search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "somanur bus stand"

    • புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருமத்தம்பட்டி

    சோமனூர் சவுடேஸ்வரி காலனி பகுதி உள்ளது. இங்கு பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மசூதி மற்றும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில், இந்த பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். அதில், குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க வேண்டாம் என கேட்டு கொண்டனர்.

    இந்த நிலையில் மீண்டும் இந்த பகுதியில் மது கடை திறக்கப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கப்படாது என உத்தரவாதம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். போலீசாரும் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். சாலை மறியல் போராட் டத்தின் காரண மாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோமனூர்- காரணம ்பேட்டை சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது

    கோவை அருகே உள்ள சோமனூர் பஸ் மேற்கூறை இடிந்து விழுந்த விபத்தில் வலது காலை இழந்த கல்லூரி மாணவிக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
    கோவை:

    கோவை அருகே உள்ள சோமனூரில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.விபத்தில் பலியானவர்களுக்கு அரசு சார்பில் ரூ. 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

    பஸ் கூரை இடிந்து விழுந்த விபத்தில் திருப்பூர் மாவட்டம் தேவராயம் பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி லதா (21) என்பவரும் சிக்கி படுகாயம் அடைந்தார்.கோவையில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வந்த லதா கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கி கொண்டார். பஸ் கூரை இடிந்து விழுந்த விபத்தில் லதாவின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது கால் துண்டிக்கப்பட்டது. லதாவிற்கு ரூ. 11 லட்சம் வரை மருத்துவ செலவானதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக லதாவின் தாய் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பல முறை மனு அளித்தார். அவரது மனுவை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து லதாவின் மருத்துவ செலவுக்காக சமூக நலத்துறை சார்பில் ரூ. 6 லட்சம் நிவாரண நிதி வழங்க முடிவு செய்து உள்ளது.

    இது தொடர்பாக அவரது பெற்றோரை வரவழைத்து லதாவின் மருத்துவ செலவிற்கான ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்து உள்ளனர். விரைவில் ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என தெரிகிறது. #tamilnews
    சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் அந்த இடத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 -ந் தேதி இடிந்து விழுந்தது.

    இதில் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார்(வயது 43), சோமனூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணி(20), பல்லடம் அய்யம்பாளையத்தை ஈஸ்வரி(40) உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

    சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் உயிரிழந்த 5 பேருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அஞ்சலி கூட்டத்துக்கு கருமத்தம்பட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நள்ளிரவில் பஸ் நிலைய வளாகத்தில் இறந்தவர்களின் உருவபடங்கள் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது அஞ்சலி நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி இரவோடு இரவாக  நிகழ்ச்சி நடத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். #tamilnews
    ×