search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளிக்கடை"

    திருக்கனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்சிக்கு விலை உயர்ந்த ஜவுளி எடுத்து தராததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தன். ரைஸ்மில் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (வயது19). இவர் வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து 2-ம் ஆண்டுக்கு செல்ல தயாராக இருந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தனின் உறவினர் திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் திருமணத்துக்கு ஜவுளி வாங்கி சரண்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுவையில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது சரண்யாவுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி கொடுத்தனர். ஆனால் தனக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி தரவேண்டும் என்று சரண்யா அடம்பிடித்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் சமாதானம் அடையாமல் சரண்யா வழியிலேயே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வீட்டுக்கு வந்த சரண்யா விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். வீட்டின் மாடி அறைக்கு சென்ற அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக மாடியில் இருந்து சரண்யா வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சரண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரண்யாவை தூக்கில் இருந்து மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சரண்யாவின் தாய் மனோன்மணியம் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவை அருகே வேலையை விட்டு நிறுத்தியதால் எஸ்.எம்.எஸ். அனுப்பி ஜவுளிக்கடை அதிபரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). இவர் ரெடிமேடு ஷோ-ரூம் நடத்தி வருகிறார். இவரது ஷோ-ரூமில் சவுரிபாளையத்தை சேர்ந்த சுஜித்குமார்(33) என்பவர் பணியாற்றி வந்தார். சுஜித் குமார் நடவடிக்கை சரி இல்லாததால் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேல் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

    இந்நிலையில் சக்திவேலின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் சுஜித்குமார் தொடர்ந்து மிரட்டல் எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி தொந்தரவு கொடுத்ததோடு, அவதூறான தகவல்களை பரப்பி உள்ளார். இதுகுறித்து சக்திவேல் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுஜித்குமார் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    சென்னை சவுகார்பேட்டையில் 6 ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளில் இன்று காலையில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்து வியாபாரம் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் அங்குள்ள கடைக்காரர்கள் தாக்கல் செய்துள்ள வருமானவரி விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மின்ட் தெருவில் உள்ள 6 ஜவுளிக்கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்தது.

    இதையொட்டி வருமானவரி அதிகாரிகள் இன்று காலையில் மின்ட் தெருவில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மொத்தம் 6 ஜவுளிக்கடைகளில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. கடைகளில் விற்பனையான தொகைக்கும் பில்லுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதேபோல் லீலா கோல்டு-டைமண்ட் நகைக் கடையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த கடையிலும் கணக்கில் வராத பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    ஜவுளிக்கடை அதிபரின் வீடு-அலுவலங்களிலும் வருமான வரி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி வருமானவரி அதிகாரிகள் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கடைகளில் சோதனை நடத்தி வருகிறோம். சோதனை முடிந்த பிறகு தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதை தெரிவிக்க இயலும் என்று தெரிவித்தனர்.

    வருமான வரித்துறையினரின் சோதனை சவுகார்பேட்டை வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் அடுத்தடுத்த 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு போனது.
    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் பெருந்துறை ரோட்டில் அடுத்தடுத்து 2 ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் அவர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடைகளை திறந்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது கடைகளின் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பணம் வைத்த மேஜையை திறந்து பார்த்தனர். அப்போது 2 கடைகளிலும் ரூ.3 ஆயிரமும், ஒரு கணினியும் திருட்டு போனது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜவுளிக்கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணத்தையும், கணினியையும் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழையபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் பணம், கணினி திருட்டு போனது. அங்கும் மேற்கூரையை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தார்கள். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், நேற்று நடந்த திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×