்கும் பட்சத்தில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏதுவாக இருக்கும். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த பகுதியில் குடியிருக்க முடியாமால் வேறு ஊருக்கு குடி பெயரவாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். #tamilnews
    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    செங்குன்றம் :

    சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி, சோழவரம் ஏரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியில் 777 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.

    புழல் ஏரிக்கு, சோழவரம் ஏரியில் இருந்து 3 ராட்சத மின்மோட்டார்கள் மூலம் வினாடிக்கு 2 கன அடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சோழவரம் ஏரி நேற்று முற்றிலும் வறண்டது. இதனால் புழல் ஏரிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

    சோழவரம் ஏரி வறண்டதால் அங்கிருந்த மின்மோட்டார்கள் அனைத்தும் கழற்றப்பட்டன. புழல் ஏரிக்கு ஏற்கனவே நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சோழவரம் ஏரியில் இருந்து அனுப்பப்பட்டு வந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டாதல் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

    இதற்கிடையே, சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து தினமும் 84 கன அடி நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனால் புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. புழல் ஏரியில் கடந்த மாதம் 970 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. ஒரே மாதத்தில் 193 மில்லியன் கன அடி தண்ணீர் குறைந்துள்ளது.

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே ஜாலியூர் என்ற பகுதி உள்ளது. இங்கு குடிநீர் தொட்டி உள்ளது.

    இங்கு டேங்க் ஆப்பரேட்டராக சுந்தரம் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி, பஞ்சாயத்து கணக்கர் மற்றும் அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி பெண்கள் மகளிர் மன்ற நிர்வாகி மலர்விழி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சையும், பள்ளி பஸ்சையும் சிறை பிடித்தனர். காலை 6 மணி முதல் 8 மணி வரை மறியல் நடந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் பி.டி.ஓ. அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இனிமேல் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ்களையும் விடுவித்தனர்.
    குடிநீர் விநியோகம் முறையாக செய்யவில்லை என கூறி 2 பஸ்களை சிறை பிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே ஜாலியூர் என்ற பகுதி உள்ளது. இங்கு குடிநீர் தொட்டி உள்ளது.

    இங்கு டேங்க் ஆப்பரேட்டராக சுந்தரம் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி, பஞ்சாயத்து கணக்கர் மற்றும் அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி பெண்கள் மகளிர் மன்ற நிர்வாகி மலர்விழி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சையும், பள்ளி பஸ்சையும் சிறை பிடித்தனர். காலை 6 மணி முதல் 8 மணி வரை மறியல் நடந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் பி.டி.ஓ. அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிட சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இனிமேல் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ்களையும் விடுவித்தனர். #tamilnews
    வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம், சீத்தப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊருக்கு அருகே உள்ள குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பூதிப்புரம், சீத்தப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நெல்லையில் இருந்து ரெயில் மூலம் 3.30 லட்சம் லிட்டர் தாமிரபரணி குடிநீர் அனுப்பப்பட்டது. #KeralaFloods
    நெல்லை:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் மூழ்கடித்தது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து தன்னார்வ அமைப்புகள், வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சியினரும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். பெட்ஷீட், பால் பவுடர், மருந்து பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பாக கேரள மக்களுக்கு ஏற்கனவே சென்னை, ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கண்டெய்னர்களுடன் சரக்கு ரெயில் நெல்லை ரெயில்நிலையத்திற்கு வந்தது. அதில் தலா 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 சின்டெக்ஸ் தொட்டிகள், தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 தொட்டிகள் இருந்தன. அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் நிரப்பப்பட்டது.



    இதையடுத்து நேற்று மாலை சரக்கு ரெயில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. அங்கிருந்து கோட்டயம், எர்ணாகுளம் பகுதிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதேபோல் கேரளாவில் ரெயில் பாதை மற்றும் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரிசெய்யவும், சாலைகளை சீரமைக்கவும் நெல்லையில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலமாக ஜல்லி கற்கள், மணல் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி தலா 50 டன் கொண்ட 26 லோடு மணல் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தலா 40 டன் எடை கொண்ட 36 லோடு ஜல்லிகற்கள் நெல்லை, மதுரை பகுதியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை ரெயில்நிலைய மேலாளர் இளங்கோவன் கூறுகையில், ‘ரெயில் மூலமாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்ப அரசு கட்டண விதிவிலக்கு அளித்துள்ளது. எனவே ரெயில்வே பார்சல் சேவை மூலமாக கேரளாவிற்கு நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம்’ என்றார். #KeralaFloods
    பெருமாநல்லூர் அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே லட்சுமி கார்டன், ரங்கா கார்டன் பகுதியில் சுமார் 60 குடியிருப்புகளும், புது காலனியில் 25 குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலிக் குடங்களுடன் திரண்டு வந்து பெருமாநல்லூர்- மலையபாளையம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலர் தனபால் மற்றும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, எங்கள் பகுதியில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் உள்ளது. அதை ஆய்வு செய்து தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரனிடம் போலீசார் போனில் தகவல் கொடுத்தனர். அவர், நாளை (இன்று) ஆழ்குழாய்களை நேரில் ஆய்வு செய்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    விராலிமலை அருகே நம்பம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் நம்பம்பட்டி, கவரப்பட்டி மற்றும் கோட்டைக்காரன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ளவர்களுக்கு இதுவரை ஆழ்துளை கிணறு மூலம் குடிநீரை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் சேமித்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக போதிய அளவு குடிநீர் வராததால் பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நம்பம்பட்டி பொதுமக்கள் நேற்று காலை விராலிமலை-மணப்பாறை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டி சின்னம்மாள்(60) என்பவர் மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.


    விராலிமலை ஒன்றியம் நம்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சின்னம்மாளுக்குஅருகில் இருப்பவர்கள் உதவியதை படத்தில் காணலாம்.


    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பதாக கூறி சாலைமறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோல் கோட்டைக்காரன்பட்டி, கவரப்பட்டி ஆகிய ஊர்களிலும் பொதுமக்கள் குடிதண்ணீர் கேட்டு கோட்டைக்காரன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப் பதாக கூறியதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சாலைமறியலால் அப்பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தையும், தமிழ்நாட்டின் திண்டுக்கல் நகரத்தையும் இணைப்பது தேசிய நெடுஞ்சாலை எண்.183 ஆகும். மழை, வெள்ளத்தால் இந்த நெடுஞ்சாலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் கோட்டயம், குமுளி, இடுக்கி வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.



    மழை, வெள்ளம் காரணமாக உணவுக்கு தவிக்கிற மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை கம்பம்மெட்டு வழியாக எடுத்துச்செல்ல முடியாத பரிதாப நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு இடையே பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கு சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடத்துடன் 2 பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே கம்மார்பாளையம் பஞ்சாயத்து உள்ளது.

    இங்குள்ள இருளர் காலனி பகுதிக்கு தேவராஞ்சேரி ஆற்றின் கரையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதிக்கு ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. எனவே பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் நடந்து பெரும்பேடு பகுதியில் குடிதண்ணீர் பிடித்து வந்தனர். பலமுறை ஊராட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடத்துடன் பொன்னேரி பெரும்பேடு சாலை கம்மார் பாளையத்தில் 2 பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பொன்னேரி பெரும்பேடு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, வெளியூர் செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரியை வரச்சொல்லி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×