search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    தேனி அருகே கல்லூரி மாணவியை கடத்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே சங்க கோணான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவணான்டி. இவரது மகள் கிருத்திகா. இவர் தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றுள்ளார்.

    வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவணான்டி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் பெரியபாண்டி மகன் பார்த்திபன் (வயது29), சிவக்குமார் மகன் சத்யா(33), ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் இந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தேனி அருகே டொம்புச்சேரி பிள்ளைமார்சாவடியை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் சுகப்பிரியா(17). ராசு தனது குடும்பத்தினருடம் கோவையில் வசித்து வருகிறார். விசே‌ஷத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது சிறுமி தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிச்சென்றுள்ளார். அதிக நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் வேல்முருகன் பழனிசெட்டிபட்டி போலீசில் வருசநாடு பவளநகர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் சுரேஷ் என்பவர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் அவரை கடத்திச் சென்ற சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று எங்களுக்கு கனடா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியது.

    இதை நம்பி நாங்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் நிறுவனத்தினர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடி விட்டு நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். எங்களது பாஸ் போர்ட்டும் அந்த நிறுவனத்தினரிடம் தான் உள்ளது.

    எனவே எங்களை ஏமாற்றிய நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டு ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் கொடுத்தவர்கள் கூறுகையில், கோவை மட்டு மல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக தெரிவித்தனர். #tamilnews
    பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக டி.ஜி.பி. அலுவலகத்தில் கருணாஸ் மீது பெண் புகார் அளித்துள்ளார். #Karunas
    சென்னை:

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நர்மதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

    இவர் இன்று காலை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 20-ந்தேதி நான் மதுரை சென்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்தேன்.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மறிக்கப்பட்டு இருந்தது

    கடைகள் மீது கல் எரிந்து பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுபற்றி விசாரித்தபோது முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

    அவர் ஏற்கனவே சென்னையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக கைதாகி சிறை சென்றவர். எனவே மதுரை சம்பவத்துக்கு காரணமான கருணாஸ் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Karunas
    கூடலூர் அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கன்னிகாளி புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கேரளாவில் உள்ள ஏலத் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா (வயது 15). முருகன் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அனிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய முருகன் வீட்டில் அனிதா இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கூடலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அனிதா ஏதும் பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்திச் சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் தென்னம்புலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது56). விவசாயி. இவருடைய மனைவி சித்ரா(53). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பொன்னங்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சாந்திக்கும், மாரியப்பனுக்கும் விவகாரத்து ஆகி விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் சாந்தியை செல்வராசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சித்ரா, கணவர் செல்வராசுவிடம் கேட்டுள்ளார். அதற்கு சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி சித்ரா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மார்த்தாண்டம் பிளஸ்-1 மாணவியை பெங்களூருக்கு கடத்தி சென்ற என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மாணவியை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அப்போது பள்ளியாடி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மாஸ்கஸ் மெல்பு‌ஷன் (வயது 21) என்பவர் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், மாஸ்கஸ் மெல்பு‌ஷன் பற்றி விசாரித்தனர். அப்போது அவரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். இதில் பெங்க ளூருவில் அவர் இருப்பதாக செல்போன் டவர் காட்டியது. 

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் மாஸ்கஸ் மெல்பு‌ஷன் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் மாயமான மாணவியும் மாஸ்கஸ் மெல்பு‌ஷனின் நண்பரான பள்ளியாடி பகுதியை சேர்ந்த சுபின் என்பவரும் அவர்களுடன் இருந்தார். போலீஸ் விசாரணையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை மாஸ்கஸ் மெல்பு‌ஷன் பெங்களூருக்கு கடத்திச் சென்றதும், அங்கு வாடகை வீட்டில் அவரை அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு மார்த்தாண்டம் கொண்டுவந்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு மாஸ்கஸ் மெல்பு‌ஷன் மற்றும் அவரது நண்பர் சுபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் நகையை மோட்டார் சைக்கிள் திருடன் வழிப்பறி செய்தான்.

    விருதுநகர்:

    சிவகாசி ஞானகிரி சாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், டிபார்ட் மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது48).

    இவர் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரனேசன் பூங்கா பகுதியில் அவரது வாகனத்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் ஒருவன் வந்தான்.

    அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் காளீஸ்வரியின் கழுத்தில் கிடந்த 18 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னலாய் மறைந்து விட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி போலீசில் புகார் செய்தார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பேட்டையில் கல்லூரி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பேட்டை அனவரத வெற்றி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். அரசு பஸ் டிரைவர். இவரது மகள் வேலம்மாள் என்ற சீதா(வயது21). இவர் பேட்டையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு சென்ற வேலம்மாளை காணவில்லை. 

    அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி வேலம்மாள் எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூரை அடுத்த காட்டுபுதூர் ஆவாரம்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சாரதா (வயது 64). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில், ‘‘எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எனது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி குறுந்தகவல் வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஆன்-லைன் மூலம் ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை எடுத்தவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

    எனவே எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #tamilnews
    கும்பகோணத்தில் காதல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு திருமண நேரத்தில் மகளை தந்தை கடத்தி மறைத்து வைத்துள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சதீஸ்(வயது26). சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபசக்தி(24). பி.டெக். படித்துள்ளார்.

    இந்த நிலையில் சதீசும், சுபசக்தியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே காதலியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் சிங்கப்பூரில் இருந்து சதீஸ் ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து காதலியின் தாயிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றுள்ளார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள சுபசக்தியின் தாயார் மாதவி ஒப்புகொண்டார்.

    பின்னர் எப்படியோ இருவீட்டார் சம்மதத்தின் பேரில் காதல் ஜோடிக்கு திருநாகேஸ்வரம் ஒப்பி லியப்பன் கோவிலில் திருமணம் 20-ந்தேதி (நேற்று) நடைபெறுவதாக இருந்தது. அதன்பேரில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் 19-ந்தேதி இரவு மண்டபத்துக்கு மணமகள் வரவில்லையாம். அப்போது சதீசுக்கு போன் செய்த சுபசக்தி, தனது தந்தை திடீரென திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்து என்னை கடத்தி சென்று தனி அறையில் அடைத்து வைத்துள்ளார்.

    இந்த திருமணத்தை நிறுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சுபசக்தி கூறி அழுதுள்ளார். இதையடுத்து காதலி சுபசக்தியின் தந்தை ரவிக்கு போன் செய்த சதீஸ் இது பற்றி கேட்டபோது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று அதிக தொகை கேட்டதால் சதீஸ் அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து நேற்று கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்ற சதீஸ், காதலியின் பெற்றோர் சம்மதத்தின் பேரில் திருமண ஏற்பாடுகளை செய்த நிலையில் திடீரென அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தனது காதலியை கடத்தி சென்று எங்கோ அடைத்து வைத்துள்ளனர். அவரை கண்டுபிடித்து திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று புகார் கொடுத்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப சக்தியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வேலை வாங்கித்தருவதாக கூறி சிவகாசி பெண் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்ததாக விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முருகசெல்வம் (வயது 31), முத்துச்சாமி (32), ரஞ்சித் (33) ஆகியோர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகாசி சாட்சியாபுரம் சாரதா நகரைச் சேர்ந்த பானு மற்றும் அவரது தம்பி மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினர்.

    இதனை நம்பி நாங்கள் உள்பட 7 பேர் தலா ரூ.80 ஆயிரம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்ட பானு விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு இறங்கியதும் நாங்கள் வேலைக்கான விசாவில் வரவில்லை. சுற்றுலா விசாவில் வந்துள்ளோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

    இது குறித்து பானுவிடம் கேட்டபோது, மீண்டும் மலேசியா அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால் எங்களை அனுப்பவில்லை. 7 பேரிடமும் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்தை அவர் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    நாகை அருகே காதலனுடன் தூக்குப்போட்டு 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் சமத்துவபுரம் ரோஜா தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது50). விவசாயி. இவருடைய இளைய மகன் ரவிசங்கர் (19). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த ரவிசங்கர், திடீரென மாயமானார். அவரை வீரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    நேற்று காலை அப்பகுதியில் வீரமணி மற்றும் உறவினர்கள் ரவிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ரவிசங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். இதில் ரவிசங்கரின் செல்போன் ‘ரிங்டோன்’ அப்பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டுக்குள் இருந்து ஒலித்தது. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த வீரமணி உள்ளிட்டோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் மின்விசிறியில் ரவிசங்கர், 16 வயது சிறுமி ஒருவருடன் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிசங்கர் மற்றும் சிறுமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் ரவிசங்கரும், 16 வயது சிறுமியும் ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×