என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Special Grievance Camp"
- தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
- பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
பொது விநியோகத்தி ட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில் ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரி மனு அளிக்கலாம். கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்தும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் மனு அளிக்கலாம்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளி களுக்கான மாதம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
- மாற்று த்திறனாளி கள் தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்து பயன்பெறலாம்.
தேனி:
பெரியகுளம் வருவாய் கோட்ட த்திற்குட்பட்ட வட்டங்களில், வசிக்கும் மாற்று த்திறனாளி களுக்கான மாதம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (27ந் தேதி) தேனி வட்டாட்சியர் அலுவல கத்தில் பெரியகுளம் வருவாய் கோட்டா ட்சியர் தலைமையில் நடைபெறு கிறது.
மாற்று த்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் இந்த கூட்டத்தில் தேனி வட்டார ப்பகுதியில் வசிக்கும் மாற்று த்திறனாளி கள் தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்து பயன்பெ றலாம்.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது.
- ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேனி:
தெற்கு மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் உத்தரவின்பேரில் தேனி மாவட்ட போலீசார் 124 குழுக்கள் அமைத்து உட்கோட்ட டி.எஸ்.பி தலைமையில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகனசோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிறப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர்.
மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட மனுக்களில் 300 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரவுடி, கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
- சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமையான நாளை (10-ந் தேதி) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரியும், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனுச் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பழங்குடியின மக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கோழிக்கரை கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தீபக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பழங்குடியின மக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, வனப்பகுதி மற்றும் ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்தினர். முகாமில் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்