search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    கடலூரில் என்ஜினீயரிங் மாணவர் மாயமானது குறித்து அவரது சித்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவரை தேடி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கிள்ளை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு சென்று வருவதாக தனது உறவினர்களிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் கார்த்திகேயனை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கார்த்திகேயனின் சித்தி தீபா கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
    உறவினருடன் பஸ்சில் வந்த நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர்:

    விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகள் தேவிகலா (வயது 19).

    இவர், கடலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்தார். சம்பவத்தன்று தேவிகலா கல்லூரி முடிந்து சொந்த ஊருக்கு செல்ல உறவினர் தேவராஜ் என்பவருடன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.

    தவளக்குப்பம் சந்திப்பில் பஸ் நின்ற போது, திடீரென தேவிகலா பஸ்சை விட்டு இறங்கினார். சிறிது நேரத்தில் தேவிகலா மாயமானார். தோழிகள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் தேவிகலா இல்லை.

    இதையடுத்து தேவிகலா மாயமானது குறித்து தேவராஜ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து யாராவது தேவிகலாவை கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சியில் வேலைக்கு சென்ற இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அறிவரசி (வயது 25). திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக வேலை செய்து வருகிறார். தினமும் பஸ்சில்  மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம். 

    சம்பவதன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டிருந்த போது அறிவரசி திடீரென்று மாயமாகியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி உறையூர் மருதாண்டாக்குறிச்சி சந்தோஷ்நகரை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகள்  ராஜேஸ்வரி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அதிகாலையில் வீட்டை வீட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

    திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகாநகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 22). திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறார். 

    இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச்சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து திருச்சி  அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்றதாக திருநங்கை மீது போலீசில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி , மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.

    சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கி விட்டார்.

    மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்தி மதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

    இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம் மாவை தேடி வருகிறார்கள். #tamilnews
    தேனி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தம பாளையம் நாராயண தேவன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். அதே பகுதியில் மன வளர்ச்சி குன்றிய 26 வயது பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தங்க பாண்டியன் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளம்பெண்ணின் உறவினர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கபாண்டியனை தேடி வருகின்றனர்.

    ரைஸ் மில் அதிபரிடம் ரூ.2.70 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரக்கோணம்:

    திருத்தணியை சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 45) ரைஸ் மில் வைத்துள்ளார். இவர் அரக்கோணம் தனியார் வங்கி ஒன்றில் நேற்று மதியம் தனது கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் எடுத்துக்கொண்டு அதை ஒரு கவரில் சுற்றி பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு திருத்தணி நோக்கி சென்றார்.

    அப்போது வழியில் தனியார் கல்லூரி முன்பு உள்ள டீ கடை முன்பு வண்டியை நிறுத்தி விட்டு டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பைக் அருகே வந்தபோது பெட்டி திறந்திருந்ததை பார்த்து  திடுக்கிட்டார். உள்ளே இருந்த பணத்தை காணவில்லை. பணம் திருடுபோனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அங்கே நிறைய பைக்குகளும் ஆள் நடமாட்டமும் இருந்தது பதட்டத்துடன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது யாருக்கும் தெரியவில்லை என்று கூறினார்கள்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சூலூரில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் பின்னால் இரு சக்கிர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் நகையை பறித்து சென்றனர்.

    சூலூர்:

    சூலூர் கே.கே.சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(48). இவரது மனைவி முத்துலட்சுமி(44). 2 பேரும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.நேற்றிரவு பணி முடிந்து இருவரும் வழக்கம் போல சூலூருக்கு தங்களது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    சூலூர் குமரன் கோட்டம் அருகே வரும்போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த கொள்ளையன் முத்துலட்சுமியின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டான். அருகிலிருந்தவர்கள் விரட்டிச் சென்றும் அவனைப் பிடிக்க முடிய வில்லை. அதைத்தொடர்ந்து நாராயணன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    சூலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரத்தினசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். தொடந்து செயின் பறிப்பு சம்பவம் சூலூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. தாலி செயின் பறிப்பு அதிக அளவில் இரவு பகல் பாராமல் நடந்து வருகிறது. இதனால் வெளியே செல்லவே பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது62). இவரது மருமகன் ஜீவமணி (54). இவர்கள் 2 பேரும் டி.இ.எல்.சி. சர்ச் தெருவை சேர்ந்த 5 வயது சிறுமியை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தையிடம் அழுதவாறு கூறி உள்ளார்.

    இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசு மற்றும் ஜீவமணியை கைது செய்தனர். #tamilnews
    சங்கரன்கோவில் அருகே பல்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது38). இவரது மனைவி ராமலெட்சுமி (32). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். சங்கரபாண்டியன் கூலி வேலை செய்து வருகிறார். ராமலெட்சுமிக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. 

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கரபாண்டியன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று விட்டாராம். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமலெட்சுமி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் சமுத்திரம் (45). கூலி தொழிலாளி. இவரின் மனைவி மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்துள்ளார். அவர் குழுவில் பணம் கடன் வாங்கி விட்டு சரியாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பத்தன்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறை சமுத்திரத்தின் தந்தை பொன்னையன் வந்து விலக்கி உள்ளார். அதை சமுத்திரத்தின் மனைவி அவ மரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னையன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். 

    இந்த சம்பவத்தினால் மன வேதனை அடைந்த சமுத்திரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த கரிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பூமியான்பேட்டையில் ஏலச்சீட்டு தகராறில் பெண்ணை தாக்கியதாது தொடர்பாக தாய்-மகன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை தியாகராஜர்வீதியை சேர்ந்தவர் கணபதி ரவி. இவரது மனைவி விமலா (வயது38). இவர் பூமியான்பேட்டையை சேர்ந்த கிரிஜா என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். ஏலச்சீட்டு தவணைக்காலம் முடிந்தும் விமலாவுக்கு அதற்கான பணத்தை கிரிஜா கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு விமலா ஏலச்சீட்டு பணத்தை கேட்க கிரிஜா வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கிரிஜா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து விமலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து விமலா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    கேரளாவில் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். #KeralaNun

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

    புகாரில் கன்னியாஸ்திரி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பிஷ்ப் பிராங்கோ முல்லக்கல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தார். இது குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பின்னர் அவர்கள் ஜலந்தர் சென்றும் விசாரணை நடத்தினர். இதையடுத்து வருகிற 19-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரியின் ஆதரவாளர்கள் கொச்சியில் உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கினர்.

    இதில் 5 கன்னியாஸ்திரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அவர்கள் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், பெண்கள் உரிமைக்கான சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகை ரீமா கல்லிங்கல் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

    இதுபோல எழுத்தாளர் சாராஜோசப், மனித உரிமை ஆர்வலர் அஜிதா, நடிகை பாக்கியலெட்சுமி ஆகியோர் நேற்று போராட்ட மேடைக்கு சென்று ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அரசியல் கட்சி பிரமுகர்களும், மகளிரணி நிர்வாகிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி 3 பேர் கேரள ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய உத்தரவிட வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள போலீசாரின் விசாரணையில் திருப்தி அடைவதாக தெரிவித்தனர். கன்னியாஸ்திரி புகாரில்கூறி உள்ள சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

    எனவே அதனை தெளிவாக விசாரிக்க தாமதம் ஆகும். அதுவரை பொறுத்திருக்கதான் வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தகினிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சர்மிளா (19). இவர் கொழுந்துலூரில் உள்ள தனியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். படித்து வருகிறார்.

    கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்ற சர்மிளா மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சர்மிளாவின் தாய் கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரண்வாயல் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (27). காது மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி. குன்றத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ந் தேதி வேலைக்கு சென்ற நந்தினி மாயமானார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் இளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோமதி (21). கடந்த 12-ந் தேதி ஜெராக்ஸ் எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி புகாரின் பேரில் மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×