search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    பாகூரில் அடிக்கடி வீண் தகராறு செய்து விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாலிபர் மிரட்டுவதால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயயது 35). இவர் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் அடிக்கடி வீண் தகராறு செய்து அவர்களை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போது சுவற்றில் மோதிக் கொண்டும், போலீஸ் நிலையத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் பிரபு மிரட்டி வந்ததால் அவரை போலீசார் கைது செய்யாமல் விடுவித்து வந்தனர்.

    அது போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயவேலு (45). என்பவரிடம் பிரபு வீண் தகராறு செய்து அவரை கையாலும், தடியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயவேலு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார்.

    ஆனால், போலீசார் வழக்குபதிவு செய்தும் பிரபுவை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்தால் போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரபு மிரட்டுவதால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் தவி(ர்)த்து வருகிறார்கள்.

    கடையநல்லூர் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கடையநல்லூர்:

    தமிழக பட்டதாரி காங்கிரசின் துணைத் தலைவரும்,நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவருமான அப்துல்காதர் தமிழக உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் மேம்பாட்டிற்காக நகராட்சிகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒளிவு மறைவின்றி நகராட்சி நிர்வாகம் தாமாகவே முன்வந்து வெளியிடவேண்டிய கடமையாகும். மக்கள் நலனுக்காக திட்டம் மற்றும் தீர்மானங்கள் குறித்து தகவலறியும் வகையில் நகராட்சி நிர்வாக இணையதளம், அறிவிப்பு பலகை ஆகியவைகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.

    ஆனால் கடையநல்லூர் நகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஏதும் முறையாக இணையதளம் மூலமாகவோ அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரிவிக்காமலிருந்து வந்தது. இது குறித்து தமிழ்நாடு தகவலறியும் உரிமைச்சட்டம் கீழ் தகவல் கேட்டு விண்ணபித்திருந்தேன். ஆனால் நகராட்சி நிர்வாகம் தட்டிகழிக்கும் வகையில் மனுவில் எனது கையெழுத்து சரியில்லை என நிராகரித்தது.

    இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்ததில் ஒரு தீர்மானத்திற்கு ரூ.100 வீதம் 437 தீர்மானங்களுக்கு ரூ.43ஆயிரத்து 700 ரூபாய் கட்ட அறிவுறுத்தியது. நகராட்சி நிர்வாகம் தானே முன்வந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிர்வாக தகவல்களை எங்கே நிர்வாக சீர்கேடுகள் தெரிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு தீர்மான நகல்களை வழங்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஊத்தங்கரை அருகே தந்தை கண்முன் நர்சை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையை அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 50). விவசாயி. இவருடைய மகள் விந்தியா(23). நர்சு. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது மகள், தம்பி மணிவாசன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ரெட்டியூரில் இருந்து சிங்காரம்பேட்டைக்கு சென்றார். அப்போது பெரிய தள்ளப்பாடி அருகே சென்ற போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் தடுமாறி இவர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர்.

    உடனே அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவர்கள் 3 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியும், விந்தியாவை கத்தியால் குத்தி அவரது தந்தை கண்முன்னே அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகையை மிரட்டி பறித்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த வாலிபர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த வாலிபர்கள் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த விந்தியா ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தந்தை கண்முன் நர்சை தாக்கி நகையை பறித்தது பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த ஸ்ரீசாந்த்(24), வினோத் ஆகிய 2 பேர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? எனவும் விசாரணை நடக்கிறது. 
    திருவண்ணாமலை இளம்பெண்ணின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் தண்டராம்பட்டு சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மகளுக்கும், பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு அந்த பெண் பெங்களூரு சென்றார். சில நாட்களுக்கு முன்பு அவர் கணவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அந்த பெண்ணை அவர் பெங்களூருவிலேயே விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

    அந்த பெண் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர், அந்த பெண்ணின் ஆபாச படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன் தந்தையிடம் கூறினார். அவர், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து பெங்களூரு வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கத்தை அடுத்த வசுவ சமுத்திரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளராக வேலை செய்து வருபவர் மோகன்தாஸ் (வயது 54). கடந்த 16-ந் தேதி காலை பெட்ரோல் பங்க்கில் வசூல் செய்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்து, மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து கொண்டு கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள கனரா வங்கிக்கு சென்றார்.

    வங்கியில் கூட்டமாக இருந்ததால் டீ குடித்து வர அருகில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை விசாரணை நடத்தி வருகிறார்.
    அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடிதுறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை அண்ணாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகள் இடிக்கப்பட்டது.

    இதில் வீடுகளை இழந்தவர்களுக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.

    இதையடுத்து அவர்கள் அப்போது அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்த சசிகலா நாகலிங்கத்திடம் முறையிட்டனர்.

    அவர், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கி தருவதாக கூறி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இது பற்றி பணத்தை இழந்தவர்கள் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

    இதன் மீது நடவடிக்கை எடுக்க காசிமேடுமீன்பிடி துறைமுக போலீசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடிதுறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    செய்யாறில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் குறித்து இரண்டாவது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த திருமணி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த 2012-ம் ஆண்டில் செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சுதா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    சுதாவுடன் ஒரு ஆண்டு குடும்பம் நடத்தி விட்டு 2013-ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார். அதைத்தொடர்ந்து, திருமணி கிராமத்திலேயே வசிக்கும் தனது அத்தை மகள் அனிதா (22) என்ற இளம்பெண்ணை வற்புறுத்தி இனி ஒழுங்காக இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்தார்.

    தட்சிணபிரியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருமணியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்துவந்த சரிதா (20) என்ற இளம்பெண்ணை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பார்த்தார். சரிதாவிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி காதலை சொன்னார். சரிதாவும் குமரேசனை காதலித்தார். இதையடுத்து, சரிதாவை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    யாருக்கும் தெரியாமல் இருக்க சரிதாவை வேலூரில் குடித்தனம் வைத்தார். இந்த நிலையில், 2-வது மனைவி அனிதாவுக்கு விவகாரம் தெரியவந்தது. அவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து குமரேசனை கைது செய்தனர்.

    நங்கவள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 7 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நங்கவள்ளி:

    ஜலகண்டாபுரம் அருகே செலவடை கிராமத்தை அடுத்த கோயப்பெருமாள் கோவில் கரட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன் (66). இவரது மகன் அருண்குமார் சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்பதர்காக கடந்த 8-ந் தேதி சென்றுவிட்டார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அங்கு வந்து வீட்டை பார்த்தப் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஓடுகள் சிதறிகிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 7 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசில் விஸ்வநாதன் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதேபோல் காட்டிநாயக்கன்பட்டியில் உள்ள முருகேசன் என்பவரின் பூக்கடையும் உடைத்து பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று உள்ளது தெரியவந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவை அருகே உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது காதலி புகார் அளித்துள்ளார்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் 18 வயது இளம்பெண்ணும், 22 வயது வாலிபரும் ஒன்றாக வேலை செய்தனர். அப்போது, 2 பேரும் நெருங்கி பழகியதால் காதல் மலர்ந்தது. 3 மாதம் மட்டுமே காதலித்த அந்த வாலிபரின் ஆசைக்கு அந்த இளம்பெண் இணங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார்.

    இதையடுத்து, இளம் பெண்ணுடன் பேசுவதை வாலிபர் முற்றிலும் தவிர்த்தார். வருத்தமடைந்த காதலி, திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார். திருமணத்திற்கு வாலிபர் ஒத்துக் கொள்ளவில்லை. இதுப்பற்றி கலவை போலீசில் காதலன் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    சேர்ந்தமரம் அருகே கள்ளத் தொடர்பு குறித்து போலீசில் புகார் செய்ததால் மன முடைந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 52), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குருசாமிக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டு, குருசாமி மீது, சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர். இதனால் சொக்கம்பட்டி போலீசார் விசாரணைக்கு வருமாறு குருசாமியை தேடி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்த குருசாமி, சேர்ந்த மரம் அருகே உள்ள வலசை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.

    அங்கு தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்து விட்டதே என்று மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் வலசை உறவினர் வீட்டில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவருக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேணுகாதேவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    தற்போது அவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது தாயார் கல்யாணி, சகோதரர் சந்திரபோஸ் ஆகியோர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி விசாரணை நடத்தி, இளைய ராஜா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
    மதுரையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை கே.புதூர் கணேசபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பூபதிராஜா தல்லா குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அவர், கனடாவில் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூ.17 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×