என் மலர்
நீங்கள் தேடியது "struggle"
- கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
- நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.
இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.
காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.
நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
- இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
- இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை இந்தியில் நடத்தவும், மத்திய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட பாராளுமன்ற குழுவின் முடிவை திரும்ப பெற கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தல்லாகுளம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் கூறுகையில், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.
- நிசாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக அதி காரிகள் பதில் கூறினார்கள்.
- நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்காலில் போடப்ப படாத சாலைக்கு ரூ.43.27 லட்சம் செலவு கணக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காட்டப்பட்ட தால், நிதி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் செடிகளை நட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் அம்மன் கோவில் பத்து பகுதியில் சுமார் 125 குடும்பங்களும், எம்.எம்.ஜி நகரில் 155 குடும்பங்களும், பறவை பேட்டில் 26 குடும்பங்களும் உள்ளன. இப்பகுதி சாலை கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு, 3 பகுதியையும் ஒருங்கிணைத்து, ஆதி திரா விடர் நலத்துறை சார்பில், ரூ.43.27 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்ப ட்டது.
ஆனால், 26 வீடுகள் உள்ள பறவைபேட் பகுதி யில் மட்டும் சாலை சீரமை க்கப்பட்டது. கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்க ப்படாததால், எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த பூங்கொடி என்பவர், காரைக்கால் பொதுப்பணி த்துறை, நகராட்சி மற்றும் ஆதிதிரா விடர் நலத்து றைக்கு, சாலையை சீரமைப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டார்.
இதில், பொதுப்பணி த்துறை, நகராட்சி தங்க ளுக்கு சம்பந்த மில்லை யென பதில் கூறிய நிலையில், ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 2018-ல் ரூ.43.27 லட்சத்தில் சாலை போடப்பட்டுவிட்டது என பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.
அதில் சரியான பதில் வராத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதி சாலையில், செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக பதில் கூறிய அதி காரிகள், நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
இல்லையேல், தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தியுள்ளனர். இச்சமவம் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற புகார் நகைச்சுவை ஞாபகம்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் நகைத்து வருகின்றனர்.
- கடந்த 1968-ம் ஆண்டு கலைஞரின் ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
- இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு கடந்த 1968-ம் ஆண்டு கலைஞரின் ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது இருந்து வரதராஜன் மற்றும் அவருடைய வாரிசுகளின் பயன்பாட்டில் தான் அந்த இடம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜன், வாரிசுதாரர்கள் வீட்டுமனை வழங்கப்பட்ட இடத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வரதராஜன் குடும்பத்தினர் கூறுகையில், வாழ்வாதாரமின்றி தவிக்கும் எங்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கிய வீட்டுமனையில் அதிகாரிகள் கட்டிடம் கட்ட முயல்கின்றனர்.
இது எந்த வகையில் நியாயம்? இதனால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே அதிகாரிகள் இந்த நடவடிக்கை கைவிட வேண்டும்.
இல்லையெனில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருளரின மக்கள் போராட்டம் நடத்தினர்
- சுடுகாடு வேண்டி நைடபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு, கோவில் மற்றும் குடியிருப்பு பாதை கேட்டு மணகெதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் இருளரின மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாநில இருளர் கூட்டமைப்பு தலைவர் இருளபூசெல்வகுமார் தலைமை தாங்கினார்.
நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் வரை நீடித்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, உடையார்பாளையம் தனி தாசில்தார் கலைவாணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை மூலம் காட்டில் தேவையான இடத்தினை அளந்து திட்ட முன்மொழிவை தயாரித்து, மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
- 39-வது நாளாக நீட்டிப்பு
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியிடைநீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் 39-ம் நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
.நிர்வாகத்தின் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக ஆட்குறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமாந்துறை டோல் பிளாசா வில் 39-வது நாட்களாக போராட்டம் செய்து வந்தநிலையில் மாநில அரசும், மத்திய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் இந்த நிர்வாகத்திற்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் ஊழியர்களை வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் அனைவரும் தூக்கு கயிற்றை முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- துறை தலைவரை கண்டித்து நடந்தது
கரூர்
அய்யர்மலையில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.பி.ஏ. பாட பிரிவின் துறை தலைவர் மாணவர்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த பி.பி.ஏ. இளங்கலை 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் மாணவர்களிடம் மரியாதை குறைவாக பேசி வரும் துறை தலைவரை கண்டித்து கல்லூரியின் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை கல்லூரிக்குள் அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட துறை தலைவர் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில் அந்த துறைத்தலைவர் மாணவர்களிடம் மரியாதை குறைவாக இனி பேசுவதில்லை என்று தெரிவித்தாராம். இதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது."
- யாகசாலை அமைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 41-வது நாளாக தொடரும் போராட்டம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு வகையான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும், மனித உருவ பொம்மைக்கு பாடை கட்டி போராட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில் 41-வது நாளான நேற்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஐகோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு வேண்டி யாகசாலை அமைத்து பூஜைகளை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்."
- தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
- முன்னாள் மாணவர் சங்கத்தில் கடந்த வருடம் உள்ள வரவு செலவு கணக்குகளை முறையாக ஒப்படைக்க வேண்டும்.
ராசிபுரம்:
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு செயலாளர் அய்யந்துரை தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் கடந்த வருடம் உள்ள வரவு செலவு கணக்குகளை முறையாக ஒப்படைக்க வேண்டும். கல்லூரி முதல்வரை தலைவராகக் கொண்டு முன்னாள் மாணவர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மழையில் குடை பிடித்தவாறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
- பரமக்குடி அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்து, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி யில் 66-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டி.ஆர்.பி மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் 2,391 உதவி பேராசிரியர்கள் நியமிக்க குறிப்பானை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, கவுரவ விரிவுரையாளர்களை பழி வாங்கும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
புதிய அரசாணையை ரத்து செய்து பழைய அரசாணையின்படி உதவி பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாத்தூர் அருகே இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
- போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பானுமதி (வயது 25). இவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்ற சதீஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
சதீஷ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பானுமதி கணவருடன் செல்போனில் பேசியபோது பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பானுமதி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இந்த நிலையில் பானுமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதியின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுதொடர்பாக அப்பநாயக்கன்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்தபின் பானுமதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலையும் வாங்க மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டி.எஸ்.பி. வினோஜ், கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.
மகளின் சாவு குறித்து அவரது தாயார் கனகலட்சுமி, மருமகன் சதீஷ், அவரது தம்பி தமிழ்செல்வன், மாமனார் சூரியவேல், மாமியார் முருகேஸ்வரி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி போராட்டம் நடைபெற்றது
- 46-வது நாளான தொடர்ந்து நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 46-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கையில் தீச்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்."