என் மலர்
நீங்கள் தேடியது "smuggling"
- மதுரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்.
- புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் சுப்பிரமணியபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு டாட்டா சுமோ வாகனம் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 240 கிராம் மதிப்புடைய 70 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜேஷ் (32), காசி விஸ்வநாதன் (31) என்பது தெரியவந்தது. காசிநாதன் மீது புகையிலை பொருட்கள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- போதை பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா கைது செய்தார்.
- திருச்சியில் நடைபெற்ற விழாவில் விஜய அனிதாவுக்கு விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடல் பிராந்திய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், குற்றவாளிகளை கைது செய்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
திருச்சி சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச சுங்க தின விழாவில் தூத்துக்குடி மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு திருச்சி சுங்க ஆணையர் அணில் விருது வழங்கி கவுரவித்து பாராட்டினார்.
- பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயமானார்.
- ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது.
கடலூார்:
சிதம்பரம் அருகே வையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்செந்தில்குமார். அவரது மகள் சுபத்திரா (வயது 21)இவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணிபுரித்து வருகிறார். பொங்கல் விடுமு றைக்காக மருங்கூரில் உள்ள பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை முதல் காணாமல் போனார்.
இது குறித்து முத்தாண்டிகுப்பம்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது. இதுபற்றி காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவ கல்லூரி பெண் ஊழியரை தேடி வருகின்றனர்.
- தடுத்த கணவரின் தந்தை, தாய் மீது தாக்குதல்
- கரூரில் பரபரப்பு
கரூர்,
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கார்த்திக் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்ற 21 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இந்த விவகாரம் ெபண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, தேவச்சி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார வாலிபர் சூரியா என்பவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சினேகாவிற்கும் சூரியாவிற்கும் பழனியில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. பின்னர் புதுமண தம்பதியினர் தேவச்சி கவுண்டன் புதூரில் குடும்பம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் காதலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்து கார்த்திக் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் தனது அண்ணன் சக்திவேல், மற்றும் குளத்துப்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோரை அழைத்து கொண்டு தேவச்சி கவுண்டன் புதூரில் உள்ள காதலியின் கணவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்த தனது காதலியை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இதனை சூரியாவின் தந்தை பழனிச்சாமி மற்றும் சினேகாவின் தாயார் புஷ்பா மற்றும் உறவினர்கள் தடுக்க முயன்றனர், அவர்களை கடத்தல் கும்பல் தாக்கினர். இதில் காயம் அடைந்த பழனிச்சாமி, புஷ்பா ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் ஜீவானந்தத்தை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சினேகா மற்றும் கார்த்திக்கை வலை வீசி தேடிவருகின்றனர். திருமணமான பெண்ணை காதலன் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
- வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
பு.புளியம்படடி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் மதுபானம் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ேபாலீசார் பு.புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பு.புளியம்பட்டி கோவை ேராட்டில் சந்தை ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ெகாண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மினி சரக்கு டெம்போ வேன் வந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த சரக்கு வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 45) மற்றும் வேனை ஓட்டி வந்த கோவை மாவட்டம் அன்னூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் (36) என தெரிய வந்தது. இவர்கள் மது பானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வேனில் அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள் 1212 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தன மரத்தை அறுத்து கடத்த முயற்சி நடைபெற்று உள்ளது
- புகாரின் பேரில் கடத்தல் முயற்சி நபர்களை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செம்மரம் மற்றும் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், இவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்பிலான, ஒரு சந்தன மரத்தை அறுத்து சாய்த்தும் மற்ற ஐந்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்களை அறுத்தும் மர்ம நபர்கள் சாய்த்தனர். மேலும் இந்த மரங்களின் மைக்ரோ சுமார் 8 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இது குறித்து, சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் சந்தன மரங்களை பாதியில் மரத்தை அறுத்து சாய்த்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்
- கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் சேர்ந்து சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி அருகில் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய கன்டெய்னர் வேன் வந்தது. இதை பார்த்த அதிகாரிகள் கன்டெய்னர் வேனை நிறுத்தும்படி கைஅசைத்தனர்.
இதை பார்த்த டிரைவர், சிறிது தூரத்திலேயே கன்டெய்னர் வேனை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசாரும், அதிகாரிகளும், கன்டெய்னர் வேனில் சோதனையிட்டனர்.
இதில் 17 கிலோ 40 கிராம் எடையிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 44 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- கனிமவள கடத்தலை தடுக்க கோரி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- திடீரென பெய்த மழையிலும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு கனரக லாரிகளில் கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் கட்சியை சேர்ந்தவர்களும் அவ்வப்போது கண்டன குரல்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு கனிமவள கடத்தலை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்டை மாநிலத்திற்கு நம்முடைய கனிம வளங்களை கொண்டு சென்று தென் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் கனிமவள கடத்தலை கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது திடீரென பெய்த மழையிலும் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- கட்டிட கழிவுகள் முழுவதும் பாளையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது.
- மண் அள்ளி விற்பனை செய்த மாரியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அங்கிருந்த கடைகள் அருகிலேயே தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
கட்டுமான பணி
தொடர்ந்து பழைய கடைகள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டு அந்த கட்டிட கழிவுகள் முழு வதும் பாளை அம்பேத்கர் காலனியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது. அதன்பின்னர் தற்போது மார்க்கெட் கட்டு மான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் மண் குவியல் அளவு குறைந்து வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, பாளை மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து விடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்த உத்தர விட்டார்.
போலீசில் புகார்
அதில், மர்ம நபர்கள் சிலர் லாரியில் மண் குவியல்களை அள்ளிச்சென்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாளை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பாளை கே.டி.சி.நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரி என்ற மணல்மாரி மற்றும் அவரது கூட்டாளிகளான அனவரதநல்லூரை சேர்ந்த ராமர், வல்லநாடு அருகே மணக்கரையை சேர்ந்த செந்தில் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரிகளில் மண் லோடுகளை அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரியை போலீசார் கைது செய்தனர். ஜே.சி.பி., லாரி யை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர், செந்தில் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சேலத்தை சேர்ந்த பயணி உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தார்
- கடத்தி வந்தவரிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கே.கே.நகர்,
சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர் அப்போது சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 44.60 லட்சம் என தெரிய வருகிறது
- தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
- வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கிரைண்டிங் மிஷினில் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்
- பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்
திருச்சி,
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். அப்போது ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற் பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த எந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து எடுத்து வந்த ரூ.9.64 லட்சம் மதிப்பிலான 159 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.