search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spoiled meat"

    • மதுரைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட இறைச்சி மாயம்.
    • 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல்

    சென்னை

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மதுரை சென்ற பிக்கானீர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கெட்டுப்போன இறைச்சி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 1700 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    5 நாட்களுக்கு முன்னர் வெட்டப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில் வெட்டி உரிக்கப்பட்ட ஆடுகளை மடக்கி வைத்து ரெயிலில் கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே ஒரு கண்டெய்னர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ எடை கொண்ட இறைச்சி மாயமாகி உள்ளது. 30 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெட்டிகள் அனைத்தும் மாயமாகி உள்ளது.

    அவை சென்னை வருவதற்கு முன்பே ரெயில் பெட்டியில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி கெட்டுப்போன இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சில்லரை விலையில் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ராஜஸ்தானில் இருந்து இறைச்சியை கடத்தி வந்த கும்பல் இதுபோன்று பலமுறை கெட்டுப்போன இறைச்சியை எடுத்து வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு ஒரு கிலோ இறைச்சி ரூ.500 என நிர்ணயம் செய்து விற்பனை செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து சென்னையில் உள்ள அசைவ உணவகங்கள் மற்றும் பிரியாணி கடைகளில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை மாநகரில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி தொடர்ச்சியாக பிடிபட்டு வருவது அசைவ உணவு பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ஓட்டல் உணவுகள் ஆபத்தாவை

    தானோ? என்கிற அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்தே காணப்படுகிறது.

    • சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்
    • இன்று உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

    ஆரணி:

    சத்தீஷ்கர் மாநிலம் ரேவியூட் டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்சார் (வயது 22). இவர் ஆரணி அடுத்த குரு மந்தாங்கள் கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருடைய செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவ ருடன் அதே மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பணியாற்று கின்றனர். நேற்று முன்தினம் இரவு இறைச்சியை சாப்பிட்ட நிலையில் உடல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஆரணி அரசு மருத்துவமனை யில் முகமது சம்சார் சேர்க்கப் பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

    இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் சுரேஷ் என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் முகமது சம்சார் சாப்பிட்ட இறைச்சி 2 நாட்களுக்கு முன்பு சமைத்தது என்பதும் கெட்டுப் போனதால் உடல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து முகமது சம்சார் உடலை அவரது சொந்த ஊருக்கு இன்று இலவச வாகனம் மூலம் அனுப்புவதாக தெரிவித்தனர்.

    ×